அசிங்கப் பட்ட அ.துறை!

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுகிறது.மாநகராட்சி !

உ.பி,யில்இளம் பெண்ணை கொடூரமாகக் கொலை செய்த காவலர் கைது.

டோக்கியோ விமான நிலையத்தில், கடலோர காவல் படை விமானத்தின் மீது பயணிகள் விமானம் மோதியதில் கடலோர காவல் படை விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழப்பு. அந்த விமானத்தின் கேப்டன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பயணிகள் விமானத்தில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு இல்லை.






47வது சென்னை புத்தகக் காட்சியை சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டலின்.புத்தகக் காட்சி இன்று தொடங்கி ஜனவரி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது!

'அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு' ;-தமிழ்நாடு அரசு.

தென்கொரியாவில் எதிர்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து.

குடும்பத்தினர் ஒப்பலின்றி நோயாளியை ஐசியுவில் அட்மிட் செய்ய முடியாது: புதிய வழிகாட்டு நெறிமுறை.(செத்துப் போனவருக்கு சிகிச்சையளிக்க. முடியாது.?)




தென் மாவட்ட வெள்ளத்தால் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.1000 கோடி பாதிப்பு: துண்டிக்கப்பட்ட சாலைகளை துரித நடவடிக்கையால் சீரமைத்தது பொதுப்பணித்துறை.

மணிப்பூரின் மோரே நகரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள்.

ஆத்தூர் விவசாயிகளான கண்ணைய்யன்,கிருஷ்ணன் ஆகியோர் மீது
Wild Life Act is a Scheduled Offence கீழ் காட்டெருமைகளை வேட்டையாடியதாக பதிவு செய்யப்பட்ட  WLOR-1/2017 வழக்கின் கீழ் தான் @dir_ed சம்மன் அனுப்பியதாக தகவல் .

ஆனால்,உண்மை என்னவென்றால்,
28-12-2021 ம் ஆண்டு நீதித்துறை நடுவர் எண் 2 நீதிமன்ற நடுவர்
ஜீவன் குமார்,
கண்ணையன்,கிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று
இருவரையும் விடுதலை செய்து விட்டார்.


அதாவது விடுதலை செய்யப்பட்ட ஒரு வழக்கை எப்போது விசாரணைக்காக அமலாக்கத்துறை எடுத்துக்கொண்டது ?

ECIR பதிவு செய்யப்பட்ட ஆண்டு என்ன ?

காட்டெருமையை வேட்டையாடியதாக பதிவு செய்யப்பட்டு,28-12-21 ல்
விடுதலையான வழக்கில் 05-07-23 அன்று சொத்து ஆவணங்களோடு ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பிதற்கு என்ன காரணம் ?

அமலாக்கத்துறை யாருடைய நிர்பந்தத்தின் அடிப்படையில் ஆத்தூர் விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது ?

இந்த வழக்கை அமலாக்கத்துறை யாருடைய பரிந்துரையின் பேரில் விசாரணைக்காக எடுத்தது ?

நிவாரணத் தொகை

திருச்சியில் பன்னாட்டு விமான நிலைய முனையத்தின் திறப்பு விழாவில் பிரதமர் மோதிக்கு முன்பாக பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதுமான நிதியை ஒதுக்கித் தர வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். 

அவருக்கு பின்னர் பேசிய பிரதமர் மோதி, இதுவரை இல்லாத அளவில் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கியது பாஜக அரசாங்கம்தான் என்று விவரங்களை அடுக்கினார். 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் அதிகம் பங்கு செலுத்துவது மத்திய அரசா? மாநில அரசா? என்ற விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.


சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்துக்கான நிவாரணத் தொகையாக ரூ. 21 ஆயிரம் கோடியை மாநில அரசு கேட்கிறது. திருச்சி பன்னாட்டு விமான நிலைய முனையத்தை நேரில் வந்து திறந்து வைத்த பிரதமர் மோதியிடம் இந்த கோரிக்கையை நேரடியாக முன் வைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தவறவில்லை.


