எது அவமானம்?

தரையிறங்கிய விமானம்

 துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிகரகுவா நாட்டுக்கு சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறங்கிய சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன!

துபாயில் இருந்து தனியார் விமானத்தை பிரத்யேகமாக வாடகைக்கு அமர்த்தி நிகரகுவா சென்று, அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா, கனடா செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களை தடுத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானத்தில் பயணித்த இந்தியர்களில் சிலர் தமிழ் பேசுவதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா? அல்லது இலங்கையை சேர்ந்தவர்களா என தொடர்ந்து விசாரணை நடக்கிறது!

பெரும்பாலானோர் இந்தி உள்ளிட்ட வட மாநில மொழிகளை பேசுவதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 303 பேரில் 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை!

முதற்கட்ட விசாரணையில் விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது. அதிலும் குஜராத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். 

ஒரே நேரத்தில் 303 பேர் ஒரே விமானத்தில் வந்ததன் நோக்கம் என்ன? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது!

தெற்கு காசாவில் போர் தீவிரம் இஸ்ரேல் வீரர்கள் 14 பேர் 2 நாளில் பலி.

கொரோனா பரவல் அதிகரிப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்.

8 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்களின் போது சீரமைப்பு நிவாரணத்திற்கு சீரமைப்பு நிவாரணத்திற்கு 4.61% மட்டுமே வழங்கிய பா.ஜ.க, ஒன்றிய அரசு.கார்பரூட்களுக்கி வங்கிக் கடன்2.5 லட்சம் கோடிகள் தள்ளுபடி செய்துள்ளது.


செங்கடலில்  இந்தியாவுக்கு வந்த மேலும் ஒரு கப்பல் மீது ஹவுதி படையினர் டிரோன் தாக்குதல்: 25 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்.


ஐஎன்எஸ் இம்பால் ஏவுகணை அழிப்பு கப்பல் இந்திய கடற்படையில் நாளை இணைப்பு.


தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை வழக்கமாக டிசம்பர் மாதத்தோடு முடிவடையும் நிலையில், இந்த முறை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு.


பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு 


வெள்ளமும் நிவாரணமும்.

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களின் போது சீரமைப்பு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்காக தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.1,27,655.80 கோடி.

 ஆனால், கிடைத்தது வெறும் 4.61 சதவீதம், அதாவது ரூ.5,884.49 கோடி மட்டுமே என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை கடந்த 8 ஆண்டுகளில் மழை, புயல் என்று பல்வேறு இயற்கை பேரிடர்கள் வந்து போய் உள்ளது.


 ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் பல்வேறு உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டது. அவற்றை ஒன்றிய அரசு கண்டுக்கொள்ளவேயில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஒன்றிய அரசு தமிழகத்தின் மீது பாராமுகமாக இருந்து வருகிறது.

ஏனெனில் சென்னையில் 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் தொடங்கி 2022ல் ஏற்பட்ட கனமழை, பெரு வெள்ளம் வரை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கேட்ட நிதியில், ஒன்றிய அரசு கொடுத்தது வெறும் 4.61 சதவீதம் நிதி மட்டும்தான். உதாரணத்திற்கு கடந்த 2015-16ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது ஏராளமான வீடுகள் தண்ணீரில் முழ்கியது.


 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பாதிப்புகளை ஒன்றிய அரசு அதிகாரிகள் குழு பார்வையிட்டு சென்றது. அந்த வெள்ளத்தின் போது தமிழ்நாடு அரசு சார்பில் தற்காலிக நிவாரணமாக ரூ.7,959.93 கோடியும், நீண்ட கால சீரமைப்புக்காக ரூ.17,952.52 கோடி என மொத்தம் ரூ.25,912.45 கோடியை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டது.


ஆனால், ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.1,737.65 கோடி. 2016-2017ல் ஏற்பட்ட பெரும் வறட்சியின் போது தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.39,565 கோடி கேட்கப்பட்டது. ஆனால், வெறும் 1,748.28 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.


 இதே போல 2016-2017ல் ஏற்பட்ட வர்தா புயலின் போது தற்காலிக நிவாரணமாக ரூ.1972 கோடியும், நீண்ட கால சீரமைப்புக்கு ரூ.20,600.37 கோடி என மொத்தம் ரூ.22,573.26 கோடி கேட்கப்பட்டது. 


