பதிலளிக்கப்படாத கேள்விகள்.
கோவிட்-19.
பதிலளிக்கப்படாத கேள்விகள்.
ஆனால் இந்திய மக்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய பதில்கள்.
இந்தியாவில் கோவிட் : கே.விஜயராகவனுக்கு 35 கேள்விகள், வி.கே பால் மற்றும் பால்ராம் பார்கவா
ஊடகங்களில் பேட்டிகள் தந்துக் கொண்டிருக்கும் மத்திய அரசின் உயர்மட்ட விஞ்ஞானிகள் அதில், மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பானவற்றை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்திய மக்கள் எதைத் தெரிந்துக் கொள்ள விரும்புகிறார்களோ, அதை வெளிப்படுத்தத் தயங்குகிறார்கள்.
கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவல் சென்ற ஆண்டு ஆரம்பித்தது முதல் ஊடகங்களில் மற்றும் பொது வெளிகளில் அவ்வப்போதைய நிலைமைகளை விளக்குவதற்காக மோடி அரசு மூன்று விஞ்ஞானிகளை நியமித்தது. அவர்கள்
- கே.விஜயராகவன் : முதன்மை அறிவியல் ஆலோசகர்
- வி.கே.பால் : நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் தடுப்பூசிகளில் தேசிய நிபுணத்துவக் குழுவின் தலைவர்
- பல்ராம் பார்கவா : இந்திய மருத்தவ ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் ஜெனரல்.
தனியாகவோ அல்லது கூட்டாகவோ, அவர்கள் பல்வேறு அதிகாரத்துவத்தினர் மற்றும் அமைச்சர்களோடு சேர்ந்து, பொது மக்களுக்கு அறிவிக்கவும் வழிகாட்டவும் அதிகாரம் பெற்றவர்கள். கோவிட்-19லிருந்த மீண்ட, பிற ஜனநாயக நாடுகளில் உள்ள இவர்களின் சகாக்களை விட குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, கேள்விகளைக் கையாள்வதில் இவர்களுக்கு அக்கறையும் பொறுப்பும் மிகக் குறைவாகவே உள்ளது.
நோய்த்தொற்று பரவல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து, நான் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிபுணர்கள் பலரிடம் தொடர்ச்சியாகப் பேட்டிகளை எடுத்து மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவதன் ஒரு பகுதியாக, இந்திய அரசு தரப்பு நிபுணர்களிடம் சென்ற ஆண்டுக் கடுமையாக முயற்சி செய்தேன். எனது வேண்டுகோள்கள் அவ்வளவும் பலனற்றுப் போயின. எங்களுக்கு அவர்கள் பேட்டி எதுவும் தரமாட்டார்கள் என்று நிச்சயமாகத் தெரிந்த நிலையில், எனது மனதில் இருக்கும் கேள்விகளை பொது வெளியில் வைக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்களிடம் யாராவதுப் பேசும்போது இது பற்றிக் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில்.
- கோவிட்-19 எவர் ஒருவரும் இப்படி திடீரெனப் பரவுமென்றோ இவ்வளவு தீவிரமாக இருக்குமென்றோ எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ‘இது கிட்டத்தட்ட இல்லை என்றாலும் தவிர்க்க முடியாதது எதிர்பார்த்ததை விட அதிகமாக இல்லை’ அப்படியெல்லாம் ஒன்று இருக்கக் கூடுமா? ஐரோப்பாவும் அமெரிக்காவும் இரண்டு மற்றும் மூன்று அலைகளை அனுபவித்து விட்டார்கள் என்பது நம் கண்முன்னே நடந்தப் போதும் இந்தியாவில் பரவுவதின் தாக்கம் ஒரு அலையுடன் ஓய்ந்து விடும் என்று நம்பியதுப் பலன் தந்ததா?
- அவர்கள் பிரதமர் மோடியிடம் மற்றும் மத்திய அரசாங்கத்திடம் இரண்டாவது அலையை தவிர்க்க முடியாது எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்களா?
- ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முதல் அலையை விட இரண்டாவது அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்ததைக் கணக்கிலெடுத்து பிரதமர் மோடி மற்றும் அரசாங்கத்திற்கு இந்தியாவிலும் அதே போன்றுதான் நிலைமை மோசமாக இருக்கும் என எச்சரித்தார்களா?
