தீ குளிக்க முயற்சி!

 மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் .

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை காரணமாக அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை.

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.

முழுக்கொள்ளளவை எட்டியதால் வைகையில் 3,600 கனஅடி நீர் திறப்பு: 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.

மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் ஜனவரி முதல் பெறப்படும்

புகைக் குண்டுகளை வீசி தாக்கியவர்கள்   மக்களவையில் தீக்குளிக்க திட்டமிட்டது விசாரணையில் அம்பலம்.

தமிழகத்தில் உள்ள 2,300 ஏரிகளை உலக வங்கி உதவியுடன் ஆழப்படுத்தி மீட்க நடவடிக்கை:-தமிழ்நாடு அரசு.

நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 9 தேர்வுகள் உட்பட 32 தேர்வுகளுகான முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்.

பெங்களூருவில் “ஸ்விக்கியில்”  ஆர்டர் செய்யப்பட்ட சாலட்டில்  'உயிருள்ள நத்தை'".

குவைத் மன்னர் மறைவை ஒட்டி, இன்று நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் கடைப்பிடிப்பு. ஒன்றிய அரசு அறிவிப்பு.

திருப்பூர் அருகே விவசாய நிலத்தில் 20 அடி கம்பியை தூக்கிச் சென்ற ஐயப்ப பக்தர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.
--------------------------------------------

நாடாளுமண்ற தாக்குதல்.
தீ குளிக்க முயற்சி!

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் விவகாரத்தில் கைதானவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் அவர்கள், நாடாளுமன்றத்தினுள் தீக்குளிக்கத் திட்டமிட்டிருந்தாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் டிச.13 அன்று, அவைக்குள் குதித்த இருவர் வண்ண புகை குப்பிகளை வீசினர். 

இதேபோல் நாடாளுமன்ற வெளிப்பகுதியிலும் இருவர் வண்ண புகை குப்பிகளை வீசினர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், நாடாளுமன்ற அத்துமீறலில் ஈடுபட்ட சாகர் சர்மா, மனோரஞ்சன், அமோல், நீலம் தேவி ஆகிய 4 பேர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டனர்.

அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர்

இவர்கள் மீது 'உபா' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 இவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை நன்கு தெரியும் என்றும், ஒரே எண்ணப் போக்குகளை கொண்டிருந்ததால் சமூக வலைதளம் மூலம் இணைந்து, கவனம் ஈர்ப்பதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்த நால்வருக்கும் உதவி செய்த மற்றும் மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்ற நபரையும், தொடர்ந்து மகேஷ் குமாவத் என்பவரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். 

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாயின. அன்றைய தினம் தாங்கள் திட்டமிட்டவாறு எதுவும் நடக்கவில்லையெனில், 'பிளான் பி' பெயரில் மாற்று திட்டங்களையும் அவர்கள் வகுத்து வைத்திருந்தனர்.

 அவற்றில் ஒன்றாக நாடாளுமன்ற வளாகம் அல்லது அவைக்குள், தங்கள் முழக்கங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை வீசிவிட்டு தீக்குளிக்கவும் திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக உடலில் தீத்தடுப்பு ஜெல்லை பூசிக்கொண்டு தீக்குளித்து பரிசோதனை மேற்கொள்ளவும் முயற்சித்தனராம். 

ஆனால் அந்தளவுக்கு ஜெல் வாங்குவதற்கு பணம் இல்லாததால் அந்த யோசனையை கைவிட்டார்களாம். 
இது உட்பட பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் விசாரணையில் வெளிப்பட்டு வருகின்றன.
 அவற்றின் அடிப்படையில், மேலும் சிலர் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?