மாணாக்கர்கள்
ஆஃப்கானிஸ்தானில் இருந்து ரஷ்ய துருப்புகள் பின்வாங்கிய பிறகு, பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் 1990களில் தான் 'தாலிபன்' என்கிற பஷ்தோ சொல் உருவானது.
தொடக்கத்தில் தாலிபன் இயக்கத்தில் பஷ்துன்களே அதிகம் இருந்தனர்.
கிழக்கு ஈரானிய மக்கள் இனப்பிரிவு. பெரும்பான்மையாக ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைபுற மாகாணம், பலூச்சிஸ்தான் மற்றும் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் வசிக்கின்றனர். பாஷ்தூ மொழியும் பஷ்தூன்வாலி என்னும் சமூக வழக்கமும் பஷ்தூன் மக்களின் முக்கிய அடையாளங்கள்.
1747இல் துரானி பேரரசின் தொடக்கத்திற்கு முன்பு பஷ்தூன் மக்கள் பல ஒன்றாக சேராத குலங்களாக பிரிந்து கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 250 ஆண்டுகளாக பெரும்பான்மை குடிமக்களாக பஷ்தூன் மக்கள் இருந்தனர். பாகிஸ்தானில் இன்று பஷ்தூன்கள் மக்கள் தொகை படி இரண்டாம் மிகப்பெரிய இனக்குழு. மதிப்பீட்டின் படி உலகில் 42 மில்லியன் பஷ்தூன் மக்கள், 60 குலங்கள், மற்றும் குறைந்தது 400 சிறுகுலங்கள் உள்ளனர்.
இந்த இயக்கம் கடுமையான சன்னி இஸ்லாத்தை போதித்தது. இந்த இயக்கத்துக்கு தொடக்கத்தில் செளதி அரேபியாவில் இருந்து நிதி உதவி கிடைத்தது.
தாலிபன் அதிகாரத்துக்கு வந்த பிறகு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பரவிக் கிடக்கும் பஷ்துன் நிலப்பரப்புகளில் அமைதியை மீட்டுக் கொண்டு வரவும், தங்களின் கடுமையான ஷரியா விதிகளை அமல்படுத்தவும் உறுதி கூறியது.
இரண்டு தசாப்த கால யுத்தத்தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்ளாக அமெரிக்க படைகள் மொத்தமாக ஆப்கானிஸ்தானிலிருந்து, வெளியேற தயாராகி வரும் நிலையில், தாலிபான்கள் நாடு முழுவதும் பல பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்துள்ளனர்.
ஈரான், பாகிஸ்தான் என பல நாட்டு எல்லைகளிலுள்ள முக்கிய பிராந்தியங்கள் அடுத்தடுத்து தாலிபான்கள் வசம் வீழ்ந்து கொண்டு இருக்கின்றன.
தாலிபான்கள் ஆப்கானிய அரசை மீண்டும் கைப்பற்றி இப்போதுள்ள அரசை தூக்கியெறிவார்கள் என்ற கவலை அங்கு ஏற்பட்டுள்ளது.
அப்படி தாலிபான்களில் எழுச்சி ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்குச் சென்றால், ஆப்கானியர்களிடையே, மீண்டும் பழைய கடுமையான இஸ்லாமிய சட்டங்களை தாலிபான்கள் அமல்படுத்துவார்கள் என்பது உறுதி என்கிறார்கள். உதாரணத்திற்கு, அண்மையில் வடக்கு ஆப்கானிஸ்தானில் ஒரு மாவட்டம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தாலிபான்கள் தங்களது முதல் உத்தரவுகளை மாவட்டத்தின் இஸ்லாமிய இமாமுக்கு கடிதம் வடிவில் வெளியிட்டனர். அந்தக் கடிதத்தில் பெண்கள், தங்கள் வீட்டு ஆண்கள் துணையில்லாமல், தனியாக பஜார் செல்ல கூடாது என்றும், ஆண்கள் தாடியை ஷேவ் செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. புகைபிடிக்க அனுமதி கிடையாது என்றும் விதிகளை மீறும் எவரும் 'தீவிரமாக கையாளப்படுவார்கள்' என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், பஞ்ச் ஆற்றின் குறுக்கே, அமெரிக்க நிதியுதவியுடன், கட்டப்பட்ட பாலத்தையே பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானை தஜிகிஸ்தானுடன் இணைத்த வடக்கு ஷிர்கான் பந்தரை தாலிபான்கள் கைப்பற்றினர். தங்கள் ஆளுகைக்கு உள்ளே அந்த பகுதி வந்ததும், அங்குள்ள பெண்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என்று கட்டளையிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தாலிபான் என்ற சொல்லுக்கு பாஷ்டோ மொழியில் ‘மாணவர்கள்' என்று பொருள். 1990 களின் முற்பகுதியில் சோவியத் ரஷ்யா படைகளை விலக்கிக் கொண்ட பிறகு, இந்த குழு பெரிய அளவுக்கு உருவெடுத்தது. அவர்களுக்கு, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ரகசியமாக ஆதரவளித்தன. இந்த இயக்கம் இஸ்லாமின் சன்னி மார்க்கத்தை முன்னெடுக்கிறது. அதுவும் கடுமையாக முன்னெடுக்கிறது. இஸ்லாமிய ஷரியத் சட்டங்களை அமலாக்குவோம் என்பது இவர்கள் வாக்குறுதியாக இருந்தது.