- ஜனவரியில் முதல் அலையை எதிர்கொள்ள தலைநகர் டில்லியில் உருவாக்கப்பட்ட ‘DRDO சாத்சங் மையங்கள் மற்றும் மும்மையில் உருவாக்கப்பட்ட ஜம்போ மையங்கள்’ ஆகியவை அகற்றப்பட்ட போது ‘இது தவறானது என்றும் இரண்டாவது அலை வரும் போதுக் குறிப்பாக முதல் அலையை விட மோசமானதாக இருந்தால் மும்பையும் டில்லியும் தயாரிப்பு நிலையை கைவிட்டதாக ஆகிவிடும்’ என்றும் (மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களிடம்) அரசுக்கு இந்த நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்தார்களா?
- இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குறிப்பிட்டிருந்தப் படி ஏப்ரல் 2020-ல் அதிகாரப் பீடத்திலிருந்தக் குழுவின் தலைவர் வி.கே.பால் ஆக்சிஜன் பற்றாக்குறையை மற்றும் அதன் உற்பத்தியை விரிவுப் படுத்துவதன் தேவையை முன்னறிந்துக் கொண்டு இது பற்றி என்ன நடந்துக் கொண்டிருந்தது என்பதைக் கண்காணித்தார்களா? அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மிக தாமதமாவது அல்லது இல்லாமலே இருப்பது ஆகியவற்றை பற்றி அரசுக்குத் தெரிவித்தார்களா?
- மிகப் பெரிய தேர்தல் பேரணிகள், கும்பமேளாவில் கூடும் லட்சக்கணக்கான மக்கள் கூட்டங்கள், 60,000 பார்வையாளர்களோடு நடைப்பெறும் கிரிக்கெட் போட்டிகள் ஆகியவை கோவிட் காலக் கட்டுபாடுகள் எதையும் கடைப்பிடிக்காத நிலையில் அவை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதோடு எளிதாகத் தொற்றை மிக வேகமாகப் பரவச் செய்யும் நிகழ்வுகளாக மாறிவிடும் என்று அந்த நிபுணர்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை ஆலோசனை சொன்னார்களா?
- கடந்த ஆண்டு மே, ஜீன் மாதங்களில் பிஃபிசர் மொடெர்னா மற்றும் அஸ்ட்ராஜெனிகா ஆகியவை இரணடு டோஸ் கொண்ட மருந்துகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்த நிலையில் இந்தியாவின் 75 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசிகள் போடப்பட வேண்டுமானால் இந்தியாவிற்கு இரண்டு பில்லியன் (அ) இருநூறுகோடி ஜப்கள் தேவைப்படும் என்பதை அந்த நிபுணர்கள் கணக்கிட்டார்களா? இந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தளவு டோஸ் மருந்துகளைத் தயாரிக்குமளவு இந்தியாவின் மொத்த உற்பத்தி திறன் போதுமானதாக இல்லை எனும் நிலையில் அதை மிக விரைவாக உயர்த்த வேண்டும் என்பதை உணர்ந்தார்களா? அப்படி ஒரு முடிவுக்கு அவர்கள் வந்திருந்தால் அதை – இது சாதாரண கணக்குதான்! விண்கோள் விஞ்ஞானமல்ல! – முறையாக அரசாங்கத்திற்கு ஆலோசனை சொன்னார்களா?
- இப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பிரதமருக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் தெரிவிக்கவில்லையென்றால் ஏன் தெரிவிக்கப்படவில்லை?
- இங்கிலாந்து அமெரிக்கா ஐரோப்பிய யுனியன் ஆகிய நாடுகள் தடுப்பூசிகளின் ஆய்வு உற்பத்தி ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்துக் கொண்டிருந்தனர் மற்றும் தடுப்பூசிகள் தடையில்லாமல் விநியோகிக்க ஏற்றவாறு கொள்முதலுக்கான முன் ஆர்டர்களை செய்துக் கொண்டிருந்தப் போது இந்த நிபுணர்கள் நமது அரசாங்கத்திடம் அதை சுட்டிக்காட்டி செயல்படத் தூண்டினார்களா? அவர்கள் செய்திருந்தால் அதற்கான அரசின் பதில் செயல்பாடு என்ன? அவர்கள் செய்திருக்காவிட்டால் ஏன் செய்யவில்லை? எது தடுத்தது?
