இனி இந்தியா

 தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு.

ஒடிசா தேர்தலில் தோல்வி.24 ஆண்டு முதல்வர்பதவிநவீன்பட்நாயக்ராஜினாமா .
கேரளாவில்கம்யூனிஸ்ட்,காங்கிரஸ்,பாஜகசார்பில்போட்டியிட்ட9பெண்வேட்பாளர்களும் தோல்வி.
சபாநாயகர் பதவி, முக்கிய இலாகா கேட்டுசந்திரபாபு,நிதிஷ்போட்டாபோட்டி.ஆட்சி அமைக்கும் முன்பே கதிகலங்கும் மோடி.
இனி இந்தியா

தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதிக ளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான  வெற்றி பெற்றுள்ளனர். 

இதன் மூலம் தமிழ் மண்ணில் மதவெறி, சாதிவெறி மற்றும் சந்தர்ப்பவாதக் கூட்ட ணிகளுக்கு இடமில்லை என்ற தெளிவான செய்தி தேசத்திற்கு தரப்பட்டுள்ளது. 


இந்தியா அணி தமிழ்நாடு மற்றும் புதுவையில் முழு மையான தேர்ச்சியை பெற்றுள்ளது.

மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி ஆகிய உயரிய விழுமியங்களை மீண்டும் ஒரு முறை தமிழ்நாடு மற்றும் புதுவை உயர்த்திப் பிடித்துள்ளன. 

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய வாக்காளர்கள் போற்று தலுக்குரியவர்கள். 

அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணிகள் தீர்மானகரமாக நிராகரிக்கப்பட்டுள் ளன. பாஜக அமைத்த கூட்டணி மதவாத அணி யாக மட்டுமின்றி சாதிய சக்திகளின் கூட்டணியாக வும் இருந்தது. 

இது மண்ணைக் கவ்வியுள்ளது.

கடந்த பத்தாண்டு காலமாக நரேந்திர மோடி தலைமையிலான அனைத்து மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் காவடி தூக்கிவிட்டு கடைசி நேரத்தில் பாஜக விடமிருந்து விலகுவதாக அதிமுக நாடகமாடி யது. 

ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜ கவை விமர்சிக்கக் கூட அதிமுக அணி தயங்கி யது. இந்த சந்தர்ப்பவாத நிலைபாட்டை தமிழக மக்கள் நிராகரித்துள்ளனர். 

முதல் கட்ட தேர்தல் நடந்த தமிழ்நாட்டிற்கு மோடி மற்றும் அமித்ஷா வகையறா அடிக்கடி விஜயம் செய்தது. ரோடு ஷோ நடத்திப் பார்த் தார்கள். 

ஆனால் இயற்கைப் பேரிடருக்கு நிவாரண நிதி வழங்க மறுத்தது, நீட் தேர்வுக்கு விலக்களிக்க மறுத்தது, மதுரை எய்ம்ஸ் மருத் துவமனை கட்டுமானப் பணியை இழுத்தடித் தது, கீழடி அகழ்வாய்வில் ஒன்றிய அகழ்வாய்வுத் துறை மண் அள்ளிப் போட்டது போன்ற நயவஞ்சக நடவடிக்கைகளுக்கு தங்கள் வாக்குரிமையின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் பதிலளித்துள்ளனர். 

எனினும் கடந்த தேர்தல்களோடு ஒப்பிடும் போது பாஜக அணியின் வாக்கு சதவீதம் அதிக ரித்துள்ளது. அதில் கூட்டணி கட்சிகளின் வாக்கு களும் உள்ளன என்ற போதும், தமிழ்நாட்டில் உள்ள மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் மேலும் விழிப் போடும், ஒருங்கிணைப்போடும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. 

அதிமுகவின் வாக்கு சதவீதத்திலும் சரிவு ஏற்படவில்லை என்பதை மனதில் கொண்டு வியூகங்களை வகுக்க வேண்டும். 

தமிழ்நாடு தொடர்ந்து முன்வைத்து வரும் சமூக நீதி இந்த முறை ஒட்டு மொத்த இந்திய தேர்தல் களத்தின் பேசு பொருளானது குறிப்பி டத்தக்க ஒன்று. 

சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட சமூக நீதி சார்ந்த பிரச்சனைகளிலும் தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து நாடாளுமன்றம் செல் லும் உறுப்பினர்கள் மீண்டும் உறுதிமிக்க குரல் எழுப்புவார்கள் என்பது உறுதி.

ஏன் இந்த தோல்வி?

நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகள் பெற்று அதிமுக 4வது இடத்துக்கு சென்றது ஏன்?


 தென்மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக ஓட்டை இழந்தது ஏன்? 

என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.  


நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 32 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டது. 


அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்து உள்ளது. இதில், வேலூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, தென்சென்னை, புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்து உள்ளது. 

தென் மாவட்டங்களில் அதிமுக வலுவாக இருந்த தொகுதிகளில் டெபாசிட் இழந்தது கட்சியினரையே அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 


12 இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜ 2ம் இடம் பிடித்து உள்ளது.


 ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடி தலைமையில் சந்தித்த 9 தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது.


இதற்கு முக்கிய காரணமே அதிமுகவில் ஏற்பட்ட பல அணிகள் மற்றும் எடப்பாடியின் சமுதாய ஆதிக்கம்தான் என்று கட்சியினர் குமுறுகின்றனர். இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்ட அதிகார மோதலால் கட்சி நான்காக உடைந்தது.


 எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் என 4 அணிகளாக செயல்பட்டது. 


குறிப்பாக 4 பேரும் அவரவர் சார்ந்த சமுதாய ஓட்டுக்களை பிரித்தனர். கொங்கு மண்டலத்தில் எடப்பாடி அவர் சார்ந்த சமுதாய பிரதிநிதிகளுக்கே முக்கியத்துவம் தந்தார். கட்சி பதவிகள் மற்றும் தேர்தல்களில் போட்டியிட அவர் சார்ந்த சமுதாயத்தினருக்கே வாய்ப்பு கொடுத்தார்.


 டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகிய மூன்று பேரும் சமுதாய ஓட்டுக்களை பிரித்தனர். குறிப்பாக, எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி தனித்தனியே களம் கண்டதால் அதிமுக ஓட்டுக்கள் மூன்றாக சிதறின.


 இதனால்தான் ஓபிஎஸ் தனது சமுதாய வாக்குகள் எங்கு அதிகமாக உள்ளதோ அந்த தொகுதிகளில் சர்வே எடுத்து ராமநாதபுரத்தில் போட்டியிட்டார். 

அங்கு அவருக்கு சமுதாய ஓட்டுக்கள் கை கொடுத்தது. 

இதனால்தான் அங்கு அதிமுகவை விட மூன்று மடங்கு அதிக வாக்குகளை ஓபிஎஸ் பெற்றார். இந்த தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்தது. 


இதேபோல் மாஜி அமைச்சர்கள் உள்ள மதுரை, திண்டுக்கல்லில் அதிமுக மண்ணை கவ்வி உள்ளது. 

இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகள் சமுதாய ரீதியாக ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவுக்கு சென்றன.


அதிமுகவுக்கு கை கொடுப்பதே கொங்கு மண்டலமும், தென் மண்டலமும்தான். இந்த முறை கொங்கு மண்டலம் கை கொடுத்ததால் அங்கு டெபாசிட் இழக்காமல் கவுரவத்தை தக்க வைத்து கொண்டது.


 ஆனால், தென்மண்டலத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்து உள்ளது. 

ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் வரும். 

அவ்வாறு கணக்கு பார்த்தால் 30 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 30 தொகுதிகள் சட்டப்பேரவை தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


 தென்சென்னை, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் 4வது இடம் கிடைத்து உள்ளது. தென்சென்னையில் ஜெயக்குமாரின் மகனும், அத்தொகுதியின் முன்னாள் எம்பியுமான ஜெயவர்தன் டெபாசிட் இழந்து உள்ளார். 


பிரபலத்தின் வாரிசு என்றபோதிலும் ஓட்டு விழவில்லை. இந்த தொகுதியில் அவர் எம்பியாக இருந்தபோது பெரிதாக எதுவும் செய்யவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். 


