பொருளாதாரப் பு(ளி)லி
ஆகஸ்ட் 2021 இல் எரிபொருளுக்கான வரியை தமிழக அரசு குறைத்தது என்பது நிர்மலா சீதாராமனுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பியது.
மேலும், “எரிபொருள் விலையை உயர்த்துபவர்கள் தான், அதைக் குறைக்க வேண்டும்,” என்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் அறிக்கையை மேற்கோள் காட்டிய முரசொலி தலையங்கம், “உங்களை நோக்கி கேள்விகள் இருந்தால், உங்கள் பதில் மற்றவர்கள் மீது பழியைப் போடுவதாக இல்லாமல், அவற்றுக்கு பதிலாக இருக்கட்டும். பாராளுமன்றம் விவாதத்திற்குரிய இடம்.
கேள்விகள் நிச்சயம் இருக்கும். அவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். அங்கு இருப்பவர்கள் ஒரே மாதிரி பேசுவதற்கு கோரஸ் குழுவில் உறுப்பினர்களாக இல்லை.
ஜி.எஸ்.டி வரி உயர்வில் மாநிலங்களுக்கு சம பொறுப்பு என்ற நிர்மலா சீதாராமனின் வாதத்தை எடுத்துக் கொண்ட தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலின் “நூற்றுக்கு நூறு சதவீதமும்”, “மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல்” மத்திய அரசால் தீர்மானிக்கப்படுகிறது என்றார்.
ஜி.எஸ்.டி கூட்டாட்சியின் மாதிரியாகப் பார்க்கப்பட்டாலும், ஜி.எஸ்.டி கவுன்சிலை ஒரு “ரப்பர் ஸ்டாம்ப்” ஆக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று பி.டி.ஆர் கூறினார்.
முக்கிய முடிவுகள் அனைத்தும் மத்திய அரசால் எடுக்கப்படுகின்றன” என்று கூறிய பி.டி.ஆர், “(ஜி.எஸ்.டி) கவுன்சிலில், தீர்மானம் நிறைவேற்ற 75% வாக்குகள் தேவை என்று அமைப்பு கூறுகிறது.
ஆனால் மத்திய அரசுக்கு 33% வாக்குகள் உள்ளன. அதாவது யாரேனும் (மாநிலங்கள்) கொண்டு வரும் எந்தத் தீர்மானமும் மத்திய அரசால் எதிர்க்கப்படுகிறது அல்லது மாநிலத்தின் அத்தகைய தீர்மானங்கள் வந்தவுடன் இறந்துவிடும்,” என்று கூறினார்.
மத்திய அரசு வரியை குறைத்தபோது தமிழகம் வரியைக் குறைக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதற்கு, நாடாளுமன்றத்தில் அவர் கூறியது முற்றிலும் பொய்யானது என்றும் தவறானது என்றும் கூறிய பி.டி.ஆர், “5 மாநிலங்களில் தேர்தலை எதிர்நோக்கி எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கனவு கண்டதற்கு முன்பாக”ஆகஸ்ட் 2021ல், தமிழகம் பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததை சுட்டிக்காட்டினார்.
”எரிபொருள் விலையைக் குறைத்த முதல் அரசு தமிழக அரசு, அது மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு. யாரேனும் நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று நாங்கள் குறைக்கவில்லை என்று கூறுவது முழுமையான பொய்” என்று பி.டி.ஆர் கூறினார்.
பிராண்டட் உணவுப் பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க தமிழகம் ஒப்புக்கொண்டதாக நிர்மலா சீதாராமன் கூறியதையும் ‘முரசொலி’ தலையங்கம் விமர்சித்துள்ளது.
“இந்த கட்டண உயர்வு மூன்று கட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். முதலாவதாக, தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய வரிவிதிப்புக் குழு, வரி விகிதங்களில் தொடர் மாற்றங்களைப் பரிந்துரைத்தது.
