இரண்டு வருட ஆட்சி
மேற்கு வங்கத்தில் மம்தா வின் ஆட்சி யைப் பற்றிப் பலரும் பல ஊடகங்களும்
கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மம்தாவின் ஆட்சி பற்றி, மலையாள நாளிதழ்
“மாத்ரு பூமி” (3.5.2013) ஒரு மதிப்பீடு கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதன் சில
பகுதிகள் இங்கே தரப்படுகிறது.
"முப்பது ஆண்டு களுக்கு மேலாக நீடித்த ஓர்
இடதுசாரி அரசை வீழ்த்திய “வீரப்பெண்மணி” என்ற நிலையில் மம்தா பானர்ஜி
உலகின் கவனத்தைக் கவர்ந் தார்.
அவர் உயர்த்திக் காட்டிய நம்பிக்கைகளும்
பெரிதாக இருந்தன. இன்று வங்கத்தைப் பிடித்து உலுக்குகிற சீட்டு நிதிநிறுவன
மோசடி வரையான நிகழ்வுகளைச் சேர்த்துப் பார்க்கிறபோது, மம்தாவின் இரண்டு
வருட ஆட்சி குறித்த சான்றிதழானது மம் தாவுக்கு அவ்வளவு சிறப்பில்லாத எதிர்
காலத்தையே வரைந்து காட்டுகிறது.
ஆரம்பத்தில் மம்தாவை நம்பிக்கை யோடு பார்த்த
வங்கத்தின் கலாச்சார உலகமும், வர்த்தக குரூப்புகளும் இப் போது ஒரே மாதிரி
அதிருப்தியடைந்துள் ளனர்.
மம்தா அரசின் நடவடிக்கை குறித்து வர்த்தக
உலகிற்கு நிறைய குற்றச் சாட்டுகள் உள்ளன.சிங்கூர் பிரச்சனை உருவாக்கிய
எதிர்ப்பைத் தேர்தலில் வாக்குகளாக மாற்றிக் காட்டிய மம்தா பானர்ஜிக்கு இப்
போது நிலம் எடுப்பது பற்றிக் கேட்டாலே பயம்தான்.
ஆனால், சிறப்புப்
பொருளாதார மண்டலத்திற்கு (ஸெஸ்) அனுமதி வேண்டி டஜன் கணக்கான விண்ணப்பங்
கள் அரசாங்கத்தின் முன் குவிந்துகிடக் கின்றன. சிறப்புப் பொருளாதார மண்
டலமே வேண்டாம் என்கிற கடுத்த நிலைப்பாட்டையே கடந்த இரண்டு வரு டங்களாக
மம்தா தொடர்கிறார்.என்றாலும், தனது அரசியல் நோக் கத்திற்காகத் தேவைப்படுகிற
இடத்தில் நிலத்தைத் தேவையில்லாமல் கையகப் படுத்துகிறார் என்கிற
குற்றச்சாட்டும் ஒரு பக்கம் எழுகிறது.
நந்திகிராம், கதாய் பொல் பாட்,
தாராசந்த் போட் ஆகிய பகுதிகளில் உள்ள நிலத்திலிருந்து 140 விவசாயி களுக்கு
திரிணாமூல் கட்சி எம்.பி. சுபேந்த் அதிகாரி என்பவர் தலைமையில் திரிணா மூல்
தலைவர்களும், அதிகாரிகளும் சென்று வெளியேற்ற நோட்டீஸ் தந்தனர்.
மம்தா அரசு
சில பிசினஸ் குரூப்களின் நிர்ப்பந்தத்தினால் நிலங்களைக் கைய
கப்படுத்துகிறது என்ற எதிர்ப்பும் வலு வடைந்துள்ளது.சுருக்கமாகச்
சொல்வதென்றால், நிலம் எடுப்பு விஷயத்தில் மம்தா அர சுக்கு ஒரு தெளிவான
கொள்கை இல்லை. மக்கள்வாசமே இல்லாத தரிசு நிலங்களைக்கூடத் தொழில்களுக்கு
வழங்கவோ, அங்கு அரசாங்கத்தின் உடைமையாகப் புதிய திட்டங்களைக் கொண்டுவரவோ
மம்தா அரசினால் முடியவில்லை. இது வர்த்தகச் சமூ கத்தை மம்தாவிடமிருந்து
விலகிச்செல்ல வைக்கிறது.
