குளறுபடிகள் அம்பலம்

 திருப்பத்தூரில் பிடிபட்ட சிறுத்தை தமிழ்நாடு-ஆந்திரா எல்லை வனப்பகுதியில் விடப்பட்டது: -வனத்துறை.

விழுப்புரம் வட்டாச்சியர் சுந்தரராஜன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர் உடலுக்கு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் இறுதி மரியாதை.

அமைதியைச்சீர்குலைக்கும்வகையில்பேசியதாக பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் உபா சட்டத்தில் வழக்கு.

குளறுபடிகள் அம்பலம் ஆகிறது

நீட் தேர்வில் குளறுபடிகள் அம்பலம் ஆனதும், ஒன்றிய அரசு பின்வாங்கத் தொடங்கி இருக்கிறது. 

1,563 மாணவர்களுக்குக் கொடுத்த கருணை மதிப்பெண்ணை ரத்து செய்யப் போகிறார்களாம். உச்சநீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறது ஒன்றிய அரசு.

நீட் தேர்வில் இதுவரை ரகசியமாக நடந்த குளறுபடிகள், மோசடிகள், தகிடுதத்தங்கள் இந்த ஆண்டு வெளிப்படையாகவே நடந்தன.


இதனை மறைப்பதற்காகத்தான் ஜூன் 14 ஆம் தேதி வர வேண்டிய தேர்வு முடிவுகளை, ஜூன் 4 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் நாளன்று வெளி யிட்டு மறைக்கப் பார்த்தார்கள். “பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்பதைப் போல ‘நீட் திருட்டுத் தனம்’ மக்கள் மத்தியில் அம்பலம் ஆனது.

முன் எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் 720 மதிப்பெண்ணுக்கு 720 மதிப்பெண் எடுத்தார்கள். 

இவர்களில் 6 பேர் அரியானா மாநிலத்தில் உள்ள ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள். சில குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் கொடுத்துள்ளார்கள். 

கேட்டால், ‘என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களில் சில மாற்றங்கள் இருந்ததால் கொடுத்தோம்’ என்று முதலில் சொன்னார்கள்.

 ‘தேர்வு மையத்துக்கு சில மாணவர்கள் தாமதமாக வந்தார்கள், அதனால் தேர்வு எழுதும் நேரத்தை இழந்தார்கள், அதனால் கருணை மதிப்பெண் வழங்கினோம்’ என்று தேசிய தேர்வு முகமை காதில் பூ சுத்தியது.

தேர்வு மையத்துக்கு ஒழுங்கான நேரத்துக்கு வர வேண்டும், வராவிட்டால் கூடுதலாக நேரம் கொடுக்கலாமே தவிர, கூடுதல் மதிப்பெண்ணா கொடுப்பார்கள்? இந்த பஞ்சமா பாதகம் எல்லாம் பா.ஜ.க. ஆட்சியில்தான் நடக்கும்.

கருணை மதிப்பெண்ணாக எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா?

 70 முதல் 80 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்கள். கருணை மதிப்பெண் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஒரு மதிப்பெண், அல்லது 2 மதிப்பெண் கொடுப்பார்கள். 

ஆனால் 70 மதிப்பெண், 80 மதிப்பெண்கள் எல்லாம் எப்படி கருணை மதிப்பெண் ஆகும்? மொத்தமாக மதிப்பெண் போட்டுள்ளது தேசிய தேர்வு முகமை. இதுதான் ‘தேசிய’ அநீதியாகும்.

20 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் ஒருசில மாணவர்களுக்குச் சாதகமாக தேசிய தேர்வு முகமை நடந்து கொண்டுள்ளது. 

அதனைக் கண்டுகொள்ளாமல் ஒன்றிய பா.ஜ.க. அரசும் இருந்துள்ளது. நாடறிய மாட்டிக் கொண்டதும், நல்ல பிள்ளை வேஷம் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

1,563 பேரின் கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. அரசு சொல்லி இருக்கிறது.

உச்சநீதிமன்றத்துக்கு யாருமே கொண்டு போகவில்லை என்றால் பா.ஜ.க. அரசு இதனைச் செய்திருக்குமா? 

செய்திருக்காது. இத்தனை ஆண்டுகளாக நீட் தேர்வில் இப்படிப் பல மோசடிகள் நடந்துதான் வருகின்றன. 

அப்போதெல்லாம் பா.ஜ.க. அரசு கண்டுகொள்ளவே இல்லை. மாதம்தோறும் லட்சம் கோடிகள் சம்பாதிக்கும் பயிற்சி நிறுவனங்களின் பாதம் தாங்கிக் கிடந்தது பா.ஜ.க. அரசு. 

கார்ப்பரேட்டுகளின் ஆட்சியை கல்வித் துறையிலும் நிலைநாட்டிக் கண்டுகொள்ளாமல் இருந்தது பா.ஜ.க. ஆட்சி.

தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.

 தமிழ்நாடு சட்டமன்றத்தில் “நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டுக் காத்திருக்கிறோம். நீட் தேர்வை முழுமையாக விலக்குங்கள், அல்லது தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு தாருங்கள்” என்று கோரிக்கை வைத்துள்ளோம். 

இதையெல்லாம் வெறும் அரசியல் நடவடிக்கை என்று ஒதுக்கித் தள்ளியது பா.ஜ.க. அரசு.