ஆனால், ஒன்றிய அரசு ஒதுக்கியது ரூ.266.17 கோடி 2017-2018ல் ஏற்பட்ட கனமழை, ஒகி புயலின் போது தமிழ்நாடு அரசு சார்பில் தற்காலிக நிவாரணமாக ரூ.876 கோடியும், நீண்ட கால சீரமைப்புக்காக ரூ.8,426 கோடி என மொத்தம் 9,302 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசு ரூ.133 கோடி மட்டுமே ஒதுக்கியது.


2018-19ல் ஏற்பட்ட கஜா புயலின் போது தற்காலிக நிவாரணமாக ரூ.2,709 கோடியும், நீண்ட கால சீரமைப்புக்காக ரூ.5,190.17 கோடி என ரூ.17,899.17 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசு ஒதுக்கியது ரூ.1,146.12 கோடி மட்டுமே. இதே போல 2020-21ல் ஏற்பட்ட நிவர் புயலின் போது தற்காலிக நிவாரணமாக ரூ.650.10 கோடியும், நீண்ட கால சீரமைப்புக்கு ரூ.3,108.55 கோடி என ரூ.3,758.65 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ஒதுக்கப்பட்டது ரூ.63.14 கோடி மட்டுமே.


 புரவி புயலின் போது தற்காலிக நிவாரணமாக ரூ.485 கோடியும், நீண்ட கால சீரமைப்புக்காக ரூ.1029 கோடி என மொத்தம் ரூ.1,514 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசு ஒதுக்கியது ரூ.223.77 கோடி மட்டுமே.


ஜனவரியில் ஏற்பட்ட கனமழையின் போது தற்காலிக நிவாரணமாக ரூ.734.49 கோடியும், நீண்ட கால சீரமைப்புக்கு ரூ.166 கோடி என மொத்தம் ரூ.900.82 கோடி கேட்கப்பட்டது. 


ஆனால், ஒன்றிய அரசு ஒதுக்கியது 213.51 கோடி மட்டுமே. இதே போல 2021-22ல் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளத்தின் போது முதல் முன்மொழிவாக ரூ.549 கோடி தற்காலிக நிவாரணமாகவும், நீண்ட கால சீரமைப்புக்கு ரூ.2,079.66 கோடி என மொத்தம் 2629 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை ரூ.352.85 கோடிதான்.

2ம் முன்மொழிவாக தற்காலிக நிவாரணத்துக்கு ரூ.521.29 கோடியும், நீண்ட கால சீரமைப்புக்கு ரூ.1475.21 கோடி என மொத்தம் ரூ.1996.50 கோடியும், 3ம் முன்மொழிவாக தற்காலிக நிவாரணமாக ரூ.439.91 கோடியும், நீண்ட கால சீரமைப்புக்கு ரூ.1,164.75 கோடி என மொத்தம் ரூ.1,604.66 கோடியும் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டது. 


அதாவது, 2015 முதல் பேரிடரால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு கோரிய மொத்த தொகை ரூ.1,27,655.80 கோடி.

ஆனால் ஒன்றிய அரசால் ரூ.5,884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 

இது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே. இதில் இருந்து ஒன்றிய அரசு தமிழகத்தின் மீது பாராமுகமாக இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதே போல ஒன்றிய அரசின் நிதிக்குழுவின் பரிந்துரையின் படி மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதியின் (SDRF) கீழ் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் பங்கு முறையே 75% மற்றும் 25% ஆகும்.


இந்த மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 75% ஒன்றிய அரசு இரண்டு தவணைகளில் வழங்குகிறது. ஒன்றிய அரசிடமிருந்து மாநில பேரிடர் நிவாரண நிதியின் 75% பங்கு வரப்பெற்ற உடன், மாநில அரசு தனது பங்கான 25%-ஐ சேர்த்து, மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கீடு செய்கிறது.


 மாநிலங்களில் ஏற்படும் பேரிடர்களினால் ஆன சேதங்களை சீரமைக்க மாநில பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லாத நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசுக்கு மாநில அரசால் கோரிக்கை அளிக்கப்படுகிறது.

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், ஒன்றிய அரசு, மாநில அரசுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) நிதி ஒதுக்கீடு செய்கிறது. 