விழா மேடையில் பேசிய முதல்வர் சென்னையிலும் தென் மாவட்டங்களிலும் ஏற்பட்ட வெள்ளத்துக்கான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு தனது பங்கை தர வேண்டும் என்றும் கோரினார்.


பின்னர் இதே நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இது வரை இல்லாத அளவில் "தமிழ்நாட்டுக்கு செய்யப்படும் செலவு 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என்றார். 2014 ஆம் ஆண்டுக்கு முன் தமிழகத்துக்கு 30 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது, ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் 120 லட்சம் கோடி தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தற்காலிக நிவாரணத் தொகையாக, ரூ.7033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடியும் கேட்டுள்ளது தமிழக அரசு.
அதே போன்று திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்துக்கான அவசர நிவாரணத் தொகையாக 2 ஆயிரம் கோடி ரூபாயும் கேட்டுள்ளது.


இந்த நிவாரணத்தொகையில் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தரவில்லை என திமுக குற்றம்சாட்டும் வேளையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.900 கோடி தமிழகத்துக்கு கொடுத்து விட்டதாகவும், வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்த பிறகு வேறு தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


"தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் ரூ.900 கோடி நிதி, மாநில பேரிடர் நிதியின் ஒரு பகுதியாகும். ஆனால், இந்த நிதி வைத்துக் கொண்டு தமிழக அரசு நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது. இந்த நிதியை எப்படி செலவு செய்ய வேண்டும் என 14 பக்க விரிவான வழிகாட்டுதல்கள் உள்ளன. ஒரு வீட்டில் துணிகள் சேதமடைந்திருந்தால் ரூ.2500, ஒருவர் இறந்தால் ரூ.4 லட்சம், மீட்புப் பணி வீரர் ஒருவர் இறந்தால் ரூ.4 லட்சம் என பல விதிகள் உள்ளன” என்றார்.


பிரதமர் மோதி தமிழகம் வரும் தினத்தில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் , "24 லட்சம் குடும்பங்களுக்கு கொடுங்கள் என்று ரூ.1,486 கோடியை ஒன்றிய அரசு கொடுத்திருந்தால்தான் அது மோதி பணம். தமிழ்நாடு அரசு தனது கருவூலத்தில் இருந்து எடுத்துத் தரும் பணம் எப்படி மோதி பணம் ஆகும்?” என்று கேள்வி எழுப்புகிறது.


“2015ஆம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய மொத்த தொகை ரூ.1,27,655.80 கோடி. ஒன்றிய அரசால் ரூ.5,884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 

இது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே ஆகும்.” என்றும் முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பணம் யாருடையது என்பதை தாண்டி பணம் எப்படி வழங்கப்படுகிறது என்பது சர்ச்சையாகிறது. திமுக வழங்கிய நிவாரணத் தொகை மக்களிடம் காசாக வழங்கப்பட்டது. இந்த பணத்தை ஏன் மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல், கையில் கொடுக்கிறது தமிழக அரசு என விமர்சிக்கிறது பாஜக.


மிக் ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னையில் வெள்ள மேலாண்மை பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த பணம் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக கொடுக்கப்பட்டது அல்ல என்பதை கூற தமிழக அரசு தவறவில்லை.


தலைமை செயலர் ஷிவ் தாஸ் மீனா, 15வது நிதி ஆணையத்தில் சென்னைக்கான வெள்ள தடுப்பு திட்டம் பரிந்துரைக்கப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு வழங்கியதாகவும், அதன் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய நிதி, தற்போது வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.


சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 118.9 கி.மீ நீளமுள்ள ரயில் பாதை திட்டத்துக்கான செலவுகளை தமிழக அரசே ஏற்று தொடங்கியுள்ளதாக மாநில அரசு கூறுகிறது. 

திருச்சியில் பேசிய முதல்வர் மு க ஸ்டாலின், “சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான மத்திய அரசு பங்கை அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?