அமுலாக்கத்துறையை விரட்டிப் பிடித்த

 தமிழ்நாடு போலீஸ்!

மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவினர் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். 

திண்டுக்கல்லில் ரூ31 லட்சம் லஞ்சப் பணம் பெற்ற போது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி சிக்கியதைத் தொடர்ந்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

 இந்த வழக்கில் இருந்து டாக்டர் சுரேஷ் பாபுவை விடுவிக்க அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி என்பவர் ரூ3 கோடி லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனடிப்படையில் கடந்த மாதம், அங்கித் திவாரிக்கு டாக்டர் சுரேஷ் பாபு ரூ20 லட்சம் லஞ்சம் கொடுத்தார். ஆனால் இடைவிடாமல் மேலும் ரூ31 லட்சம் லஞ்சப் பணத்தை தர வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டி இருந்தார். 

இதனால் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசில் டாக்டர் சுரேஷ் பாபு புகார் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவிய ரூ31 லட்சம் ரூபாய் நோட்டுகளை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் டாக்டர் சுரேஷ் பாபு கொடுத்தார். 

இதனைப் பெற்றுக் கொண்ட அங்கித் திவாரி உடனே காரில் ஏறி அங்கிருந்து தப்ப முயன்றார். 

ஆனால் விடாத தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கித் திவாரியை விரட்டிச் சென்று மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது அமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரி காரில் பதுக்கி வைத்திருந்த லஞ்சப் பணம் ரூ31 லட்சத்தையும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். 

பின்னர் அங்கித் திவாரியை அதிரடியாக கைது செய்தனர். அங்கித் திவாரியின் கூட்டாளிகள் யார் யார் என்பது தொடர்பாகவும் துருவி துருவி விசாரணைநடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரையில் அங்கித் திவாரியின் வீடு மற்றும் அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

இந்தியாவிலேயே மாநில போலீசார், அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் நுழைந்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது இதுவே முதல் முறை . 

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் டிஎஸ்பி தலைமையிலான 10 போலீசார் உள்ளே நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். இதனால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

----------------------------------------------

ஆளுநர்கள் ஒழுங்காகப் பணியாற்ற வேண்டும்.

தமிழ்நாடு, பஞ்சாப், கேரள மாநில ஆளு நர்களின் அடாவடி நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் தொடர்ந்து கடுமையான விமர்ச னங்களை முன்வைத்து வருகிறது. ஆனாலும் கூட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் ஆளு நர்கள் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை.

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோ கித் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோ தாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் முடக்கி வைத்திருப்பதை எதிர்த்து அந்த மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காலவரையறையின்றி மசோதாக்களுக்கு ஒப்பு தல் அளிக்காமல் ஆளுநர்கள் நிறுத்தி வைக்கக் கூடாது என்றும் ஒரு வேளை மசோதாவுக்கு  ஒப்பு தல் வழங்க முடியாத நிலையிருந்தால் அதற் கான காரணத்துடன் சட்டப் பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் பேரவை அந்த மசோ தாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அவற்றிற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்று அறிவுறுத்தியது.

ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப் பேர வையை விட அதிக அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. 

அவர்களுக்கு வீட்டோ அதிகாரம் எதுவும் இல்லை என்றெல்லாம் உச்சநீதிமன்றம் இடித்துரைத்தது. 

தமிழக, கேரள அரசுகளும் தங்களது மாநில ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தி ருந்தன. பஞ்சாப் ஆளுநர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கேரள ஆளுநர் படித்துப் பார்க்கட்டும் என உச்சநீதிமன்றம் கூறியது.

 இத்தனைக்கும் பிறகு கூட கேரள சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட எட்டு மசோதாக்களில் ஒன்றிற்கு மட்டும் அந்த மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டு மற்ற ஏழு மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாகக் கூறினார்.

இந்நிலையில், புதனன்று இந்த வழக்கின் மீது நடைபெற்ற விசாரணையின் போது கடந்த இரண்டு ஆண்டுகளாக மசோதாக்களை முடக்கி வைத்திருந்தது ஏன்? 

எனவும் மக்கள் நலன் தொடர்புடைய இந்த மசோதாக்களை எவ்வித காரணமும் சொல்லாமல் இவ்வளவு காலம் முடக்கியது ஏன்? 

எனவும் உச்சநீதி மன்றம் எழுப்பியுள்ள கேள்வி அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் உச்ச நீதிமன்றத்தின் குட்டுக்கு பிறகே சில மசோதாக் களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது. 

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளை கிள்ளுக்கீரையாக நினைக் கும் ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டுள்ளது. இனியாவது அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.  



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?