பிச்சைப்புகினும் கற்கை நன்றே?

 தேர்வு கட்டணம் குறித்து ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் ICSSR வெளியிட்ட அறிவிப்பு.

மாதம் 66 ஆயிரம் வரை சம்பாதிக்கும் உயர்சாதியினர்  கட்டணம் செலுத்த வேண்டாம்

SC/ST/OBC வகுப்பில் பிறந்தவர்கள் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தாலும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.

பிச்சைப்புகினும் கற்கை நன்றே?

அமுலாக்கத் தவறுகள்.

The Wild Life Protection Act 1972-ன் படி பதிவு செய்யப்படக்கூடிய வழக்குகளை அமலாக்கத்துறை PMLA சட்டத்தின் கீழ் விசாரணைக்கு எடுக்க அதிகாரம் உள்ளது.

ஆனால்,
தமிழ்நாட்டில் ஆத்தூர் விவசாயிகள் மீது 15-01-2017 ம் ஆண்டு ஆத்தூர் FRO காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட
WLOR-1/2017-ஐ மட்டும் விசாரணைக்கு எடுத்ததற்கு என்ன காரணம் என்ற கேள்வி முக்கியமானது..

இந்தியா முழுவதும்,கடந்த ஆறு ஆண்டுகளில் அதாவது, 2017 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் The Wild Life Protection Act 1972-ன் படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து @NCRBHQ அறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா ?

2017
உத்திர பிரதேசம் -264
ராஜஸ்தான் -208
மேற்கு வங்கம் -59
தமிழ்நாடு -0

2018
உத்திர பிரதேசம் -227
ராஜஸ்தான் -220
மத்திய பிரதேசம்  -58
தமிழ்நாடு -0

2019
உத்திர பிரதேசம் -194
ராஜஸ்தான் -120
மஹாராஷ்டிரா -89
தமிழ்நாடு -0

2020
உத்திர பிரதேசம் -185
ராஜஸ்தான் -151
மஹாராஷ்டிரா -68
தமிழ்நாடு -3

2021
உத்திர பிரதேசம் -203
ராஜஸ்தான் -106
மஹாராஷ்டிரா -49
தமிழ்நாடு -0

2022
ராஜஸ்தான் -159
உத்திர பிரதேசம் -120
பீஹார் -50
தமிழ்நாடு -1

NCRB -ன் ஆறு ஆண்டுகால ரிப்போர்ட்டின் படி The Wild Life Protection Act 1972-ன் படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளில்
முதலிடத்தில் இருப்பது உத்திரபிரதேசம் மொத்தம் 1193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

இரண்டாவது இடத்தில்  இருப்பது  ராஜஸ்தான் 964 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

தமிழத்தை பொறுத்தவரை மொத்தம் 4 வழக்குகள் மட்டுமே The Wild Life Protection Act 1972-ன் படி பதிவு செய்யப்பட்டுள்ளது

ஆனால்,
ஆத்தூரில் பதிவு செய்யப்பட்டு,நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வழக்கை PMLA சட்டத்தின் கீழ் விசாரணைக்காக அமலாக்கத்துறை எடுத்ததற்கு என்ன காரணம் ?

அதிக வழக்குகள் பதிவாகும் உத்திரப்பிரதேசத்திலோ,ராஜஸ்தானிலோ எந்த வழக்கையும் விசாரணைக்கு எடுக்காத அமலாக்கத்துறை @dir_ed
யாருடைய நிர்பந்தத்தின் பேரில் ஆத்தூர் விவசாயிகள் வழக்கை விசாரணைக்கு எடுத்தது ?

உண்மையில் இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது..
தமிழ்நாடு காவல்துறை @tnpoliceoffl
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டியது மிகவும் அவசியம்!

டி.ஒய். சந்திரசூட்: நம்பத்தகுந்த நீதிமானா?

இப்படிப்பட்ட ஒரு ஓட்டை உடைசலான வாகனத்தைத்தான் பட்டி டிங்கரிங் செய்து நம்முன் நிறுத்துகிறார்கள் நமது மூத்த பத்திரிக்கையாளர்களும், லிபெரல்களும். நீதிமன்றங்களையும், தனிப்பட்ட நீதிபதிகளையும் ஹீரோவாக்கி தாங்கள் நம்பிஏமாந்தது போதாது என்று பரந்துபட்ட மக்களையும் நம்பச்சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற சந்திரசூட்டை “இருளில் தெரிந்த ஒரு ஒளிக்கீற்று, நேர்மையாளர், மக்களின் பக்கம் நிற்பவர், ஒன்றிய அரசின் தவறுகளை, மக்கள்விரோதப்போக்குகளை தட்டிக்கேட்பவர், நீதி தவறாதவர்” என்று பலவாறாக பல பத்திரிக்கையாளர்களும், நடுநிலையாளர்களும், லிபரல்களும் ஊதி பெருக்கி வந்தனர். 

ஆனால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் நீதிபதி சந்திரசூட் கொடுத்துவரும் தீர்ப்புகள் அவரது இந்த பிம்பங்களை நொறுக்கிவருகின்றன.

பொதுவாக கருத்துசுதந்திரம், ஜனநாயகம், பெண்ணுரிமை, சிறுபான்மையினர் உரிமை பற்றி நீதிமன்றத்துக்கு வெளியே மேடைகளில் புரட்சிகரமாக முழங்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்ற வளாகத்திற்குள் இவற்றை வலியுறுத்துவதில்லை. கீழமை நீதிமன்றங்களில்கூட வழக்கறிஞர்களை கூழைக்கும்பிடு போடவைக்கும் வழக்கத்தையும் மாற்றிக்கொள்ளத் தயாரில்லை.