இன்னொரு பக்கம் ஜெயக்குமார் வாரிசுக்கு கொடுத்ததால் கட்சியினரே அதிருப்தியில் வேலை செய்யவில்லை. 


வேலூரில் கடந்த அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த முறை பாஜ கூட்டணியில் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். அவர் அதிமுகவை டெபாசிட் இழக்க வைத்து 2வது இடத்தை பிடித்து உள்ளார்.


புதுச்சேரியில் அதிமுகவுக்கு 4வது இடம் கிடைத்து உள்ளது. இங்கு பதிவான 8,07,724 வாக்குகளில் 25,165 வாக்குகள் மட்டுமே அதிமுகவுக்கு கிடைத்து உள்ளது.


 இதேபோல், கன்னியாகுமரி, நெல்லையில் டெபாசிட் இழந்து 4வது இடத்துக்கு அதிமுக சென்றுள்ளது. குமரியில் 2014ல் 3வது இடத்துக்கு வந்த அதிமுக இந்த முறை அது கூட வரவில்லை. 


நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகளே அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவினர் பலர் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். 


கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதியில் அதிமுக ஓட்டுக்கள் காங்கிரசுக்கும், பாஜவுக்கும் சென்று உள்ளது. நாம் தமிழர் கட்சியை விட குறைந்த வாக்குகள் வாங்கியதால், இந்த சமயத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் ஒட்டு மொத்த பொறுப்பாளர்களையும் தூக்கி அடித்து இருப்பார். 


ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஆதாரங்களுடன் புகார் அளித்த பின்னரும் நிர்வாகிகள் சிலரை மாற்றம் செய்யாமல் உள்ளார்.


 மாவட்ட பொறுப்புகளில் இருந்து சம்பாதித்தவர்கள் கட்சிக்கு துரோகம் செய்ய தொடங்கி விட்டனர். 

இன்னும் நிர்வாகிகளை மாற்றாமல், கட்சியை நடத்தினால் சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வி தான் கிடைக்கும்.

இனி அகம்பாவம் ஏது?

காங்கிரஸ் ஆட்சி, 2014ல் முடிவுக்கு வந்து, மோடி தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்ட போது, பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 282.

அதாவது, தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையான 272ஐ விட அதிகம். அந்த எண்ணிக்கை, கடந்த 2019 மக்களவை தேர்தலில் 303ஆக உயர்ந்தது.

இதனால், தனக்கு தடையே இல்லை. இனி வரும் காலங்களில், ஒற்றைக்கட்சி தான், ஒரு தலைவர் தான் என்ற எண்ண மிதப்பலுக்கு ஆளான பல பா.ஜ.க.வினரில், முதன்மையானவர் மோடி.

தன்னை தடுக்க யாரும் இல்லை. என்னை எதிர்க்க யாரும் இல்லை என்ற முழக்கத்தை மக்களிடம் திணித்தவரும் மோடியே.

அவ்வகையில் தான், மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டால் அதனை நீக்குவதும், கடந்த காலங்களில் மோடியால் முடுக்கிவிடப்பட்ட கலவரங்களுக்கான ஆதாரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டால் அதற்கு தடையிடுவதும்,

தடையிடுவது, தனி மனித உரிமைக்கு எதிரானது என்றால், சட்டத்தையே மாற்றுவதுமான நடவடிக்கைகளை மும்முரமாக கொண்டு வந்தது மோடி அரசு.

கடந்த காலங்களில் இருந்த கர்வம் - இனி இல்லை! : கூட்டணி இல்லையேல், பா.ஜ.க ஆட்சியே இல்லை!

அவ்வாறு கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தான், புதிய குற்றவியல் சட்டங்கள், புதிய தொலைதொடர்பு சட்டம், ஊடக சட்டம் (தகவல் மற்றும் ஒளிபரப்பு), கல்வி திருத்தச்சட்டங்கள், அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் (பழங்குடியினர், சமூக நீதி, அதிகாரம், சட்டம் ஆகியவற்றின் அடிப்படையை மாற்றும் சட்டங்கள்),

டிஜிட்டல் (எண்ம) தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டங்களை நீக்கும் மசோதாக்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், வன திருத்தச் சட்டம், ஒதுக்கீட்டு திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள்.

