விடைபெறும் பருவமழை!
ரூ4 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண்.. நேரில் சென்று நன்றி தெரிவித்த மதுரை எம்பி.வெங்கடேசன்..
ராமர் கோயில் முழுமையாக கட்டி முடிக்க இன்னும் 2 ஆண்டுகள் ஆகும்.
பாலியல் புகாரில் பாஜக பிரமுகர் அண்ணாமலை நண்பர் நாஞ்சில் ஜெயக்குமார் கைது.காந்த
தஞ்சை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவ கொலை: பெண்ணின் பெற்றோருக்கு ஜன.24 வரை காவல்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
"கலைஞர் நூற்றாண்டு" விழா.. கின்னஸ் உலக சாதனை படைத்த பரத நாட்டிய கலைஞர்கள்..!
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கம்பம் சத்குரு சங்கீத நாட்டிய வித்யாலயா சார்பில், 11 ஆயிரம் பரத நாட்டிய கலைஞர்கள் ஒன்றாக இணைந்து, பரதம் ஆடி புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கம்பம் சத்குரு சங்கீத நாட்டிய வித்யாலயா சார்பில், தேனியில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட நாட்டியப் பள்ளிகளில் இருந்து 11 ஆயிரம் பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர்இதில்முன்னாள் முதலமைச்சர் கலைஞரின்சாதனைகளை கூறும் வகையில், இயற்றப்பட்ட பாடலுக்கு ஏற்றவாறு மாணவிகள் பரதம் ஆடி அசத்தினர். இதனை, லன்டனில் உள்ள கின்னஸ் உலக சாதனை அமைப்பு (world record union) அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் குருமார்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. அதோடு, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில்,இன்றுதென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது.
13.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 14.01.2024 முதல் 18.01.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: 12.01.2024: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
13.01.2024: தென்மேற்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.