தமிழர் திருநாள்

களத்தில் காயமடைந்து விழுந்த காளை.. ஜல்லிக்கட்டு நிறுத்தம்.

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பிரிட்டன் பொறியாளர் ஜான் பென்னிகுவிக்கின் 183வது பிறந்தநாளை ஒட்டி, மதுரை பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிகாரிகள் மரியாதை.

தமிழர் திருநாள்

இயற்­கை­யு­டன் இணைந்­ததே தமி­ழர்­க­ளின் -–- தமிழ்­நாட்­டின் வாழ்­வி­யல் முறை­யா­கும். இயற்­கையை வணங்­கு­தல்­தான் தமி­ழர்­க­ளின் -– தமிழ்­நாட்டின் மர­பும் ஆகும். மர­பின் தொடர்ச்­சி­யும் ஆகும்.

“சுழன்­றும்­ஏர்ப் பின்­னது உல­கம் அத­னால் உழந்­தும் உழவே தலை.” (குறள்:1031) --– என்­றார் வான்­பு­கழ் வள்­ளு­வர். எத்­தனை தொழில்­கள் இருந்­தாலும் உழ­வுத் தொழி­லுக்கு அடுத்தே அத்­தனை தொழில்­க­ளும் என்­ற­வர் அவர். மண்­ணை­யும் மக்­க­ளை­யும் எப்­ப­டிப் பிரிக்க முடி­யாதோ, அதே போல மண்­ணை­யும் பண்­பாட்டு விழு­மி­யங்­க­ளை­யும் பிரிக்க முடி­யாது.


வேளாண்­மை­யைக் கொண்ட மனி­தன், வேளாண் விளைச்­சல் கிடைக்­கும் முதல் நாளைக் கொண்­டா­டி­னான். அது­தான் பொங்­கல் பெரு­விழா. முதல் விளைச்­சலை வைத்­துப் பொங்­கி­யது

(சமைத்­தது) தான் பொங்­கல் பெரு­விழா.

‘‘தைஇத் திங்­கள் தண்­க­யம் படி­யும்” -– என்று நற்­றி­ணை­யும்

‘‘தைஇத் திங்­கள் தண்­ணிய தரி­னும்’’ என்று குறுந்­தொ­கை­யும்

“தையில் நீராடி தவம் தலைப்­ப­டு­வாயோ” -– என்று கலித்­தொ­கை­யும் சொல்கி­றது.

பொங்­க­லைப் பற்­றிய அதி­க­மான பாடல்­கள் பரி­பா­ட­லில் உள்­ளன. வேத காலத்­துக்கு முன்பு இருந்தே கொண்­டா­டப்­ப­டும் விழா­வாக இது அமைந்­துள்­ளது. 

அத­னால்­தான் இதற்கு எந்த கற்­ப­னைக் கதை­யும் இல்லை என்­றார் தந்தை பெரியார்.

“மதுக்­கு­லாம் அலங்­கல் மாலை மங்­கை­யர் வளர்த்த செந்­தீப் புதுக்­க­லத்து எழுந்த தீம்­பால் பொங்­கல்” –- என்­கி­றது சீவக சிந்­தா­மணி.

செந்தீ மூட்­டிப் புதுப் பானை­யில் இனிய பாலொடு கலந்த சோற்­றைப் பொங்க­லா­கப் பொங்­கி­டும் பண்­பாட்டு விழா­வாக சங்க காலத்­தில் இருந்து கொண்­டா­டப்­ப­டு­கி­றது பொங்­கல் திரு­நாள்.

உழா­அது வித்­திய பரூ­உக்­கு­ரற் சிறு­தினை

முந்­து­விளை யாணர் நாள்­பு­திது உண்­மார்,

மரை­யான் கறந்த நுரை­கொள் தீம்­பால்,

மான்­தடி புழுக்­கிய புல­வு­நாறு குழிசி

வான்­கேழ் இரும்­புடை கழா­அது, ஏற்­றிச்,

சாந்த விற­கின் உவித்த புன்­கம்,

கூத­ளங் கவி­னிய குளவி முன்­றில்,

செழுங்­கோள் வாழை அகல்­இ­லைப் பகுக்­கும்

ஊராக் குதி­ரைக் கிழவ! கூர்­வேல்,

நறை­நார்த் தொடுத்த வேங்­கை­யங் கண்ணி,

வடி­ந­வில் அம்­பின் வில்­லோர் பெரும! –- என்­கி­றது புற­நா­னூறு.

