கரும் பூஞ்சை.வெண்பூஞ்சை.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சில நாட்களாகக் கருப்பு பூஞ்சை தொற்று எனப்படும் மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) தொற்று பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கருப்பு பூஞ்சைகள் அதிக அளவில் பாதிப்பதாகத் தெரியவந்துள்ளது.
10-ம் தேதி அன்று பிபிசி தமிழ் ஊடகத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் கருப்பு பூஞ்சைகள் பற்றித்தான் சில தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில், “கருப்பு பூஞ்சை தொற்று சாதாரண நாட்களில் ஆண்டுக்கு 3 வரைதான் உறுதி செய்யப்படுகிறது. தற்போது வாரத்திற்கு 4 முதல் 5 பேருக்கு உறுதி செய்யப்படுகிறது.
டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கிடையில் மும்பை, பெங்களூரூ, ஹைதராபாத், டெல்லி மற்றும் புனே ஆகிய நகரங்களில் 58 பேருக்கு இத்தகைய நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவர் குறிப்பிட்டார் ” என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பார்த்த பின்னர் கருப்பு பூஞ்சை தொற்று பற்றி பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. கருப்பு பூஞ்சை மும்பை, பீகார் உள்ளிட்ட இடங்களிலேயே இருப்பதாக தெரிந்தது.
, இந்த நோய் தமிழகத்திற்குள்ளும் நுழைந்துவிட்டது.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குறிப்பிடுகையில், தமிழகத்தில் 9 பேருக்குக் கருப்பு பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 7 பேர் சர்க்கரை நோயாளிகள். 9 பேரில் 7 பேருக்குக் கண் பாதிப்பு உள்ளது. இவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். இவர்களுக்கான சிகிச்சை தொடங்கிவிட்டது. இதுவரை எந்த இறப்பும் இல்லை, என்று தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர் தூத்துக்குடியில் உள்ள 57 வயதான நபர் ஒருவர் கருப்பு பூஞ்சை தொற்றால் பலியானதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
பெரும்பாலும் சர்க்கரை நோய்ப் பாதிப்பு உடையவர்களுக்கு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டால் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்டீராய்டு எனப்படும் மருந்தை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் கொடுப்பதே இந்த பூஞ்சை தொற்று அதிகமாக உறுதி செய்யப்படுவதற்கு முக்கிய காரணம். மக்கள் பலர் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். இது மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
கருப்பு பூஞ்சை தொற்று எனப்படும், மியூகோர்மைகோசிஸ் தொற்று அறிவியல்பூர்வமாக நாசி வழியாக வெறியேற்றுகிறது. இது கருப்பு நிறத்திலேயே வெளியேறும். தலைவலி, வீக்கம், போன்ற அறிகுறிகள் தென்படுகிறது.
கரோனா நோயாளிகளுக்கு ஒரு பக்கம் வீக்கம் ஏற்பட்டு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. வீக்கம் ஏற்பட்டுப் பார்க்க முடியாமல் போவது ஆரம்பக் கால அறிகுறிகள்தான்.
பொதுவாக மூக்கு, மூக்கின் உள் எலும்பு, நுரையீரல், மூளை ஆகிய உறுப்புகளை முழுவதும் பாதிக்கிறது.
உடலின் வெளிப்புறத்தில் தென்படுவதுபோன்று உட்புறத்திலும் இந்த மியுகோர்மைகோசிஸ் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் கண்டறியப்படவில்லை என்றால், மூக்கின் அண்ணம் (nose palate) பகுதியை முற்றிலும் கருப்பாக்கிப் பாதிப்படையச் செய்கிறது. மியுகோர்மைகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்றால் சிலருக்குக் காய்ச்சலும் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை மண்ணில், அழுகிய பழங்களில், அழுகிய மரங்கள் போன்ற அனைத்திலும் காணப்படும். இதை உலகத்தின் அனைத்து பக்கத்திலும் பார்க்கலாம்.
