காக்களூர் எஸ்டேட் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று நடந்த தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
போர்ஷே கார் மோதி இருவர் உயிரிழந்த வழக்கில், மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது சிறுவன் வேதாந்த் அகர்வாலின் தாய் ஷிவானி அகர்வால் கைது செய்யப்பட்டார். விபத்தில் தொடர்புடைய தனது மகனின் ரத்த மாதிரியை மாற்றி வைத்து, தனது மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாகசான்றுபெற்றகுற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் ஷிவானி.
இவ்வழக்கில், ஏற்கனவே சிறுவனின் தந்தை, தாத்தா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தாயும் கைதாகியுள்ளார்.ஒருதப்பை மறைக்கப்போய் குடும்பமே கைது.
அரசு நிலங்களில் மத வழிபாட்டுத் தலங்களை கட்ட அனுமதிக்க கூடாது: கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழர்கள் திருடர்கள் என கூறிய மோடி தமிழ்நாட்டுக்குள் வர தகுதி கிண்டையாது.-: ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்.ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்யக்கூட விடாமல் அடாவடி.
நீங்கள் விஷத்தைத் தெளித்தாலும் விழுங்கி எழும் எங்கள் மண்!
-சு. வெங்கடேசன் எம்.பி.
பிரதமர் மோடி தியானம் செய்வதற்காகக் குமரி முனையில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு வந்துள்ளார். அவரது தனிப்பட்ட ஈடுபாட்டை கேள்வி க்கு உட்படுத்துவது நமது நோக்க மன்று. விவேகானந்தர் பாறை உள்ள மண்டபத்தை அரசதி காரத்தைச் சார்ந்த ஒருவர் பயன் படுத்துவது தேர்தல் நடத்தை விதிப்படி தவறென்பது அனை வருக்கும் தெரியும், தேர்தல் ஆணையத்தைத் தவிர.
‘தியானம்’ என்ற செயல் ‘நேர்மை’ என்ற பண்பின் ஈடுபாட் டோடு தொடர்புடையது என்பதை சம்பந்தப்பட்டவர்களே நம்பாத போது தேர்தல் ஆணையம் ஏன் நம்ப வேண்டும்?
தேர்தல் ஆணையத்தை நேர்மைப்படுத்துவதோ, நேர்மை யாளர்களை மட்டுமே தியானம் செய்ய வைப்பதோ நம்முடைய வேலையல்ல. நாம் எழுப்ப நினைப் பது ஒரேயொரு கேள்வியை மட்டும்தான்.
திருடர்களின்’ நிலத்தில் தயானமா?தமிழகத்திற்கு தியானம் செய்ய வருவதற்கு முன்பு ஒடிசா வில் நடைபெற்ற தேர்தல் பரப்பு ரைக் கூட்டத்தில் புகழ்பெற்ற ஜெக ந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக கூறினார் மோடி.
ஆல யத்தின் பொக்கிஷத்தைக் களவா டும் திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தி னார். இப்பொழுது “திருடர்களின்” நிலத்தில் தியானம் செய்ய வந்துள்ளார்.
தியானத்தின்பொழுது இருக்க வேண்டிய சூழல் அமைதி. அது தமிழகத்தில் எப்பொழுதும் இருக் கும். உத்தரப்பிரதேசத்தில் போய் எங்களை இழித்துப் பேசியதை யும், ஒடிசாவில் போய் பழித்துப் பேசியதையும் ஒவ்வொரு தமிழ ரும் அறிவோம்.
புறம்பேசுபவரிடம் எப்படி நேர்மையை எதிர்பார்ப்போம் எங்கோ நின்று பொல்லாங்கு பேசுதலுக்குத் தமிழ் இலக்கியம் சூட்டியுள்ள பெயர் “புறம் பேசுதல்”. நீங்கள் அங்கு பேசியதை இங்கு பேசி உங்கள் நேர்மையை நிரூபியுங்கள் என்றுகூட நாங்கள் கேட்கமாட்டோம்.
