முப்பது நாட்கள்.

 தமிழகத்தில் புதிய ஆட்சி உதயமாக வேண்டும் என்று தமிழக மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழகத்திற்கு வாக்களித்து மகத்தான வெற்றியைத் தந்தார்கள். ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு, மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை, வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே தமிழகத்தில் தி.மு.க தலைமையில் ஆட்சி அமைய மக்கள் உறுதி ஏற்று இருந்தனர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

கொரோனா: ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பே அதிகாரிகளுடன் ஆலோசனை!

ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பே தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக உயர் அதிகாரி களுடன் தனது இல்லத்திலே ஆலோசனை மேற்கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்திட முதல் நடவடிக்கை மேற்கொண்டார்.

முன்களப்பணியாளர்களாக பத்திரிகையாளர்கள் அறிவிப்பு!

முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை மே 4 ஆம் தேதி அன்று இரவு பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர்கள், வாழ்த்துத் தெரிவித்ததுடன், ஒரு கோரிக்கையையும் வைத்தனர். அக்கோரிக்கையை ஏற்று ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பே பத்திரிகையாளர்கள் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்படுவர் என்று தனது ட்விட்டர் பதிவில் அறிவித்து, பத்திரிகையாளர்களின் கோரிக்கையை தாயுள்ளத்தோடு நிறைவேற்றினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே7- புதிய வரலாற்று ஆட்சி அமைந்தது!

தமிழகத்தில் கொரோனா பரவல் மிவேகமாக பரவிய காரணத்தினால், மே 7ம் தேதி அன்று எளிமையான முறையில் பதவி எற்பு விழா, ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெறும் என்று பதவி ஏற்புக்கு முன்பு தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு ஏற்ப, மே 7 ஆம் தேதிஅன்று, தமிழகத்தின் 23 வது முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அப்போது தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்; “முத்துவேல் கருணாநி ஸ்டாலின் எனும் நான்...” - எனத் தொடங்கி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.... என்று கூறி முதல்வராகப் பொறுப்பேற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தான ஐந்து அறிவிப்புகளை அறிவித்தார். முதல் கையெழுத்திட்டு முத்தான ஐந்து அறிவிப்புகளை அறிவித்தார் முதல்வர்! இந்த அறிவிப்புகள் அனைத்தும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டவையாகும்.

07.05.2021 : - முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஜூன் 3ஆம் தேதி அன்று கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். ஆனால் மக்கள் கொரோனா பேரிடர் காலத்தில் படும் கஷ்டங்களை அறிந்து, தாயுள்ளத்துடன், எவரும் எதிர்பாராத விதமாக, முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவித்தார். முதல்வராக பொறுப்பேற்றதும் அதற்கான முதற் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக மக்கள் மகழ்ச்சியடைந்தனர்.

கடைகளில் விற்கும் ஆவின் பால் விலை கடந்த காலத்தில் அதிக அளவில் உயர்த்திவிட்டனர். ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலை குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் படி தனது இரண்டாவது கையெழுத்தினை ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து இரண்டாவது கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! - தாய்மார்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அனைத்து மகளிரும் சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என்று மூன்றாவது கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - அனைத்து மகளிரும் பூரிப்படைந்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனக்கூறி மக்களிடத்தில் லட்சக்கணக்கான மனுக்களைப் பெற்றார். அதற்கென்று “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்று தனியே துறையை உருவாக்கிடும் வகையில் தனது நான்காவது கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மனு கொடுத்த மக்கள் பெருமிதத்துடன் மகிழ்ச்சியடைந்தனர்.

யாருமே எதிர்ப்பார்க்காத முக்கியமானது. ஆம், கொரோனா காலத்தில் மக்கள் படும் கஷ்டங்களை உணர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் கொரோனா தொற்றாளர் களின் மருத்துவக் கட்டணத்தை அரசு செலுத்தும் என்று ஐந்தாவதாக கையெழுத் திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கொரோனா நோயாளிகள் மருத்துவக் கட்டணத்தை எப்படி கட்டுவோம் என்ற கவலையில் இருந்து மீண்டனர்.

அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா நிவாரண நிதியை வாரி வழங்கிடுவீர் என்று “உலகத் தமிழர்களே, உயிர்காக்க நிதி வழங்குவீர்!” என்று காணொலி மூலம் வேண்டுகோள் விடுத்தார். தி.மு.க.மூலம் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திட, அந்த ஒரு கோடி ரூபாய் நிதி முதல்வர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

14.05.2021:- கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய ஊரடங்கை அறி வித்தார். கொரோனா நிதி வழங்கிட தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைக்கு பதிலாக புத்தகங்களை என்று புத்தகங்கள் விற்பனையாகவும், எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த புதிய அறிவிப்பினை வெளியிட்டார்.

15.05.2021;- ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒருகிணைந்த கட்டளை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அன்று நள்ளிரவே டி.எம்.சி வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட கட்டளை மையத்திற்கு நேரில் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார், அப்போது நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டளை மையத்தை தொடர்பு கொண்டபோது, ‘நான் ஸ்டாலின் பேசுகிறேன், உங்கள் குறைஎன்ன?’ என்று கேட்டு அவரது குறையை போக்கினார். அப்பெண் மீண்டும், கட்டளை மையத்தைத் தொடர்புகொண்டு தன்னுடன் பேசியவர்யார் என்று கேட்டு, முதல்வர்தான் பேசினார் என்றதும், அந்தப் பெண் நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்னதை நாடே அறிந்த ஒன்றாகும்.

16.05.2021:- தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா விழிப்புணர்வு குறித்து அனைத்து காட்சி ஊடகத்தினருடனான ஆலோசனை மேற்கொண்டு செய்திகளை உண்மை வடிவில் வெளியிட வலியுறுத்தினார். ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்கிடுமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கைவைத் திருந்த நிலையில் 7000 ரெம்டிசிவர் வழங்கி வந்த நிலையில், அதனை 20 ஆயிரம் என்ற அளவிற்கு உயர்த்தி வழங்கியதற்கு ஒன்றிய அரசிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

காவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. வுக்கு சிலை !

கரிசல் காட்டு எழுத்தாளர் மறைந்த கி.ராஜநாரயணன் (கி.ரா.) அவர்கள் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவைப் போற்றும் வகையில் புகைப்படங்கள், படைப்புகள் வைத்திடவும், அவருக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கவும் உத்தரவிட்டதுடன். அவரது மறைவையொட்டி அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார்.

18.05.2021:- ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை மூலம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 549 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கோரிய உதவிகள், நல உதவிகளை வழங்கினார். முதல்வருக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்தனர். புதிய ரேஷன் கார்டுகள் பெற்றுள்ளவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி ரூபாய் இரண்டாயிரம் வழங்கிட உத்தரவிட்டார். ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர்க்காக்கும் மருந்துகள் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் காணொலியில் நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருத்துகளை எடுத்துரைத்தார்.

19.05.2021:- கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி அரசுடன் கைகோர்த்து பணியாற்றிட வேண்டுகோள்விடுத்தார்.

20.05.2021:- 30 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்திட வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.

திருப்பூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளோருக்கு தடுப்பூசி போடும் முகாமினை தொடங்கி வைத்தார். கொரோனா பரவலைப்தடுக்கும் பொருட்டு உயிரிழந்த அரசு துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம் 13 நபர்களின் குடும்பங்களுக்கும் 71 நபர்களில் முன்மொழிவுகள் பெற்றப்பட்ட 36 நபர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கினார். மீதமுள்ள 35 நபர்களின் முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் பரிசீலித்து வழங்கவும் உத்தரவிட்டார்.

கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அமைக் கப்பட்டுள்ள கூடுதல் படுக்கை வசதிகளையும், குமரகுரு பொறியியல் கல்லூரியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தார். சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட இந்தியாவிலேயே முதன்மையான கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

21.05.2021:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத் தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மத்திய குற்ற புலனாய்வுத் துறை வசம் ஒப்படைக்கப் பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக் களுக்கு சேதம் ஏற்படுத் தப்பட்ட வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப் படும் என்றும், மேலும் இந்தப் போராட்டம் தொடர் பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சில வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது மட்டுமின்றி போராட்டத்தின் போது காவல் துறையால் கைது செய்யப்பட்ட காய மடைந்தவர்களுக்கு 94 நபர்களுக்கு ரூ.1 இலட்சம் நிதி உதவியும் வழங்கிட உத்தரவிட்டார்.

மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். திருச்சி மாவட்டத்தில் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்ட 400 படுக்கை வசதியுடன் கொண்ட கொரோனா சிகிச்சை மையம், கலையரங்கம் திருமணமண்டபத்தில் அமைக்கப்பட்ட 100 படுக்கை வசதியுடன் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவ முகாம், மற்றும் திருவெறும்பூர் திருச்சி தேசிய தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 320 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயம் அடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல் குறித்து முழு ஊரடங்கை அமல்படுத்துவது மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

22.05.2021:- தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனா பரவலைத்தடுக்கும் வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மாவட்ட வாரியாக அமைச் சர்களை நியமித்து உத்தரவிட்டார்.

23.05.2021:- கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் மற்றும் வங்கதேசத் தைச் சேர்ந்த 4 மீனவர்களையும் விரைவில் தேடிக்கண்டுபிடிக்க ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.

23.05.2021:- மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் “நான் எனது காலத்தில் எடுத்த முயற்சிகளால் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது, கொரோனாவே இல்லை என்ற சூழலை நான் உருவாக்கினேன் என்று தலை நிமிர்ந்து நீங்கள் சொல்லக் கூடிய அளவிற்கு பணியாற்றிட வேண்டும்” என்று ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினார். சென்னை சைiதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 130 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

24.05.2021:- கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 24.5.2021 முதல் தளர்வுகளற்ற ஊரடங்கினை அமல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். தளர்வுகளற்ற ஊரடங்கில், மக்களுக்குத் தேவையான காற்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைத்திட வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய தொடர்புடைய துறைகளுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தார்.

25.5.2021:- செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் நிறுவனத்தின்யினை ஆய்வு செய்தார். இந்த நிறுவனத்தில், தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், தடுப்பூசி தயாரிக்கும் இத்தொழிற்சாலையை தமிழகத்திற்கு குத்தகைக்குவிட வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.

26.5.2021:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது நியமிக்கப்பட்ட திருமதி அருணாஜெகதீசன் சமர்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் போராட்டம் சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தே.மு.தி.க. மகளிர் அணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த், துணைத் தலைவர் எல்.கே.சதீஷ், அனிதா இராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிட் அழகுமுத்து பாண்டியன், மார்க்சிஸ்ட் ராஜா, அ.ம.மு.க. ஹென்றி தாமஸ், இந்திய ஜனநாயகமாதர் சங்க மாவட்டச் செயலாளர் திருமதி பூமயில், ஆம் ஆத்மி கட்சி ஆர்தர் மச்சோடா, தி.மு.க ஒன்றியச் செயலாளர் பாலசிங் ஆகியோர் மீதான வழக்குகளை ரத்து செய்ததுடன் இதுசம்பந்தமாக 38 வழக்குகளைத் திரும்பப் பெறமுதல்வர் அவர்கள் தாயுள்ளத்துடன் உத்தரவிட்டார்.

மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தது முதல் டெல்லியில் 6 மாதகாலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்ததில் 6 மாதம் நிறைவுற்ற நிலையில் உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை அறிக்கைமூலம் கேட்டுக் கொண்டார்.

இணைய வழி கல்வி வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள்நடக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள், கொரோனா தொற்று காரணமாக இறக்க நேரிட்டால் அவர்களது வாரிசுதார்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக இதுவரை இருந்து வந்தது. அதனை 10லட்சமாக உயர்த்தியும், கொரோனா நிவாரணத் தொகையினை 3000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், சிக்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் துபாயிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் ரெகுலேட்டர்கள், ஆக்சிஜன் நிரப்பப்பட்ட உருளைகள் இறக்குமதி செய்ய ஆணையிட்டார்.