ஆனால் இன்று, நீட் தேர்வு எழுதிய மாணவர்களே இந்த மோசடித்தனத்தை உணர்ந்துவிட்டார்கள். 

நீட் தேர்வு எழுதிப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள். ‘கடந்த மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 

நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று அந்த மாணவர்கள் கோரிக்கை வைத்து இருந்தார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அசானுதீன் அமானுல்லா அமர்வு முன்னால் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. “நீட் தேர்வின் புனிதத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. 

அதன் புனிதத் தன்மையைப் பாதுகாக்க வேண்டியது தேசிய தேர்வு முகமையின் பொறுப்பு” என்று நீதிபதிகள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

 ‘நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது’ என்ற சொற்கள்தான் நீட் தேர்வு குறித்த நீதிமன்றத்தின் விமர்சனம் ஆகும். இந்தப் புனிதத் தன்மையைக் கெடுத்தது யார்? 

என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வுக் குழுமம். அதனை வேடிக்கை பார்த்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

ஒன்றிய அரசின் சார்பிலும், என்.டி.ஏ.சார்பிலும் ஒரே வழக்கறிஞர்தான் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் எந்த வேறுபாடும், மாறுபாடும் இல்லை என்பது இதன்மூலம் விளங்குகிறது. 

தேசிய தேர்வுக் குழுமத்தின் முடிவுகளுக்கு ஒன்றிய அரசும் உடந்தை என்பது இதன்மூலம் தெரிகிறது. 

கருணை மதிப்பெண் மோசடி அம்பலம் ஆனபிறகும் அவர்கள் தவறை உணர்ந்ததாகத் தெரியவில்லை. 

கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 23 ஆம் தேதி மறுதேர்வு நடத்தப் போகிறார்களாம். அதில் என்ன அரங்கேற இருக்கிறதோ? தெரியவில்லை. 

கோடிகளில் புரளும் கோச்சிங் சென்டர்களுக்காக என்னமா வாதிடுகிறார்கள் பாருங்கள்!

மொத்தத்தில் நீட் தேர்வையே ரத்து செய்வதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான, நியாயமான தீர்வாக இருக்க முடியும். 

அப்போதுதான் கல்வித் துறை நலன் காக்கப்படும்.

இவர்களுக்கு மட்டும் விலக்கு ஏன்?

பாபர் மசூதி இடிப்பில் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானிக்கு, பெரும் துணையாக இருந்தவர்களில், பா.ஜ.க முன்னாள் மக்களவை உறுப்பினர் பிரிஜ் பூஷனுக்கு தனி இடம் இருக்கிறது என்பதாலும்,

பா.ஜ.க.விற்காக எதனை செய்யவும் தயங்கமாட்டார் என்பதாலும், குற்றவாளி பாணியில் இருக்கும் பிரிஜ் பூஷன் மீது தேசிய மல்யுத்த வீராங்கனைகள் எண்ணற்ற பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும், அவரை சிறை பிடிக்க மறுத்து, விடுதலையாக சுற்ற வழிவகுத்தது தான் பா.ஜ.க.

2014-ல் ஆட்சியை பிடித்த பின், கருப்பு பணங்களை ஒழிப்போம், ஜனநாயகத்திற்கு பாடுபடுவோம் என பொய் பேச்சுகளை விட்டடித்ததையெல்லாம் மறந்த பா.ஜ.க தான், குற்றங்களை நடத்தும் கூடாரமாகவே திகழ்ந்து வருகிறது.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்றாலே பா.ஜ.க.வினரும், அவரது கூட்டணி கட்சியினரும் தான் என்ற அளவு அண்மை அரசியல் மாற்றம் கண்டுள்ளது.

சட்டங்களில் உண்டாகும் ஓட்டைகள் : தொடர்ந்து தப்பிக்கும் பா.ஜ.க.வினர்!

அவ்வகையில், பிரிஜ் பூஷன் வரிசையில், பா.ஜ.க மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவை சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த வழக்கில் கைது செய்ய, பெங்களூர் போக்ஸோ நீதிமன்றம் ஆணை பிறப்பித்த நிலையிலும், அவரை சட்டத்தில் ஓட்டைகளை உருவாக்கி, கைதிலிருந்து மீட்டிருக்கிறது பா.ஜ.க.

இந்த தீர்ப்பு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், சட்ட ஒழுங்கு மீதம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில்,“சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்ய கூடாது” என எடியூரப்பாவிற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நடவடிக்கையால், எத்தகைய குற்றங்களில் ஈடுபட்டாலும், தப்பித்து கொள்வது உறுதி என்ற நிலைப்பாட்டிற்கு பா.ஜ.க.வினர் வரத்தொடங்கியுள்ளனர்.

அதனை எதிர்த்து குரல் கொடுக்கும் இடத்தில் மக்கள் கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து திரிணாமுல் எம்.பி. சாகேத் கோகலே, “ஒரு சாதாரண மனிதன் கைது செய்யப்படலாம், ஆட்சியில் இருக்கும் முதல்வர்கள் கைது செய்யப்படலாம். ஆனால், பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட கூடாதா? எடியூரப்பாவிற்கு மட்டும் ஏன் விலக்கு?” என கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?