எந்த ஒரு மனிதரி டமும் அவரிடம் இல்லாத ஒன்றைச் கேட்பது நாகரீகம் அன்று என்பது எங்களுக்குத் தெரியும்.
திரு டர்களின் நிலத்துக்குவந்துள்ள உங்களுக்கு ஒடிய மொழி எழுத்தா ளர் சுரேந்திர மஹாந்தி எழுதிய “நீலமலை” என்கிற நூலைப் பரிச ளிக்க விழைகிறோம்.
விவேகா னந்தர் பாறையின் அமைதியான, தனித்த சூழலில் அந்நூலினைப் படிக்க முயலுங்கள். பூர்வீக ஆவணம் ஒன்றை உங்களுக்கு தருகிறோம் .
நீங்கள் யாரைத் திருடர்கள் என்று கூறினீர்களோ அந்தக் கூட்ட த்தின் சார்பாக, திருடுபோனதாக நீங்கள் சொன்ன பொருள்பற்றிய பூர்வீக ஆவணம் ஒன்றை உங்களி டம் ஒப்படைக்கிறோம்.
ஆம், இந்த நூல் ஜெகந்நாதர் கோயிலை யும் அதனுடைய பொக்கிஷத்தை யும் பற்றியது. நல்லவருக்குப் பரிசாகவும் தீய வருக்குத் தண்டனையாகவும் விளங்கும் ஆற்றல் நூல்களுக்கு உண்டு.
விவேகானந்தருக்கும் எங்களுக்கும் உடன்பாடுள்ள இந்தக் கருத்தில் உங்களுக்கும் உடன்பாடு இருக்குமாயின் இதனைப் படித்து பாருங்கள். ஒடிய மைந்தனின் எழுத்தை வாசியுங்கள் ஒடியாவின் ஒவ்வொரு உயிரி லும் ஜெகந்நாதரின் ஈடுபாட்டுக் கென ஓர் இடம் உண்டு என்பதை முழுமுற்றாக நம்பும் ஒடியாவின் மைந்தனான சுரேந்திர மஹாந்தி யின் எழுத்தை வாசியுங்கள்.
“கங்கை முதல் கோதாவரி வரை பரந்து விரிந்த உத்கல சாம்ராஜ்யத்தின் நிரந்தர அதிபதி யாக, ஒடிய மக்களால் கால மெல்லாம் போற்றப்படும் ஜெகந்நா தரின் பொக்கிஷ அறையின் சாவி, மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் கூத்தப்பன்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஒருவரால் திருடப்பட்ட தாகக் கூறுவது ஆன்மீகமா?
அர சியலா?
அல்லது அருவருப்பா?”
இதற்கும்மேல் பகவான் ஜெகந் நாதர் உங்களின் பக்தர் என்கிறா ர்கள் உங்கள் கட்சிக்காரர்கள்.
தெய்வங்களையே உங்களின் பக்தர் ஆக்கியவர் நீங்கள் இரண்டு மாதங்கள் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்கள் “திருடர்”கள் ஆக்கப்பட்டார்கள். தெய்வங்கள் உங்களின் பக்தர் களாக்கப்பட்டார்கள்.
இப்பொ ழுது விவேகானந்தர் பாறைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களின் 45 மணி நேர தியானத்திற்கு பின் உங்கள் விசுவாசிகள் விவேகா னந்தரை என்ன சொல்லப் போகிறா ர்களோ என்ற பதற்றம் தேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.
பகவானே உங்களின் பக்த ராக்கப்பட்ட பின் பரமஹம்சரின் எளிய சீடனுக்கு எந்த இடம் மிச்சமிருக்கப் போகிறது? வெறுப்பை கக்கிவிட்டே இங்கு வந்திருக்கிறீர்கள் இந்துப் பெண்களின் தாலியில் இருக்கும் தங்கத்தை எடுத்து இஸ்லாம் பெண்களுக்கு எதிர்க்கட்சிகள் கொடுத்துவிடு வார்கள் என்றும் இஸ்லாமியர்கள் அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்பவர்கள், ஊடுருவல்காரர் கள் என்றெல்லாம் பேசிவிட்டுத் தான் தியான மேடைக்கு வந்திருக் கிறீர்கள்.