அவ்வாறு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகை முழுவதும் ஒன்றிய அரசை சார்ந்தது ஆகும். 


இதில் மாநில அரசின் பங்கு ஏதும் இல்லை. ஆனால், சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும், தற்போது தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும் இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து NDRFல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்தார்.


பிரதமர் மோடியை சந்தித்த போதும் இதை வலியுறுத்தி மனுவாகவும் கொடுத்திருந்தார்.


 ஆனால், இன்று வரை இந்த இரண்டு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவிக்கப்படவில்லை. NDRFல் இருந்து இதுவரை தமிழகத்திற்கு கூடுதல் நிதி எதையும் ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


* 2015 முதல் பேரிடரால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு கோரிய மொத்த தொகை ரூ.1,27,655.80 கோடி. ஆனால் ஒன்றிய அரசால் ரூ.5,884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே. இதில் இருந்து ஒன்றிய அரசு தமிழகத்தின் மீது பாராமுகமாக இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


* சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும், தற்போது தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும் கடும் பேரிடர்களாக அறிவித்து NDRFல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்தார். பிரதமர் மோடியை சந்தித்த போதும் இதை வலியுறுத்தி மனுவாகவும் கொடுத்திருந்தார்.


* இன்று வரை இந்த இரண்டு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவிக்கப்படவில்லை. NDRFல் இருந்து இதுவரை தமிழகத்திற்கு கூடுதல் நிதி எதையும் ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை.


-----------------------------------

எது அவமானம்?

இந்­திய நாட்­டின் நாடா­ளு­மன்­றத்­தில் இருந்து ஒரே நேரத்­தில் 146 உறுப்­பி­னர்­களை இடை­நீக்­கம் செய்­தது ஜன­நா­ய­கத்­துக்கு அவ­மா­னம் இல்­லை­யாம். மாநி­லங்­க­ளவை சபா­நா­ய­கர் ஜெக­தீப் தன்­க­ரைப் போல மிமிக்ரி செய்து விட்­டார்­க­ளாம்.

 ஏதோ இந்­தி­யாவே அவ­மா­னப்­பட்­ட­தைப் போல பிர­த­ம­ரும், குடி­ய­ர­சுத் தலை­வ­ரும் குச­லம் விசா­ரிப்­ப­தும், மக்­க­ளவை சபா­நா­ய­க­ரும் -– மாநி­லங்­க­ளவை சபா­நா­ய­க­ரும் சந்­தித்­துக் கொள்­வ­தும் குணச்­சித்­தி­ரக் காட்­சி­க­ளாக அமைந்­தி­ருக்­கின்­றன.

நாடா­ளு­மன்­றத்­துக்­குள் புகைக் குண்டு வீசப்­பட்­டது. இது தொடர்­பாக 6 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்­கள். 

அதுவே விஷ வாயு குண்­டாக இருந்­தி­ருந்­தால் பல உறுப்­பி­னர்­க­ளின் நிலைமை என்ன ஆகி இருக்­கும் என்றே கணிக்க முடி­யாது. இது தொடர்­பாக பிர­த­மரோ, உள்­துறை அமைச்­சரோ அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்­டும் என்­ப­து­தான் எதிர்க்­கட்­சி­க­ளின் ஒற்­றைக் கோரிக்கை. 

அதைக் கூட ஆளும் பா.ஜ.க. ஏற்­க­வில்லை. புகைக்­குண்டு வீசப்­பட்ட நாடாளுமன்­றத்­துக்கு வர­வில்லை பிர­த­மர். பதி­ல­ளிக்­க­வில்லை உள்­துறை அமைச்­சர்.

உள்­துறை அமைச்­சர் விளக்­கம் அளிக்க வேண்­டும் என்று கேட்­பது நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஜன­நா­யக உரிமை ஆகும். அதைக் கூட பயன்­ப­டுத்த மக்­க­ளவை சபா­நா­ய­கர் ஓம் பிர்­லா­வும், மாநி­லங்­க­ளவை சபா­நா­ய­கர் ஜெக­தீப் தன்­க­ரும் அனு­ம­திக்­க­வில்லை. 

தொடர்ச்­சி­யான முழக்­கத்தை எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் எழுப்­பி­னார்­கள். எனவே, கொத்­துக் கொத்­தாக உறுப்­பி­னர்­களை இடை நீக்­கம் செய்­யத் தொடங்­கி­னார்­கள் பேர­வைத் தலை­வர்­கள். 146 உறுப்­பி­னர்­கள் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார்­கள். 

