தமிழிசை எதிர்ப்பு .

 'எனக்கும் 3 மாதங்களாக அமலாக்கத் துறையிடம் இருந்து மிரட்டல்  வந்தது-  என்னை ஊரை விட்டு போக சொன்னார்கள்.

ஒன்றிய அரசின் பெயரை சொல்லி என்னையே மிரட்டினார்கள் .இடைதரகர்கள் மூலம் பணம் பறிக்கும் முயற்சி நாடு முழுவதும் நடக்கிறது பாஜக ஆளாத மாநிலங்களில் இடைத்தரகர்கள் மிரட்டல் விடுகின்றனர்':-சபாநாயகர் அப்பாவு .

அமுலாக்கத்துறை அதிகாரி கைது, அலுவலகத்தில் சோதனை  தமிழிசை தமிழ்நாடு அரசுக்கு எதிர்ப்பு .

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 259 ஏரிகள் நிரம்பின.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வங்கக்கடலில் உருவானது மிக்ஜாம் புயல்: இந்திய வானிலை மையம் தகவல்.புயல் சின்னம் எதிரொலி பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன? தமிழக அரசு விளக்கம்.


அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி பணம் பறித்தது பற்றி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் FIRல் கூறப்பட்டுள்ள தகவல்கள்

• அரசு மருத்துவர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது சேவையை களங்கப்படுத்திவிடுவதாக
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார்

• லஞ்சம் தராவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அரசு மருத்துவரை மிரட்டியுள்ளார்

• உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சப் பணத்தில் பங்கு தர வேண்டும் எனக் கூறி திண்டுக்கல் மருத்துவரை மிரட்டியுள்ளார் அங்கித் திவாரி

• திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தியவர்

• திண்டுக்கல் அரசு மருத்துவர் லஞ்சப் பணத்தை தயார் செய்துவிட்டு தொடர்பு கொண்டபோது மணல் குவாரியில் இருப்பதாக அங்கித் திவாரி கூறியுள்ளார்

• ஏற்கனவே பல பேரை மிரட்டி பணம் பறித்துள்ளதால், மணல் குவாரி அதிபர்களிடமும் அவர் லஞ்ச பேரம் பேசினாரா என விசாரிக்க முடிவு

• லஞ்ச பணத்தை ஹவாலா பணப்பரிமாற்றம் செய்பவர்கள் மூலம் கொடுத்தனுப்ப முடியுமா என அங்கித் திவாரி மருத்துவரிடம் கேட்டுள்ளார்.

காகித ஸ்ட்ரா,பிளாஸ்டிக் ஸ்ட்ரா 

இரண்டுமே ஆபத்தானதுதான்.

பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காகிதத்தால் செய்யப்பட்ட ஸ்ட்ரா குறித்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். அதில் நெகிழியைவிட அதிகமான பாலிஃபுளோரோ அல்கைல் (PFAS) அதில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

பாலிஃப்ளூரோ அல்கைல் என்பது விரைவாக உடைந்து போகாத பொருட்கள் மற்றும் நமது சுற்றுச்சூழலில் நீண்ட காலம் மக்காத பொருளாகும். மழை நீரிலும் மண்ணிலும் அவை நீண்ட காலம் நிலைத்திருக்கும். அதனால்தான் அவை `நிலைத்திருக்கும் ரசாயனங்கள்` என்றும் அழைக்கப்படுகின்றன.

பாலிஃபுளோரோ அல்கைல் பல தசாப்தங்களாக சுற்றுச்சூழலில் நிலைத்திருக்கும். மேலும், நீர் மாசுபாடு மற்றும் மனிதர்களுக்குப் பல உடல்நல பிரச்னைகள் உள்ளிட்டவற்றையும் ஏற்படுத்தும்.

காகிதம் மற்றும் மூங்கிலைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஸ்ட்ரா-விலும் குறிப்பிடத்தக்க அளவு பாலிஃபுளோரோ அல்கைல் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே அவை நெகிழியைவிடச் சிறந்த தேர்வாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

அவற்றில் அதிகளவு `நிலையான ரசாயனங்கள்` இருப்பதால், அவை சுற்றுச்சூழலுக்கு எந்தளவுக்கு உகந்தவை என்ற கேள்வி எழுகிறது .

--------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?