இங்கு வந்த உங்களிடம் சுரேந்திர மஹாந்தியின் நூலினை பரிந்துரைப்பதற்கு காரணம் உண்டு.
ஜெகந்நாதரின் மரியாதை யைக் காக்கும் பொருட்டு சொல்ல வொண்ணா துயரத்தைச் சந்திக்கும் ஹாபிஸ் காதர் என்கிற இஸ்லாமிய அரசனின் போராட்டமே இந்நூல். விஷத்தை தெளித்தாலும் விழுங்கி எழும் இந்தியா நீங்கள் எவ்வளவு வெறுப்பை விதைத்தாலும் இந்தியா மீளும் என்பதற்கு எங்களின் வேர்களே சான்று. நீங்கள் விஷத்தை தெளித்தாலும் விழுங்கி எழும் ஆற்றல் எம்மண்ணுக்கு உண்டு.
எல்லா மார்க்கத்திலும் மனதை ஒருமுகப்படுத்தும் செயல்முறை உண்டு. மனதை ஒருமுகப்படுத்தலே தியானம். ஆனால் எதில் என்ற கேள்வியில்தான் ஆன்மீகமும் அரசியலும் அடங்கியுள்ளது. நீங்கள் செய்து முடித்து வந்துள்ள தேர்தல் பரப்புரைகளின் வழியே உங்கள் மனமும் சிந்தனையும் என்னவாக உள்ளது என்பதை நாடறிந்துள்ளது.
நீங்கள் பேசிய எல்லாவற்றி லிருந்தும் தேசத்தைத் திசைத் திருப்ப தியானம் பயன்படலாம் என்று நீங்கள் கருதுவீர்களானால் அதில் தோல்வியே அடைவீர்கள்.
தியாகமும் தியானமும் விளம்ப ரத்தின் பொருட்டு அமையுமே யானால் அச்செயலுக்கு விவே கானந்தர் சூட்டும் பட்டத்தை இங்கு குறிப்பிட விரும்பவில்லை.
“இது வரை இருந்த பிரதமர்களிலே அப்பதவிக்கான தகுதியை மிகவும் தாழ்த்தியவர் நீங்கள்” என மன்மோகன்சிங் சொன்னதை மேலும் தாழ்த்த விவேகானந்தரைச் சான்றாக்க விரும்பவில்லை.
விழிப்புணர்வு அவசியம்.
வளர்ந்து வரும் தகவல்தொழில்நுட்ப உலகில் இணையமின்றி எதுவும் இயங்காது என்ற நிலை உருவாகி வருகிறது.
மறுபுறம் அதற் கேற்ப இணையவழி மோசடிகளும், குற்றங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உலகளவில் இணையவழி குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 10 ஆவது இடம்.
ஆனால் முன்னெப்போதும் இல்லாத அள வில் 2024 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களி லேயே இணைய மோசடிகளின் அளவு பன் மடங்கு அதிகரித்திருக்கிறது.
அதாவது 7 லட்சத்து 40 ஆயிரத்து 957 புகார்கள் பதிவாகியி ருக்கிறது. இதன் மூலம் ரூ. 7 ஆயிரத்து 61 கோடி திருடப்பட்டிருக்கிறது.
இது கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கும் இணையவழி மோசடிகளோடு (சைபர் மோசடி) ஒப்பிட்டால் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டி ருப்பதை பார்க்க முடியும்.
2019 ஆம் ஆண்டில் மொத்தம் 26,049 சைபர் குற்றங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.
அது 2022 இல் 9,56,970 ஆகவும் 2023 இல் 15,56,215 ஆகவும் உயர்ந்தது.
2024 இல் முதல் 4 மாதங்களில் மட்டும் 7,40,957 புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இதில் பதிவு செய்யப்படாத புகார்களின் எண்ணிக்கை யையும் சேர்த்தால் இன்னும் எவ்வளவு அதிகமா கும் என்று தெரியாது.
