சாத்தானின் வேதங்கள்

 1947 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார் சல்மான் ருஷ்டி.

 இவரது தந்தை கேம்பிரிட்ஜில் படித்த வழக்கறிஞர் ஆவார். அதுமட்டுமல்ல பிரபல வர்த்தகராகவும் இருந்துள்ளார். மும்பையில் தனியார் பள்ளியிலும், பின்னர் இங்கிலாந்தின் வார்விக் - ஷயரில் உள்ள உறைவிடப் பள்ளியிலும் படித்த இவர், கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற சல்மான் ருஷ்டி, க்ரிமஸ் என்ற நாவலை முதலில் எழுதினார். 

ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த நாவல் பிரபலமடையவில்லை.

 இவரது 2வது நாவலான  மிட்நைட்ஸ் சில்ட்ரன் உலக அளவில் பிரபலமாகியது என்றே கூறலாம். எந்த அளவுக்கு என்றால், எழுத்தாளர்களின் கனவு விருதான  புக்கர் பரிசை இவருக்கு வென்று கொடுத்தது இந்த நாவல் தான். 

அதன் பிறகு 1983 ஆம் ஆண்டு ஷேம் என்ற நாவலை எழுதினார். 

அடுத்ததாக இவர் எழுதிய சாத்தானின் வேதங்கள் (தி சாட்டனிக் வெர்சஸ்) என்ற நாவல் 1988 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, உலகின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 

ஜப்பான் மொழியில் இந்த நாவலை மொழிபெயர்ப்பு செய்த ஒருவர் 1991ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

சல்மான் ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று ஈரான் அதிபர் அயதுல்லா கொமேனி ‘உத்தரவிட்டார். சல்மான் ருஷ்டியின் தலைக்கு கோடிக்கணக்கில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. 

அந்த நிலையில் இங்கிலாந்து அரசு இவருக்கு அடைக்கலம் அளிக்க முன்வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் ருஷ்டி இன்று கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

 சற்றும் எதிர்பாராத ருஷ்டி நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். 

பிறகு அங்கிருந்த பாதுகாவலர்களால் அவர் உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சல்மான் ருஷ்டியின் உடல் கத்திகுத்தில் மோசமாக பாதிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு நீண்ட நேரம் அறுவை சிகிச்சை நடந்தது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

 சல்மான் ருஷ்டிக்கு முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர் மார்டின் ஹெஸ்கெல் கூறுகையில் “ சல்மான் ருஷ்டிக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானது, ஆனால் காப்பாற்றிவிடலாம்.

சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்பார்வை பறிபோவதற்கு வாய்ப்பு உள்ளது. கழுத்து, கை நரம்புகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் அறுவை சிகிச்சை நடந்தநிலையில் தொடர்ந்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.

நியூயார்க் நகர போலீஸ் அதிகாரி மேஜர் ஜெனி ஸ்டெயின்ஜிவ்ஸ்கி கூறுகையில் “ சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவரை அடையாளம் கண்டுபிடித்துள்ளோம். அவர் பெயர் ஹதி மதார்(வயது24) நியூஜெர்ஸியில் உள்ள பேர்வியூ பகுதியைச்சேர்ந்தவர், அவரை கைது விசாரணைநடத்தி வருகிறோம். மதார் கறுப்பு ஆடை அணிந்து, முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தார் .

மேடைக்கு ஏறிய மதார், திடீரென தனது கையில் வைத்திருந்த கத்தியால் குறைந்தபட்சம் 10 முறையாவது சல்மானை குத்தியிருக்கலாம் என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

----------------------------------------------------------------------------------


நாக்பூரில் எடுக்கப்படும் முடிவா?

2019ஆம் ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கல்வி கற்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில், 2019 ஆகஸ்ட் மாதத்தில் கல்வி தொலைக்காட்சி தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதில் அவரவர்களுக்கு உரிய பாடதிட்டங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

கல்வி தொலைக்காட்சியை பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த அதிகாரிகளே நிர்வகித்து வந்த நிலையில், கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை நியமிக்க முடிவு செய்து, 

அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் மிக்க ஊடக நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சி.இ.ஓ பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மே 28 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.


