56ஆண்டு கால சோகம்!


 இந்தியாவின் கடன் அதிகரிப்பால் ஆபத்து? IMF எச்சரிக்கை.

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 750 ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது:- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.

நாவலூர் அருகே பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் காதலன் கைது.

பாம்பனில் தென்கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகு எரிந்தது.

தூத்துக்குடி இந்திய உணவுக் கழக பாதுகாப்பு குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8000 டன் அரிசி மற்றும் 500 டன் கோதுமை நீரில் மூழ்கி சேதம்.

சீதாலட்சுமி இராமசாமி கல்லூரி என்று திருச்சியில் ஒன்று இருக்கிறது. அங்கு விழாவிற்கு பெரியார் போயிருக்கிறார். அந்த கல்லூரி தாளாளர் ராமசாமி அய்யரை, அய்யா வெகுவாக புகழ்ந்து பேசினார். 

பிறகு பெரியாரிடம் நண்பர்கள் நீங்கள் காலமெல்லாம் யாரை எதிர்க்கிறீர்களோ அவர்களை இவ்வளவு பாராட்டி பேசுனீர்களே ஏன் என்று கேட்டனர். 

அதற்கு தந்தை பெரியார்  

"யாரா இருந்து நமக்கு என்னங்க, நம்ம பிள்ளைகள் படிப்பதற்கு கல்லூரி கட்டியிருக்கிறார். அதுவும் பெண்பிள்ளைகள் படிப்பதற்கு கட்டியிருக்கிறார். காலமெல்லாம் அதுக்குதானே பாடுபடறேன். அவர்களுக்காக ஒரு கல்லூரி கட்டியிருக்கிறப்போ நாத்திகராயிருந்தா என்ன, ஆத்திகரா இருந்தா என்ன? அவர் என்ன ஜாதியா இருந்தா என்ன? 

பெண் பிள்ளைகளை படிக்க வைக்கிற யாராயிருந்தாலும் உயர்ந்தவர்கள் தான், 

பாராட்டப்பட வேண்டியவர்கள்தான். அந்த கடமை நமக்கு இருக்கிறது "என்றார். 

அதனால்தான் அவர்" பெரியார்"


கீழ் வெண்மணி

வெண்மணி தீ வைப்பு கொ டூரம் நடந்து முடிந்து 55 ஆண்டு கடந்துவிட்டது. 


ஆனால் இன்றும் அந்த நிகழ்ச்சியின் கொடூரத்தை கேட்பவர்கள் மனம் அதிர்ச்சிக்குள்ளாகும். 1968இல் வெண்மணியில் 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவம் நடந்தபோது செய்திகள் பத்திரிகைகளில் உடனே வெளி வரவில்லை. 

அதற்கு காரணம் இந்த கொடுமைகளை  நிலப்பிரபுக்களும், அவர்களுடைய கைக்கூலிகளும், காவல்துறையின் ஒத்துழைப்போடு இவைகளை செய்ததினால் அச்செய்திகளை வெளிவர விடாமல் தடுக்க முயற்சித்தார்கள். அதை மீறி அந்த செய்தி வெளியே கொண்டு வரப்பட்டது. அதற்கு செங்கொடி இயக்கத்தின் தலைவர்களுக்குதான் மிகப் பெரிய பங்குண்டு. தோழர்கள் பி.ராமமூர்த்தி  போன்ற தலைவர்கள் இந்த கொடுமைகளை வெளியே கொண்டு வர பெரும் முயற்சி செய்தனர்.

நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் எழுப்பிய கேள்விகளின் மூலம் தான் இந்த செய்தி தேசம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. அந்த செய்தியை படித்த மக்கள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. 

ஏனென்றால் அந்த கொடூரம் எந்த இரும்பு இதயமாக இருந்தாலும் அதையும் உருகிடச் செய்திடும். அந்த விதத்தில் அந்த நிகழ்வுகளை நிலப்பிரபுத்துவ குண் டர்கள் செய்திருந்தார்கள். ஆனால் அந்த மிருகங்களுக்கு அப்படிப்பட்ட இதயமில்லை.