அப்போது, விலை உயர்வை நாங்கள் எதிர்க்கிறோம் என்று தமிழக அதிகாரிகள் மூலம் எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் சமர்பிக்கப்பட்டது” என்று அமைச்சர் பி.டி.ஆர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, “அந்தப் பரிந்துரைகள் அனைத்தும்” மத்திய அரசின் ஜி.எஸ்.டி துணைக் குழுவால் விகிதப் பகுத்தாய்வுக்காக எடுக்கப்பட்டது. பல விவாதங்கள் நடத்தப்பட்டன. நாங்கள் அதன் பாகமாக இல்லாவிட்டாலும், நாங்கள் இன்னும் சமர்ப்பிப்புகளை வழங்கினோம்,
மீண்டும் அதை எதிர்த்தோம். அவர்களின் விவாதங்களின் முடிவில், அவர்கள் (மத்திய அரசு) விகிதத்தை பகுத்தறிவதற்கான 56 பரிந்துரைகளுடன் ஒரு சுருக்க அறிக்கையை வெளியிட்டனர், சில அதிகரிப்புகளுடன் (மற்றும்) சில குறைப்புகளுடன்,” என்று பி.டி.ஆர் கூறினார்.
“அடுத்த முழு ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இது 20 நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஒன்று முழு 56 பொருட்களின் விலை பரிந்துரை அறிக்கை.
ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு 56 பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, முழுவதுமாக ஒப்புக்கொள்ளலாம் அல்லது முழுமையாக உடன்படவில்லை என்று கூறலாம் என தெரிவிக்கப்பட்டது. நேரம் இல்லாததால், அது ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த உண்மையை அவர் பாராளுமன்றத்தில் சொல்லவில்லை. இது மூன்று-படி செயல்முறை. மேலும் ஒரு பொருளின் ஒரே முடிவுக்கு வாக்களித்தது போல் கூறியுள்ளார்,” என்று பி.டி.ஆர் கூறினார்.
---------------------------------------------------------------------------------கபில் சிபில்
மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், இந்த ஆண்டோடு, உச்ச நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட 50 ஆண்டுக்கால பயிற்சியை நிறைவு செய்கிறார்.
காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்த கபில் சிபல், அண்மையில் நடந்த நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலின்போது திடீரென கட்சியிலிருந்து விலகி, சமாஜ்வாடியின் ஆதரவுடன் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினரானார்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பல முக்கிய வழக்குகளில் வழக்கறிஞராக இருந்த கபில் சிபல், உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் சமீபத்திய தீர்ப்புகள்மீதான தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
டெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று, மக்கள் தீர்ப்பாயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய கபில் சிபல், ``இந்த ஆண்டோடு உச்ச நீதிமன்றத்தில் 50 வருட பயிற்சியை நான் நிறைவு செய்கிறேன்.
ஆனால், இந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நீதிமன்றத்தின்மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று உணர்கிறேன். நீங்கள் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட முற்போக்கான தீர்ப்புகளைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால், தரைமட்டத்தில் என்ன நடக்கிறது என்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
தனியுரிமை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருப்பினும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு வருகிறார்கள். உங்கள் தனியுரிமை எங்கே... பண மோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளை நிலைநிறுத்த, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் பரந்த அதிகாரங்களை வழங்கியது.
அதேசமயம், சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது பாதுகாப்புப்படையினரால் 17 பழங்குடியினரை நீதிக்குப் புறம்பாகக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து விசாரணை கோரி 2009-ல் தாக்கல்செய்யப்பட்ட மனுவை நிராகரித்தது. நான் 50 ஆண்டுக்காலம் பணியாற்றிய நீதிமன்றம் குறித்து இப்படிப் பேச விரும்பவில்லை.
ஆனால், நான் பேசாவிட்டால் வேறு யார் பேசுவது... உண்மையைச் சொல்லப்போனால் சில சென்சிட்டிவான வழக்குகள் குறிப்பிட்ட நீதிபதிகள் முன்பே விசாரணைக்கு வருகின்றன.
பின்னர், அந்த வழக்குகளின் முடிவுகள் எப்படியாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்" எனத் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
----------------------------------------------------------------------------