- முன்னதாக ஜீலை 2020-ல் டாக்டர் பல்ராம் பார்கவா அந்த ஆண்டு சுதந்திரத் தினத்திற்கு முன்னதாக கோவாக்சின் அதனுடைய மூன்றாவது கட்ட மருத்துவ சோதனைகளை முடித்து விட வேண்டுமென, அதாவது ‘இரண்டு மாதங்களுக்குள்’ எனக் கூறியுள்ளார். தன்னளவில் ஒரு மருத்துவ ஆய்வாளரான அவர் ஒரு ஆரோக்கியமான மருத்துவ சோதனைகளை இந்த குறுகிய காலக்கட்டத்திற்குள் முடித்து விட முடியும் என்று எப்படி நம்பினார்? அவரது குறிப்புகள் மருத்துவனைகளுக்கான ஒரு வித மிரட்டலுடன் இணைந்து வந்ததாகக் கருதப்படுகிறது. அரசாங்கத்தின் வேறு எந்த மட்டத்திலிருந்தாவது இந்த வழிகாட்டல் வந்ததா? (ஏனெனில் இம்மாதிரியான நிறுவனங்களுக்கு அனுமதியோ வழிகாட்டலோ கொடுக்கும் அதிகாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு ICMR கிடையாது).
- கோவாக்சினின் கட்டம் 3 சோதனை செயல் திறன் முடிவுகள் கிடைக்காத போது, விரைவான “மருத்துவ சோதனை முறை” ஒப்புதல் என்று அவர்கள் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியிருந்தால் விஞ்ஞான நெறிமுறைகள் மற்றும் நடைமுறையின் மீறல் மட்டுமல்ல, தடுப்பூசிகள் பற்றிய தயக்கத்தையும் தீவிரமாக அதிகரிக்கும்?
- ஜனவரியில் கோவாக்சினை வெளிக் கொண்டு வந்ததில் வைக்கப்பட்ட வாதங்களை விளங்கிக் கொள்வதற்கு இந்த வேளையில் எழுப்புவதற்குரிய உபக்கேள்விகள் சில இருக்கின்றன.
அ. கோவாக்சினின் சக்தியை விலங்குகளின் மீதான சோதனைகள் மற்றும் அதன் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை முடிவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று டாக்டர் பார்கவா ஒரு செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார். அப்புறம் எப்படி டாக்டர் காகன்தீப்கங், டாக்டர் சாகித் ஜமீல் மற்றும் பிறருடைய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். முதலில் மருத்துகளுக்கு அனுமதி கொடுப்பதில் விலங்குகள் மீதான சோதனைகள் பயன்படுத்தப் படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், விலங்குகள் மனிதனின் நோய்களை முறையாகப் பிரதிபலிக்கும் போது மட்டுமே அது சாத்தியமாகும். இதுவரை கோவிட்-19ல் அப்படி இல்லை. கோவாக்சினில் விலங்கு சோதனைகள் எவ்வாறு அதன் செயல்திறனைக் காட்ட முடியும்.
ஆ. இரண்டாவது முதல் கட்ட சோதனைகள் என்பது பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ளத்தான் அதுவும் நீண்டகாலப் பாதுகாப்புக்கல்ல மற்றும் பக்கவிளைவுகளிலிருந்து பாதுகாப்பு அவ்வளவுதான் செயல்திறனுக்கானது அல்ல.
இ. மூன்றாவது முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 800 மட்டுமே. ஒரு தடுப்பூசியின் செயல்திறனை நிறுவுவதற்கு இந்த எண்ணிக்கை போதுமானதல்ல.
- மே ஒன்றாம் தேதியிலிருந்துப் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அரசின் முடிவையொட்டி விஜயராகவன் வி.கே.பால் மற்றும் பல்ராம் பார்கவா மூவரும் கீழ்கண்ட கேள்விகளை எழுப்பனீர்களா?
அ. இந்தியாவின் தற்போதைய தடுப்பூசிகள் உற்பத்தி திறன் ஒரு நாளைக்கு மொத்தமாக 2.5 மில்லியனுக்கும் (25 லட்சம்) கீழ்தான் எனும் போது, பதினெட்டிலிருந்து நாற்பத்தி நான்கு வயதுகுட்பட்ட 595 மில்லியன் (59 கோடியே 50லட்சம்) மக்களுக்கு அறிவிக்கப்பட்டப்படி மே ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசிப் போடுவது சாத்தியமா?