சோவியத் ரஷ்ய படைகள் திரும்ப போன பிறகு (1992-1996) தங்களின் போட்டியாளரான முஜாஹிதீன் குழுக்களுக்கு இடையே நான்கு ஆண்டுகாலம் உள்நாட்டு யுத்தத்தில் தாலிபான்கள் ஈடுபட்டனர். அந்த காலகட்டத்தில் நாடு முழுக்க பரவலான ஆதரவைப் பெற்றது தாலிபான் அமைப்பு. தென்மேற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து தலிபான்கள் தங்கள் செல்வாக்கை விரைவாக விரிவுபடுத்தினர்.
1994ம் ஆண்டு, நவம்பர் மாதம், அவர்கள் தெற்கு நகரமான காந்தஹாரைக் கைப்பற்றினர். 1995 செப்டம்பரில், ஈரானின் எல்லையிலுள்ள ஹெராத் மாகாணம் கைப்பற்றப்பட்டது. சரியாக ஒரு வருடம் கழித்து, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலைக் கைப்பற்றி, அப்போதைய ஆப்கானிஸ்தான் அதிபர் புர்ஹானுதீன் ரப்பானியின் ஆட்சியைக் கவிழ்த்தனர். சோவியத் ரஷ்யா ஆக்கிரமிப்பை எதிர்த்த ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களின் நிறுவனர்களில் ஒருவர் புர்ஹானுதீன் ரப்பானி என்பது குறிப்பிடத்தக்கது.
1996ல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை, 'இஸ்லாமிய எமிரேட்' என்று அறிவித்தனர். 1998 வாக்கில், ஆப்கானிஸ்தானில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். சோவியத் வெளியேறிய பிறகு, முஜாஹிதீன்களின் சண்டையால் ஆப்கானியர்கள் சோர்வடைந்தனர். இதன் விளைவாக, அவர்கள் தலிபான்களை வரவேற்றனர். ஊழலை வெற்றிகரமாக களையெடுத்து, சட்டவிரோதத்தைத் தடுத்தபோது இந்தக் குழு முக்கியத்துவம் பெற்றது.
தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டை பலப்படுத்திய பிறகு கடுமையான நீதி பரிபாலனத்தை நடைமுறைப்படுத்தினர். கொலைகாரர்கள் மற்றும் விபச்சாரம் செய்வோர் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டனர். திருட்டு குற்றங்களுக்காக, கை கால்கள் அகற்றப்பட்டன. ஆண்கள் தாடி வளர்ப்பது கட்டாயமாக்கப்பட்டது, பெண்கள் தலை முதல் கால் வரை உடல் பாகங்களை மூடும் வகையில் புர்கா அணிய உத்தரவிடப்பட்டது. பெண்களுக்கும் வேலை செய்யும் உரிமை மறுக்கப்பட்டது.
ஆண்களுக்கு சற்றே அதிக சுதந்திரம் இருந்தபோதிலும், அவர்கள் பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளவும், பாரம்பரிய ஆடைகளை மட்டுமே அணியவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும், தலிபான்கள் இசையை ரசிக்க கூடாது என உத்தரவிட்டனர். தொலைக்காட்சி மற்றும் சினிமாவை தடைசெய்ததுடன், 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளின் கல்வியைத் தடைசெய்தனர்
ஆஃப்கானிஸ்தானின் தென் மேற்குப் பகுதியில் இருந்த தாலிபன் அமைப்பு, மிக குறுகிய காலத்திலேயே தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டது. 1995 செப்டம்பரில் ஹெராத் என்கிற இரான் எல்லையை ஓட்டியிருக்கும் மாகாணத்தை கைப்பற்றியது.
சரியாக அடுத்த ஓராண்டு காலத்தில் ஆஃப்கன் தலைநகரான காபூலைக் கைப்பற்றியது தாலிபன். அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் புர்ஹானுத்தீன் ரப்பானியை தூக்கி எரிந்துவிட்டு ஆட்சிக்கு வந்தார்கள். இந்த புர்ஹானுத்தின் தான் ரஷ்யாவுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீன் அமைப்பை நிறுவி அவர்களை எதிர்த்து போரிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேகத்தில் 1998ஆம் ஆண்டில் ஏறத்தாழ 90 சதவீத ஆப்கானிஸ்தானை தாலிபன் அமைப்பு கைப்பற்றி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
தொடக்க காலத்தில் தாலிபன்களின் வருகையை மக்கள் வரவேற்றனர். தாலிபன்கள் வந்த இடங்களில் எல்லாம் ஊழலை ஒழித்தனர். சட்டமில்லாமல் இருந்ததற்கு ஒரு முடிவு கொண்டு வந்தனர். சாலை வசதிகளை ஏற்படுத்தினர். அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் பாதுகாப்பாகவும் வணிக ரீதியாக செழித்து வளர முடிந்தது. எனவே மக்களும் அவர்களைத் தொடக்கத்தில் ஆதரித்தனர்.
