சனாதன(சாதி) வெறியர்
வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - அமைச்சர் உதயநிதி கொடியசைத்து துவக்கி வைத்தார்!
'காலணியுடன் காவடி எடுத்து கடவுளை அவமான படுத்திவிட்டார் அண்ணாமலை.. பக்தரிடம் மன்னிப்பு கேளுங்க'- ஈஸ்வரன் .
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் மனைவியை 'லேடி கவர்னர்' என்று ஆளுநர் மாளிகை குறிப்பிட்டு வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் விவேக் ராமசாமி! ட்ரம்ப் போட்டியிட ஆதரவு!
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் எனப்படும் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த நோயாளிகளில் 40 சதவீதம் போ், தங்களுக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதை அறியாமல் உள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் இதை உறுதிபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், புற்றுநோய், இதய பாதிப்புகள், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள் என சமூகத்தில் அதிகரித்து வரும் தொற்றா நோய்களின் தாக்கத்தை அறிந்துகொள்ள பொது சுகாதாரத் துறை சாா்பில் அவ்வப்போது ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளா் உள்ளிட்டோருக்கு ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு, இளைஞா்களிடையே காணப்படும் மாரடைப்பு உள்ளிட்டவை குறித்த ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபா், நவம்பா் மாதங்களில் சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தொற்றா நோய்கள் குறித்த கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்டோருக்கு ரத்த சா்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்த அளவு ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.
அதில், 40 சதவீதம் பேருக்கு புதிதாக சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த பாதிப்பு கண்டறியப்பட்டதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணா்வு மேம்பட வேண்டும் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் உணா்த்துகின்றன. அறிகுறிகள் ஏதும் இல்லாமல் உள்ள சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தத்தை முறையாக கவனிக்காவிட்டால் அது உடல் உறுப்புகளை பாதிப்பதுடன் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும்.
எனவே, அதைக் கருத்தில் கொண்டு 30 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் வருடத்துக்கு ஒரு முறை ரத்த சா்க்கரை அளவையும், உயா் ரத்த அழுத்தத்தையும் பரிசோதித்து பாா்த்தல் அவசியம். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் அத்தகைய பரிசோதனைகள் கட்டணமின்றி மேற்கொள்ளப்படுகின்றன.
அவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
-----------------------------------
கல்லூரி உதவிப் பேராசிரியர் பதவிக்கான ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வை நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தேர்வு முதல்முறையாக கணினிவழி தேர்வாக நடத்தப்படுகிறது.
2030-ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு களை 50 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சாலைப்போக்கு வரத்துத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லப் பாகிற்கு 50 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி வரியை ஒன்றிய அரசு விதித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இரு தரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங் கள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
ஒன்றியஅரசின்புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் குஜராத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
மோடியின் கல்வித் தகுதி குறித்து விமர்சித்தது தொடர்பான தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்தியா உள்பட பல ஆசிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொடிய நிபா வைரசுக்கு முதன்முதலில் தடுப்பூசி பரிசோத னையை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்க லைக்கழக விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘சனா தனம்’ குறித்து பேசியது தொடர்பாக பிப்ரவரி 13 அன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாட்னா உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி சரிகா வஹாலியாஸ் உத்தரவிட்டார்.
ஆர்.யன்.ரவி திருவள்ளுவரை சனாதன துறவி எனக் கூறுவதற்கும்,காவி உடையில் வள்ளுவர் படம் போடுவதற்கும் ஒரு வழக்கு போடலாம் அமைசசர் உதயநிதி.