கோவை புறநகர், திருச்சி சாலையில் அமைந்துள்ள கதரி மில்ஸ் வளாகத்தில் கோவைமாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சாரதாடெர்ரி மற்றும் கதரி மில்ஸ் நிறுவனத்தால் 306படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கொரோன சிறப்பு சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிரம் மாவட்டம் ஒரகடத்திலுள்ள வாகன நிறுவனத்தில் கொரோனா தடுப்பு முகாமை தொடங்கி வைத்தார். திருப்பெரும்புதூரில் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் திரவ ஆக்சிஜன் நிரப்பும் பணிகளையும் பார்வையிட்டார்.

27.05.2021:- கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி இம்மூன்றுமாவட்டங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டார். சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையின் உதவியுடன் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 100படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

28.05.2021:- சென்னை, தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் மூலம்பெறப்பட்ட மனுக்கள் எவ்வாறு கணினியில் பதிவு செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. அவற்றின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். கொரோனா பரவலை கட்டுப்படுத்து ம்பொருட்டு தளர்வுகளற்ற ஊரடங்கினை மேலும் ஒரு வாரம் அதாவது 07.06.2021 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு இறக்குமதி செய்யப்பட்ட 750 ஆக்சிஜன் உருளைகளை சேலம், கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களுக்குபகிர்ந்து வாகனங்கள் மூலம் தலைமைச் செயலகத்தில் இருந்து அனுப்பி வைத்தார். கொரோனா நிவாரண நிதியாகப் பெறப்பட்ட நிதியில் ஆக்சிஜனை இரயில் போக்குவரத்து மூலமாக வரவைத்திட, கண்டெய்னர்களை வாங்குவதற்கும், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளவும், ஆர்.டி.பி.சி. ஆர். கிட்களை வாங்குவதற்கும், ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகள் வாங்கவும் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.

29.05.2021:- ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயாக அரவணைப்பு!

கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் ரூ.5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும் நடவடிக்கை எடுத்தார். அதோடு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் தங்கிட முன்னுரிமை அளித்திடவும் உத்தரவிட்டார். இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் வகையிலும், அதோடு தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடியாக நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் வழங்கப்படும் என்றும் தாயுள்ளத்தோடு அரவணைத்துள்ளார்.

30.05.2021:- திருப்பூர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துமிக்க உணவுகளின் தரத்தை ஆய்வு செய்தார். கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். மேலும் ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் கொரோனா நோய் பரவல் தடுப்பு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

பி.பி.இ கிட் அணிந்து கொரோனா வார்டில் நேரடியாக சென்ற ஒரே முதல்வர்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ.மருத்துவமனை வளாகத்தில் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளவும், கொரோனா களத்தில் இறங்கி பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை ஊக்கப்படுத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னைமுழு கவச உடை அணிந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் நோயாளிகள் பிரிவுக்கு நேரில் சென்று நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் பி.பி.இ. கிட் கவச உடை அணிந்து கொரோனா வார்டிற்குள் நேரில் சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களை சந்தித்து நலம் விசாரித்தது இந்தியாவிலேயே இதுவே முதல் முறையாகும். ஒரே முதலமைச்சரும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான். இச்செயலுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், பல்வேறு வித்தகர்கள் முதல்வர் அவர்களைபாராட்டி நன்றி தெரிவித்தனர்.

31.05.2021 :- கரூர் மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இணைந்து டி.என்.பி.பல். டவன்சிப்பில் உள்ள சமுதாயக் கூடத்தில் 200 ஆக்சிஜன் வசதி கொண்ட 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நிதிநிலை குறித்து நிதி அமைச்சர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

01.06.2021:- கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முதல்வர் காணொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற படுக்கைகள் தட்டுப்பாடு என்ற நிலைமை இப்போது இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற சூழல் இப்போது இல்லவே இல்லை. மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன என்பதுதான் உண்மை என்று குறிப்பிட்டார்.

