நீதிக்கான நெடும் பயணம்.

 தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரம் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் .

இந்தியாவே வியக்க வெற்றிகரமாக உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடந்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பெருமிதம்.

கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

ஓம்காரேஷ்வர் அணையின் நீர்த்தேக்கப்பகுதியில்  மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம் கட்டுமானம்.

தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதிப்பின்றி அரசுப் பேருந்துகள் இயக்கப் படுகிறது..:. அமைச்சர் சிவசங்கர்.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்.

வங்கதேச தேர்தலில் அபார வெற்றி 5வது முறை பிரதமராக பதவி ஏற்கிறார் ஷேக்ஹசீனா.

இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

பொதுக்குழு, செயற்குழு முடிந்த 15 நாட்களில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி இன்று நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, வேட்பாளர் குறித்து முக்கிய ஆலோசனை.

போலி ஜிஎஸ்டி பதிவெண்களை கண்டறிவதற்கான நடவடிக்கை தொடங்கியது முதல் இதுவரை 29,273 போலி நிறுவனங்கள் ரூ.44,015 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. 

இந்த நடவடிக்கை மூலம் ரூ.4,646 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. 

இதில் 3,802 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.844 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக 121 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் போலி நிறுவனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

 வரி ஏய்ப்புசெய்த தொகையின் அடிப்படையில், ரூ.3,028 கோடியுடன் டெல்லிமுதலிடத்தில் உள்ளது.

 மகாராஷ்டிரா (ரூ.2,201 கோடி),

 உத்திரபிரதேசம்., (ரூ.1,645 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

நீதிக்கான நெடும் பயணம்.


குஜராத் வன்முறையின்போது பில்கிஸ் பானு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குஜராத் அரசினால் குற்றவாளிகள்  முன்விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதி மன்றம் ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.


 சமீபத்திய சில வழக்குகளில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்புகள் எதிர்மறையான விமர் சனங்களை உருவாக்கிய நிலையில், இந்தத் தீர்ப்பு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.

2002ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வ ராகவும், அமித்ஷா குஜராத் மாநில  உள்துறை  அமைச்சராகவும் இருந்த காலத்தில் குஜ ராத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு  எதிராக ஆர்எஸ்எஸ் பாஜக பரிவாரத்தால் பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. 

பெண்கள், குழந்தைகள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

 பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 14 பேர் படுகொலை செய்யப் பட்டனர். 

கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானு கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். 

 குற்றவாளிகளுக்கு ஆதரவாக குஜராத் அரசு நடந்து கொண்ட நிலையில் வழக்கு விசாரணை மராட்டிய மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.

11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம்தேதி சுதந்திர தினத்தின் போது குற்றவாளிகள் மன்னிப்பு கோரிய மனுவை ஏற்றுக் கொண்டு குஜராத் அரசு அனை வரையும் விடுதலை செய்தது. 

இது நாடு முழுவ தும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.  

குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லோல், லக்னோ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த மஹூவா மொய்த்ரா ஆகியோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தனர்.  

இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வாயம் குஜராத் அரசின் முடிவை ரத்து செய்துள்ளது.

 உண்மைகளை குஜராத் அரசு புறக்கணித்துவிட்டதாக உச்சநீதிமன்றம் சாடியுள்ளது. மராட்டிய மாநில நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யும் அதிகா ரம் குஜராத் அரசுக்கு இல்லை என ஓங்கி குட்டி யுள்ளது உச்சநீதிமன்றம்.

 நீதிக்காக நெடிய போராட்டத்தை நடத்திய பில்கிஸ் பானுவின் மனஉறுதி பாராட்டத்தக்கது. 

துணைநின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சி களின் ஆதரவு போற்றத்தக்கது. 

நீதி நீண்ட தாம தத்திற்குப் பிறகு நிலைநாட்டப்பட்டுள்ளது.  


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?