உலகத்தை ஈர்த்த தமிழ்நாடு!..

 பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! - 

பேருந்து இயக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்துத்துறைஎச்சரிக்கை.தமிழ்நாடு முழுவதும் 9,764 பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

தேர்தல் நெருங்குவதால் சிறுபான்மையினர் ஞாபகம் எடப்பாடிக்கு வருகிறது:-காங்கிரஸ்.

நீர்வரத்து குறைந்ததால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 3,791 கன அடியாக குறைப்பு

மதுரை துணைமேயர் வீட்டில் தாக்குதல்: அலுவலகமும் உடைப்பு.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்.

மனைவியுடன் தகராறு.சேலம் கலெக்டர் அலுவலக மாடியிலிருந்து குதித்த வாலிபர்.


இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் மறுகுடியேற்றம் மசோதா நிறைவேறியது: தமிழ் எம்பிக்கள் எதிர்ப்பு.

அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திடீர் ராஜினாமா .

அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் மோதல் பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் திடீர் ராஜினாமா: 34 வயது ஓரினச்சேர்க்கையாளர் புதிய பிரதமராக நியமனம்.

தென்கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை.

------------------------------------

உலகத்தை ஈர்த்த தமிழ்நாடு!..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி மதிப்பிலான முதலீடுகளைப் பெறும் அளவுக்கு உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது தமிழ்நாடு. 
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்து 'திராவிட மாடல்" விழுமியங்களுடன் முதலமைச்சர் நாற்காலியில் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அமர்ந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் இவை.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன் என்றும், 27 தொழிற்சாலைகளைத் திறந்து வைத்திருக் கிறேன் என்றும் முதலமைச்சர் அவர்கள் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லி இருக்கி றார்கள். இதன் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டன. 

அதன் மூலமாக ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலமாக 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்றார்கள். இதன் மூலமாக 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வந்தன. இப்போது நடந்திருப்பது மூன்றாவது பெரிய முயற்சி ஆகும்.

கடந்த 7,8 ஆகிய நாட்களில் சென்னையில் நடந்த இரண்டு நாள் மாநாட்டின் மூலமாக, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். “ இந்தியாவே உற்றுநோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்" என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கப் போகிறது.

ஒரு துறையில் இருந்து மட்டுமல்ல, பல்வேறு துறைகளின் மூலமாக முதலீட்டை ஈர்த்துள்ளது தமிழ்நாடு.

* தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பாக, 3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய் முதலீடுகள்

* எரிசக்தித் துறை சார்பாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 157 கோடி ரூபாய் முதலீடுகள்

* வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பாக 62 ஆயிரத்து 939 கோடி ரூபாய் முதலீடுகள்

* தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக 22 ஆயிரத்து 130 கோடி ரூபாய் முதலீடுகள்

* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக 63 ஆயிரத்து 573 கோடி ரூபாய் முதலீடுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மீதும், தி.மு.க. அரசின் மீதான நல்லெண்ணத் தின் வெளிப்பாடுகள் ஆகும். 

தொழில் துறை அமைச்சர் டி. ஆர்.பி. ராஜா அவர் களின் தொடர்ச்சியான முயற்சியின் மூலமாக இது சாத்தியம் ஆகி உள்ளது.

தமிழ்நாடு என்பது 'குண்டு சட்டிக்குள் குதிரையை ஓட்டும்' மாநிலம் அல்ல. அப்படி எப்போதும் இருந்தது இல்லை. 1996-2001 காலக்கட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சராக தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தபோது தான் சென்னை யைச் சுற்றிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சோளிங்கநல்லூர் என பல்வேறு தொழிற்சாலைகளை உலக நிறுவனங்கள் வந்து தொடங்கியது. தகவல் தொழில் நுட்பத்தை மற்ற மாநிலங்கள் உணர்வதற்கு முன்பே, 'டைட்டல் பார்க்' தொடங் கியவர் தலைவர் கலைஞர் அவர்கள். 

தமிழ் நெட் மாநாட்டை 1999 ஆம் ஆண்டே நடத்தியவர் முதலமைச்சர் கலைஞர். தமிழை கணினி மொழியாக ஆக்கியது அவரது சிந்தனை.

தமிழ் நிலத்தில் கால் பதித்து நின்று உலகத்தைப் பார்ப்பதே தமிழனின் அறிவு ஆகும். 'திரைகடலோடி திரவியம்' தேடியவர்கள் நாம். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உலகப் பொதுமை மானுடப் பண்பை விளக்கிய கணியன் பூங்குன்றனின் வார்த்தையே தமிழர்களின் வாழ்க்கை ஆகும். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்த தமிழினம் தொழில் துறையிலும் மேன்மை கொண்டதாக இருந்தது.

நெசவு, முத்துக்குளித்தல், தச்சு, கப்பல் கட்டுதல், மீன்பிடித்தல், உப்பு விளை வித்தல், கட்டுமானம், பருத்தி, பட்டு உற்பத்தி என பல்வேறு தொழில்களை செய்தவர்கள் மட்டுமல்ல, அந்தத் தொழில்களை ஆதி காலத்தில் இருந்து கடல் கடந்தும் போய்ச் செய்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

 கப்பல்களின் மூலமாக உலகத்தின் பெரும்பாலான நாடுகளுக்குச் சென்றார்கள். சீனா, கிரீஸ், ரோம், எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, பர்மா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்தார்கள். 

தமிழகப் பொருள்களான இஞ்சி, மிளகு, ஏலம், இலவங்கம் ஆகியவற்றுக்கு மேற்கு ஆசிய நாடுகளில் அதிகமான தேவை இருந்தது. இப்பொருள்களை வாங்கிச் செல்ல கிரேக்கம், ரோமாபுரி வணிகர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றார்கள். தங்கத்தைப் பெற் றுக் கொண்டு மிளகை ஏற்றுமதி செய்தவர்கள் தமிழர்கள். இப்படி தனித்த தொழில் வளத்தைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

தானும் வளர்ந்து, இந்தியாவையும் வளர்த்து, உலகத்தையும் வளர்த்த வளர்க்கும் மாநிலம் தான் தமிழ்நாடு. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை தமிழ்நாடு இப்படித் தான் செயல்பட்டு வருகிறது. 

இதனைத் தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், “ உங்கள் எல்லோரையும் நான் தொழில்முனைவோராக மட்டுமல்ல - தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவர்களாக பார்க்கிறேன். எனவே, தமிழ்நாட்டை உலகுக்கு அறிமுகம் செய்யுங்கள். உலக நாடுகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வாருங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டுக்குள் உலகம் வந்துவிட்டது. உலகின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உறுதியாக உயரும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

-------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?