ஆ. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளும் அதற்குட்பட்ட வயதுள்ளவர்கள் தடுப்பூசிகளைக் கட்டணம் கொடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதும் சரியா? இது நீதிநெறிமுறைகேள்வி சார்ந்த அல்ல. ஆனால், அனுபவரீதியான ஒன்று. 44 வயதுக்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள். இரண்டு தடுப்பூசிகளுக்குக் கட்டணம் கொடுக்க முடியாமல் தள்ளிப் போக்கூடிய அபாயம் இருக்கிறது.
இ. மத்திய அரசு இலவசமாகத் தடுப்பூசிகளை மக்களுக்குக் கொடுக்கும் போது மாநில அரசுகள் மட்டும் ஏன் கட்டணம் வாங்க வேண்டும்? எல்லோரும் இந்த நாட்டு மக்கள்தானே? இதில் என்ன வேறுபாடு இருக்கிறது?
ஈ. மாநில அரசுகளை தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட வைப்பது சரியா? ஏற்கனவே சீரம் இன்ஸ்டிடியுட், பாரத் பயோடெக் நிறுவனங்கள் மாநிலங்களுக்காக ஒதுக்கியுள்ள 50 சதவீதத் தடுப்பூசிகளுக்காகப் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் போது தனியார் நிறுவனங்களையும் அதே 50 சதவீத ஒதுக்கீட்டில் போட்டிப்போட வைப்பது எப்படி சரியாகும்?
- கோவாக்சின் என்பது உள்நாட்டில் வளர்த்தெடுக்கப்பட்ட தடுப்பூசி. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் ஆதரவு மற்றும் கூட்டு ஒத்துழைப்புடன் உருவாக்கப் பட்டிருக்கும் போது அவர்கள் பாரத் பயோடெக்கின் அறிவுசார் சொத்துரிமையை வாங்கிக் கொண்டு இந்த தடுப்பூசிகளின் உற்பத்தியை சாத்தியமான அதிகளவில் செய்ய உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்பாடுகள் செய்வதற்கான ஆலோசனை தெரிவித்தார்களா? இது மற்ற கோவிட்-19 தடுப்பூசிகளின் ஐ.பி உரிமைகளை நீக்க தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு வலு சேர்ப்பதாக இருக்குமே?
- இந்தியாவில் கோவிட்-19ல் ஏற்பட்டிருக்கும் உயிர் பலிகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 2,00,000 என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நடைமுறையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரும் இதுதான் மொத்தம் என்று நம்புகிறார்கள். நம்ப முடியாவிட்டாலும் இது குறைவான எண்ணிக்கை என்பதுதான் உண்மை. அவர்கள் எப்படி இதுதான் சரியான எண்ணிக்கை என்று இந்தியாவை ஏற்றுக் கொள்ள வைக்கப் போகிறார்கள்?
- தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகான எதிர்விளைவுகள் பற்றிய தகவல்கள் கொடுப்பதை பிப்ரவரி 26, 2021-லிருந்து அரசாங்கம் ஏன் நிறுத்திவிட்டது? சுகாதார அமைச்சகத்தின் சார்பாக ஒரு இணையான ஆராய்ச்சி நடத்தப்பட்டதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அனுபவம் போல கோவிஷீல்டு போட்டுக் கொள்வதால்தான் ரத்தம் கெட்டியாகிறது என்பதற்கான எந்த சம்பந்தமும் கண்டுபிடிக்கவில்லை. பல மாநிலங்களில் ஏற்கனவே இதைப் போன்றவற்றை அனுபவித்துக் கொண்டும், அதனால் நேர்ந்த மரணங்களை மறைக்கின்ற ஒரு செயல்பாட்டிலும் இருக்கும் போது, இந்த முடிவு எந்தளவு நம்பகத் தன்மையானது?
- ஜாமி முல்லிக் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் ஏப்ரல் 27-ல் கடந்த நான்கு வாரங்களாக ஒவ்வொரு வாரமும் சராசரி உயிர்பலிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து வருகிறது. உண்மையில் கடந்த வாரம் இது 84 சதவீதமாக உயர்ந்தது. அதன் காரணமாக இந்தியாவின் மரணங்களின் அளவு பிப்ரவரியில் 7 சதவீதத்திலிருந்து கடந்த வாரத்தில் 1.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நமக்கு உணர்த்துவது நாம் அதிகக் காலத்திற்குக் குறைந்த அளவு மரண விகிதம்தான் என்று பேசிக் கொண்டு வசதியாக இருக்க முடியாது என்பதைத் தானே?
- அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் அளவு ஒரு நாளைக்கு சற்றேறக்குறைய 4,00,000-ஆக அதிகரித்தள்ளது. அதனால் விளையும் உயிர்பலிகளின் அளவு 1.7 சதவீதத்திற்கு குறையாமல் இருந்தால் நாம் ஒரு நாளைக்கு 6,800 அளவுக்கு பலிகளை எதிர்பார்க்கலாமா?
- இந்த இடத்தில் யாராவது ஒருவர் பெரியக் கேள்வியாகக் கேட்கக்கூடும். எப்போதும் இந்திய நோயாளிகள் மற்றும் அதனால் பலியானவர்களின் எண்ணிக்கையை ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் மட்டும் ஒப்பிட்டுப் பேசுகிறார்களே! பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாள், குறைந்தபட்சம் மலேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுடன் ஒப்பிட மாட்டேன் என்கிறார்களே ஏன்? ஏனெனில் உயிர்பலிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கு என கணக்கிடும் பொழுது அந்த நாடுகளில் குறைவாக இருப்பதால் இந்தியா நிலைமை மோசமாக இருக்கும். அதே ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் நமது நிலைமை பரவாயில்லையாகத் தோன்றும் என்பதாலா?
- அவர்கள் நம்பிக்கொண்டிருப்பது ஒவ்வொரு நாளும் கண்டுப் பிடிக்கப்படாத அதிகரிப்புகள் தான் என்பதை ஏன் நம்மிடம் நேர்மையாக ஒத்துக்கொள்ளக் கூடாது? அதிகாரப்பூர்வமான அதிகரிப்பு என்பது ஒரு நாளைக்கு சற்றேறக்குறைய 4,00,000 என்பது நமக்கு தெரியும். இதே கண்டுபிடிக்கப்படாத அதிகரிப்புகளைப் பல்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு கணக்கீடுகள் தருகின்றன. புரபசர்.கெளதம்மேன்ன் இதைவிட 20-25 மடங்கு அதிகம் என்கிறார். ஸீரோலாஜிக்கல் சர்வே கடந்த முறை பிப்ரவரியில் 27.5 மடங்கு என அரசாங்கமே வெளியிட்டது. சியாட்டில் உள்ள ஐ.எச்.எம்.ஐ., இது 29 மடங்குக்கு அதிகம் என்கிறது. ஆனால் நம்மிடம் சொல்லக் கூடிய நிலையிலிருக்கும் இந்த மூன்று கனவான்களும் நமது அரசாங்கத்தின் பார்வை என்ன என்று சொல்வார்களா? அவர்களுக்கு நமக்கு அறிவிக்க வேண்டியக் கடமையும் இருக்கிறது தானே?
- மே மாத ஆரம்பக் காலங்களில் தினமும் 5,00,000 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என பேராசிரியர் ப்ராமார்முகர்ஜி தனது கணக்கீடாக தெரிவித்திருக்கிறாரே மே இறுதியில் இந்த அலையின் உச்சக்கட்டமாக இது அதிகரித்து அதிகபட்சமாக 10 லட்சம் தினசரி பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
- கோவிட்-19 நோயாளிகளுக்குப் பல்வேறு மருந்துகளை எந்தவித தேவைப்படும் சான்றுகள் இல்லாமலேயே கேள்விக்குரிய மருந்துகளைக் கட்டுப்பாட்டு ஜெனரல் (Drug Controller General) அனுமதித்துள்ளார்கள். அந்த மருந்துகள் டோஸிலிசுமாப் இடோலிசுமாப் ஃபவிபிராவிர் தற்போது வைராஃபின்.சுகாதார அமைச்சகமும் தனது பங்குக்கு ஹைட்ரோக்சிக்ளரோக்யூன் என்ற மருந்தை உபயோகிக்க அனுமதித்துள்ளது. அதன்செயல்திறன் பற்றி எந்த சான்றுகளும் இல்லாமல். அதோடு, அதன் பக்கவிளைவுகளும் அற்பானவை அல்ல. நீங்களே அறிவியல் அறிஞர்களாகவும் இருப்பதால் விஜயராகவன் பால் பார்கவா DCGI முடிவு பற்றி அதனிடம் விவாதித்தீர்களா? அவற்றின் பயன்பாட்டை அரசாங்கம் தொடர்ந்து அங்கீகரிப்பதற்கு எதிராக இந்த மருந்துகள் பற்றிய நிபுணர்களின் நியாயமான சந்தேகத்தின் பலனைப் பொதுக் களத்தில் அவர்கள் எப்படி கட்டம் கட்டுகிறார்கள்?
