சூப்பர் எல் நினோ


பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலவும் வானிலையைத்தான் 'எல் நினோ' என்று அழைப்பார்கள். 

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA - National Oceanic and Atmospheric Administration) சூப்பர் எல் நினோ ஏற்படும் வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

 இந்த சூப்பர் எல் நினோ மார்ச் மற்றும் மே 2024-க்கு இடையில் ஏற்படலாம் என்றும் கடுமையான எல் நினோ ஏற்படுவதற்கான வாய்ப்பு 70 முதல் 75 சதவீதம் இருப்பதாகவும் அந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

சூப்பர் எல் நினோ உருவானால் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள கடல் மேற்பரப்பு வெப்பநிலை அந்த நேரத்தில் சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸ் உயரும். எது

இதனால் வட அமெரிக்க நாடுகளில் சராசரியைவிட அதிக வெப்பநிலை மற்றும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. 

அதே சமயம் சில பகுதிகளில் பெரும் மழை பெய்து வெள்ள பாதிப்பும் ஏற்படும்.


முன்னதாக 1972-73, 1982-83, 1997-98 மற்றும் 2015-16-ஆம் ஆண்டுகளில், பல நாடுகள் கடுமையான வெப்பம், வறட்சி ஏற்பட்டது. அதேபோல் இதன் காரணமாக அதே ஆண்டுகளில் வரலாறு காணாத வெள்ளம் போன்ற நிலைமைகள் ஏற்பட்டன.


2024-ஆம் ஆண்டிலும் இப்படியான நிலை ஏற்பட போவது உறுதியாகி உள்ளது. இந்த எல் நினோ எப்படி உருவாகிறது என்றால் பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலவும் வானிலையைத்தான் 'எல் நினோ' என்று அழைப்பார்கள். 

பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பதை தான் எல் நினோ என்று வானிலை ஆய்வாளர்கள், புவியியல் ஆய்வாளர்கள் அழைப்பார்கள்


பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரைதான் இருக்கும். இந்நிலையில் 32 முதல் 34 டிகிரி செல்சியஸைவிட வெப்பநிலை அதிகமானால் அந்த வானிலை சூப்பர் எல் நினோ என்று அழைப்பார்கள். 


பசிபிக் பெருங்கடல் தான் உலகின் மிகப்பெரிய கடல் என்பதால், அதில் நடக்கும் எந்த ஒரு மாற்றமும் உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

சூப்பர் எல் நினோ காலங்களில் வெப்பநிலையால் பலத்த காற்று, அவற்றின் திசை மாறுபாடு போன்றவற்றால் உலக வானிலையே கடுமையாக பாதிக்கப்படும்.


முன்பு எல் நினோ காலநிலையில் தாக்கம் ஏற்படும் போதுதான் இந்தியாவில் வறட்சி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் வறட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.. 


1981 முதல் தற்போது வரை, நாட்டில் சில ஆண்டுகளில் எல்நினோவால் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. கடைசியாக, 2002 மற்றும் 2009-ஆம் ஆண்டு வறட்சி ஏற்பட்டது.


இந்த ஆண்டு சூப்பர் எல் நினோவின் தாக்கம் காரணமாக, வட அமெரிக்க நாடுகளில் சராசரியைவிட அதிக வெப்பநிலை மற்றும் வறட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 

எல் நினோ காலத்தில் வறட்சி மட்டுமே ஏற்படும் என்று கூறிவிட முடியாது. கால நிலை மாற்றமும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.



காலநிலை மாற்றம் என்பது காற்றில் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் வாயுக்கள் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு அளவு அதிகரிப்பது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதன் காரணமா ஓரிடத்தில் கனமழையும், மற்ற இடங்களில் வறட்சியும் நிலவுகிறது. இந்த எல் நினோ இந்தியாவை பாதிக்குமா இல்லை என்பது ஏப்ரல் மாதத்திற்கு பிறகே தெரிய வரும். 


எல் நினோடி ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்று கூறுகிறார்கள். நம் நாட்டில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயில் காலம் என்பதால் வெப்பம் அதிகமாக இருக்கும். எல் நினோ தொடர்ந்தால், வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். ஆனால் ஜூன் மாதத்தில் பருவமழையை பாதிக்குமா என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் மாதம் தான் கணிப்பினை வெளியிடும். 

அப்போது தான் தெரியவரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?