முற்பகல் புகழின்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்து ரண இருக்கிறார்.
இளையராஜா பற்றி தமிழகம் அறியும்.
அண்மையில் கூட அம்பேத்கரும் தொடர்பே இல்லாமல் மோடியை ஒப்பிட்டு புகழ்ந்தார்.
அதனால் பலத்த கண்டனங்களுக்குள்ளானார்.எதையோ எதிர்பார்த்ததுதான் இவ்வாறு பேசுகிறார் என்ற ஐயப்பாட்டையும் கிளப்பினார்கள்.
அப்போதுதான் வரி செலுத்தாமல் இருந்ததற்காக இரு முறை அறிவிக்கை அவருக்கு வந்த விபரம் தெரிந்தது.
இப்போது அறிவிக்கையும் நின்று போனது.
பதவியும் தேடி வந்துள்ளது.
புகழ்ச்சிக்கான விடையும், அவருக்கு பலனும். கிடைத்தது.
விஜயேந்திர பிரசாத்
பிரபல தெலுங்கு மற்றும் இந்தி படங்களை இயக்கி இருக்கிறார். 80 வயதாகும் இவர் மதராஸ் மாகாணம் (இன்றைய ஆந்திரா)வில் உள்ள கொவ்வூரில் பிறந்தார்.
தெலுங்கு, தமிழ், இந்தி திரையுலகில் பணியாற்றிய இவர், இந்தியாவின் தலை சிறந்த திரைக்கதை ஆசிரியராக திகழ்ந்து வருகிறார்.
அவர் திரைக்கதை எழுதிய பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளன.
அர்தங்கி என்ற திரைப்படத்தின் மூலமாக கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குநராக அடியெடுத்து வைத்த விஜயேந்திர பிரசாத், 2006 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ கிருஷ்ணா, 2011 ஆம் ஆண்டு வெளியான ராஜண்ணா, 2017 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீவல்லி ஆகிய 4 திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார்.
இயக்குநர் ஆவதற்கு முன்பாகவே கடந்த 1988 ஆம் ஆண்டிலேயே ஜானகி ராமுடு என்ற திரைப்படத்தின் கதையை எழுதி திரையுலகில் அறிமுகம் ஆனார் விஜயேந்திர பிரசாத். அதன் தொடர்ச்சியாக தெலுங்கு, தமிழ், இந்தி படங்கள் பலவற்றுக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை, திரைப்படத்தின் கதாசிரியரும் இவரே. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவிக்கும் இவரே திரைக்கதை எழுதினார். விஜய் நடித்த மெர்சலில் துணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆர்ஆர்ஆர் படம் பிரிட்டீசாரை எதிர்க்கும் நாயகனை ராமராக
சித்தரித்து, சுதந்திரப் போராளிகள் படங்களில் காந்தியையும்
நேருவையும் காட்டாமல் படேலை காட்டியது. அவர்களை பற்றிய
ஆர்எஸ்எஸ் நிலையை பேட்டியிலும் கூறியிருக்கிறார் அந்தப்படம்கதாசிரியர் விஜயேந்திர பிரசாத். அவருக்கே எம் பி பதவி!
பிடி உஷா
நாடாளுமன்றத்தில் விளையாட்டுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்றும், இது விளையாட்டுக்கு கிடைத்த கௌரவமாகவே பார்க்கிறேன் என்று தடகள வீராங்கனை பிடி உஷா தெரிவித்துள்ளார்.
அதில் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை ஓட்டத்தின் அரையிறுதி சுற்றில் முதலிடம் பிடித்த பிடி உஷா, இறுதிப்போட்டியில் ஒரு நொடி பின்தங்கி பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.
ஆனாலும், ஒலிம்பிக்கில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். அண்மையில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தடகளத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியர். இந்த சாதனையை, 1984ம் ஆண்டு பிடி உஷா படைக்கும் வாய்ப்பு சிறிய வித்தியாசத்தில் பறிபோனது.
ஆனாலும் மனம் தளராமல் 1984ம் ஆண்டு 1986 சியோல் ஆசிய போட்டியில் 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்
வீரேந்திர ஹெகடே
1948 பிறந்த இவர் தர்மசாலா கோயிலின் பரம்பரை நிர்வாகி( தர்மாதிகாரி) ஆவார்.
இவரது தொண்டுப்பணிகளால் இவர் அறியப்படுகிறார்.
இவர் தனது 19 வது வயதில், 1968 அக்டோபர் 24 அன்று, தர்மாதிகாரி வரிசையில் இருபத்தியோராவது உறுப்பினராக இருந்தார்.
தர்மசாலா கோவிலையும் அதன் சொத்துக்களையும் இவர் நிர்வகிக்கிறார்.
இவர் ஏற்கனவே பத்மசிரி பட்டம் பெற்றுள்ளார்.