இவை எல்லாம், கடந்த 2023ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டன. அதுவும், நாடாளுமன்றத்தில் கொண்டுள்ள பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்டு, மக்களவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி, நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட சட்டங்கள்.

இடையிடையே, மக்களவை உறுப்பினர்கள் பதவி நீக்கம், முதலமைச்சர்கள் கைது வேறு. இவை எவையும், இதுவரை இந்திய ஜனநாயகத்தில் அரங்கேறாத நடைமுறைகள் வேறு.

இதனால்,இதுபோன்றபாசிசவிழுமியங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட பா.ஜ.க.வின் நடவடிக்கைகளை எதிர்த்து, தமிழ்நாட்டில் தி.மு.க, மேற்கு வங்கத்தில் திரிணாமுல், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி உள்ளிட்ட மாநில கட்சிகள், காங்கிரஸ், ஆம் ஆத்மி, சி.பி.ஐ, சி.பி.ஐ.எம் உள்ளிட்ட தேசிய கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட பேராற்றல் தான், ‘இந்தியா கூட்டணி.’

கடந்த காலங்களில் இருந்த கர்வம் - இனி இல்லை! : கூட்டணி இல்லையேல், பா.ஜ.க ஆட்சியே இல்லை!

இப்பேராற்றலை தடுக்க, பாசிச பா.ஜ.க எண்ணற்ற குறுக்கு வழிகளை மேற்கொண்டும், ஏன் இறுதியில் Exit Poll என்கிற உளவியல் விளையாட்டை அரங்கேற்றியும்,

அவை எவற்றிலும் தொய்வில்லாமல், 234 தொகுதிகளில் வென்று காட்டியிருக்கிறது இந்தியா கூட்டணி.

இதனால், கடந்த இரு தேர்தல்களில் கூட்டணி சார்பு இல்லாமல், பா.ஜ.க.வை சார்ந்து மற்ற கட்சிகள் இருந்த நிலை மாறி,

மற்ற கூட்டணி கட்சிகளை சார்ந்து தான், இனி பா.ஜ.க இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி தந்திருக்கின்றனர் மக்கள்.

குறிப்பாக தமிழ்நாடு - புதுச்சேரியில், பா.ஜ.க.விற்கும் சரி, பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்கும் சரி, பல இடங்களில் டெபாசிட் இழப்பு ஏற்பட்டு, தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி 40க்கு 40 இடங்களில் வென்று, சாதனை படைத்தது.

கடந்த 10 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் என்றாலே, பா.ஜ.க. தான் என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பம், 2024-ல் தவிடுபுடியாகியுள்ளது.

கடந்த காலங்களில் இருந்த கர்வம் - இனி இல்லை! : கூட்டணி இல்லையேல், பா.ஜ.க ஆட்சியே இல்லை!

பா.ஜ.க.வை விட, சமாஜ்வாதி அதிக இடங்களை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல், பா.ஜ.க காலூன்றி இருந்த ஃபைசாபாத் (அயோத்தி) தொகுதியிலும் சரி, ராகுல் காந்திக்கு சவால் விட்ட அமேதி தொகுதியிலும் சரி, மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது பா.ஜ.க.

சுமார் 13 ஒன்றிய பா.ஜ.க அமைச்சர்களும் தோல்வியில் துவண்டுபோயுள்ளனர். அதில், மகேந்திர நாத் பாண்டே, அர்ஜுன் முண்டா, பக்வந்த் குபா பீடர், முரளிதரண், ஸ்மிருதி இரானி, சஞ்சீவ் பல்யான் ஆகியோர் அடங்குவர்.

இதனால், பா.ஜ.க.வின் பெரும் புள்ளிகள் கவிழ்ந்ததோடு, கூட்டணி கட்சிகளை தொங்கிக்கொண்டிருக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

எனவே, மோடியின் ஆட்டம் இனி இருக்காது. ஒருவேளை ஆட்டம் காண்பிக்க எண்ணினாலும், அது விரைவில் சுக்குநூறாகும் என்பதே, 2024-ல், பா.ஜ.க பெற்ற சிறுபான்மை வெற்றி உணர்த்துவதாய் அமைந்திருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?