மக்களவை மக்களுக்கானதா?

 ஒடிசா மாநிலத்தில் 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை மீட்பு.

பொன்னேரியில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்ட 80 நரிக்குறவர் குடும்பங்களுக்கு அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நிவாரண பொருள்.சென்னையில் இருந்து அனுப்பி வைத்தார்.

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 4.1 எனப் பதிவு.

இன்று சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழா.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு. மிக விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவந்ததாக தமிழக அரசுக்கு பாராட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை .புயல் பாதித்த பகுதிகளில் இன்றும் ஒன்றிய குழு ஆய்வு.

சென்னை மாவட்டத்தில் மழையால் பாதித்த 12,000 மாணவ, மாணவிகளுக்கு 30,000 புத்தகங்கள் விநியோகம்

வெள்ள நீரில் எண்ணெய் கலந்தது இயற்கை பேரிடர் இல்லை.மனிதரால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர்.சிபிசிஎல் நிறுவனத்தின் மீது தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு.

காஸாவில் 25 மருத்துவமனைகள் இஸ்ரேல் மூடியது.

தேர்தல் ஆணையர் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.

-----------------------------------------


மக்களவை மக்களுக்கானதா?

நாடாளுமன்றத்தில் அம்பானி- அதானி குறித்து கேள்வி எழுப்பிய காரணத்திற்காக  திரி ணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹூவா மொய்த்ரா எம்.பி., பதவியிலிருந்து நீக்கப்பட்டுள் ளார். 


நாடாளுமன்ற நெறிமுறைக்  குழு விசார ணையின் போது தம் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தபோதும், அந்தக்குழுவில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதவி நீக்கத்தை எதிர்த்த நிலையிலும் மக்களவையில்  கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படை யில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்துள்ளார்.


காங்கிரஸ் தலைவ ரான ராகுல்காந்தியின் எம்.பி., பதவி நீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டி பறிக்கப்பட்டது. 

பின்னர் உச்சநீதிமன்றத்தின்  தலையீடு காரண மாக அவர் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் வர முடிந்தது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக் கையில்லாத ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசி யல் முகமான பாஜக, நாடாளுமன்ற ஜனநாய கத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வரு கிறது.

 இதே நாடாளுமன்றத்தில்  பாஜக உறுப்பி னரான ரமேஷ் பிதூரி சக நாடாளுமன்ற உறுப்பி னரான டேனிஷ் அலியை மதரீதியாக இழிவு படுத்தும் வகையில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தினார். 

ரமேஷ் பிதூரியை அவையிலிருந்து இடை நீக்கம் செய்யக்கூட தயாராக இல்லை. 

அவர் மன்னிப்புக் கேட்க மறுத்தபோதும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் அவர் வருத்தம் தெரிவித்துவிட்டதாகக் கூறி பிரச்சனையை முடித்துவிட்டனர். 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜம்மு- காஷ்மீர் தொகுதிகள் மறு வரையறை தொடர் பான மசோதா மீது பேசிய திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது கூட்டாட்சி மீதான தாக்கு தல் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

அத்துடன் மாநில உரிமைகள் தொடர்பாக தந்தை பெரியா ரின் கருத்துக்களை மேற்கோள் காட்டியபோது பாஜகவினர் ஆத்திரமடைந்துள்ளனர். 

பெரியாரின் கருத்துக்களை மட்டுமல்ல, பெரியார் என்ற பெயரும் அவைக்குறிப்பிலி ருந்து நீக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலை வர் ஜகதீப் தன்கர் அறிவித்துள்ளார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்ப ளித்துவிட்டதால் அதுகுறித்து பேசவே கூடாது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மிரட்டியுள்ளார். 

ஆனால் நீதிமன்றத்  தீர்ப்பை நாடாளுமன்றம் நினைத்தால் மாற்றி அமைக்க முடியும். தங்களுக்கு ஏற்பில்லாத நீதிமன்றத் தீர்ப்புகளை பலமுறை ஒன்றிய பாஜக ஆட்சி புறக்கணித்திருக்கிறது. 

நாடாளுமன்ற ஜனநாய கத்தையும், பாஜக ஆட்சி அழித்து வருகிறது. 

-------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?