அதைத் தொடர்ந்து, இந்தப் பணிக்கு வந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்காணல் நடத்தப்பட்டு இந்தப் பொறுப்புக்கு தீவிர ஆர்.எஸ்.எஸ் கார்ரும், ரங்கராஜ் பாண்டியன் சாணக்யா யூடியூப் சேனலின் இணை நிறுவனரான மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நியமனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நியமன்ம் தொடர்பாக தமிழக பள்ளி மாணவர்களுக்கான ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை கல்வி மாத இதழ்களின் ஆசிரியரும், பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சியின் முன்னாள் சேனல் ஹெட்டுமான திருஞானம், தமிழக முதல்வருக்கு ஒரு திறந்த மடலை அனுப்பியுள்ளார். அவரது கடிதத்தில், 'மதப்பிரிவினைவாத கோட்பாட்டாளர் மணிகண்ட பூபதி என்பவர், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் CEO-வாக நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

                  மணிகண்ட பூபதி

'தன்னம்பிக்கையை விதைக்கும் ஆக்கப்பூர்வ ஊடகவியலாளர்' என்று டாக்டர் அப்துல்கலாமால் பாராட்டப்பட்ட நான் கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ பொறுப்புக்கு விண்ணப்பத்திருந்தபோதும், என்னை நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் திட்டமிட்டு புறக்கணித்ததன் காரணம் இதுதானா? 

முக்கிய தொலைக்காட்சிகளில் 10 ஆண்டு காலம் தலைமைப் பொறுப்பு அனுபவமும், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் உலகத் தரமான ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை கல்வி மாத இதழ்களுக்கு 15 ஆண்டு காலம் ஆசிரியர் பணி அனுபவமும் கொண்ட எனது விண்ணப்பத்தைப் புறக்கணித்து, நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் தவிர்த்ததன் காரணம் இதுதானா?

                     திருஞானம், 

தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரிடையே அறிவியல் பார்வையையும் தன்னம்பிக்கையையும் விதைப்பதில் மவுனமான பெரும் பங்களிப்பை நான் செய்திருப்பதை தலைமைச் செயலரும், முதல்வரின் முதன்மைச் செயலாளரும் நன்கறிவார்கள். பிரபல தொலைக்காட்சிகளில் எனது 'சந்திப்போம் சிந்திப்போம்' நிகழ்ச்சியும், 'நம்பிக்கை' நிகழ்ச்சியும் மாணவர்களின் உயர்கல்வி - வாழ்க்கைப்பணி தேர்வுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் என்பதை முன்னணி ஊடகவியலாளர்கள் அனைவரும் அறிவார்கள்.

India

 தொலைக்காட்சியின் மூலம், மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

மணிகண்ட பூபதி

அதைத் தொடர்ந்து, இந்தப் பணிக்கு வந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்காணல் நடத்தப்பட்டு இந்தப் பொறுப்புக்கு தீவிர ஆர்.எஸ்.எஸ் அபிமானியாக அறியப்படும் சாணக்யா யூடியூப் சேனலின் இணை நிறுவனரான மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருஞானம்

இந்த நியமன்ம் தொடர்பாக தமிழக பள்ளி மாணவர்களுக்கான ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை கல்வி மாத இதழ்களின் ஆசிரியரும், பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சியின் முன்னாள் சேனல் ஹெட்டுமான திருஞானம், தமிழக முதல்வருக்கு ஒரு திறந்த மடலை அனுப்பியுள்ளார். அவரது கடிதத்தில், 'மதப்பிரிவினைவாத கோட்பாட்டாளர் மணிகண்ட பூபதி என்பவர், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் CEO-வாக நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணம் இதுதானா?