நந்தி கிராமிலும் சிங்கூரிலும் ஆதாயம் அடைந்த
மம்தா என்ற பூனை இன்று பச்சத்தண்ணியக் கண்டால் கூடப் பயப்படுகிறது.
இதன்
விளைவு தான் இப்போதைய ஜீவனற்ற நிலைமை.அதிகமான தொழில்களங்களில் திரி ணாமூல்
கட்சி சார்பான தொழிற் சங்கங்கள் வன்முறையில் ஈடுபடுகின் றன என்று
பொதுவாகத் தொழில் வட் டாரங்களில் குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஹால்டியா
துறைமுகத்தில் ஒப்பந்தப் பணி எடுத்த ஏ.பி.ஜி. குரூப் பிறகு அதி லிருந்து
பின்வாங்கிக்கொண்டது.
அத னால் 600 பேர் வேலையிழந்தனர்.
இவர் களில்
திரிணாமூல் கட்சி ஊழியர்களும் உண்டு.
இங்கு அரசுக்கு எதிராக சொந்த திரி
ணாமூல் தொழிற்சங்கமே விமர்சனம் செய்கிறது. ஏ.பி.ஜி.குரூப் உள்ளிட்டவர்கள்
தொழிற்களத்திலிருந்து வெளியேறிவிட்ட தால் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு
முடங்கிப்போனது. இவ்வாறு பின் வாங் கியது தொழில் உலகிற்குப் பெருத்த அடி
யாய் அமைந்தது. இத்துடன், வங்க துறை முகத்திற்கு வருவதற்குப் பல கம்பெனி
களுக்கும் அச்சம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
இரண்டே ஆண்டில் மாநிலத்தில்
பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவில் உயர்த்துவதற்கான மந்திரக்கோல் மம்தா
விடம் இல்லைதான். ஆனால், தொழில் நட்புறவுச்சூழலை உருவாக்குகிற விஷ யத்தில்
மம்தா கடந்த இரண்டு ஆண்டுக ளாக வெற்றிபெறவில்லை என்பதே
உண்மை.
மேற்குவங்கத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத்
திட்டங் கள் இப்போது நடைபெற்றுக்கொண் டிருக்கின்றன என்று மம்தா பெருமை
பேசு கிறார்.
ஆனால், இவற்றில் பெரும்பாலான திட்டங்களில் எதிர்காலமும்
சந்தேகத் தின் பிடியில் சிக்கியுள்ளன.
இதற்கு முக் கியமான பிரச்சனை, “ஸெஸ்”
அனுமதி யில்லாமையும், ஹால்டியா போன்ற சம்பவங்களுமாகும்.துறைமுகத்தை
மையமாகக் கொண்ட திட்டங்களுக்காகச் சென்ற ஏ.பி.ஜி. குரூப்,
எல்.ஜி.ஏ.லாஜிஸ்ட்டிக்ஸ் ஆகியவை இந்த மாநிலத்தைவிட்டு வெளியேறப்போவதாக
அறிவித்து ஆறு மாதங்களாகிவிட்டன.
அவர்களின் அச்சத்தைப் போக்க மம்தா அரசால்
முடியவில்லை. இது மட்டுமல்ல, மம்தா பெருமை பேசும் திட்டங்களில் எழு பது
சதவிகிதமும் புத்ததேவ் ஆட்சிக்காலத் தில் உடன்பாடு
செய்யப்பட்டவையாகும்.கடந்த தேர்தலில் வங்க கலாச்சாரத் துறையைச் சேர்ந்தோர்
பெருமளவில் மம் தாவை ஆதரித்தனர். அன்று மம்தாவை நம் பிக்கையோடு முன்வைத்த
பலரும் இன்று ஏமாற்றத்தில் உள்ளனர்.
சில விஷயங்களில் எழுத்தாளர் மகாஸ்
வேதாதேவி, கல்வித் தொண்டர் சுநந்த ஸன்யால், நடிகர் கௌஸிக்ஸென், எழுத் தாளர்
நபாருண்பட்டாச்சார்யா ஆகி யோரும் மம்தாவுக்கு எதிராக விமர்சனம்
உயர்த்தியுள்ளனர்.
