பாஜக குறி

 உத்தரபிரதேசத்தில் இந்து பல்கலை. மாணவி கூட்டு பாலியல் வழக்கில் பா.ஜ.க. ஐ.டி. விங் நிர்வாகிகள் கைதாவதில் 60 நாட்கள் தாமதம்.போராட்டங்கள் நடந்த பின்னரே கைது.

சேலம் அருகே குடும்ப தகராறு காரணமாக புதுமண தம்பதி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு.

மணிப்பூரில் தொடரும் வன்முறை.தெளபால் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு..

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழப்பு. மேலும் பலர் காயம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

தென் கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்தம் தமிழ்நாட்டில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.

மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு. எடப்பாடி ஊழல் வழக்கு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கிறார்.

துணைவேந்தர்கைது,பதிவாளர்தலைமறைவு சேலம் பெரியார் பல்கலை,யை நிர்வகிக்க புதிய நிர்வாகக்குழு.பேராசிரியர்கள், ஊழியர்கள் வலியுறுத்தல்.


பாஜக குறி மர்மம்?

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க மறுத்து பேட்டி அளித்தார். 

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் வேறு வழியில்லாமல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆய்வுக்கு வந்தார்.

 வந்தவர் வந்த வேலையை மட்டும் பார்க்கா மல் அவருக்கு தேவையில்லாத வேலைகளிலும் ஈடுபட்டார். 

ஒரு கோவிலுக்கு அவர் சென்ற  போது சாமி ஊர்வலம் வரும் பாதை சீரில்லாமல் இருப்பதை சிலர் சுட்டிக்காட்டினர். 

இதை மாநில அரசின், அறநிலையத்துறையின் கவனத்திற்கு அவர் கொண்டு வந்தது பொருத்தமானது.

அவர் சுட்டிக்காட்டிய குறை உடனடியாக சரி செய்யப் பட்டுள்ளது.  இதுகுறித்த விவாதத்தின் போது காணிக்கை யை உண்டியலில் போடாதீர்கள் அர்ச்சகரு டைய தட்டில் போடுங்கள் என்று ஆவேசமாக அவர் கூறிய காட்சியின் காணொலி வெளியா னது.

 ஒன்றிய நிதி அமைச்சர் தன்னுடைய பொறுப்புக்கு பொருத்தமில்லாத வகையில் கோவில் உண்டியலில் காணிக்கையை போட வேண்டாம் என்று கூறினார். 

இதற்கு இந்து சமய  அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உரிய பதில் அளித்துள்ளார்.  

பாஜகவைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது அறநிலையத்துறையை கலைப்போம் என் றும் கோவில்களை கைப்பற்றுவோம் என்றும் கூறி வருகின்றனர்.

அவ்வாறு நடந்தால் என்ன வாகும் என்பதற்கு சிதம்பரம் கோவில் சாட்சிய மாக உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளது.

தீட்சிதர்கள் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு குழந்தைத் திரு மணம் செய்து வைப்பது, கோவிலுக்கு வரும் பக்தர்களை தாக்குவது, கோவிலை திருமணம் போன்ற விசேஷங்களுக்கு வாடகை விடுவது, தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ்ப் பாயிரங் களை பாட அனுமதி மறுப்பது, கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடை செய்வது என பல புகார்கள் உள்ளன.

 இந்நிலையில் நீதிமன்றத்தின் அறிவுறுத்த லின்படி அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 30க்கும் மேற்பட்ட விதி மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் கூறியுள் ளார்.

இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.  மேலும் ஆரூத்ரா தரிசனத்தை காரணம் காட்டி கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் தரி சனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாக வும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  இதேபோன்ற விதிமீறல்கள், சாதிய அடிப்படையிலான மேலாதிக்கம் போன்றவற்றை அனைத்து கோவில் களிலும் அரங்கேற வைப்பதுதான் பாஜகவின ரின் தீய நோக்கம். இதைத்தடுப்பது தமிழக மக்க ளின் குறிப்பாக இறை நம்பிக்கை உள்ளவர் களின் கடமையாகும்.

----------------------------------

155 முறை நிலநடுக்கம்.

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், பிறகு சுனாமி என அடுத்தடுத்த இயற்கை சீற்றங்களால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

இந்த நிலையில், இன்று சுனாமி எச்சரிக்கைகளை ஜப்பான் திரும்ப பெற்றுள்ளது. 

ஜப்பானில் 155 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால், இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு ஜப்பான். 

அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் ஜப்பான் பாதிக்கப்பட்டு வருகிறது. 


ஜப்பானில் நேற்று (01.01.2024)அந்நாட்டு நேரப்படி மாலை சுமார் 4.10 மணியளவில் இஷிகாவா மற்றும் நிகாட்டா மாகாணங்களை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் ஜப்பான் மக்கள் பீதியில் உறைந்தனர்.


அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகள் வரை நிலநடுக்கம் பதிவாகியது. இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் குலுங்கின. 

விரிசல்களும் ஏற்பட்டது. சாலைகளில் பெரிய அளவில் விரிசல் காணப்பட்டது. இஷிகாவா மாகாணத்தில் உள்ள வஜிமா நகரில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த கேஸ் குழாய்கள் உடைந்தது. இதனால் கேஸ் வெளியேறியதால் தீப்பிடித்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. 

தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. 5 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


 இதைத்தொடர்ந்து கொக்கைடோ தீவு முதல் கியுசு தீவு வரை கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று பிரதமர் புமியோ கிஷிடா உத்தரவிட்டார். 

எச்சரிக்கை விடுத்த சில நிமிடங்களில் ஜப்பானின் மேற்கு கடற்பகுதிகளை 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கின. பல இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


குறிப்பாக நேற்று ஜப்பானில் 155 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின.


 இதேபோல் தொடர் நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


 மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றதாகவும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் ஜப்பான் பிரதமர் கூறியுள்ளார்.

 பாதிக்கப்பட்டவர்களை மீட்க நேரத்துடன் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுவதாகவும் கூறியுள்ளார். தற்போது ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?