கருணாபுரம்

கள்ளச்சாராயம் சாவுகள்!

 கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும், 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் வந்தனர்.


அப்போது அமைச்சர் எ.வ.வேலு: கருணாபுரம் பகுதியை சேர்ந்த சிலர் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி உள்ளனர். நாங்கள் வரும்பொழுதே மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு என்னென்ன சிகிச்சைகள் எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது. 


என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எல்லாவற்றையும் விசாரித்தோம்.  

நாங்கள் மருத்துவர்களிடம் கேட்கின்ற பொழுது 9 பேர் அபாய நிலையில் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் ஸ்டேபிளாக உள்ளார்கள். எப்படியும் எல்லாரையும் காப்பாற்றி விடலாம் என தொடர்ந்து சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். 


அரசை பொறுத்தவரை எல்லா நடவடிக்கையும் அரசு எடுத்திருக்கிறது. அதேநேரத்தில் மெத்தனமாக செயல்பட்டதால் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இங்குள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட இதில் ஈடுபட்டுள்ள மற்றும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் 10 பேரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 


மேற்கொண்டு மருத்துவர்கள் தேவை என்றால் அனுப்பி வைப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு பெட்டுகளிலும் இரண்டு டாக்டர்கள் இரண்டு, செவிலியர்கள் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 


எஞ்சி உள்ளவர்கள் பிழைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நடந்த தவறை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இறந்தோரின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


 கள்ளச்சாராயம் விற்போரை அரசு ஒருபோதும் ஊக்கப்படுத்துவதில்லை. இதனை கருத்தில் எடுத்துக் கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதை அரசாங்கம் எடுக்கும் என்றார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது. ஐஜி அன்பு தலைமையிலான சிபிசிஐடி குழு விசாரணையை தொடங்கி உள்ளது. ஐஜி அன்பு தற்போது நேரடியாக ஸ்பாட்டுக்கே சென்றுள்ளார்.

சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி, வயது 49, த/பெ. கனகு என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.


ஆட்சியர், எஸ்.பி. மட்டுமின்றி மேலும் 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆய்வாளர் கவிதா,

திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பாரதி

கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன்

காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ்


தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரம் பகுதியில் பாக்கெட் சாராயம் குடித்ததால் 72 பேர் உடல் உபாதை காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


 சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் அனைவரும் மெத்தனால் என்னும் திரவத்தை அருந்தியிருப்பது கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் அந்த அறிக்கையில், "மெத்தனால் கொண்டு வந்த விற்பனை செய்த கன்னுக்குட்டி என்னும் கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 இது காவல்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிசி எஸ்.பி. உள்ளிட்ட 10 காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


 இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது." என்று கூறப்பட்டுள்ளது.


கடும் வெப்பத்தால் நடப்பாண்டில் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட 90 இந்தியர்கள் உயிரிழப்பு.

நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிவு தொடர்பாக பீகார், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் வழக்குகள் பதிவு.


பின்தங்கும் மாநிலங்கள்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவு நிலவரப்படி, NDA கூட்டணி ஆட்சியின் கீழ், 19 மாநிலங்களும், ஒரு யூனியம் பிரதேசமும் இருக்கிறது.

இந்தியா கூட்டணி ஆட்சியின் கீழ் 8 மாநிலங்களும் 1 யூனியன் பிரதேசமும் இருக்கிறது.

எனினும், நாடாளுமன்ற முடிவுகள், இந்தியா கூட்டணிக்கும், NDA கூட்டணிக்கும் பெரிதளவில் வேறுபாடு இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

NDA கூட்டணி ஆட்சியில் இருக்கும் மணிப்பூர், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் கூட, அதிக இடங்களை பெற்ற கூட்டணி, இந்தியா கூட்டணியாகவே இருக்கிறது.

அதற்கு காரணம், NDA ஆட்சியில் அதிகரித்து வரும் அநீதிகளும், சமத்துவமின்மையுமே.


அதற்கு முற்றிலும் எதிராய், சமூகநீதியின் வழி, சமத்துவத்தை வென்ற மாநிலங்களாக விளங்குகிறது இந்தியா கூட்டணி ஆட்சி வகிக்கும் மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு.

தமிழ்நாட்டில், தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி, 39க்கு 39 இடங்கள் பெற்று, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதற்கு காரணம், தி.மு.க ஆட்சியில் அதிகரித்து வரும் சமூகநீதிகளும், சமத்துவமுமே.