அதே நேரத்தில் தாலிபன்கள் இஸ்லாமிய விதிகளுக்கு உட்பட்ட தண்டனைகளை அறிமுகப்படுத்தினர் அல்லது ஆதரித்தனர். குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களை பொது வெளியில் கொல்வது, திருடுபவர்களின் கை கால்களை வெட்டுவது போன்ற தண்டனைகளை பின்பற்றப்பட்டன. ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் தங்கள் உடலை முழுவதுமாக மூடும் புர்காக்களை அணிய வேண்டும
டிவி, இசை, சினிமா போன்றவற்றை தாலிபன்கள் தடை செய்தனர். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதை அந்த அமைப்பு தடை செய்தது.
பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தாலிபன்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டன.
புத்தர் சிலையை சிதைத்த தாலிபன்
2001ஆம் ஆண்டு, மத்திய ஆஃப்கானிஸ்தானில் இருந்த உலகப் புகழ் பெற்ற பாமியன் புத்தர் சிலையை சிதைத்தது தாலிபன். இதற்கு சர்வதேச அளவில் மிகக் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது.
பாகிஸ்தான் தான் தாலிபன் என்கிற அமைப்பு உருவாக காரணம், அந்நாடு தான் தாலிபன் அமைப்பை வடிவமைத்தது என பலரும் கூறிய போது, அதை திட்டவட்டமாக மறுத்தது பாகிஸ்தான்.
ஆனால் தாலிபன் அமைப்பில் ஆரம்ப காலகட்டத்தில் இணைந்தவர்கள் பலரும், பாகிஸ்தானில் இருக்கும் மதரஸா பள்ளிகளில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஃப்கானிஸ்தான் நாட்டில், தாலிபன்களின் ஆட்சி இருந்த போது அதை அங்கீகரித்த மூன்று நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அதைத் தவிர ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செளதி அரேபியா ஆகிய நாடுகள் தங்கள் ஆதாவை வழங்கின. அதே போல தாலிபன் அமைப்புடனான ராஜீய உறவை முறித்துக் கொண்ட கடைசி நாடும் பாகிஸ்தான் தான் என்பது கவனிக்கத்தக்கது.
ஒருகட்டத்தில் பாகிஸ்தானையே நிலைகுலையச் செய்து விடுவோம் என மிரட்டியது தாலிபன் அமைப்பு.
2012 அக்டோபரில் பாகிஸ்தானின் மிங்கோரா எனும் நகரத்தில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலா யூசுப்சாய் தாக்கப்பட்டதை ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் பாகிஸ்தானிய தாலிபன் தாக்குதலை கண்டித்தது.
அடுத்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் தாலிபன்கள் மீது நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில், தாலிபன்களின் ஆதிக்கம் கணிசமாக குறைந்தது.
2013ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹகிமுல்லா மெஹ்சூத் உட்பட மூன்று முக்கிய பாகிஸ்தான் தாலிபன் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, உலகின் கவனம் மீண்டும் தாலிபன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆஃப்கானிஸ்தான் மீது திரும்பியது. அல்-காய்தா தீவிரவாத அமைபுக்கும், ஒசாமா பின் லாடனுக்கும் அடைக்கலம் கொடுத்ததாக, தாலிபன்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த 2001 அக்டோபர் 7ஆம் தேதி அமெரிக்க ராணுவம் தலைமையிலான பாதுகாப்புப் படை கூட்டணி ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. டிசம்பர் முதல் வாரத்துக்குள் தாலிபன் ஆட்சி நிலைகுலைந்தது. அப்போதைய தாலிபன் அமைப்பின் தலைவர் முல்லா மொஹம்மது ஒமர், ஒசாமா பின் லாடன் உட்பட சில மூத்த உறுப்பினர்கள் எப்படியோ தப்பி ஓடினர்.
தாலிபனின் பல மூத்த தலைவர்கள் பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் தஞ்சம் புகுந்ததாக கூறப்பட்டது. அங்கிருந்து கொண்டு தாலிபன் இயக்கத்தை நடத்தி வந்தனர். ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது.
எத்தனையோ வெளிநாட்டு ராணுவ துருப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு வந்தாலும், தாலிபன் மெல்ல தன் செல்வாக்கைப் பெற்று தன் அதிக்கத்தை ஆஃப்கானிஸ்தான் மண்ணில் விரிவாக்கிக் கொண்டது.
தற்போது 85,000 முழு நேர போராளிகள் தாலிபனில் உள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலப்பகுதிகளை வரையறுப்பது கடினம்.
இருப்பினும் ஆஃப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு முதல் ஐந்தில் ஒரு பங்கு வரை தாலிபன்கள் வசம் இருக்கலாம் என சமீபத்தைய கணிப்புகள் கூறுகின்றன.