மீண்டும் எரிகிறது!

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தேதி அறிவிப்பு: சாதிப் பெயரை சொல்லி காளைகளை அவிழ்க்கத் தடை.



மோடிக்காக பணியாற்றுகிறார் மம்தா பானர்ஜி":- காங்கிரஸ் தலைவர்ஆதிர் ரஞ்சன் குற்றச்சாட்டு.

பேரிடர்,வெள்ள நிவாரணத்தை உடனே வழங்க கோரி அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்ட தமிழக எம்.பி.க்கள்.ஆனால் இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை:- முதல்வர் மு.க.ஸ்டாலின் .

தென்மாவட்டங்களை புரட்டி போட்ட பெருமழை.நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள 792 உடைப்புகளை தற்காலிகமாக சரி செய்ய ரூ.100 கோடி தேவை ஆய்வு நடத்திய அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிப்பு.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுக்கவே பாஜக என்னை கைது செய்ய விரும்புகிறது: கேஜ்ரிவால்.

அரியாணா காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் வீடு, அலுவலகத்தில் அமுலாக்கத்துறை சோதனை.

மீன்வளத் துறை சார்பில் ரூ.134 கோடியில் மீன் இறங்குதளங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ராமேஸ்வரத்தில் ரூ.4 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும்: தமிழ்நாடு போக்குவரத்து துறை வலியுறுத்தல் .

பெரியார் பல்கலை முறைகேடு.5 பேரிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை.

மீண்டும் மணிப்பூர்.

2023ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி அன்று தொடங்­கி­யது, மணிப்­பூர் நி­லத்­தில் வன்­முறை. சில மாதங்­க­ளுக்கு முன்­னால் லேசாக அடங்கி இருந்­தது. இதோ 2024 ஆம் ஆண்­டும் தொடங்­கி­விட்­டது.

கடந்த டிசம்­பர் 25ஆம் தேதி காலை­யில் மணிப்­பூர் மாநி­லத்­தில் குக்கி இன மக்­கள் அதி­கம் வாழும் காங்­போக்பி மாவட்­டத்­தில் ஜூபி எனும் பகு­தி­யில் துப்­பாக்­கிச் சூடு நடந்­தது. இந்த துப்­பாக்­கிச் சூட்­டில் 21 வயது இளை­ஞர் ஒரு­வர் கொல்­லப்­பட்­டார். 

புத்­தாண்டு தின­மான ஜன­வரி 1 ஆம் தேதி­யன்­றும் துப்­பாக்­கிச் சூடு தொடர்ந்­துள்­ளது. இதில் 3 பேர் கொல்­லப்­பட்­டார்­கள். ஐந்து பேர் காயம் அடைந்­துள்­ள­னர். தெள­பால், இம்­பால் கிழக்கு, இம்­பால் மேற்கு,

காக்­சிங், பிஷ்­னு­பூர் ஆகிய மாவட்­டங்­க­ளில் மீண்­டும் ஊர­டங்கு போடப்­பட்டுள்­ளது.

எட்டு மாதங்­க­ளாக எரி­கி­றது மணிப்­பூர். 2024 ஆம் ஆண்­டும் தொடங்­கி­விட்டது என்­ப­து­தான் வேத­னைக்­கு­ரி­யது ஆகும். எட்டு மாதங்­க­ளில் ஒரே ஒரு­நாள்­கூட பிர­த­மர் நரேந்­திர மோடி அவர்­கள், மணிப்­பூர் செல்­ல­வில்லை. பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளைச் சந்­தித்து ஆறு­தல் சொல்­ல­வில்லை. 

அதி­கா­ரப்­பூர்வ அறி­விப்­பின்­படி 180 பேர் இறந்­துள்­ளார்­கள். எவ­ரொ­ரு­வர் வீட்­டுக்­கும் பிர­த­மர் செல்­ல­வில்லை. உள்­துறை அமைச்­சர் அமித்ஷா மூன்றே மூன்று நாட்­கள்­தான் இருந்­தார். ஒப்­புக்கு! கணக்­குக் காட்ட மட்­டும்!

மாநி­லத்தை ஆளும் பா.ஜ.க. அர­சின் கையா­லா­காத்­த­னத்தை இது வெளிப்­ப­டுத்­து­கி­றது. ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் அலட்­சி­யத்­தை­யும், மெத்­த­னத்­தை­யும் இது வெளிப் படுத்­து­கி­றது. 


பிர­த­மர் மோடி --– உள்­துறை அமைச்­சர் அமித்ஷா ஆகி­யோ­ரது திற­மை­யின்­மை­யின் சாட்­சி­யாக இருக்­கி­றது மணிப்­பூர். 

