5 ஜி ஊழல்
மத்திய டெல்லியில் உள்ள ஐடிஓ, பகதூர்ஷா ஜாபர் மார்கில் அமைந்துள்ள ஹெரால்டு ஹவுஸில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். அசோசியேட் ஜர்னல் நடத்தும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை, அதன் சொத்துக்கள் இருக்குமிடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி.யிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துவிட்டனர்.
இந்த விசாரணைக்குப்பின் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில் அவர்கள் ஏதேனும் தகவல் வெளியிட்டதன் அடிப்படையில் ரெய்டு நடத்தப்படுகிறதா என்பதும் தெரியவில்லை.
----------------------------------------------+++++---------------------
5 ஜி ஊழல்
ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக எம்.பி ஆ.ராசா குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,
``2 ஜி அலைக்கற்றையில் குரல் மட்டும்தான் சென்றடையும்.
3 ஜி அலைக்கற்றை மூலம் வீடியோக்களை பார்க்க முடிந்தது.
4 ஜி அலைக்கற்றையில் அதன் திறன் இன்னும் அதிகரித்தது.
5 ஜி அலைக்கற்றை அதைவிட இன்னும் திறன் வாய்ந்தது. 5 ஜி அலைக்கற்றையில் நீங்கள் தேடும் விஷயங்கள் ஒரு நொடியில் வந்துவிடும்.
அந்த திறன் அடிப்படையில் பார்த்தால் 5 ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.5 லட்சம் கோடி அல்லது ரூ.6 லட்சம் கோடிக்குச் சென்றிருக்க வேண்டும்.
4-5 நிறுவனங்களுடன் சேர்ந்து மத்திய அரசு கூட்டு சதி செய்துவிட்டதா?
இது குறித்து விசாரிக்க வேண்டும். எங்கு தவறு நடந்திருக்கிறது?
2 ஜி புகார் ஒரு பெரிய மோசடி.
5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்படும் என்று மத்திய அரசு கூறிய 5 ஜி அலைக்கற்றை 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது.
மீதிப் பணம் எங்கு சென்றது. ?
ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக வினோத் ராய் என்கிற தனிமனிதனைப் பயன்படுத்தி, சி.ஏ.ஜி என்கிற அரசியல் சட்ட அமைப்பைப் பயன்படுத்தி, அதற்கு பின்னால் இருந்தவர்கள் மிகப்பெரிய சதியை தீட்டினார்கள் என்பதை என் புத்தகத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.
இதுவரை இது குறித்து வினோத் ராயிடமிருந்து இது வரைஎந்த பதிலும் இல்லை" என்றார்.
----------------------------------------------------------------------------
ஆஷ் துரை கொலைக்கான
உண்மை காரணம்