மேலும் தமது உரையில் நிகழ்காலச் சோகங்களிலிருந்து மீண்டு எதிர்காலப் புத்துணர்வை அனைவரும் பெற்றிட கொரோனா தொற்றை வெல்வோம், வளம் மிகுந்த தமிழகத்தை அமைப்போம் என்று உறுதிபட கூறினார். இது முதல்வர் மேல் நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்கு ஒரு வரப்பிரசாத உரையாகவே அமைந்திருந்தது.

02.06.2021:- திருநெல்வேலி மாவட்டத்தில் புனித அந்தோணியார் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட 140 படுக்கைகளுடன் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தையும், மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 668 படுக்கைகள் மற்றும் 1587 படுக்கைகள், 186 அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் என மொத்தம் 2441 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார். மேலும் தனியார் மூலம் 300 ஆக்சிஜன் படுக்கைகள், 231படுக்கைகள், 79 அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் கொண்ட சிறப்பு முகாமையும் தொடங்கி வைத்தார்.

ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலக்கட்டங்களில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையாக ரூ.497.32 கோடியை 2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த போதிய தடுப்பூசி இல்லாததால், உடனடியாக தமிழகத்திற்கு போதிய தடுப்பூசியை வழங்கிடவும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்தும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதினார்.

3.6.2021:- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு திருக்கோவில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகையாக ரூபாய் 4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15வகை மளிகைப் பொருள்கள் வழங்கும்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேட்டூர் அணை திறப்பு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12 ஆம் தேதி அன்று தண்ணீர் திறக்கப்படும் என்று உத்தர விட்டார்.

காவலர்களுக்கு ரூ.5000 உதவித் தொகை!

கொரோனா தொற்றுக் காலத்தில் பணியாற்றி வரும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு ரூபாய் 5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

திருநங்கைகளுக்கு நிவாரண உதவித் தொகை ரூ.2000 வழங்கும் திட்டம், ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூபாய் 2000 வழங்கும் திட்டம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய பை ஆகிய திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் தொடங்கி வைத்தார்.

பத்திரிகையாளர்களுக்கு ரூ.5000 உதவித் தொகை!

பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகையாக ரூபாய் ஐந்தாயிரம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த தினத்தில் கொரானா களப்பணியில் இறந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ரூபாய் 25 இலட்சம் நிதியும், கொரோனா தொற்றால் பலியான பத்திரிகை யாளர்கள் குடும் பங்களுக்கு பத்து லட்சம் நிதியும் வழங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் அறிவித்த முத்தான திட்டங்கள் நம் நெஞ்சமெல்லாம் வீற்றிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினை வைப் போற்றும் வகையில் சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்!

சென்னையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பினர் பயன்பெற்று வருகின்றனர். அதே போன்று தமிழகத்தில் மற்றப்பகுதியினரும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன்கூடிய வகையில், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது-கனவு இல்லம்!

இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கு வதைப் போன்று தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வலு சேர்க்கும் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்று அறிவித்ததுடன், தமிழ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ் பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர் களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று சிறப்பான பார் போற்றும் அறிவிப்பை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் நெல் சேமிப்பு கிடங்குகள்-உலர்களங்கள்!

திருவாரூர் மாவட்டத்தில் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்து விவசாயிகளின் இன்னலைப் போக்கியுள்ளார்.

திருநங்கைகள் - மாற்றுத் திறனாளி களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் என்ற திட்டத்திற்கு மகளிர் மத்தியில் பெருத்த வரவேற்பு இருந்த நிலையில் திருநங்கைகளும் தங்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். அவர்களின் கோரிக்கையை முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில், திருநங்கைகளும், மாற்றுத்திறனாளிகளும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று முதல்வர் மு.கஸ்டாலின் அவர்கள் கடந்த 3 ஆம் தேதி அன்று அறிவித்தார்.

