பொதிகை

இங்கு திமுக அமைச்சர்களின் முடிந்து போன, ஆதாரமின்றி விடுதலையான பழைய வழக்குகள் மட்டும் தான் மீண்டும், "தானே முன்வந்து" மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்கிற பெயர் பலகையை முதலில் வைக்கணும்.

"மணிப்பூர் வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி கொடுத்தது திராவிட மாடல் அரசு"
- கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


மோடி முன்னிலையில் கருப்பு சிவப்பு  உடையணிந்து தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றிய வீரர்கள்.ஒவ்வொரு முறை வருகையிலும். வச்சு செய்வதே வேலையாப் போச்சு!

நீலகிரியில் லாரி டிரைவர்கள் வேலைநிறித்தம்.  8 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம்.

சீனாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் பலி.

ரூ.5 ஆயிரம் கோடி மோசடி வழக்கு நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு? போலீசார் அறிக்கையளிக்க உத்தரவு.

தென்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! 

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து 6 பேர் உயிரிழப்பு!

நடுக்கடலில் பைபர் படமகு இன்ஜின் வெடித்து விபத்து.. சீர்காழி மீனவர்கள் 6 பேர்கள் படுகாயம்!

2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு - திமுக அறிவிப்பு.

"அதிமுக பொதுக் குழு தீர்மானங்களில் தலையிட முடியாது" - உச்ச நீதிமன்றம் !

உலக தங்க கவுன்சில் மதிப்பீடு. அதிகளவில் தங்கத்தை வைத்திருக்கும் முதல் 20 நாடுகளின் பட்டியல் வெளியானது.800.78  டன்கள் தங்கத்துடன் இந்தியா 9வது இடம்.

பொதிகை மறைந்தது.

ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தமிழ் நாட்டையும் தமிழ் மொழியையும் தமிழர்களின் பண் பாட்டையும் சீர்குலைத்து வருகிறது. 

அதில் ஒன்று தான் தமிழகத்தில் உள்ள  பொதிகை தொலைக் காட்சி பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்திருப்பது.  

அந்தந்த மாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற மலைகளின் பெயர்களை, அந்தந்த மொழி பேசும் மக்கள் பரிந்துரைத்ததன் அடிப்ப டையில், தமிழில் பொதிகை, கன்னடத்தில் சந்தனா, தெலுங்கில் சப்தகிரி, மகாராஷ்டிராவில் சஹ யாத்ரி, குஜராத்தில் கிரினார் என்று அரசு தொலைக் காட்சிகளுக்கு பெயர்கள் வைக் கப்பட்டன.

 தமிழ் மக்களின் தனித்துவமான, உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில்இருந்த பொதிகை தொலைக்காட்சியும் அகில இந்திய வானொலியும் கடந்த சில ஆணடுகளாக ஆளும் பாஜகவின் ஊதுகுழலாக மாற்றப்பட்டுள்ளது.  

மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான்.  தமிழ் மொழியை மேம்படுத்துவது போன்றும், திருக்குறளை பெருமைப்படுத்துவது போன்றும் பிரதமரும் ஒன்றிய அமைச்சர்களும் பேசினா லும் நடைமுறையில் தமிழை ஒழித்துக்கட்டும் வேலைதான் நடைபெறுகிறது.

 பொதிகை தொலைக்காட்சியிலும் அகில இந்திய வானொ லியிலும் தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்டன.  தமிழக மண் சார்ந்த, தமிழக மக்கள் சார்ந்த கலை கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு போதிய நேரம் ஒதுக்காமல் இந்தி அல்லது சமஸ்கிருத மொழியில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் தமிழக மக்களிடம் திணிக்கப்படுகின்றன.  

பிரதமர் மோடி தலைமை யிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் இந்தியா முழுவதும் அரசு தொலைக்காட்சிகளும் வானொலியும் நடுநிலை மையில் இருந்து தடம் புரண்டன.   காங்கிரஸ் ஆட்சியின் போது ஒன்றிய அரசின் செய்திகள் அதிகமாக இருந்தாலும் அங்கீகரிக் கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி களுக்கும் போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டன. 

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக மோடியின் புகழ் பாடும் நிலையங்களாக பொதிகை தொலைக் காட்சியும் வானொலியும் மாற்றப்பட்டுள்ளன.

பிரசார்பாரதி அமைக்கப்பட்ட பின்னர் ஒன்றிய அரசின் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல் படும் என்று நாடாளுமன்றத்தில் உறுதியளிக்கப்பட் டது. அந்த உறுதியை மோடி அரசு காப்பாற்றவில்லை.  

தமிழகத்தில் உள்ள வானொலி நிலையங்களி லும் தமிழ் மொழி நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்ட தோடு சென்னை தவிர்த்த இதர வானொலி நிலையங்களில் ஒலிபரப்புகள் நிறுத்தப் பட்டுள்ளன.

 நாட்டின் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, அனைவருக்கும் பொதுவான நிகழ்ச்சி களை ஒலி, ஒளிபரப்பவேண்டிய வானொலியும் பொதிகை தொலைக்காட்சியும் ஆளும் அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டதால்  நேயர்களின் நம்பிக் கையை இழந்ததுதான் மிச்சம். 

இப்போது ‘பொதிகை’ என்ற பெயரும் மாற்றப்பட்டு விட்டது.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?