மியுகோர்மைகோசிஸ் உடலுக்குள் செல்ல வேண்டும் என்றால், அது அந்த நபரின் உடல் நலத்தைப் பொறுத்ததுதான். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவரை இந்த தொற்று தாக்காது. அதுவும் ஒரு பூஞ்சை மனித உடலில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. பெரும்பாலும் தோலுக்கு வெளியே இருக்கலாம், அதனால் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. நோயை ஏற்படுத்த வேண்டும் என்றால் அது ஒரு தனித்தன்மை. நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடே விரைவில் பாதிப்பை ஏற்படுத்தத் தூண்டும்.
சர்க்கரை வியாதி உடையவர்கள், சிறுநீரக பாதிப்பு உடையவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வதால் மியுகோர்மைகோசிஸ் தொற்றுக்கு ஆளாகின்றனர்.
தீவிர கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு சிறந்த மருந்து என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஸ்டீராய்டு மருந்தைத் தீவிர நோயளிகளுக்கு மட்டும் கொடுக்காமல், சிறிய அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கும் கொடுப்பதால் மியுகோர்மைகோசிஸ் எளிதில் பாதிக்கும்.
பலரும் ஆரம்பக் காலத்தில் தொற்று உறுதியானதும் ஸ்டீராய்டு மருந்தை எடுத்தனர். சிலர் சொந்தமாகவே எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைக்கிறது.
தற்போது ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. அது புதிய சிலிண்டரா, பழைய சிலிண்டரா என்பது பற்றி கவலைகொள்ளாமல் பயன்படுத்துகின்றனர். அந்த சிலிண்டரில் இருந்து வழங்கப்படும் மாஸ்கில் பூஞ்சையின் பாதிப்பு இருக்கலாம்.
மருத்துவமனையில் இடம் இல்லாதபோது எங்கயாவது படுத்து மருந்து எடுத்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு எதோ ஒரு ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு வந்து சிகிச்சை அளிப்பர். இதுபோன்றவையும் மியுகோர்மைகோசிஸ் தொற்று ஏற்பட காரணமாகிறது.
ஒவ்வொரு தொற்றும் தனிப்பட்ட ஆரோக்கியம், சுத்தம், சுற்றுசூழல் ஆகிய காரணங்களால் மனிதனின் உடலை பாதிப்படைய செய்கிறது. மியுகோர்மைகோசிஸ் பூஞ்சை மனித உடலுக்கு வெளியில் எப்போதும் காத்திருக்கும், எதேனும் பிரச்சனை வந்ததும் உடலுக்குள் எளிதில் வந்து பாதிப்பை ஏற்படுத்தும். நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தினால் பிளைப்பது 50 சதவீதம் மட்டுமே சாத்தியம் உள்ளது.
மியுகோர்மைகோசிஸ் தொற்று பொதுவான நோயாக இல்லாததால், இதற்கு மருந்தும் தட்டுப்பாடு நீடிக்கிறது. எங்கும் எளிதில் கிடைப்பதில்லை.
முன்கூட்டியே எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்?
சொந்தமாக ஸ்டீராய்டு மருந்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒருவேளை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், தனிமைப்படுத்திவிட்டு மருத்துவரைத் தொடர்பு கொண்டு என்ன மருந்து எடுத்துக்கொள்வது என்பதைக் கேட்டறியலாம். முதல் நாளிலே ஸ்டீராய்டு கொடுக்கும் போது வைரஸ் அதிக அளவில் பெருகச்செய்யும். வைரஸ் அதிக அளவில் பெருகி அழற்சி ஏற்பட்டபின்னரே ஸ்டீராய்டு வேலை செய்யும். நேரடியாக ஸ்டீராய்டு மருந்து, வைரஸ் மேல் வேலை செய்வதில்லை.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு எத்தனை நாட்கள் கொடுக்க வேண்டும். அதிக அளவில் கொடுக்க வேண்டுமா? எவ்வளவு டோஸ் கொடுக்க வேண்டும்? என்பதை நிபுணர்கள் கண்காணிக்க வேண்டும்.
