கரை கடந்த ஜாக்

 மிக்ஜாம் புயல் பாதிப்பு: போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் ,சீரமைப்பு பணிகள் ஆரம்பம்.

சென்னை(இன்று)யின் தற்போதைய நிலை..

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் இதுவரை 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.


ஆந்திர மாநிலம் காவலி என்ற இடத்தருகே மிக்ஜாம் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. 
சென்னையில் கடந்த 2 நாட்களில் 47 செ.மீ. மழை பதிவாகியுள்ளது: தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்.

லஞ்ச பணத்தை அங்கித் திவாரியுடன் பங்கிட்ட 7 அமலாக்கத்துறை அதிகாரிகள்: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் திவாரி தகவல்.
ஆளுநர் கையெழுத்திடவில்லை. 


உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய மத்திய நிதிக்குழு நிதி கேரளத்துக்கு வழங்காதது குறித்து இங்குள்ள எதிர்க்கட்சிகள் எதுவும் கூறவில்லை.

 உள்ளாட்சி அமைப்புகளின் தலையீட்டிற்காக விரிவான திருத்தங்களுடன் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் ஆளுநர் கையெழுத்திடவில்லை. 

அதில் எதிர்க்கட்சிகளுக்கும் ஆட்சேபணை இல்லை என்று கேரள முதல்வர் விமர்சித்தார். 


திருச்சூரில் உள்ள கிலாவில் புதிய கேரளம் அரங்கின் ஒரு பகுதியாக திங்களன்று (டிச.4) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறுகையில், மற்ற மாநிலங்களை விட குறைந்த அளவில் கேரளத்திற்கு மானியம் வழங்க ஒன்றிய நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

 இந்த மானியம் வட இந்திய மாநிலங்களுக்கு பொருந்தும். கேரளாவைப் பொறுத்தவரை பொருந்தாத பல நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

அதுபற்றி எதிர்க்கட்சிகளுக்கு கருத்து இல்லையா என்று முதலமைச்சர் கேட்டுள்ளார். ஆறு மாவட்டங்கள், அறுபது தொகுதிகளைக் கடந்து, புதிய கேரளம் அரங்கம் ஞாயிறன்று திருச்சூர் மாவட்டத்தில் நுழைந்தது. 

எங்கு பார்த்தாலும் வரலாறு காணாத கூட்டம். 

நேரடியாக அரங்கத்துக்கு செல்ல முடியாதவர்கள் சாலையோரங்களில் காத்திருந்து இந்தப் பயணத்தை வாழ்த்துகிறார்கள். ஆனால் சிலரது கேமராக்களில் கூட்டத்தின் காட்சிகள் தென்படுவதில்லை.

 சுமார் 270 சேவைகள் முற்றிலும் ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளன. அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் குடிமக்கள் வசதி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

 நகராட்சி களுக்கான கே-ஸ்மார்ட் ஆன்லைன் அமைப்பு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கப்படும். குறைகளைத் தீர்க்க நிரந்தர அதாலத் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில்முனைவோர் நட்பு மாநிலமாக, பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேசமயம், மத்திய நிதிக் கமிஷன் மானியம் என்பது மாநிலங்கள் மற்றும் அதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அரசமைப்பு உரிமையாகும். 

உரிய நிதி கிடைக்காததால் உள்ளாட்சி அளவில் திட்டங்கள் முடங்கியுள்ளன. அரசமைப்பின் 280 ஆவது பிரிவின் கீழ் நிதி ஆயோக் மட்டுமே அத்தகைய நிபந்தனைகளை உருவாக்க அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால் மத்திய நிதித்துறை ஒருதலைப்பட்சமாக புதிய நிபந்தனையை விதித்துள்ளது.

 இது முற்றிலும் அரசமைப்புக்கு எதிரானது. 2022-23 நிதியாண்டுக்கான சுகாதார மானியத்தின் கீழ் மில்லியன் பிளஸ் நகரங்களுக்கான ரூ.51.55 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.137.16 கோடியும் 8 மாதங்களுக்குப் பிறகும் ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை. 2023 - 24 நிதி ஆண்டில் கிராமப்புறங்களுக்கு ரூ.1260 கோடிகள், மில்லியன் பிளஸ் நகரம் மற்றும் நகரங்களுக்கு ரூ.281 கோடிகள் மற்றும் மில்லியன் பிளஸ் அல்லாத நகரங்களுக்கு ரூ.368 கோடிகள் என மொத்தம் ரூ.1909 கோடி நிலுவை உள்ளது. இதில் முதல் தவணையாக ரூ.814 கோடி இந்த ஆண்டு தொடக்கத்தில் வழங்கப்பட்டது.

உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. தொடர் அழுத்தத்துக்குப் பிறகு கடந்த நவம்பர் 20ஆம் தேதி ஊரகப் பிரிவுக்கு ரூ.252 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. புதிய கேரள அரங்கம் (நவகேரள சதஸ்) என்பது மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து நடத்தும் ஒரு அதிகாரப்பூர்வ திட்டமாகும். 

இயற்கையாகவே அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் உள்ளூர் சுய-அரசு அமைப்புகள், புதிய கேரள அரங்கத்துக்குத் தேவைப்படும் செலவினங்களுக்கு பங்களிக்க அரசாங்கத்தின் ஒப்புதல் தேவை. புதிய கேரள அரங்கம் என்பது முன்னோடியில்லாத நிகழ்வு. பஞ்சாயத்து ராஜ் சட்டத்திலோ, நகராட்சி சட்டத்திலோ இதுபோன்ற திட்டம் பற்றி குறிப்பிடவில்லை. எனவே, உள்ளாட்சி அமைப்புகளாலும் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் வெற்றிபெறவே அரசு அனுமதி அளித்துள்ளது. 

அதற்கான வரம்பும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து செயல்படுத்தும் திட்டத்திற்கு பணம் செலவழிப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முதன்மைப் பொறுப்பு என்பதை மறந்துவிடக் கூடாது என்றார் முதல்வர். 

பாலக்காடு மாவட்டத்தில் 3 நாள் புதிய கேரளம் அரங்கம் ஞாயிறன்று நிறைவடைந்த போது, 12 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து மொத்தம் 61,204 மனுக்கள் பெறப்பட்டன. முதல் நாளில் 15753 மனுக்களும், இரண்டாம் நாளில் 22745 மனுக்களும் மூன்றாம் நாளில் 22706 மனுக்களும் பெறப்பட்டன.

-------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?