கடவுளை கைவிட்ட ?
காசா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 200 பேர் பலி.
கடவுளை
கைவிட்ட கடவுள்
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது.
பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிர்பந்தத்தில் உள்ளது.
இதனிடையே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40-க்கு 40 என்று வென்று அசத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு கிடைத்த மக்களின் மிகப்பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நாடு முழுவதுமே மக்கள் இந்தியா கூட்டணிக்கு தங்கள் அமோக ஆதரவை இந்த தேர்தலில் கொடுத்துள்ளனர்.
மக்களின் இந்த பெரும் எழுச்சிக்கு காரணம் இந்தியா கூட்டணியின் ஒற்றுமை மட்டுமே.
இது தங்கள் கோட்டை என்று மார்தட்டிக்கொள்ளும் பாஜக, தான் ஆளும் உத்தர பிரதேசத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதசத்தில் இந்தியா கூட்டணி 45 இடங்களையும் பாஜக 33 இடங்களையும் பெற்றுள்ளது. பாஜகவினருக்கு பெரும் பின்னடைவாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் மோடியின் வெற்றிக்கு மக்கள் மட்டுமின்றி இராமரும் உதவவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மதத்தை வைத்து மட்டுமே அரசியல் செய்யும் மோடி மற்றும் பாஜக, இந்த முறை இராமர் கோயில் என்பதை தனது ஆயுதமாக கையில் எடுத்தது.
உ.பியின் அயோத்தியில் கட்டி திறக்கப்பட்டுள்ள இராமர் கோயில் மோடி அரசின் பெரும் சாதனையாக தனது அனைத்து பிரசாரங்களிலும் மோடி மற்றும் பாஜகவினர் கூறி வந்தனர்.
தொடர்ந்து மோடிக்கு இராமர் துணை நிற்பார் என்றும், இந்த முறை மீண்டும் பாஜக வெல்லும் என்று கூறி வந்ததோடு, தானே அந்த கடவுளின் சேவகன் என்றும், தானே கடவுள் என்றும் மோடி கூறி வந்தார்.
இவரது இந்த பேச்சு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு, பாஜக ஆதரவாளர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
எனினும் தானும் பாஜகவும் இந்த முறை தோல்வியடைய மாட்டோம் என்றும், 400 தொகுதிகளை பாஜக வெல்லும் என்றும் பாஜவும் மோடியும் வாய் வலிக்க கத்தி பிரசாரம் செய்த நிலையில், தற்போது பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கூட கிடைக்காமல் பின்னிலையை சந்தித்துள்ளது.
மோடி நம்பிய இந்து மக்கள் மட்டுமின்றி இராமரும் அவரை கைவிட்டது இந்த தேர்தல் மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது பாஜக போட்டியிட்ட இராமர் தொடர்பான தொகுதிகளில், குறிப்பாக இராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் கூட பாஜக தோல்வியை சந்தித்துள்ளது.
அதன் பட்டியல் வருமாறு :
* இராம ஜென்மபூமியாக கூறப்படும் உத்தர பிரதேசத்தில் இராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி (ஃபைசாபாத்) தொகுதியில் பாஜக தோல்வி.
* இராமர் 11 வருடங்கள் வளவாசத்தில் இருந்ததாக கூறப்படும் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள சித்ரகூட் (பண்டா) தொகுதியில் பாஜக தோல்வி.
* இராமரின் மனைவி சீதாவின் புனிதத் தலமாக கூறப்படும் உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள சீதாபூர் மா தொகுதியில் பாஜக தோல்வி.
* இராமரின் குரு வசிஷ்டரின் பூமியாக கூறப்படும் உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள பஸ்தி தொகுதியில் பாஜக தோல்வி.
* இராமருடன் தொடர்புபடுத்தி பேசப்படும் உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள சுல்தான்பூர் தொகுதியில் பாஜக தோல்வி.
* இராமரின் வனவாசத்தின் முக்கிய இடமாக கூறப்படும் உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள பிரயாக்ராஜ் தொகுதியில் பாஜக தோல்வி.
* இராமரின் வனவாசத்தின்போது அவர் தங்கியிருந்த இடமாக கூறப்படும் மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ள ராம்தேக் தொகுதியில் பாஜக தோல்வி.
* இராமரின் சகோதரரான லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த இடமாக கூறப்படும் மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ள நாசிக் தொகுதியில் பாஜக தோல்வி.
* அனுமாரின் ஜென்மபூமியாக கூறப்படும் கர்நாடகாவில் அமைந்துள்ள கொப்பல் தொகுதியில் பாஜக தோல்வி.
* இராமர் இலங்கைக்கு சென்றதாக கூறப்படும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) தொகுதியில் பாஜக தோல்வி.