புதி­தா­கக் கறந்து நுரை­யெ­ழும்­பும் தீம் பாலிலே புத்­த­ரி­சியை இட்டு, சந்­த­னக்­கட்­டை­களை விற­கா­கக் கொண்டு அடுப்­பெ­ரித்து ஆக்­கிய பொங்­க­லைப் பல­ரோடு பகிர்ந்து உண்­ணு­கின்ற வழக்­கத்­தைச் சொல்­கி­றது புற­நா­னூறு.

“பைது­அற விளைந்த பெருஞ்­செந் நெல்­லின்

தூம்­பு­டைத் திரள்­தான் துமிந்த வினை­ஞர்”

என அறு­வடை செய்­யும் உழ­வ­ரைப் பற்றி பெரும்­பா­ணாற்­றுப்­படை கூறுகின்­றது.

“புழுக்­க­லும் நோலை­யும் விழுக்­குடை மடை­யும்

பூவும் புகை­யும் பொங்­க­லுஞ் சொரிந்து” –- என்­கி­றது சிலப்­ப­தி­கா­ரம். புழுக்­கலும், நோலை­யும், விழுக்­குடை மடை­யும், பூவும் புகை­யும் பொங்­க­லும் சொரிந்து வழி­பட்­ட­தா­கக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. சங்க காலத்­தில் ‘புழுக்­கல்’ என்றால் பொங்­கல் என்று பொருள். இன்று நாம் சொல்­லும் ‘புழுங்­கல் அரிசி’ இந்த வழக்­க­மா­கத்­தான்.

தனது விளைச்­சல் அனைத்­தை­யும் சூரி­ய­னுக்கு முன் படை­யல் இட்டு வணங்­கி­னார்­கள்.

 கதி­ர­வ­னின் ஒளி­யி­னால்­தான் பயிர்­கள் வளர்­கின்­றன என்­றும், காய்க்­கின்­றன என்­றும் அன்றே கண்­டு­பி­டித்­தார்­கள்.

தை முதல் நாள் என்­பது அந்த ஆண்­டின் புதுத் தொடக்­கம் ஆகும். அப்­ப­டி­யா­னால் முந்­தைய பழை­ய­வை­க­ளைப் போக்க (அழிக்க) வேண்­டாமா? 

அதனால்­தான் பொங்­க­லுக்கு முந்­தைய நாள் ‘போக்கி நாள்’ கொண்­டா­டப்­பட்டது. அது­தான் இன்று பேச்சு வழக்­கில் ‘போகி யாகக் கொண்­டா­டப்­ப­டு­கி­றது. மார்­க­ழி­யின் இறு­தி­தான் ‘போக்கி’ நாள். தை முதல் நாள், ‘போக்­கி’­கள் அனைத்­தை­யும் நீக்கி புது­மை­கள் தொடங்­கும் நாள் ஆகும்.

 உழ­வுக்கு உறு­து­ணை­யாக இருப்­பவை மாடு­கள். எனவே அடுத்­த­தாக மாடு­க­ளுக்­கான நாள். அனை­வ­ரை­யும் கண்டு மகி­ழும் நாள் ‘காணும் பொங்­கல்’. இந்த இனத்­துக்கு மட்­டு­மல்ல, உல­குக்கே அறத்­தைச் சொன்ன திரு­வள்­ளு­வர் நாளும் இத்­தோடு சேர்­கி­றது. 

எனவே தான், பொங்­கல் வாரம் என்­பது தமி­ழர் தம் பண்­பாட்டு வார­மாக அமைந்­தி­ருக்­கி­றது.

அத­னால்­தான் இதனை ‘சமத்­து­வப் பொங்­க­லா­கக் கொண்­டா­டுங்­கள்’ என்று சொல்லி வாழ்த்­தி­யி­ருக்­கி­றார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள்.

“தமி­ழர் திரு­நா­ளைச் ‘சமத்­து­வப் பொங்­கல்’ என்று பெய­ரிட்டு எழுச்­சி­யு­டன் கொண்­டாட வேண்­டும். கழக உடன்­பி­றப்­பு­க­ளுக்­கும் மக்­க­ளுக்­கும் பொங்­கல் பரி­சு­களை வழங்­கி­டுங்­கள். 

அனைத்து மதத்­தி­ன­ரும், சாதி­யி­ன­ரும் கலந்து கொள்ளும் சமத்­து­வப் பொங்­க­லாய் இது அமைந்­திட வேண்­டும்.