குழந்தைகள், வயது முதிர்ந்த பெண்கள், முதியோர் என 44 பேர். இவர்கள் யாராவது அடித்தால் கூட  தப்பி ஓடுவதற்கு  உடலிலே தெம்பு இல்லாதவர்கள். 

அடித்தால் அழு வதை தவிர வேறு எதுவும் செய்ய இயலாதவர்கள். நிலப்பிரபுத்துவ குண்டர்கள் தீப்பந்தங்களோடு, ஆயுதங்களோடு, பெரும் கூச்ச லோடு வீதியிலே ஓடி வந்த போது காவல்துறையும் அவர்களுக்கு பின்னால் பாதுகாப்பாக வருவதை கண்ட வெண்மணி கிராமத்து மக்கள் ஓட முடிந்தவர்கள் வயல்காட்டுக்குள் ஓடினார்கள். ஓட முடியாத அந்த 44 பேரும் ஒரு குடிசைக்குள் தஞ்ச மடைந்தார்கள். 

அவர்கள் தஞ்சம் புகுந்த வீடுதான்  வெளியே தாழ்ப்பாள் போடப் பட்டது. கூரையின் மீது தீப்பந்தங்கள் வீசப்பட்டன. 

அவை பற்றி எரிவ தற்காக கூரையின் மீது வைக்கோல் கட்டுகளை போட்டார்கள். மண் ணெண்ணெய்யும் ஊற்றினார்கள். அது கொடூரமாக பற்றியெறிந்தபோது உள்ளே இருந்து குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் கத்தி கூப்பாடு போடும் சத்தம் வெளியே வந்தது. 

அதைக்கேட்டு வெளியே இருந்த காலிக்கூட்டம் கெக்கலித்து எக்காளமிட்டுச் சிரித்தது. குழந் தைகள் பற்றியெரியும் நெருப்பில் கதறித்துடித்த போது தன் குழந்தை யை கையில் வைத்திருந்த தாய் மார்கள் பற்றியெரியும் கூரைக்கு வெளியே குழந்தையை தூக்கியெ றிந்தார்கள்.

 தன் குழந்தையாவது பிழைத்துக் கொள்ளட்டும் என்று  நினைத்து வெளியே  எறிந்தார்கள். ஆனால் அந்த குழந்தையின் உடல்கள் நெருப்பை கடந்து வெளியே சென்ற ஒரு சில நொடி களிலே இரண்டு துண்டுகளாக்கப் பட்டு மீண்டும் அந்த வீட்டுக்குள்ளே வந்தன. 

 பிஞ்சுக் குழந்தைகளை வெட்டி அந்த தீக்குள் போட்டது காட்டு மிராண்டிக் கூட்டம். மொத்த குடிசை யும் எரிந்து அழுகை ஒலி நின்று அடங்கிய பின்புதான் அந்த இடத்தைவிட்டு அந்த அயோக்கிய காட்டுமிராண்டிக் கூட்டம் கலைந்து சென்றது. காவல்துறையும் அவர்கள் பின்னே சென்றது. 

தமிழகத்தின் அன்றைய தஞ்சை மாவட்டம் கீழத் தஞ்சையில் நிகழ்ந்த பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக நடந்த தொடர் போராட்டத் தின் உச்சமே இந்த வெண்மணி தீவைப்பு. 1936,38 காலகட்டத்திலேயே கீழத்தஞ்சை பகுதியில் ஜமீன்தார் முறையை எதிர்க்கும்  குத்தகை விவசாயிகளிடம்  அதிகபட்சமான குத்தகை வாங்கினர். ட

அந்த குத்த கையை அளப்பதற்கு அவர்கள் பெரிய மரக்காலை பயன்படுத்தினர். இவை அந்த குத்தகை விவசாயி களின் மொத்த உழைப்பையும், உற்பத்தி செய்த மொத்த நெல்லை யும் கொள்ளையடித்துச் செல்லும் நடைமுறையாக இருந்தது அதனால் அந்த சிறு குறு விவசாயிகள் ஒன்று பட்டு ஆங்காங்கே விவசாயிகள் சங்கம் என்ற பெயரிலே சில அமைப்பு களை உருவாக்கினார்கள்.

