ஆளுநரின் சட்டவிரோத நடவடிக்கை
இந்து பத்திரிக்கையின் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை தருகிறது. இஸ்ரேல் நாட்டில் யுத்தம் நடக்கும் பகுதிகளில் உடல் உழைப்பு நிறைந்த வேலைகளை செய்ய ஒன்றிய அரசு உ.பி மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை அனுப்புகிறது.
வேலைக்காக தவிக்கும் இளைஞர்களின் பரிதாப நிலையினை ஒரு பணக்கார அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்துவதை ஒன்றிய அரசு அனுமதிக்கலமா?
வளைகுடா நாடுகள் போன்ற நாடுகளுக்கெல்லாம் இந்தியர்களை பணியமர்த்த கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் போது இஸ்ரேலுக்கு மட்டும் ஏன் இந்த விசேக்ஷ சலுகை?
சேலம், பெரியார் பல்கலைக் கழகத்தில் பூட்டர் அறக்கட்டளை என்ற தனியார் நிறுவனம் தொடங்கி பல முறைகேட்டில் ஈடுபட்ட தாக பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப் பட்டார்.
இவர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலை யில் இவர் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முறைப்படி ஆஜராகாமலேயே இவருக்கு பிணை வழங்கப் பட்டுள்ளது.
தனக்கு உடல்நிலை சரி யில்லை எனவும், ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்றுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என இவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஆனால், அதேநேரத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியை துவக்கி வைத்து அவரும் விளையாடியதாக செய்தி கள் தெரிவிக்கின்றன.
ஆஞ்சி யோகிராம் செய்து கொண்டவர் எப்படி கைப்பந்துப் போட்டியில் விளையாடினார்?
நீதிமன்றத்திற்கு வராமலேயே எப்படி ஜாமீன் பெற்றார்?
என்பன போன்ற எண்ணற்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
இத்தகைய துணைவேந்தரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நேரடியாக சேலம் சென்று பல்கலை க்கழகத்தில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் பல்கலைக்கழக துறைத் தலைவர்களிடம் பேசும்போது, துணைவேந்தருக்கு அனைவரும் பக்கபலமாக இருக்க வேண்டும்; அவரை கைது செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது, அவருக்கு ஆதரவாக இருப்போம், சட்டப் போராட்டம் நடத்துவோம்.
அதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டுமென பேசியுள்ள தாக பேராசிரியர்கள் தெரி வித்துள்ளனர்.
ஊழல் குற்றச்சா ட்டில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப் பட்ட துணைவேந்தரை நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, அவருக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென ஆளுநர் தெரி வித்திருப்பது முழுமையான சட்ட விரோத நடவடிக்கையாகும்.
சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய உயர் பொறுப்பில் உள்ள ஆளு நரே கிரிமினல் குற்றமிழைத்துள்ள வருக்கு ஆதரவாக செயல்படுவது ஏற்க முடியாததாகும்.
இத்தகைய ஆளுநரை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டுமெனவும், சட்டப்படி இவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.சட்டத்தைப் பாதுகாக்க கண்காணிக்க வேண்டியவர் முறைதவறி நடப்பது ஏற்றுகொள்ளத்தக்கதல்ல..