அந்த மாநி­லத்­தின் முத­ல­மைச்­ச­ரான பிரேன்­சிங்­கைக் கூட அவர்­க­ளால் மாற்ற முடி­ய­ வில்லை. பா.ஜ.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களே, பா.ஜ.க. தலை­மைக்கு எதி­ரா­கக் கருத்­துச் சொன்ன பிற­கும், அதனை பா.ஜ.க. தலை­மை­யால் செய்ய முடி­ய­ வில்லை.

அதி­க­மான நாட்­கள் இணை­யத் தடை­கள் விதித்த மாநி­ல­மாக காஷ்­மீருக்கு அடுத்­த­ப­டி­யாக மணிப்­பூர் மாறி­யது. 

இத­னால் அப்­ப­கு­தி­யில் நடக்­கும் பல வன்­மு­றை­கள் மற்­றும் பெண்­கள் மீதான வன்­கொ­டு­மை­கள் வெளியே வரா­மல் மறைக்­கப் பட்­டுள்­ளது.

இறந்­த­வர் உடல்­களை வாங்க, உரி­மை­கோர ஆட்­கள் வர­வில்லை. இது­தான் துய­ரங்­க­ளி­லும் துய­ரம் ஆகும். வன்­மு­றை­யில் இறந்த 96 பேரின் உடல்­கள் இம்­பா­லில் உள்ள மாநில மருத்­து­வக் கல்­லூரி, ஜவ­ஹர்­லால் நேரு மருத்­து­வக் கல்­லூரி மற்­றும் சுரா­சந்த்­பூ­ரில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் அப்­ப­டியே இருக்­கின்­றன. 

இறந்­த­வர்­க­ளின் குடும்ப உறுப்­பி­னர்­கள் உடல்­களை அடை­யா­ளம் காண மருத்­து­வ­மனை சவக்­கி­டங்­கிற்­குச் சென்று நேரில் பார்­வை­யிட வேண்­டும். 

ஆனால் இப்­போது மக்­கள் அங்கு செல்ல முடி­யா­த­தால் இந்த உடல்­கள் பல மாதங்­க­ளாக அடை­யா­ளம் காணப்­ப­டா­மல் இருக்­கின்­றன.

இரண்டு பெண்­கள் நிர்­வா­ண­மாக அழைத்­துச் செல்­லப்­பட்­டார்­களே! அவர்­கள் என்ன ஆனார்­கள்? 

என்­பதை சமீ­பத்­தில் பி.பி.சி. செய்தி நிறு­வ­னம் கட்­டு­ரை­யாக்கி வெளி­யிட்டு இருந்­தது.

 “நான் முன்பு வாழ்ந்­த­தைப் போல என்­னால் மீண்­டும் வாழ முடி­யும் என்று நான் நினைக்­க­வில்லை. வீட்டை விட்டு வெளி­யே­று­வது எனக்கு கடி­ன­மாக உள்­ளது, மக்­க­ளைச் சந்­திப்­ப­தற்கு பய­மா­க­வும் வெட்­க­மா­க­வும் இருக்­கி­றது. கூட்­டத்­தைப் பார்த்­தாலே பய­மாக இருக்­கி­றது. இனி எந்­தப் பெண்­ணுக்­கும் இப்­படி நடக்­கக் கூடாது” என்று

அந்­தப் பெண்­கள் சொல்லி இருக்­கி­றார்­கள். இதில் ஒரு­வர் கல்­லூரி மாணவி. இனி கல்­லூ­ரிக்­கும் செல்ல முடி­யாது, அனை­வ­ரி­ட­மும் பேச முடி­யாது என்று சொல்லி இருக்­கி­றார். அதா­வது அந்த இரண்டு பெண்­க­ளைக்­கூட மன அளவில் பா.ஜ.க. அர­சு­க­ளால் மீட்க முடி­ய­வில்லை.

மே மாதம் அவர்­கள் நிர்­வா­ணம் ஆக்­கப்­பட்டு ஊர்­வ­ல­மாக அழைத்­துச் செல்­லப்­பட்­டார்­கள். அவர்­களை அப்­படி அழைத்­துச் செல்­வதை காவ­லர்­களே கைகட்டி வேடிக்கை பார்த்­தார்­கள். அந்­தப் பெண்­கள் இரண்டு வாரத்­தில் புகார் கொடுத்­தார்­கள். 

மே, சூன், சூலை வரை எந்த நட­வ­டிக்­கை­யும் இல்லை. சூலை­யில் நிர்­வா­ண­மாக அழைத்­துச் செல்­லும் காட்சி வீடி­யோக்­கள் வெளி­யா­னது. அதன் பிற­கு­தான் மணிப்­பூ­ரைத் தாண்டி வெளி­யில் தெரிந்­தது. 

முதன்­மு­த­லாக மூன்று மாதம் கழித்து பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி, மணிப்­பூர் பற்றி வாய்­தி­றந்து கருத்­துச் சொன்­னார்.