 அந்த சங்கத்தின் பிரதான கோஷம் ஜமீன்தாரித்துவம் ஒழிக, நிலப்பிரபுத் துவம் ஒழிக, கூலி தொழிலாளிக்கு ஊதியத்தை உயர்த்திக் கொடு  போன்றவையே. இதற்கு முன் முயற்சி எடுத்தவர் மணலூர் மணி யம்மை. அவருடைய வீட்டில்தான் இதற்கான அமைப்புக் கூட்டங்கள் நடந்ததாக தகவல்கள் உள்ளன. 

அவர் பல இடங்களில் சிறு, குறு, விவசாயிகள், குத்தகை விவசாயி களை திரட்டி ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளார். 

சில பகுதிகளில் மாநாடுகளையும் நடத்தியுள்ளார். தாலுகா, வட்டார அளவில் இந்த கூட்டங்கள் நடந்துள்ளன. 

தோழர் ஜீவா, மணலி கந்தசாமி போன்ற செங்கொடி இயக்க  தலைவர்களும் பங்கெடுத்துள்ளார் கள். ஆனால் அந்த மணியம்மை அவர்களை நிலப்பிரபுக்கள் கொன்றுவிட்டு மான் முட்டி கொம்பு கிழித்து செத்துவிட்டார் என்று கூறி விட்டனர்.

 போலீசும் அப்படியே பதிவு செய்து வழக்கை முடித்தார் கள்.

ஆனால் கீழத் தஞ்சையில் நிலவிய பண்ணையடிமை முறையில் தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்த மனித உரிமையும் இல்லாதவர்களாக, மிருகங்களை விட கேவலமாக நடத்தப்பட்டார்கள். 

குறிப்பாக தலித் மக்கள் சாதிய ஒடுக்குமுறை பாதிப்பின் உச்சத்தில் இருந்தார்கள் அவற்றை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்தது செங்கொடி இயக்கம்தான்.

 இந்தக் கொடுமைகளை தடுத்து நிறுத்திட பாதிக்கப்பட்ட மக்களையே தட்டி யெழுப்ப வேண்டுமென்று அன்று தமிழகத்தில் உருவாகியிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை முடிவு செய்து தோழர் பி.சீனிவாசராவை அனுப்பி வைத்தது. 1942க்கு பின்பு தான் தலித் மக்கள் பண்ணையடிமை முறையை எதிர்த்து அமைப்பு ரீதியாக திரட்டப்பட்டார்கள். 

தஞ்சை தரணியில் தோழர் சீனி வாசராவ் காலெடுத்து வைத்தார்.  தென்பறையில் விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் செங்கொடி  இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தின் மூலம்தான் தலித் மக்களை அணி திரட்டும் பணி துவக்கப்பட்டது.

 1945லிருந்து 1952 வரையிலும் நிலப்பிரபுக்களும் பண்ணை முதலாளிகளும் இவர்களை பாதுகாத்து வந்த அன்றைய அதிகார வர்க்கமும், ஆட்சியாளர்களும் நடத்திய கொடுமைகளும் சொல்லில் அடங்கா தவை. அமைப்பு ரீதியாக பண்ணைய டிமைகளை திரட்டி போராடிய தலை வர்களை  தேடி தேடிச் சென்று கொன் றார்கள். 

அதனால்தான் அந்த 1945-1952 வரையிலான அந்த காலத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். வெளியே தெரிந்த கொலைகள் சில. 

அடையாளம் காணமுடியாமலே கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட நிகழ்வுகள் பல. இந்த போராட்டங்கள் 1968 வரை தொடர்ந்தன.

அதன் உச்சகட்டமாக அறுவடை கூலி உயர்வு இயக்கம், அதையொட்டி வெளியூர் ஆட்களை கொண்டு வந்து அறுவடை செய்வதற்காக நிலப் பிரபுக்கள் எடுத்த முயற்சி, இதை எதிர்த்து செங்கொடி இயக்கம் நடத்திய போராட்டங்கள், இதன் ஒரு பகுதிதான் வெண்மணி. 