- நாம் வைரல் ஸ்ட்ரயின்ஸ் (viral strains) பற்றி பேசுவோம். பஞ்சாபில் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.1.7 ஸ்ட்ரயின் (முதலில் இங்கிலாந்திலிருந்து தகவல் தரப்பட்டது) அல்ல. ஆனாலும், சமூகப்பரவல் நிலைமையை அடைந்தது என்பதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்களா?
- பி.1.617 ஸ்ட்ரயின் பற்றிய விவரங்களை ஏன் பகிர்ந்துக் கொள்ளவில்லை? இரண்டுமே மிக சுலபமாகப் பரவக் கூடியது மற்றும் பத்திரிக்கைகளில் பரவலாக வந்துள்ள தகவல் படி அநேகமாக தடுப்பூசிகளுக்கு அதிக எதிர்ப்பை தரக்கூடியது என்பதாலா? “மாற்றுருவின் தீவிரம் மற்றும் பரவக் கூடிய தன்மை பற்றி சிறியளவு சான்றுகளே இருப்பதாக” சமீபத்தில் இங்கிலாந்தின் சிறந்த விஞ்ஞானிகள் ‘பைனான்சியல் டைம்ஸ்’-ல் சுட்டிக்காட்டியிருப்பதுடன் ஒத்துப்போகிறார்களா? அவர்கள் ஏன் தங்களுக்குத் தெரிந்ததை நமக்கு சொல்ல மறுக்கிறார்கள்? ஜாக்கிரதையாகவும் நிதானமாகவும் செய்திகளை நம்மிடமிருந்து மறைக்கிறார்கள்? இதன் மூலம் இந்திய மக்களை ஊகவணிகத்திற்கும் தவறானச் செய்திகளுக்குப் பலியாகவும் அதன்பலனாக மிகையான எண்ணங்களுக்கும் ஏன் பீதியடையவும் விட்டுவிடுகிறீர்கள்?
- பிரதமர் திரும்ப திரும்ப அரசியல் பேரணிகளை நாட்டின் நீள அகலங்களில் நடத்தி (அஸாமிலிருந்து கேரளா மே.வங்கம் தமிழ்நாடு) அவரால் ஈர்க்கப்பட்ட கூட்டத்தின் அளவில் தன்னையே மெச்சிக் கொண்டு அதன்மூலம் அரசாங்கத்தின் கோவிட் கால கட்டுப்பாடுகளான சமூகஇடைவெளிப் பாதுகாத்தல், மாஸ்க் அணிதல் ஆகியவற்றை அலட்சியபடுத்தி தன்னளவில் ஒரு முன்னுதாரணத்தை வைத்துவிட்டதாக அவர்கள் பிரதமரிடம் எடுத்துச் சொன்னார்களா?
- உண்மையில் ஒரு மிக ‘சிறந்த பேச்சாளர்’ என்று நாடெங்கும் விரிவாக அறியப்பட்டிருக்கும் நமது பிரதமரிடம் மக்களிடம் மாஸ்க் அணிவது சமூகஇடைவெளிக் கடைபிடிப்பது ஆகியவற்றுக்கான அவசியத்தை விளக்கி கட்டாயம் அணிய வேண்டும் கடைபிடிக்க வேண்டும் என்பதை- சுயமுயற்சியாக திரும்ப திரும்ப செய்ய வேண்டும் என்று எடுத்துச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்களா? ஒவ்வொரு வீடுகளுக்கும் இந்த செய்தியை அறிவுறுத்தி செய்ய தூண்டுவது தொலைக்காட்சிகளில் வீடியோ மற்றும் வணிக விளம்பரமாக வரும்படி செய்து மக்களுக்கு ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கும் வண்ணம் வாராவாரமோ அல்லது அவசியத்திற்கேற்ப தினசரியோ செய்தியாளர் சந்திப்புகளை நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டார்களா?
