குருவியும் -பனம் பழமும்

ஆ.ராசா வாதாட தயார்.....
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களின் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின் குற்றச்சாட்டுகள் மீதான விவாதங்கள் அடுத்த வாரம் துவங்க உள்ளது.
இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது முன்னாள் மத்திய அமைச்சர் ராசா நீதிபதி ஓ.பி. சைனியிடம் கூறியதாவது:
குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை வரும் போது நான் எனக்காக வாதாட மாட்டேன்.
நான் அப்படி வாதாடும் பட்சத்தில் நான் தெரிவிக்கும் தகவல்களை வைத்தே எனக்கு சாதகமாயிருக்கும் சிலவற்றை கலைத்து சி.பி.ஐ மூன்றாவது குற்றப்பத்திரிகையில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிய வாய்ப்பு இருக்கிறது.எனவே 3வது குற்றப்பத்திரிக்கை தாக்கலாகி சி.பி.ஐ.வாதம் முடிந்த பின்னர் வாதாடுகிறேன்” என்றார் ராசா. 
ராசா கூறினால் சரிதான் ராசா.
=========================================================================

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளைத் திறந்து அதில் குவித்து வைக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி அரிய வகை பொக்கிஷங்கள் வெளியுலகுக்குத் தெரிய வந்தது.
இதற்கு காரணமாக இருந்த வழக்கறிஞர் சுந்தரராஜன் மரணமடைந்தார். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இதுவரை ரூ. 1 லட்சம் கோடி அளவிலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஒரு அறையைத் திறக்காமல் உள்ளனர். அதில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மதிப்பை விட அதிக அளவிலான நகைகள் இருக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக கருதப்படும் திருப்பதியை மிஞ்சியுள்ளது பத்மநாபசாமி கோவில்.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தான ராஜ குடும்பத்தினர் வசம் இந்தக் கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்நிலையில் பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் உச்சநீதிமன்றம் நியமித்த உறுப்பினர்கள் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று சுந்தரராஜன் உடல்நல குறைவு காரணமாக இறந்தார். இவர் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். பூர்வீகம், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆகும்.
வழக்குரைஞர் சுந்தரராஜன் மரணம் கோவில் நகைகளை த்ங்களுக்கே சொந்தமாக்க நினைக்கும் கோவில்,நிர்வாகம்,திருவிதாங்கூர் குடும்பத்துக்கு ஒரு வாய்ப்பாகா ஆகிவிட்டது.
ஏற்கனவே சாபம் அது-இது என அக்குடும்பத்தினர் கதை கட்டி விட்டுள்ள் நிலையில் இவர் சாவு அவர்களின் கருத்துக்கு வலிமை சேர்க்கும் விடயமாகி விட்டது.
ஆனால் மூடப்பட்ட அறைகளை திறக்கும் போது முதலாக சென்றவர்கள் அறையினுள் அடைபட்டிருந்த காற்று கெட்டுப்போய் விடத்தன்மையுடன் இருந்ததால் சுவாசிக்க துயருற்றிருந்தனர். சுந்தரராஜன் அக்காற்றினால் மிகவும் பாதிப்படைந்திருந்தார்.மேலும் அவரின் வயதும் அவர் உடல் நலத்தை வெகுவாகப் பாதித்துவிட்டது.இதை அவரே தனது தொலைக்காட்சிப் நேர்காணலிலும் கூறியிருந்தார்.
ஆக குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதையாக சுந்தரராஜன் சாவும்-சாபமும் ஆகிவிட்டது.
   எதுவாக இருந்தாலும் திருவாங்கூர் அரச குடும்பம் நகைகளை சொந்தம் கொண்டாடினால் அளவுக்கு மீறி சொத்து சேர்த்ததாகவும்-நகைகளை பாதாள அறையில் பதுக்கி வைத்து கறுப்புப்பணம் பதுக்கள் எனவும் அரசக்குடும்பத்தினர் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்.
கோவில் சொந்தம் என்றாலும் இதை அரசுடமையாக்கி விடலாம்.புதையல் என்றாலும் அது அரசுக்கே.
பூமிக்கு கீழே இருப்பவை[புதையல்கள்]அரசுக்கு சட்டப்படியே உரிமையாகி விடுமல்லவா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?