வெண்மணி கூலித் தொழிலாளி களுக்கு வேலை தர மறுத்து வெளியூர் ஆட்களை கொண்டு வந்து அறு வடையை துவக்கியதை எதிர்த்ததி னால் தான் வெறிகொண்ட நிலப்பிர புத்துவ கூட்டம் கொடூரமான காட்டு மிராண்டித்தனத்தில் ஈடுபட்டு 44 பேரை உயிரோடு எரித்து சாம்ப லாக்கியது.

வெண்மணி எரிப்பை தொடர்ந்து நடந்த போராட்டங்கள் தஞ்சைத் தரணியில் அதிகரித்த காலத்தில், தமிழகம் முழுவதும் எதிரொலித்தன. 

இதையடுத்து அன்றைய திமுக அரசு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்காகவும், அதுகுறித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று ஐஏஎஸ் அதிகாரி கணபதியா பிள்ளையை தமிழக அரசு  நியமித்தது. 

அவர்தான் கீழத் தஞ்சை விவசாய கூலித் தொழி லாளியின் வாழ்நிலை, அவர்களு டைய பிரச்சனைகள் குறித்து ஒரு விரிவான ஆய்வு செய்து தமிழக அரசுக்கு ஒரு அறிக்கையினை சமர்ப்பித்தார். 

ஆனால் அதற்கு முன்பே 1944லிலேயே பண்ணை யடிமை சமுதாயத்தில் அமல்படுத் தப்பட்ட சாணிப்பால் கொடுத்து சவுக்கால் அடிப்பது என்ற கொடூ ரத்தை நிறுத்தவேண்டும், அது சட்ட விரோதமானது என்ற ஒரு ஒப்பந்தம் மன்னார்குடியிலே நடந்த முத் தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டி ருந்தது. 

கணபதியா பிள்ளை ஆய்வு செய்கிற காலத்தில் ஏறத்தாழ செங்கொடி இயக்கத்தின் வலிமை மிக்க போராட்டம் பண்ணையடிமை முறையை முடிவுக்கு கொண்டு வந்திருந்தது.

 கணபதியாபிள்ளை கமிஷன்தான் கீழத் தஞ்சையில் விவசாய கூலித் தொழிலாளிகள் அரசு ஊழியர்களின் ஒரு கடை நிலை ஊழியர்களுக்கான உரிமை கள் கூட இல்லாதவர்களாக நடத்தப் படுகிறார்கள். 

இவர்களுக்கு என்று ஒரு வேலைநேரம், ஒரு நிர்ணயிக்கப்பட்ட கூலி, சட்டக்கூலி, ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்பளம் எவ்வளவு என்பதை அரசு தீர்மானிக்க வேண்டுமென்று  சிபாரிசு செய்தது. 

இன்று கீழத் தஞ்சை தொழிலாளி களோ, தலித் மக்களோ சுதந்திரமாக நடமாடக்கூடியவர்களாக, அமைப்பு ரீதியாக போராடக்கூடியவர்களாக தாங்கள் விரும்புகிற இயக்கங்களில் சேர்ந்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவர்களாக மாறியிருக்கிறார்கள். 

பொருளாதார சுதந்திரம், சமூக ஒடுக்குமுறை, வேலை போன்ற பிரச்சனைகள் பொதுவாக தேசம் முழுவதும் இருப்பதுபோல் கீழத் தஞ்சை பகுதியிலும் இருக்கிறது. 

ஆனால் பண்ணையடிமை முறை கொடுமை தகர்த்து நொறுக்கப்பட்டி ருக்கிறது. வெண்மணியே அதன் உச்சகட்ட தாக்குதலாக இருந்துள் ளது. அது நிகழ்ந்து 55ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

 இன்று விவசாயத் தொழிலாளிக்கு கிராமப்புற உழைப்பாளிகளுக்கு வேலை, கூலி, சமூக ரீதியான புறக்கணிப்பு அரசின் நிதி ஒதுக்கீட்டில் கூட தலித்களுக்கான மேம்பாட்டு நிதிகள் முழுமையாக ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. 

செய்கின்ற நிதி ஒதுக்கீடும் அவர்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என்ற பிரச்சனை முன்னுக்கு வந்துள்ளது. 