- சென்ற ஆண்டு தி வயர் அறிவியல் செய்தப் புலனாய்வில் சந்தையில் காலம் கடந்த மாஸ்க்குகளும் போலி N95 மாஸ்க்குகளும் இருப்பதை கண்டறிந்தோம். இப்போதும் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்ற மாஸ்க் பற்றி மக்களிடையே குழப்பமே நீடிக்கிறது. இது பற்றி ஒழுங்குமுறைகள் இருக்கின்றன. ஆனால், அவை எல்லாமே தொழில்நுட்பரீதியாக மற்றும் அமுலாக்கம் சுத்தமாக இல்லை. சரியான மாஸ்க்குகள் வாங்கவும் உபயோகிக்கவும் மக்களுக்காக அரசாங்கம் இதுவரை என்ன செய்திருக்கிறது?
- மக்களின் முறையான நடவடிக்கைகளுக்கு எதிரான அறிவியலுக்கு எதிரான அறிக்கைகளை அமைச்சர்கள் கொடுக்கும் போது அவர்கள் அரசாங்கத்திடம் என்ன சொல்வார்கள்? உதாரணத்திற்கு, அஸாம் சுகாதார அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா “என் மாநிலத்தில் மாஸ்க் அணிய தேவையில்லை” என்கிறார் அல்லது உத்திரக்காண்ட் மாநில முதலமைச்சர் திரத்சிங் ராவட் “கடவுளின் மகிமை ஒன்றேப் போதும் கங்கா நதி மாதாவின் சக்தி மக்களை கோவிட்-19லிருந்து காப்பாற்றும்” என்கிறார்.
- ஆயுஷ் அமைச்சகத் துறை கோவிட்-19ஐ எதிர்த்துப் போராட ‘மாற்று மருந்துகளை’ முன்வைத்து உபயோகிக்க சொல்கிறது. மும்பை நகரத்திலும் மற்றும் தெலுங்கானா மாநிலமும் ஹோமியோபதி மாத்திரைகளை தங்களது மக்களுக்கு விநியோகிக்கிறது. பாபா ராம்தேவ் மற்றும் அவரின் நிறுவனம் பதஞ்சலியும் ‘கோரோனில்’ என்ற மருந்தை கோவிட்-19க்காக சந்தைப் படுத்தியது. அதன் அறிமுகவிழாவில் மத்திய சுகாதார அமைச்சர் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக சமீபமாக இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக ‘பசு அறிவியலில்’ குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டவில்லை என்பதற்காக இதே அமைச்சர் ஹர்ஷவர்தன் பல அமைச்சகங்களை திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தார். நீங்கள் தான் சான்று அடிப்படை மருந்துகளுக்காக வாதாடுபவர்கள். இதில் எந்த தீர்வுகளும் நோயாளிகளுக்கு உதவி செய்யும் அல்லது காப்பாற்றும் என்பதை நிரூபிக்க எந்தவித ஆதாரங்களும் இல்லாதபோது அவற்றின் தொடர்ந்த உபயோகத்தை எப்படி நீங்கள் அனுமதித்திருக்கறீர்கள்.
- “கொரோனாவை அடக்கி ஒடுக்குவதில் வலிமையுடன் வெற்றிப் பெற்றிருப்பதாக” கடந்த ஜனவரியில் டாவோஸில் World Economic Forum கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே? அல்லது பாஜக பிப்ரவரி 21 அன்று “இந்திய மோடி அரசு கோவிடைவென்றுவிட்டதாக” ஒரு தீர்மானத்தை வெளியிட்டிருக்கிறார்களே? மார்ச் 7 அன்று மருத்துவர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் “இந்தியாவில் கோவிட்-19 தொற்று அபாயத்தின் இறுதி ஆட்டத்தில் இருக்கிறோம்” என்கிறாரே? இதைப் பற்றியெல்லாம் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? இவையெல்லாம் நடப்புக்கு எதிரானது மற்றும் நியாயமற்றக் கருத்துகள் என்று அவர்கள் அரசாங்கத்திடம் சொல்லி எச்சரித்திருக்கிறார்களா? அல்லது தற்போதைக்கு மௌனமாக இருப்பதே நமக்கு மிகுந்த நல்லது என்று இருந்துவிட்டார்களா?
