ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

மாறுவேடத்தில் ஸ்டெர்லைட்

 பிரபல மேடை பேச்சாளரும், நடிகரும், இயக்குநருமான கரு.பழனியப்பன், கலைஞரை குறித்து பெருமைமிகு வகையில் ஒரு மேடையில் பேசியதாவது,

"இந்தியாவில் எல்லா மாநிலத்திலும்தான் முதல்வர்கள் இருக்கிறார்கள். ஆனால் நாம் கலைஞரை மட்டும் ஏன் கொண்டாடுகிறோம் என்றால், அவர் முதல்வர் மட்டும் அல்லாமல் சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார். 

50 ஆண்டு காலமாக ஒரு கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

இவர் போல் வேறு தலைவர்கள் யாரேனும் இல்லையா என்று கேட்டால், இருக்கும் தலைவர்களில் கவிதை எழுதுபவர்கள் யாரேனும் இருப்பார்களா? 

ஒருவரோ இருவரோ இருப்பார்கள், அதிலும் கலைஞர் இருப்பார். சரி அதுமட்டுமா என்றால் திரைத்துறையில் கேட்டால், அதிலும் கலைஞர் இருப்பார். இப்படி எல்லாவற்றிலும் இருக்கும் ஒருவர்தான் கலைஞர். 

அதனால்தான் இன்றும் தமிழ்நாடு கட்சிகள் பாகுபாடுகளை எல்லாம் தாண்டி ஒருவரை கொண்டாடிக்கொண்டே இருக்கிறது.

கலைஞரை பற்றி சொல்ல வேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலாம். அவர் தனது 20-வது வயதில், 1944-ஆம் ஆண்டு 'பழனியப்பன்' என்ற ஒரு நாடகத்தை எழுதினார். 

அதை ஒரு நாடக நடிகர் சங்கம் ரூ.100-க்கு வாங்கியது. அப்போது 100 ரூபாய் என்பது பெரிய தொகை. அந்த 100 ரூபாயை வைத்துக்கொண்டு தான் திருவாரூரில் திராவிடர் கழக கூட்டத்தை நடத்தினார்.

இதன்பிறகு பல்வேறு கதைகளை எழுதி வந்த அவர், 1951-ம் ஆண்டு சொந்தமாக ஒரு கார் வைத்திருந்தார். அதன்பின் 4 ஆண்டுகளுக்கு பிறகு 1955-ல் கோபாலபுரத்தில் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கினார். அப்போது அவருக்கு 33 வயது.

இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், 1957-ல் எம்.எல்.ஏ ஆவதற்கு முன்னே சொந்தமாக காரும் வீடும் வைத்து இருந்த கழக நிர்வாகிகளில் கலைஞரும் ஒருவர். 

இவையெல்லாம் அவர் எழுதியே சம்பாதித்து வாங்கியது." என்று பெருமிதத்துடன் கூறினார்.

மாறுவேடத்தில் ஸ்டெர்லைட்

-----------------------------------------------------------------------------

இது பணக்காரர்களுக்கான அரசு.

மக்களவையில்  பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் தூபே, "இலங்கை,பூடான், வங்கதேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் விலைவாசி உயர்ந்து வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது.

அப்படியிருக்கையில் இந்தியாவில் ஏழைகளுக்கு 5 கிலோ ரேஷன் வழங்கபடுகிறது. ஏழைகள் 2 வேளை இலவச உணவு உண்கிறார்கள் என்றால் அதற்கு பிரதமர் மோடிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்" என்று கூறினார். இவரது இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த கருத்துக்கு பாஜக எம்.பி, வருண் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை இந்தியில் பதிவிட்டுள்ள அவர், "ஏழைகளுக்கு 5 கிலோ ரேஷன் வழங்கியதற்கு 'நன்றி' கூறவேண்டும் என்று எதிர்பார்க்கும் சபை, கடந்த ஐந்து ஆண்டுகளில் ₹ 10 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது. 

அரசு நிதி ஒதுக்குவதில் யாருக்கு முதல் உரிமை கொடுக்கிறது? என்று கேட்டுள்ளார்.

அதோடு இந்த பதிவில் ஒன்றிய அரசு கடன் தள்ளுபடி செய்த தொகையையும் அவர் இணைத்துள்ளார். 

பாஜக அரசை அந்த கட்சியின் எம்.பியே விமர்சித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.