இவைகளை இன்றைக்கு கையி லெடுக்க வேண்டிய அவசியம் கிராமப்புற உழைப்பாளிகளுக்கும், விவசாயத் தொழிலாளிகளுக்கும், தலித் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 

-தீக்கதிர்.

------------------------------------------------

இந்­தி­யா­வுக்கு ஏற்­பட்­டுள்ள பேரா­பத்து பா.ஜ.க.

இந்­தி­யா­வைக் காப்­பாற்ற வந்­தி­ருக்­கும் ஆபத்­பாந்­த­வன் ‘இந்­தியா’ கூட்­டணி. இந்­தக் கூட்­ட­ணி­யின் வெற்­றி­யில்­தான் ‘இந்­தி­யா’­வின் எதிர்­கா­லம் அடங்கி இருக்­கி­றது.

2014 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த பா.ஜ.க., 2019 ஆம் ஆண்டு மீண்­டும் ஆட்­சிக்கு வந்­த­தும் ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வில் நம்மை எதிர்க்க இனி யாரும் இல்லை என்ற மிதப்­பில் கெட்ட ஆட்­டம் ஆடி வந்­தது. 

ஆனால் அது அடைந்­ததோ அதி­க­மாக தோல்­வி­க­ளைத்­தான்.

கடந்த ஏழு ஆண்டு காலத்­தில் பல்­வேறு மாநில சட்­ட­ச­பைத் தேர்­தல்­க­ளில் பா.ஜ.க. தோல்­வியை அடைந்­துள்­ளது.

 தமிழ்நாட்­டில் தோல்வி, கேர­ளா­வில் தோல்வி, பீகா­ரில் தோல்வி, மேற்கு வங்­கத்­தில் தோல்வி, ஜார்­கண்ட் மாநி­லத்­தில் தோல்வி, ஒடி­சா­வில் தோல்வி, சட்­டீஸ்­க­ரி­லும் தோல்வி, தெலுங்­கா­னா­வில் தோல்வி, ஆந்­தி­ரா­வில் தோல்வி, பஞ்­சாப் மாநி­லத்­தில் இரண்டு முறை தோல்வி, டெல்­லி­யில் இரண்டு முறை தோல்வி, ராஜஸ்­தா­னில் தோல்வி -–- என சட்­ட­மன்­றத் தேர்­தல்­க­ளில் தோற்ற கட்­சி­தான் பா.ஜ.க.

கடந்த செப்­டம்­பர் மாதம் நடந்த பல்­வேறு இடைத் தேர்­தல்­க­ளில் ‘இந்­தியா’ கூட்­ட­ணிக் கட்­சி­கள் வெற்றி பெற்­றன.

 6 மாநி­லங்­க­ளில் உள்ள 7 சட்­டப்­பே­ர­வைத் தொகு­தி­க­ளுக்­கான இடைத்­தேர்­தல் அது. உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம் கோசி தொகு­தியை சமாஜ்­வாதி கட்­சி­யும், கேரள மாநி­லத்­தில் உள்ள புதுப்­பள்ளி தொகு­தியை காங்­கி­ரஸ் கட்­சி­யும், மேற்கு வங்க மாநி­லத்­தில் உள்ள துப்­குரி தொகு­தியை திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சி­யும், ஜார்­கண்ட் மாநி­லத்­தில் உள்ள தும்ரி தொகு­தியை ஜார்­கண்ட் முக்தி மோர்ச்­சா­வும் கைப்­பற்­றி­யது. காங்­கி­ரஸ், சமாஜ்­வாதி, திரி­ணா­மூல் காங்­கி­ரஸ், ஜார்­கண்ட் முக்தி மோர்ச்சா ஆகி­யவை ‘இந்­தியா’ கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்ள முக்­கிய கட்­சி­கள் ஆகும்.

கடந்த மே மாதம் நடந்த கர்­நா­டக மாநி­லத் தேர்­த­லில் பா.ஜ.க. தோற்­றது. லடாக் கார்­கில் தன்­னாட்சி மலை மேம்­பாட்டு கவுன்­சி­லுக்கு நடை­பெற்ற தேர்­த­லில், ‘இந்­தியா’ கூட்­டணி மாபெ­ரும் வெற்றி பெற்­றுள்­ளது.