04.06.2021:- செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு மையத்தை ஒன்றிய அரசு தமிழக அரசிடம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பாரத் பயோடெக் நிறுவன மேலாண்மை இயக்குநர் சுசீந்திர இலா உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். வட அமெரிக்கா தமிழ்ச் சங்கப் பேரவையினர் கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய 3 கோடி ரூபாயை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுக் கொண்டு காணொலி மூலம் நன்றி தெரிவித்து ஆற்றிய உரையில், காலத்தினாற் செய்த உதவியை தமிழ்நாடு மறக்காது என்றும், வாழ்க தமிழ்நாடு, மீள்க தமிழ்நாடு என்று குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனாவை விரைவில் முற்றிலும் ஒழிப்போம் என்று சூளுரை மேற்கொண்டார்.

வைகை அணை திறப்பு

பல ஆண்டு காலமாக திறக்கப்படாமல் இருந்த வைகை அணையில் நீர் மட்டம் தி.மு.க. ஆட்சியில் அதிகரித்ததைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தர விட்டபடி பாசனத்திற்காக வைகை அணைதிறக்கப்பட்டது.

05.06.2021:- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்காக 27.1.2019 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டினார். அதற்காக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்றுவரை கட்டுமானப்பணிகள் நடைபெறவேயில்லை. விரைவில் இப்பணிகளை விரைந்துதொடங்கிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வருகிற 14.06.2021 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா 2வது அலையை கருத்தில் கொண்டு ப்ளஸ் டூ மாணவர்களின் நலன் கருதி தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு தாக்கம் குறித்து அறிக்கை சமர்பிக்க நீதியரசர் ராஜன் தலைமையில் உயர் நிலைக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளை யும் ரத்து செய்திட வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு கடிதத்தின் மூலம் வலியுறுத்தினார்.

06.06.2021:- மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு புதியதாக 8 உறுப்பினர்களை நியமித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சென்னை தாம்பரம் அடுத்துள்ள வண்ட லூர் உயிரியல் பூங்காவிற்கு முதல்வர் அவர்கள் நேரில் சென்று அங்கு கொரோனாவால் பாதிக் கப்பட்ட சிங்கங்களை பார்வையிட்டு அதற்குரிய சிகிச்சை குறித்து கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் வன உயிரினங்களை பார்வையிட்டு மேல் நடவடிக்கை மேற்கொண்டார்.

இப்படி 7.5.2021 அன்று தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டின் மீது தமிழ் மக்கள் மீது அவர்களின் நலனே தனது நலன் என்று உறுதி ஏற்று திறம்பட செயல்பட்டு வருகிறார். அவரது செயலுக்கு இங்கே சிறு துளியைத் தான் தொகுத்து வழங்கியிருக்கிறோம். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த ஒரு மாத காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களுக்குத் தேவையான நல உதவிகளை நேரில் வழங்கியிருக்கிறார். குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது தொகுதியான கொளத்தூருக்கு நேரில் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு வேண்டிய நல உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.

முதல்வராகப் பொறுபேற்றது முதல் இந்த முப்பது நாளில் (ஒரு மாதத்தில்) ஒவ்வொரு மணித்துளியும் மக்கள் நலனுக்காவே தன்னை அர்ப்பணித்து பணியாற்றி வருகிறார். பதவி ஏற்றபோது “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்....” என்று அவரது குரல் தமிழகம் முழுவதும் ஒலித்தது. இன்று அந்த குரல் தமிழக மக்களின் நலனுக்காகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனவே தமிழகம், தமிழக மக்களின் வாழ்க்கை ஒளிவெள்ளத்தில் தொடர்ந்து பிரகாசிக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதற்கு இந்த தொகுப்பே அச்சாரமாக அமைந்திருக்கிறது.

கலைஞர் அவர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களை குறிப்பிடும் போது “உழைப்பு உழைப்பு உழைப்பு” என்றார். அன்று அவர்தான் ஒரு தீர்க்கத்தரிசியாகக் கூறினார். அதனை மெய்பித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது உழைப்பின் மூலம்!

 நன்றி: கலைஞர் செய்திகள்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?