கலாச்சாரதுறை தொடர்பான வழக்குகளில் புரட்சிகரமான தீர்ப்புகளை வழங்கும் நீதிபதி சந்திரசூட், ஒன்றிய அரசு சம்பத்தப்பட்ட வழக்குகளில் பம்முகிறார். 

இன்னும் குறிப்பாக, இந்துத்துவ வன்முறை கும்பலால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட பாபர் மசூதியை இடித்த அக்கும்பலிடமே தாரைவார்த்த “உலக பிரசித்திபெற்ற தீர்ப்பை” அளித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் சந்திரசூட்டும் ஒருவர். 

அது மட்டுமல்ல, அந்தத் தீர்ப்பை முன்மொழிந்தவரே அவர்தான் என்ற பேச்சும் உண்டு.

தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்றபின் ஏறக்குறைய 52000 வழக்குகள்முடித்துவைக்கப்பட்டதாகவும், LGBT-யினரின் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது குறித்த தீர்ப்பில் அவர்களுக்கு சாதகமான மைனாரிட்டி தீர்ப்பை அளித்ததாகவும், முன்னாள் தலைமை நீதிபதி தத்து காலத்திலிருந்து உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்யும் “சீலிடப்பட்ட கவர்களுக்கு”முடிவுகட்டியதாகவும், பீமா கோரேகான் வழக்கில் மஹாராஷ்டிரா போலீசின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிப்பதாகக் கூறியதாகவும், கேரளாவின் கவர்னருக்கு எதிராக தீர்பளித்ததாகவும் அவரை நீதிதேவனாக, பாமர மக்களின் ஆபத்பாந்தவனாக, ஹீரோவாக சித்தரித்து பல வீடியோக்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் இவர்கள் நினைத்ததெற்கெல்லாம் மாறாக, அமித்ஷாவுக்கு வாரண்ட் அனுப்பி மர்மமான முறையில் மரணித்த நீதிபதி லோயாவின் சந்தேக மரணம் பற்றிய வழக்கை முறைகேடாகத் தனக்கு ஒதுக்கிக்கொண்டதற்காக அப்போதைய தலைமை நீதிபதி தீபக்மிஸ்ராவுக்கு எதிராக நீதிபதிகள் பத்திரிக்கையாளர்

 சந்திப்பு நடத்தினார்களோஅந்த நீதிபதி லோயாவின் மரணம் பற்றிய பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்து “இம்மாதிரியான பொதுநல வழக்குகள் நீதித்துறையின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், இவற்றின்மூலம் நீதிபதிகளைக் கேடானவர்களாக சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது” என்று கூறி அதிகார வர்கத்தின் சுயரூபத்தை காட்டத்தொடங்கினார்.

சமூக செயற்பாட்டாளரான உமர் காலித்தின் ஜாமீன் மனு,

 UAPA கருப்புச் சட்டத்துக்கு எதிரான வழக்கு,

 தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு, 

பீமா கொரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் மகேஷ் ராவத்தின் ஜாமீன் மனு,

 கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருக்குஎதிரான வழக்கு, 

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வழக்குகளும் பேலா திரிவேதி என்ற ஒரு குறிப்பிட்ட நீதிபதிக்கு விதிமுறைகளை மீறி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

 இதன் பின்னணியில் நீதிபதி சந்திரசூட் இருக்கிறார் என்பதுதான் இதில் குறிப்பிடவேண்டிய விடயம்.

 முன்னாள் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டதோ அதையே தற்போது நீதிபதி சந்திரசூட்டும் செய்துவருகிறார் என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

இவையெல்லாவற்றையும் விட காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி சந்திரசூட் கூறிய “அரசின் ஒவ்வொருமுடிவையும் நீதிமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்த முடியாது,” “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தைத்தரும் பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக ஏற்பாடுதான்,” “அப்பகுதி இந்தியாவுடன் இணைந்தபிறகு அதற்கென்று ஒரு தனித்த இறையாண்மை என்பது இல்லை” போன்ற கருத்துக்கள் மிக அபாயகரமானவை.

 மாநிலங்களைதன்விருப்பத்திற்கு கூறுபோடவும், ஜனாதிபதி ஆட்சியின் கீழ் மாநிலங்களை நிர்வகிக்கவும் தயாராகிவரும் இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தைத் தருபவை.

இப்படிப்பட்ட ஒரு ஓட்டை உடைசலான வாகனத்தைத்தான் பட்டி டிங்கரிங் செய்து நம்முன் நிறுத்துகிறார்கள் நமது மூத்தபத்திரிக்கையாளர்களும், லிபெரல்களும். நீதிமன்றங்களையும், தனிப்பட்ட நீதிபதிகளையும் ஹீரோவாக்கி தாங்கள் நம்பி ஏமாந்தது போதாது என்று பரந்துபட்ட மக்களையும் நம்பச்சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஏற்கனவே மாநில கவர்னர்களுக்கும், ராஜ்யசபா உறுப்பினர்களுக்கும் தேர்வு அறைகளாக நீதிமன்றங்கள் இருக்கும் நிலையில் நீதிபதிகள்  ஒன்றிரண்டு தீர்ப்புகளுக்காக நீதித்துறையை  முழுமையாக நம்பி சரண் அடைவது நமக்குநாமே கட்டிக்கொள்ளும் சவக்குழி என்பதை உணர்ந்திடுவோம் உறக்கச்சொல்லுவோம்.

                                                       – ஜூலியஸ்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?