2023ஆம் ஆண்டில் 4 லட்சத்து 70 புகார்க ளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் மட்டும் ரூ.1200 கோடி மோசடி கும்பலிடமிருந்து பாதுகாக் கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரி வித்திருக்கிறது.
ஆனால் எவ்வளவு பணம் திரு டப்பட்டிருக்கிறது என்ற விபரம் இல்லை. சைபர் மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் சிம்கார்டுகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சி நடை பெறும் மாநிலங்களில்தான் அதிகளவில் சைபர் மோசடிகள் நடைபெறுகின்றன. 2023 இல் 1,97,547 சைபர் மோசடிகளுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், 1,25,153 சைபர் மோசடிகளுடன் மகாராஷ்டிரா இரண்டாமிடத்தையும், 1,21,701 மோசடிகளுடன் குஜராத் மூன்றாமிடத்தையும் பிடித்திருக்கின்றன.
இதற்கு அடிப்படையாக இருப்பது, சமூக ஊடகங்கள் தொடங்கி அனைத்து இடங்களி லும் நமது தரவுகள் அனைத்தும் பாதுகாப்பின்றி பொதுவெளியில் செல்வதும் ஒரு காரணமாகும்.
இதனைத் தடுத்து ஒழுங்கு படுத்திட வேண்டிய ஒன்றிய மோடி அரசு, கடந்த 10 ஆண்டுக் காலத் தில் தனது காவி கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு மக்களின் ஒட்டு மொத்த தரவுகளையும் தாரை வார்த்தது. அது மிகப்பெரிய மோசடியாகும்.
சைபர் நிதி மோசடிகளில் அறியாமையால் சிக்குபவர்கள் சிலர். ஆனால் பணத்தாசையால் தெரிந்தே படுகுழியில் விழுபவர்கள் பலர்.
மோசடிகள் தொழில்நுட்பத்தோடு இணைந்தே இயக்கப்படுவதால் சாமானியர்களால் அவ்வளவு எளிதாகத் தப்பிக்க முடிவதில்லை.
மக்களின் விழிப்புணர்வும், அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையுமே இணையவழி குற்றங்களைக் குறைத்திட வழி.
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...
சோதனையைச் சாதனை ஆக்கிய ‘இந்திய மகள்’ வினேஷ் போகத். அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் அவரை உலகமே கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. இந்தியா சார்பில் போட்டியில் பங்கெடுக்கச் சென்றார். உலக நாடுகளின் பிரதிநிதியாக உயர்ந்து நிற்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 88 பதக்கங்கள், உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கங்கள் வென்ற வீரர்தான் வினேஷ் போகத். வினேஷ் போகத் நடத்திய மல்யுத்தமானது மைதானத்தில் மட்டுமே நடந்தவை அல்ல. இந்தச் சமூகத்துக்கு எதிராக, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, பாலியல் குற்றவாளிக்கு எதிராக, ஆணாதிக்க கொடூரத்துக்கு எதிராக யுத்தம் நடத்தினார். அதிலும் அவரை வீழ்த்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 2023 ஆம் ஆண்டு முழுக்கவே அவரது மல்யுத்தம், ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்கொள்வதாக இருந்தது. 2023 ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். பா.ஜ.க.வின் எம்.பி.யான...
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் திடீர் திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுபகையால், சிறையில் உள்ள தனதுதந்தையுடன் சேர்ந்து கூலிப்படையினரை கொண்டு கொலை சம்பவத்தை நிறைவேற்றியுள்ளார் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே கடந்த ஜூலை 5-ம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னைபாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், போலீஸ் என்கவுன்ட்டரில் திருவேங்கடம் உயிரிழந்தார். சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக துப்பு துலக்கினர் இந்நிலையில், திடீர்திருப்பமாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் (32) நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை நாகேந்திரன்விரைவில் கைது செய்யப்பட உள்ளார். கொலையின்...