ஆழமாக விசாரிக்க வேண்டும்

 மதுரையில் உள்ள அமலாக்க துறையின் உதவி மண்டல அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புக் காவல் துறை சோதனை நடத்திவரும் நிலையில், இந்தோ - திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்பிகளுடன் குவிக்கப்பட்டுள்ளனர்.  முன்னதாக அமலாக்கத் துறை அலுவலகத்திற்குள்  லஞ்ச ஒழிப்பு காவல் துறை நுழைந்து சோதனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கைதுசெய்யப்பட்ட அதிகாரியின் அறையில் மட்டும் சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி‌ என்பவர், மதுரையில் ₹20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

அரசு வேல கிடைத்த  ஆசிரியரியரை துப்பாக்கி முனையில் கடத்தி தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்த தொழில் அதிபர்.பீகார் பரபரப்பு.

சென்னை வானகரத்தில் தனியார் தொழிற்சாலை இரும்பு கழிவுகளில் ரூ25லட்சம் மோசடி.காஞ்சிபிரம் மாவட்ட பாஜக ஓபிசி அணி செயலாளர்கள் ஜானகிராமன்,சுகுமாரன் கைது

"ஏற்கனவே ₹31 லட்சம் லஞ்சமாக வாங்கிய அந்த அதிகாரி, அடுத்த தவணையாக ₹20 லட்சம் பெறும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.

இதுபோல வசூலாகும் லஞ்சப் பணம் யாருக்கெல்லாம் பங்கு போகிறது என்பது துருவி விசாரிக்கப்பட வேண்டியதாகும்.

அதற்காக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு செய்துள்ளனர். இது அவசியமான நடவடிக்கை. 

சில நாட்கள் முன்புதா‌ன் ராஜஸ்தானில் இதே‌ போகல ஒரு அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக மாநில அதிகாரிகளிடம் மாட்டினார்.

பல்லாயிரக்கணக்கில் மிரட்டிப் பணம் வாங்கும் அமுலாக்கத்துறை தங்களுக்கு ஒரு பகுதியை எடுத்து விட்டு பாஜகட்சிக்கும் பங்கு கொடுப்பதாகத் தெரிகிறது.எனவே தமிழ்நாடு காவல்துறையினர் ஆழமாக விசாரிக்க வேண்டும் .சென்னை அலுவலகத்திலிம் சோதனையிட வேண்டும்.-கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம். மாநில செயலாளர்.

மணிப்பூரில் உள்ள வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19 கோடி கொள்ளை.

.ரூ.2,438 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிதி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் அபுதாபியில் கைது செய்யப்பட்டார். நடிகர் ஆர்.கே.சுரேஷை பிடிக்கவும் முடிவு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுபெறக்கூடும்:-சென்னை வானிலை மையம் .

தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்.

தென் அமெரிக்காவின் பராகுவே நாட்டுடன் கைலாசா அதிகாரிகள் ஒப்பந்தம் செய்தார்கள்.

அங்கு விவசாயத்துறைக்கு தேவையான ஆலோசனைகள் கைலாசா நாடு சார்பில் வழங்க இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்பின்னர் தான் கைலாசா பற்றிய உண்மை தகவல் தெரிய வந்தது. இதையடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பராகுவே நாட்டின் விவசாயத்துறை மூத்த அதிகாரி அர்னால்டோ சாமோரோ, விவசாய அமைச்சரின் தலைமைப் பணியாளர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. 

வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை இது சென்னை-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மாநில அர சும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. மாநில அளவிலான கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வை யிட்டு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாடம் கற்பித்தது. 

ஒரு ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கூட முதலமைச்சரின் அனும திக்காக அதிகாரிகள் காத்திருந்த காலம் அது.  தாமதமாக ஒரே நேரத்தில் ஒருலட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் சென்னை மாநகரில் ஏற்பட்ட பேரழிவை தமிழகம் கண்டது. 

அத்தகைய நிலை இப்போது இல்லை.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 6000 கன அடி நீர் திறக்கப்பட்டது. 

அதன் பிறகு மழை குறைந்ததன் காரணமாக 4000 கன அடி யாக குறைக்கப்பட்டது. மாநில அமைச்சர்க ளும் அதிகாரிகளும் நீர்நிலைகளுக்கு வரும்  தண்ணீர் அளவை ஆய்வு செய்து தேவைப்படும் போது  உபரிநீரை வெளியேற்றி வருவதால் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் சென்னை மாநகருக்கு குடிநீர்வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், செங்குன்றம், தேர்வாய் கண்டிகை ஆகிய முக்கிய ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. 

இதனால் வரும் கோடை காலத்தில் சென்னையில் பொதுவாக ஏற்படும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மாநில அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் எடுத்த முன்முயற்சியின் காரணமாக மழைநீர் வடிகால்பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. இத னால் நகரில் தண்ணீர் தேங்கினாலும் விரைந்து  வடிந்துவிடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. 

இருப்பினும் தொடர் மழை யால் கொரட்டூர், செங்குன்றம், மேடவாக்கம், பெரும்பாக்கம், மணலி மாத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள னர். 

மாநகராட்சி நிர்வாகம் இந்த இடங்களில் தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை மழைக்காலம் முடிந்தபிறகு விரைந்து சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.மழையால் பாதிக் கப்பட்ட மக்கள் குறித்து வருவாய்த்துறையினர் விரைந்து கணக்கெடுப்பு நடத்தி போதிய  நிவார ணம் வழங்க வேண்டும். மின்வாரியத்தின் கவ னக்குறைவு காரணமாக மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இரண்டுபேர் உயிரிழந்திருப்பது கவலை யளிக்கிறது. 

வரும் காலத்தில் இத்தகைய நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

--------------------------------

அமுலாக்கத்துறையின் அவலம்!

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் வேறு அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும், அவருக்கு தொடர்புடைய இதர இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 'மத்திய அரசின் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்து வரும் அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்பு கொண்டு அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டியுள்ளார்

அவ்வழக்கில் அமலாக்க துறை விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும். 30.10.2023 அன்று மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி, அந்த அரசு ஊழியர் மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசி உள்ளார்.


 கடந்த 01.11.2023 அன்று அரசு ஊழியர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கி உள்ளார்.

பின்னர், மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத்தொகையான ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியுள்ளார்.

இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர்.

 30.11.2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். 

முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத் துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரிய வந்தது.

இதனால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டாவது தவணையாக நேற்று (01.12.2023) காலை 10.30 மணியளவில் ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்தைப் பெற்றுக் கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார்.


அதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


 இச்சோதனையின்போது இவருக்கு தொடர்புயை பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. 


மூலத் இவர் அமலாக்கத்துறையின் பெயரில் எவரேனும் மிரட்டியோ அல்லது அச்சுறுத்தியோ இதேபோன்ற யுக்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த குற்ற நிகழ்வில் பிற அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக அங்கித் திவாரிக்கு தொடர்புடைய இதர இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது' என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?