மனிதர்களிடம் இருந்து, மனிதர்களுக்கு மியுகோர்மைகோசிஸ் பரவுவது மிகவும் குறைவு. சுற்றுச்சூழலில் இருந்து மட்டுமே பரவும். சுற்றுச்சூழலில் இருந்து பரவாமல் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
கண் இழப்பு ஏற்படுவதற்கான காரணம்?
மியுகோர்மைகோசிஸ் உடலுக்குள் வந்துவிட்டால், அது பெருகிக்கொண்டே செல்லும். எனவே தொற்றால் பாதிக்கப்பட்ட திசுவை அகற்றிட வேண்டும். ஒரு பகுதியில் தொற்று ஏற்பட்டால், அதை ஓட்டை போட்டுப் பரவிக்கொண்டே இருக்கும். எனவே திசுவை அகற்றினால் மட்டுமே மற்ற உறுப்புகளில் பரவாமல் தடுக்க முடியும்.
மியுகோர்மைகோசிஸ் அதிக அளவில் பரவி மூளைக்குச் சென்று பாதிப்படையச் செய்யும். எனவே கருப்பு துகள்கள் மூக்கு வழியாக வெளியேறுவதைப் பார்த்ததும் அறுவைசிகிச்சை செய்திட வேண்டும்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை நாட்களில் மியுகோர்மைகோசிஸ் தொற்று ஏற்படுகிறது?
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் நலமுடனே திரும்புகின்றனர். 5 சதவீதத்தினரே பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். அதில் ஒரு சதவீதத்தினரே பூஞ்சை தொற்றுக்கு ஆளாகின்றனர்.
கரோனா தொற்றின் முதல் அலையின் போது, கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படவில்லை. முதல் அலைக்குப் பின்னரே சில ஆய்வுகள் வெளிவந்தன. அப்போதுதான் ஸ்டீராய்டு கொடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. எனவே இரண்டாவது அலையின்போது ஸ்டீராய்டு கொடுக்கப்பட்டது. அதிலிருந்து கொஞ்சம் நாட்கள் ஆன பின்னரே அதன் பாதிப்புகள் தெரிய வந்துள்ளது. கடந்த 4 மாதங்களாகவே அதிக ஸ்டீராய்டு கொடுக்கப்பட்டது. அதனால் தான் தற்போது பெருமளவிலானோர் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போதைய இந்த கரோனா பாதிப்பில் மருத்துவர்களின் முக்கிய ஆலோசனை, சொந்தமாக எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளாதீர்கள் என்பதுதான். பெரும்பாலானோர், சுயமாக மருந்து எடுத்துக்கொண்டு தாமதமாக மருத்துவமனைக்குச் செல்வதால் நோய்ப் பாதிப்புகள் அதிகமாகிறது. எனவே மக்கள் விழிப்புடன் இருந்து விரைவில் மருத்துவமனைக்குச் செல்வதே நல்லது.
---------------------------------------------------------------------
கருப்பு பூஞ்சையைத் தொடரும் வெள்ளைப் பூஞ்சை
--------------------------------------------🤥
கொரோனா 2வது அலை மக்களை பாடாய்படுத்துவேதாடு, பல்வேறு நீண்டகால சுகாதார பாதிப்புக்கும் வழிவகுக்கிறது. இதில் முக்கிய பாதிப்பாக கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் நோய் குறிப்பிடப்படுகிறது. கொரோனாவிலிருந்து மீண்ட சர்க்கரை பாதிப்பு அதிகம் உள்ளவர்கள், ஐசியுவில் அதிக நாள் சிகிச்சை பெற்றவர்கள், ஸ்டிராய்டு மருந்து அதிகளவில் உட்கொண்டவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த நோய் பாதிப்பதாக கூறப்படுகிறது. கருப்பு பூஞ்சை புதிய வகை நோய் இல்லை என்றாலும், இதன் பாதிப்பு இதுவரை பெரிய அளவில் இருந்ததில்லை.