இப்­படி இடை நீக்­கம் செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளில் சிலர் நாடா­ளு­மன்­றத்­தின் நுழை­வா­யில் படி­யில் அமர்ந்து ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். 

அது­வும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட ஜன­நா­யக உரிமை ஆகும். அப்­போது திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த உறுப்­பி­ன­ரான கல்­யாண் பானர்ஜி, துணை ஜனா­தி­ப­தி­யும் மாநி­லங்­க­ளவை சபா­நா­ய­க­ரு­மான தன்­கரைப் போல மிமிக்ரி செய்­தா­ராம். இது தன்­கர் கவ­னத்­துக்­குச் சென்­றது. அவர் மாநி­லங்­க­ள­வை­யில் தனது கண்­ட­னத்தை தெரி­வித்து இருக்­கி­றார்.

உடனே துணை ஜனா­தி­ப­தியை தொலை­பே­சி­யில் அழைத்து பேசி­னா­ராம் பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி. “பிர­த­மர் மோடி என்னை போனில் அழைத்து பேசி­னார். மாண்­பு­மிக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் சிலர் செய்த கேவல­மான செயல்­கள் குறித்து வேத­னையை வெளிப்­ப­டுத்­தி­னார். 

அது­வும் புனி­த­மான நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் நடப்­பது வருத்­தம் அளிப்­ப­தா­கச் சொன்­னார். 20 ஆண்­டு­க­ளாக தான் இது போன்ற அவ­மா­னங்­களை அனு­ப­வித்து வரு­வ­தா­க­வும் சொன்­னார். துணை ஜனா­தி­ப­திக்கே இப்­படி நடக்­க­லாமா என்­றும் சொன்­னார்” என்று பதி­விட்­டுள்­ளார் துணை ஜனா­தி­பதி.

“மிமிக்ரி ஒன்­றும் தடை செய்­யப்­பட்­ட­தல்ல. இதன் மூல­மாக உறுப்­பி­னர்­கள் சஸ்­பெண்ட் செய்­யப்­பட்­டதை திசை திருப்­பப் பார்க்­கி­றார்­கள்.

 துணை ஜனா­தி­பதி உள்­பட யாரை­யும் கேலி செய்­யும் எண்­ணம் எனக்கு இல்லை” என்று சொல்­லி­விட்­டார் மிமிக்ரி செய்த எம்.பி. கல்­யாண் பானர்ஜி. அதன் பிற­கும் இதை பெரிது ஆக்­கி­னார்­கள்.

புகைக் குண்டு வீசி­ய­வ­ருக்கு நாடா­ளு­மன்ற நுழைவு அனு­ம­திச் சீட்டுகொடுத்­த­வர் பா.ஜ.க. எம்.பி. அத­னைத் திசை திருப்­பவே இதைச் செய்­கி­றார்­கள்.

அதி­லும் குறிப்­பாக 20 ஆண்­டு­க­ளாக பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி என்ன அவ­மானங்­க­ளைச் சந்­தித்து வரு­கி­றார்?

 குஜ­ராத் படு­கொ­லை­யைச் சொல்­கிறாரா?

 அது யாருக்கு, யாரால் இழைக்­கப்­பட்ட அவ­மா­னம்? 

இந்­திய நாட்­டின் பன்­மு­கத் தன்­மைக்­கும், மனித உரி­மை­க­ளுக்­கும், மன­சாட்­சிக்­கும் இழைக்­கப்­பட்ட துரோ­கத்­துக்கு யார் கார­ணம்? 

பொறுப்­பேற்க வேண்­டி­ய­வர் யார்?

 அது என்ன அவ­தூறு குற்­றச்­சாட்டா? 

அது நடக்க யார் கார­ணம்? 

யாரு­டைய ஆட்­சி­யில் நடந்­தது?

யார் கொடுத்த துணிச்­ச­லில் நடந்­தது? 

யார் இது­வரை தண்­டிக்­கப்­பட்­டுள்­ளார்­கள்?