இந்தியாவிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்துள்ள மாநிலமும், அதிகப்படியான தொழிற்சாலைகள் அமைந்துள்ள மாநிலமும், கல்வியில் சமத்துவம் அதிகம் இருக்கும் மாநிலமும், குற்றங்கள் குறைவாக நடக்கும் மாநிலமும், பிரிவினைவாதம் தலைதூக்காத மாநிலமும், மத அரசியல் காலூன்ற இயலாத மாநிலமுமாக தமிழ்நாடு விளங்குகிறது.

சமத்துவ - சமூக நீதியில்  முன்னோடியாக இந்தியா கூட்டணி மாநிலங்கள் : பின்தங்கும் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள்!

அதுவும் குறிப்பாக, ஒன்றியத்தின் பாகுபாடுடைய நிதி பகிர்வின் போதும், இத்தகைய வரலாற்று வளர்ச்சியடைந்துள்ளது தமிழ்நாடு.

ஒன்றிய பா.ஜ.க அரசு, மதவாத அரசியலை பரப்பும் நோக்கில், ஜனநாயகத்தை குழைக்கும் நோக்கில், குஜராத்தில் 26 ஆண்டுகளுக்கு மேலாகவும், உத்தரப் பிரதேசத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாகவும், மணிப்பூரில் 7 ஆண்டுகளாகவும் ஆட்சிபுரியும் வேளையில்,

அம்மாநிலங்களுக்கு, ஒன்றிய அரசு வரித்தொகை பகிர்வதும் ஏராளம், முதலீடுகளை மற்ற மாநிலங்களிலிருந்து பறித்து, பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு தருவதும் ஏராளம்.

எனினும், தமிழ்நாட்டில் நிலைக்கு அடுத்து கூட வர இயலவில்லை. காரணம், சமூக நீதி. சமூக நீதியால் பெறப்படும் கல்வி.

எதனையும், கூர்ந்து ஆராய்ந்து செயல்படுத்துதல் ஆகியவையே, தமிழ்நாடு கற்றுத்தந்திருக்கிற பாடம்.

அதன் காரணமாகவே, உத்தரப் பிரதேச மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்றிருக்கிற அகிலேஷ் யாதவ் கூட, நீட் தேர்வு எதிர்ப்பில் தமிழ்நாட்டை பின் தொடர்கிறோம் என வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறார்.

டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி, தமிழ்நாட்டின் திட்டங்களை டெல்லியில் செயல்படுத்துகிறது.

உழைக்கும் சமுதாய பெண்களுக்கு, மாதம் ஒரு முறை ஊக்கத்தொகை என்ற திராவிட மாடல் திட்டத்தை, தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்தது காங்கிரஸ்.

சமத்துவ - சமூக நீதியில்  முன்னோடியாக இந்தியா கூட்டணி மாநிலங்கள் : பின்தங்கும் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள்!

இதனால், மற்ற மாநிலங்களுக்கும், மற்ற மாநில கட்சிகளுக்கும் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக மாற்றம் கண்டிருக்கிறது தமிழ்நாடு.

பொருளாதாரத்தில் இரண்டாம் இடம் பிடிக்க காரணம், இந்திய பங்கு சந்தை காரணம் காட்டி, முதலீடு செய்யும் பன்னாட்டு நிருவனங்களுக்கான முதன்மை இடமாக காட்சிப்படுத்தப்படும் மாநிலமாக மகாராஷ்டிரா இருப்பது.

எனவே, பன்னாட்டு குழுமங்களின் இந்திய தலைமை இடம் மகாராஷ்டிரத்தில் அமையப்பெறுகின்றன. அதனால், தொழில் நுட்ப அளவில், தமிழ்நாடு பெருமளவு பங்களித்தும், முதன்மை இடம், மகாராஷ்டிரத்திடம் செல்கிறது. இல்லையேல், அதிலும், தமிழ்நாடே முதலிடம் வகிக்கும்.

இவ்வாறு எதிலும் முதலிடம் என்ற வெற்றிப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் தமிழ்நாடும், மற்ற இந்தியா கூட்டணி மாநிலங்களும் தொடர்ச்சியாக முன்னேறுவதை கண்ட, NDA கூட்டணி ஆட்சியின் கீழ் இருக்கும் மக்கள், தங்களது விருப்பத்தை இந்தியா கூட்டணி பக்கம் திருப்பியுள்ளனர்.

அதற்கு காரணமாக தான், மோடியின் முகமும் வாடத்தொடங்கி, வெற்றி பெற்றும் தோல்வி விரக்தியடைந்து வருகிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?