ஆனால் கொரோனாவுக்கு பிறகு, அதிலிருந்து மீண்ட பலரை இந்நோய் தாக்குவது சுகாதார துறைக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. இந்த நோயை அறிவிக்கப்பட்ட நோய்கள் பட்டியலில் பதிவிட வேண்டுமென அனைத்து மாநில அரசுகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், கருப்பு பூஞ்சைக்கே தீர்வு காணாத நிலையில் அதை விட பயங்கரமான வெள்ளை பூஞ்சை பாதிப்பும் இந்தியாவில் சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் அச்சுறுத்துகின்றன. பீகாரின் பாட்னாவில் வெள்ளை பூஞ்சை பாதிப்புக்குள்ளான 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளை பூஞ்சை கருப்பு பூஞ்சையை விட அதிக பாதிப்புள்ளது என்கின்றனர் டாக்டர்கள்.
இது குறித்து டாக்டர்கள் கூறியிருப்பதாவது:
வெள்ளை பூஞ்சை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கான அறிகுறிகளே தென்படும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். ஆனால்,பரிசோதித்தால் அவர்களுக்கு கொரோனா நெகடிவ் என்றே வரும். சிடி ஸ்கேன், எக்ஸ்ரே மூலம் மட்டுமே அதன் பாதிப்புகள் தெரியவரும். இந்த பூஞ்சை நுரையீரலை மட்டுமல்ல நகம், தோல், வயிறு, கிட்னி, மூளை, வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். நீரிழிவு, கேன்சர் நோயாளிகள் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியால் வெள்ளை பூஞ்சைக்கு பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகளுக்கும் வெள்ளை பூஞ்சை பாதிக்கும் அபாயம் உள்ளது எனவே நீரிழிவு, கேன்சர் நோயாளிகள் கொரோனாவிலிருந்து மீண்டாலும் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டுமென டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
10 நாளில் பாதிக்கும்
கொரோனாவிலிருந்து குணமடைந்த பின் 10-12 நாட்களில் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதாக பரவலாக கூறப்படுகிறது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து மீண்ட 10-12 நாளில் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
23 மாநிலங்களில் பாதிப்பு
நாடு முழுவதும் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசதங்களில் கருப்பு பூஞ்சை பரவியிருப்பது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், பீகார், உத்தரகாண்ட், கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, கோவா, மேற்கு வங்கம், பஞ்சாப், அசாம், இமாச்சலபிரதேசம், புதுச்சேரி, காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இந்த நோய் பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
5,500 பேருக்கு சிகிச்சை 126 பேர் பரிதாப பலி
கருப்பு பூஞ்சையால் அதிகபட்சமாக மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் தலா 1,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் மிக துல்லிய புள்ளிவிவரங்கள் அல்ல. எனவே உண்மையான பாதிப்பு இதை விட அதிகமாககூட இருக்கலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். தெலங்கானாவில் 700, மத்தியபிரதேசத்தில் 573, கர்நாடகாவில் 250, டெல்லியில் 200 பேர் என நாடு முழுவதும் 5,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 126 பேர் இந்நோய்க்கு பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 90 பேர் இறந்துள்ளனர். அரியானாவில் 14, உத்தரப்பிரேதசத்தில் 8 பேர் இறந்துள்ளனர்.
மருந்துக்கு தட்டுப்பாடு
கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க லிபோசோமல் ஆம்போடெரசின் பி மருந்து பயன்படுத்தப்படுகிறது. இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் மருந்துக்கு பல மாநிலங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே கருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்து விநியோகத்தை விரைவுபடுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மருந்து உற்பத்தியை அதிகரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசுகள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
----------------------------------------------------------------------
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்