"A 30 "
ஆயிரமாண்டில் இல்லாப் பெருமழை.!
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாள் முழுவதும் கனமழை பெய்யும் :- தமிழ்நாடு வெதர்மேன்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் கூட இப்படி மழை இருந்திருக்காது. காயல்பட்டிணத்தில் 932 மி.மீ. மழை.
தூத்துக்குடியில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக கனிமொழி தகவல்.
விருதுநகர் ,சாத்தூர் பகுதியில் பெய்யும் மழையால் 3 அணைகளில் இருந்து நீர் திறப்பு.
கனமழை காரணமக தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இன்று இயக்கப்படாது: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.
கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு.
அமராவதி அணை: வெள்ள அபாய எச்சரிக்கை!
கேரளத்தில் புதிய வகை கரோனா:கவலைப்படத் தேவையில்லை: மாநில சுகாதார அமைச்சா் அறிவிப்பு.
"A 30 "
உடைந்தப் பொருள்களை ஓட்டும் பசைகள் பல சந்தையில் உள்ளன. உடைந்த பொம்மை, அறுந்த காலணி... என்று எதை வேண்டுமானாலும் ஓட்டி விடும் அவை.
தண்ணீருக்குள் கிடக்கும் உடைந்தப் பொருளை தண்ணீருக்குள் வைத்தபடி ஓட்ட முடியாது.
தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து துடைத்து தண்ணீர் கொஞ்சம் கூட இல்லாத நிலையில் மட்டுமே ஒட்ட முடியும்.
இந்தப் பசையால் உடைந்த எலும்பை ஒட்ட முடியாது. சிதைந்த தோலை தசையுடன் ஒட்ட முடியாது.
ஆனால் அவைகளையும் ஒட்டிவிடும் பசை 'ஏ30' ஐ தயாரித்திருக்கிறது.
போபாலில் செயல்படும் இந்திய அறிவியல் கல்வி- ஆராய்ச்சி கழகம்.
விஞ்ஞானிகள், ஹரியானாவின் மருத்துவ விஞ்ஞானக் கல்லூரி மருத்துவர்களுடன் இணைந்து இந்த சக்திமிக்க பசையைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதைப் பயன்படுத்தி நீருக்குள் உடைந்து கிடைக்கும் எந்தப் பொருளையும் நீருக்குள் வைத்தே ஒட்ட முடியும். உடைந்த எலும்புகளை ஒட்ட முடியும்.
கிழிந்த தோலைக் கூட ஒட்டிவிடலாம். அதே நேரத்தில் உடைந்த நாற்காலி, குடுவை போன்றவற்றை ஒட்டி மீண்டும் பயன்படுத்தலாம்.
இந்தப் பசை ரசாயனப் பொருள்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டாலும், மண்ணுடன் சேர்ந்தால் மக்கிப் போகும் தன்மை கொண்டுள்ளது என்பதுதான் சிறப்பு.
இந்த அதிசய பசை மருத்துவ உலகில் பல அதிசயங்களை நிகழ்த்தப் போகிறது. இதற்கு தற்காலிகமாக 'ஏ30' என்று பெயர் வைத்திருக்கின்றனர்.
சிதைந்த திசுக்களைக் குணப்படுத்தும் மருத்துவ குணத்தையும் இந்தப் பசை கொண்டுள்ளது.
அறுவைச் சிகிச்சை முடிந்ததும் அந்த இடத்தில் தையல் போட வேண்டாம். இந்தப் பசையை வைத்து ஓட்டிவிடலாம். எலும்பு உடைந்திருந்தால் அறுவை சிகிச்சையின்போது இரும்புப் பட்டையைப் பொறுத்த வேண்டாம்.
'போல்ட்' போட்டு இறுக்க வேண்டாம்.
இந்தப் பசை உடைந்த எலும்பையும் ஓட்ட வைத்து பழைய மாதிரி ஆக்கிவிடும்.
'ஏ30' பசைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளார்கள்.
மனித உடல் பயன்பாட்டுக்கு இந்த அதிசய பசை எந்தவிதத்திலும் தீங்கு விளைவிக்காது.
----------------------------------------------------------