குழந்­தை­கள், பெண்­கள், இளை­ஞர்­கள், முதி­ய­வர்­கள் எனத் தனித்­த­னி­யாகப் பாரம்­ப­ரிய விளை­யாட்­டுப் போட்­டி­கள் நடத்தி, சல்­லிக்­கட்­டில் வெற்றி பெறும் காளை­கள்  மாடு­பிடி வீரர்­கள் என வெற்­றி­பெற்­ற­வர்­க­ளுக்­குப் பரி­சு­களை வழங்க வேண்­டும்.

கழ­கத்­தி­னர் அனை­வ­ரது இல்­லங்­க­ளி­லும் ‘சமத்­து­வப் பொங்­கல்’ எனக்கோலமிட்டு, அத­னைச் சமூக வலை­த­ளங்­க­ளில் பகி­ருங்­கள்! 

அது­தான் தலை­ந­க­ரில் பொங்­கல் கொண்­டா­டும் எனக்கு நீங்­கள் தரும் இனிப்­பான பொங்கல் வாழ்த்­தாகும்.” என்று கேட்­டுக் கொண்­டுள்­ளார் முத­ல­மைச்­சர் அவர்கள்.

இத்­த­கைய சமத்­துவ உணர்வு –- சமூ­க­நீதி உணர்வு இந்­தியா முழு­மைக்­கும் மல­ரும் ஆண்­டாக தை தொடங்­கும் ஆண்டு அமை­யப் போகி­றது.

-------------------------------------

நீதி எங்கே?

மேற்குவங்கத்தில் 2018ல் நடந்த ஒரு கொலை முயற்சி தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் ஜல்பைகுரி அமர்வால் கைது வாராண்ட் பிறப்பிக்கப்பட்ட ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நிஷித் பிரமா ணிக்கை, காப்பாற்றி விட்டிருக்கிறது உச்சநீதி மன்றம்.


 தன்னை கைது செய்வதிலிருந்து பாது காக்க வேண்டும் என்று கோரி அமைச்சர் பிர மாணிக் தாக்கல் செய்த இடைக்கால மனுவின் மீதான உத்தரவில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா எம் திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இப்பிரச்சனையை கொல்கத்தா உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வரை அவரை கைது  செய்யக் கூடாது என மேற்குவங்க காவல்துறைக்கு கடந்த வெள்ளியன்று  (ஜன.11) உத்தரவிட்டது.


 இதே நீதிபதிகள் கொண்ட அமர்வு அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு (ஜன.9), மற்றொரு ஒன்றிய அமைச்சரான அஜய் மிஸ்ரா தெனி க்கு ஆதரவாக நடந்து கொண்டது. 

2000ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் பட்டப்பகலில் ஒரு மாணவர் தலை வரை அஜய் மிஸ்ராவின் கும்பல் படுகொலை செய்தது.

பிரபாத் குப்தா என்ற அந்த மாணவர், அந்தப் பகுதியில் பாஜகவின் மதவெறி அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர் ஆவார். 

அவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அஜய் மிஸ்ராவை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுவித்தது. இது தொடர்பான மேல் முறை யீட்டு வழக்கில்தான், அமைச்சரை விடுவித்த அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என்று மேற்கண்ட அமர்வு மறுத்து, அமைச்சரை பாதுகாத்துள்ளது.

 மேற்படி ஒன்றிய பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ரா வேறு யாருமல்ல, 2021 அக்டோபரில் மாபெரும் விவசாயிகள் எழுச்சியின் ஒரு பகுதி யாக லக்கிம்பூர் கெரியில் போராட்டத்தில் ஈடு பட்டிருந்த விவசாயிகளின் கூட்டத்துக்குள் கண் மூடித்தனமாக ஜீப்பை ஏற்றி ஐந்து விவசாயிக ளையும், ஒரு பத்திரிகையாளரையும் படு கொலை செய்த ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தை தான். அமைச்சர் அஜய் மிஸ்ராவின் தூண்டு தலின் பேரில்தான் அவரது மகன் விவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றி படுகொலை செய்தார்.

முதன் மை குற்றவாளியான அவரது மகனுக்கு இதே உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு 2023 செப்டம்பர் 26 அன்று, “மனித நேய” அடிப்படையில் ஆறு மாதக் காலத்திற்கு ஜாமீன் வழங்கியது. 

அவர் இப்போது வெளி யில் சுதந்திரமாக நடமாடி வருகிறார்.  பாதிக்கப்படும் மக்களின் கடைசி புகலிட மாக உள்ள நீதிமன்றங்கள், குறிப்பாக உச்சநீதி மன்றம் குற்றமிழைத்த ஒன்றிய பாஜக அமைச் சர்களை இப்படி பாதுகாப்பது, நீதிதுறையின் நேர்மையை, நாணயத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.

-----------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?