- “அரசாங்கத்திடம் கல்யாண நிகழ்ச்சிகள் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது ஏனென்றால் அவை கோவிட் தொற்றுகளைப் பரப்பும் மையங்களாக செயல்படும்” என்று அவர்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்களா? சில மாநிலங்களில் 50 விருந்தினர்கள் வரை அனுமதிக்கப் படுகிறார்கள். வேறு சில மாநிலங்களில் 100 பேர் வரை அனுமதிக்கிறார்கள்.
- வேகமான சுயமாக இயங்கக் கூடியப் பரிசோதனைக் கருவிகளை கடந்த ஆண்டு இந்தியாவின் விஞ்ஞானிகள் உருவாக்கி வளர்த்து வைத்திருக்கிறார்களே அவற்றை மக்களுக்கு விநியோகிப்பதன் மூலம் ‘இரத்தப் பரிசோதனை நிலையங்களில் கூட்டம் சேர்வதையும் அதனால் தங்களுக்கு ‘போதுமான நேரம் மற்றும் தேவையான சாதனங்கள் இல்லை’ என்றும் மக்களை விரட்டாமல் தடுக்கலாமே? ஏன் அவர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனைக் கொடுக்கவில்லை?.
- ஏப்ரல் 23-படி அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையங்கள் 15,133 மாதிரிகளை வரிசைப் படுத்தியிருக்கின்றன. இது இந்தியாவின் மொத்த மாதிரிகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானது. ஐரோப்பாவில் இது 8 சதவீதம் அமெரிக்காவில் 4 சதவீதம். இவற்றை ஒப்பிடும் போது, போதுமான அளவு மரபியல் வரிசைகள் செய்யப் பட்டிருக்கின்றன என்று நாட்டை எப்படி சமாதானப் படுத்தப் போகிறார்கள்?
- ‘இந்தியாவில் மக்களுக்கு தடுப்பூசிகள் போடக் கூடிய செயல்முறை மாற்றப்பட வேண்டும் என்று நம்புவதாக’ நாட்டின் பல நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்களே அவர்களது வாதத்தை விஜயராகவன் பால் மற்றும் பார்கவா எப்படி எதிர்கொள்கிறார்கள்? உதாரணத்திற்கு “ஒவ்வொரு கோவிட் நோயாளியை சுற்றி இருப்பவர்களுக்கும் தொடர்பில் இருப்பவர்களுக்கும் தடுப்பூசிகள் போட்டு ‘ring vaccination’ கவனமாகப் பார்த்துக் கொள்வது மற்றும் நோய்த்தொற்று மூர்க்கத்தனமாகப் பரவிக் கொண்டிருக்கும் பகுதிகள் மாவட்டங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவது” ஆகியவற்றைப் பேராசிரியர் ப்ராமர் முகர்ஜி தீவிரமாகப் பரிந்துரைக்கிறார். பேராசிரியர் கிரிதரா பாபு “சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளர்களை ASHA workers கொண்டு போலியோ தடுப்பூசிகள் போடப்படும் அதே முறைகள் மற்றும் செயல்திட்டங்களைப் பயன்படுத்தி செய்யலாம்” என பரிந்துரைக்கிறார்.
- மூன்றாவது அலை வருவதாக சாத்தியக் கூறுகள் தெரிகையில் மக்களுக்கு அவர்களால் என்ன சொல்ல முடியும்? குறிப்பாக இரண்டாவது அலையின் மூலம் எந்தளவு பாடம் கற்றுக் கொண்டார்கள் அது எந்த அளவு மக்களுக்கு பயன்படப் போகிறது.
இந்த கட்டுரையின் ஆசிரியர் பற்றி ஒரு சிறு குறிப்பு :
அன்று குஜராத் முதலமைச்சராக இருந்த, இன்றைய இந்தியாவின் பிரதமரான நரேந்திரமோடி அவர்களை, ஒருதொலைக்காட்சி நேரலையில் (19-Oct-2007 )அன்று இவர் பேட்டி எடுக்க ஆரம்பித்த மூன்று நிமிடங்களில் தண்ணீர் குடித்தார்.பிறகு தனது மைக்கை கழட்டி வைத்துவிட்டு, இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை என்று பேட்டியை முடித்துக் கொண்டு, மோடி கிளம்பிவிட்டார்.அதற்கு பிறகு மோடி பிரதமரான பின் இவர் எந்த தொலைக்காட்சி சேனலிலும் வேலை பார்க்க முடியவில்லை.
அவர்தான்
கரன் தபார்
இந்த கட்டுரையின் ஆசிரியர்