'தன்னம்பிக்கையை விதைக்கும் ஆக்கப்பூர்வ ஊடகவியலாளர்' என்று டாக்டர் அப்துல்கலாமால் பாராட்டப்பட்ட நான் கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ பொறுப்புக்கு விண்ணப்பத்திருந்தபோதும், என்னை நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் திட்டமிட்டு புறக்கணித்ததன் காரணம் இதுதானா? முக்கிய தொலைக்காட்சிகளில் 10 ஆண்டு காலம் தலைமைப் பொறுப்பு அனுபவமும், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் உலகத் தரமான ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை கல்வி மாத இதழ்களுக்கு 15 ஆண்டு காலம் ஆசிரியர் பணி அனுபவமும் கொண்ட எனது விண்ணப்பத்தைப் புறக்கணித்து, நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் தவிர்த்ததன் காரணம் இதுதானா?

அறிவார்கள்

தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரிடையே அறிவியல் பார்வையையும் தன்னம்பிக்கையையும் விதைப்பதில் மவுனமான பெரும் பங்களிப்பை நான் செய்திருப்பதை தலைமைச் செயலரும், முதல்வரின் முதன்மைச் செயலாளரும் நன்கறிவார்கள். பிரபல தொலைக்காட்சிகளில் எனது 'சந்திப்போம் சிந்திப்போம்' நிகழ்ச்சியும், 'நம்பிக்கை' நிகழ்ச்சியும் மாணவர்களின் உயர்கல்வி - வாழ்க்கைப்பணி தேர்வுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் என்பதை முன்னணி ஊடகவியலாளர்கள் அனைவரும் அறிவார்கள்.

நாக்பூரில் எடுக்கப்படும் முடிவா?

சமத்துவம், சமூக நீதி தத்துவங்களில் புடம்போடப்பட்ட என்னை திட்டமிட்டு தவிர்த்து விட்டு, கோமிய கோட்பாட்டாளரை கல்வி டிவி-யின் தலைமைப் பொறுப்பில் நியமித்தது யார்? தமிழக அரசின் கல்வி சார்ந்த முடிவுகள் நாக்பூரில் இருந்து எடுக்கப்படுகின்றனவா? மீண்டும் அடிமைப்படவா பெற்றோம் சுதந்திரம்? இதற்காகவா தமிழ்நாட்டின் ஆக்கபூர்வ ஊடகவியலாளர்கள் இரவுபகலாக உழைத்தோம்? 'திராவிட மாடல் அரசு' என்ற கம்பீரமான தமிழரசு ஓராண்டு சாதனை மலரில், 'நான் முதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்த நாள் தமிழ்நாட்டின் பொன்னாள்' என்று எத்தனை நம்பிக்கையோடு எழுதினேன். அதற்குள் எத்தனை மாற்றங்கள்.. வெட்கம் தான் மிஞ்சுகிறது.

கல்வி தொலைக் காட்சியில் சி.இ.ஓ பொறுப்பு வேண்டும் என்ற சுயநலத்தில் நான் இதனை எழுதவில்லை. குறைந்தபட்ச அறிவியல் நோக்கும், சமூக அக்கறையும் கொண்ட வேறு யாரையாவது அங்கு நியமியுங்கள். இளைய தலைமுறையின் மனங்களில் நச்சு விதையைத் தூவும் கோமியக் கோட்பாட்டாளர்கள் அங்கு வேண்டவே வேண்டாம்' என அவர் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. அரசு அமைந்தபின் பல்வேறு குளறுபடிகளில் ஆண்கள் பிறப்பித்து அரசு நிர்வாகம் நடக்கிறது.

இதை ஆர்எஸ்எஸ். பின்புலம் உள்ள அதிகாரிகள் செய்கிறார்களா இல்லை அமைச்சர்களே காரணமா எனத் தெரியவில்லை.

அமைச்சர்கள் காரணமில்லை எனில் கீழே என்ன ஆணைகள்,நடவடிக்கைகள் நடக்கிறது என தெரியாத அல்லது அதை தடுக்க கையாலாகதவர்களா என்றும் தெரியவில்லை.

திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு ஆரிய அடிமை ஆட்ணிதான் நடக்கிறதா.

முக்கிய ஆணைகளக் கூட கவனிக்க முடியாத அமைச்சர்கள் பதவியில் ஏன் இருக்க வேண்டும்.

கல்வித்துறையில்தான் மிகவும் குளறுபடியான நிர்வாகம் நடக்கிறது.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?