 பொத்­தாம் பொது­வாக, ‘20 ஆண்­டு­க­ளாக நான் அவ­மா­னங்­களைச் சந்­தித்து வரு­கி­றேன்’ என்­ப­தன் மூல­மாக பிர­த­மர் நரேந்­திர மோடி யாரிடம் கழி­வி­ரக்­கம் தேட விரும்­பு­கி­றார்?

மக்­க­ள­வை­யில் எழுந்து நின்று தன்­க­ருக்கு தங்­க­ளது ஆத­ர­வைத் தெரி­வித்து இருக்­கி­றார்­கள் பா.ஜ.க. எம்.பி.கள். இது அடுத்­த­டுத்து நடந்த நாட­கங்­கள் ஆகும்.

2018 ஆம் ஆண்டு நடந்­ததை காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான ஜெய­ராம் ரமேஷ் வெளி­யிட்­டுள்­ளார். 

ராகுல் காந்தி சபை­யில் பேசி­விட்டு, பிரத­ம­ரின் இருக்­கைக்­குச் சென்று அவ­ரைக் கட்­டிப் பிடித்­தார். அதன்­பி­றகு பேசிய பிர­த­மர் அவர்­கள், ராகுல்­காந்­தி­யைப் போல மிமிக்ரி செய்­ததை சுட்டிக் காட்டி இருந்­தார்.

 ‘யார் யாரை கிண்­டல் செய்து நடித்­துக் காண்­பிக்­கின்­ற­னர். 

அது­வும் மக்­க­ள­வைக்­குள் நடித்­துக் காட்­டி­யதை நினை­வு­கூ­றுங்­கள்’ என்று சொல்லி அந்த வீடி­யோவை வெளி­யிட்­டுள்­ளார் ஜெய­ராம் ரமேஷ். முன்­னாள் துணைக் குடி­ய­ர­சுத் தலை­வர் ஹமீது அன்­சா­ரியை, பிர­த­மர் மோடி மிமிக்ரி செய்­யும் வீடி­யோ­வை­யும் ஜெய­ராம் ரமேஷ் வெளி­யிட்டு இருக்­கி­றார்.

ராகுல்­காந்­தியை ‘பப்பு’ என்று சொல்லி அதை சைகை மூலம் மிமிக்ரி செய்து கிண்­ட­ல­டித்­தார் பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி. அதனை காங்­கி­ரஸ் கட்சி வெளி­யிட்டு விமர்­சித்­துள்­ளது. “பிர­த­மர் மோடி கூட எதிர்க்­கட்­சித் தலை­வர்­களை மிமிக்ரி செய்­துள்­ளார்.

 அவர் அவ்­வாறு செய்­வதை எல்­லோ­ரும் சீரி­ய­ஸாக எடுக்­கா­மல் நகைச்­சு­வை­யா­கவே எடுத்­துக் கொண்­ட­னர். இப்­போது என் விஷ­யத்­தில் சீரி­ய­ஸாக எடுத்­துக் கொண்­டால் நான் பொறுப்­பல்ல” என்­றும் கல்­யாண் பானர்ஜி சொல்லி இருக்­கி­றார்.

இந்­திய நாட்­டின் நாடா­ளு­மன்­றத்­துக்­குள் புகுந்து புகைக் குண்டு வீசப்­பட்­டது கேவ­ல­மில்­லையா? 

இந்­திய நாட்­டின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கே பாது­காப்பு இல்லை என்­பது அவ­மான மில்­லையா? 

ஒட்­டு­மொத்­த­மாக நாடாளுமன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ருக்­கும் இழைக்­கப்­பட்ட உரிமை மீறல் அல்­லவா இது?

 பா.ஜ.க. உறுப்­பி­னர்­க­ளுக்­கும் சேர்த்தே தான் பா.ஜ.க. நாடா­ளு­மன்­றத்­தில் பாது­காப்பு இல்­லையா? 

இதைக் கேள்வி கேட்­டால், அனை­வ­ரை­யும் டிஸ்­மிஸ் செய்து விடு­வோம் என்­பது தான் உல­கின் மிகப்­பெ­ரிய ஜன­நா­யக நாடு கடைப்­பி­டிக்­கும் நெறி­மு­றையா?

 அனைத்து உறுப்­பி­னர்­க­ளின் பாது­காப்­பும், ஒரே ஒருஉறுப்­பி­ன­ரின் மிமிக்­ரி­யும் ஒன்றா?




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?