தன்னை விமர்சிக்கிற சுமன் முகோபாத்யாவின் ‘கங்கல்மத்ஸத்’
என்ற சினிமாவைத் திரையிட மம்தா தடை போட்டது சர்ச்சையைக் கிளப்பியது.
கொல்கத்தாவின்
பாரம்பரிய நிறங் களை மாற்றுவது, காரல் மார்க்ஸ் பற்றிக் கூறும்
பாடப்புத்தகங்களுக்குத் தடை விதிப்பது, கார்ட்டூன்கள் மற்றும் செய்தி களின்
பேரால் ஊடகங்களைக் குற்ற வாளிக் கூண்டில் ஏற்றுவது, நூலகங் களில் இடதுசாரி
வெளியீடுகளுக்குத் தடை போடுவது, மம்தா தனது சொந்த ஓவியங்களைக் காட்சிக்கு
வைப்பது அவற்றை விற்பனை செய்வது... இவை யெல்லாம்தான் இங்கு நடைபெறுகிற
“திரிணாமூல் கலாச்சார நடவடிக்கை கள்”.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
பேராசிரியர் உள்பட இருவரை ஒரு கார்ட்டூனின் பேரால் கைது செய்தது மம்
தாவுக்கு அவப்பெயரை உண்டாக்கியது.வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை
சிறிதும் பாராட்டும்படியாக இல்லை. “
க்ரைம் ரிக்கார்ட்ஸ் ப்யூரோ”
கணக்கின்படி பெண்கள் மீதான தாக்கு தல்களும், மோதல்களும் அதிகரித்துள் ளன.
போலீஸ் நடவடிக்கைகள் சம்பந் தப்பட்ட சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பு
கின்றன. பாலியல் வன்முறை வழக்கு, சிபிஎம் கட்சியின் தலைவர் அப்துல்ரசாக்
மொல்லாவுக்கு எதிராக நடத்திய தாக்குதல், திரிணாமூல் மாணவர் சங்க ஊழியரின்
துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் மரணமடைந்தது, இந்திய மாணவர் சங்கத்
தலைவர் சுதிப்தா குப்தாவின் மரணம், சீட்டுநிதிக் கம்பெனி மோசடியுடன்
திரிணாமூல் தலைவர் களுக்கு உள்ள தொடர்பு ஆகியனவெல் லாம் பெரும் அரசியல்
சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. முக்கிய சிபிஎம் கட்சித் தலைவரான அப்துராசக்
மொல்லா, திரி ணாமூல்காரர்களால் கொடூரமாக தாக் கப்பட்டார். ஒரு மூத்த தலைவர்
இவ்வாறு தாக்கப்பட்டதைக் கண்டிக்க மம்தா தயாரில்லை.
இந்தச் சம்பவத்தைத்
தொடர்ந்துதான் வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் அரசை கடுமையான வார்த் தைகளில்
விமர்சித்தார்.
இங்கே குண்டா யிஸம் நடக்கிறது என்று ஆளுநர் பொது மேடையில்
கண்டனம் செய்தார்.
பாலியல் வன்கொடுமைக்கு இரை யான பெண்ணை ஒரு விபச்சாரியாகச்
சித்தரித்து, குற்றவாளிகளை நியாயப்படுத் தினார் மம்தா.
போலீஸ்க்கு வெள்ளை
பூசி சட்டம் ஒழுங்குப் பிரச்சனை இல்லை யென்று காட்ட தீவிரமாய் முயற்சித்த
செயல் ஊடகங்களில் கடுமையாக விமர் சிக்கப்பட்டது.
மோதலிடையே திரிணா மூல்
கட்சியின் ஒரு மாணவர் தலைவர் போலீஸ்காரரைச் சுட்டுக்கொன்றது?
மற்றொரு
மோதலிடையே இந்திய மாணவர்
சங்கத் தலைவர் சுதிப்தா போலீஸ் தாக்குதலால்
கொல்லப்பட்டது இவை யெல்லாம் மம்தாவுக்கு ஆட்சி நடத்தும் திறமை இல்லை
என்பதையே காட்டுகிறது.
தமிழில் : தி.வரதராசன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------