இரண்டு வழக்­கு­க­ளைப் பதிவு செய்­துள்­ளது சி.பி.ஐ. இரு குற்­றப்­பத்­தி­ரிக்­கை ­களை கவு­ஹாத்தி சி.பி.ஐ., சிறப்பு குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­தில் கடந்த செப்­டம்­பர் தாக்­கல் செய்­தது சி.பி.ஐ. அவ்­வ­ள­வு­தான்!

கடந்த நவம்­பர் மாதம்­தான் 9 மைத்தி இனக்­குழு அமைப்­பு­க­ளுக்கு ஆளும் பா.ஜ.க. அரசு 5 ஆண்­டு­க­ளுக்­குத் தடை விதித்­தது.மக்­கள் விடு­தலை ராணு­வம் (PLA), புரட்­சி­கர மக்­கள் முன்­னணி (RPF), ஐக்­கிய விடு­தலை

முன்­னணி (UNLF), மணிப்­பூர் மக்­கள் ராணு­வம் (MPA), காங்­லீய்­பக் மக்­கள் புரட்­சி­கர கட்சி (PREPAK), காங்­லீய்­பக் கம்­யூ­னிஸ்ட் கட்சி (KCP), கே.ஒய்.கே.எல்., கோர்­கோம், ஏ.எஸ்.யூ.கே – -ஆகிய 9 அமைப்­பு­களை ஒன்­றிய அரசு தடை செய்­தது.

இவர்­கள் இன்­ன­மும் மணிப்­பூர் பிரச்­சி­னை­யின் உண்­மை­யான கார­ணத்­தைச் சொல்ல விரும்­ப­வில்லை. 

ஆர்.எஸ்.எஸ். தலை­வர் மோகன் பகவத், வழக்­கம் போல் இது அன்­னி­யச் சதி என்ற பல்­ல­வி­யைப் பாடு­கி­றார். “மணிப்­பூர் ஒரு எல்­லைப்­புற மாநி­லம். மணிப்­பூர் வன்­மு­றை­யில் எல்லை தாண்­டிய தீவி­ர­வா­தி­கள் ஈடு­பட்­டி­ருக்­கின்­ற­னர்” என்று சொல்லி இருக்­கி­றார். எல்­லா­வற்­றுக்­கும், வெளிப்­பு­றச் சதி­தான் இவர்­க­ளுக்­குத் தெரிந்த ஒரே காரணம்.

மிசோ­ரம் மாநி­லத்­தில் பா.ஜ.க. அடைந்த தோல்­வியை, மணிப்­பூர் மாநில வன்­மு­றைக்­குக் கிடைத்த தண்­ட­னை­யா­கவே பார்க்க வேண்­டும்.

 அந்த மாநி­லத்­தில் ஆளும் கட்­சி­யாக இருந்­தது மிசோ தேசிய முன்­னணி. பா.ஜ.க.வின் கூட்­ட­ணிக் கட்சி இது. பிர­த­மர் நரேந்­திர மோடி­யு­டன் இணைந்து பிரச்­சார மேடை­யில் ஏற மாட்­டேன் என்று முத­ல­மைச்­சர் ஜோரம் தங்கா சொன்­னார். 

இந்­நி­லை­யில் மொத்­த­முள்ள 40 இடங்­க­ளில் பா.ஜ.க. 23 இடங்­க­ளில் மட்­டும் போட்­டி­யிட்­டது. தேர்­தல் முடி­வு­க­ளின் படி ஆளும் மிசோ தேசிய முன்­னணி 40 இடங்­க­ளில் 10 இடங்­க­ளில் மட்­டுமே வென்­றது. 23 இடத்­தில் போட்­டி­யிட்ட பா.ஜ.க. 2 இடங்­க­ளில் மட்­டுமே வென்­றது. ஜோரம் மக்­கள் இயக்­கம் என்ற கட்சி 27 தொகு­தி­க­ளைக் கைப்­பற்றி ஆட்­சி­யைப் பிடித்­தது. 

மணிப்­பூர் பிரச்­சி­னையை சரி­யா­கக் கையா­ளா­த­தால் பா.ஜ.க. இங்கு தோல்­வி­யைத் தழு­வி­யது. பா.ஜ.க.வுடன் தேர்­த­லுக்கு முன்பு வரை இருந்த மிசோ தேசிய முன்­னணி ஆளும் தகு­தியை இழந்­தது.

தகு­தி­யற்­ற­வர்­க­ளால் ஆளப்­பட்­டால் மக்­கள் உட­லும் மன­மும் எரிந்து கொண்டே இருக்­கத்­தான் வேண்­டும் என்­ப­தற்கு மணிப்­பூர் சாட்­சி­யாக அமைந்­தி­ருக்­கி­றது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?