 1 இடத்தை மட்­டும் வெற்றி பெற்று பா.ஜ.க. படு­தோல்­வி­ய­டைந்­துள்­ளது.

இப்­போ­து­தான் மத்­தி­யப்­பி­ர­தே­சம், ராஜஸ்­தான், சட்­டீஸ்­கர் ஆகிய மூன்று மாநி­லங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது.

 இந்த வெற்­றி­யும் மாபெ­ரும் வெற்றி அல்ல என்­பதை பா.ஜ.க. வாங்­கிய புள்­ளி­வி­ப­ரங்­களே சொல்­லும்.

ராஜஸ்­தான் மாநி­லத்­தில் பா.ஜ.க. வென்­றி­ருந்­தா­லும், காங்­கி­ரஸ் கட்­சிக்­கும் பா.ஜ.க.வுக்­கு­மான வாக்கு வித்­தி­யா­சம் 10 லட்­சம் பேர்­தான். சட்­டீஸ்­க­ரில் 6 லட்­சம் வாக்­கு­கள்­தான்.

 மத்­தி­யப் பிர­தே­சத்­தில் மட்­டும்­தான் 35 லட்­சம் வாக்­கு­களை கூடு­த­லாக பா.ஜ.க. பெற்­றுள்­ளது. ராஜஸ்­தா­னில் காங்­கி­ர­ஸுக்­கும் பா.ஜ.க.வுக்­கும் 2 விழுக்­காடு வாக்­கு­கள்­தான் வேறு­பாடு.

 சட்­டீஸ்­க­ரில் 4 விழுக்­காடு, மத்­தி­யப் பிர­தே­சத்­தில் 8 விழுக்­காடு வாக்­கு­கள் வேறு­பாடு ஆகும். தெலுங்­கா­னா­வில் பா.ஜ.க.வை விட 26 விழுக்­காடு அதி­க­மான வாக்­கு­களை காங்­கி­ரஸ் பெற்­றுள்­ளது. தெலுங்­கா­னா­வில் பா.ஜ.க. அடைந்த மாபெ­ரும் தோல்­வியை மற்ற மாநி­லங்­க­ளில் காங்­கி­ரஸ் அடைந்­து­வி­ட­வில்லை என்றே சொல்ல வேண்­டும்.

 பா.ஜ.க.வை தெலுங்­கானா நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது. மிசோ­ர­மில் பா.ஜ.க.வின் கூட்­ட­ணிக் கட்­சியே பா.ஜ.க.வை நிரா­க­ரித்­தது.

 அப­ரி­த­மான –- மகத்­தான வெற்றி என்று சொல்­லத் தக்க வாக்­கு­களை பா.ஜ.க. பெற­வில்லை.

பா.ஜ.க.வுக்கு எதி­ரான வாக்­கு­களை ஒரு­மு­கப்­ப­டுத்­தி­னால் நிச்­ச­யம் பா.ஜ.க.வை வீழ்த்த முடி­யும் என்­பதே முழு­மு­தல் உண்மை ஆகும். 

இதற்­கா­கவே ‘இந்­தியா’ கூட்­டணி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

பாட்னா, பெங்­க­ளூரு, மும்பை ஆகிய நக­ரங்­க­ளில் நடந்த ‘இந்­தியா’ கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் கூட்­டம் கடந்த 19 ஆம் தேதி அன்று டெல்­லி­யில் நடந்­துள்­ளது. இக்­கூட்­ட­மா­னது முக்­கி­ய­மான நகர்வை எட்டி இருக்­கி­றது. 

பா.ஜ.க.வை வீழ்த்­தும் நோக்­கத்­தைக் கொண்ட கட்­சி­கள் அனைத்­தும் சேர்ந்து கூட்­டணி அமைத்­துப் போட்­டி­யி­டு­வது என இக்­கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

 இக்­கூட்­ட­ணிப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­ வ­தற்கு காங்­கி­ரஸ் கட்சி ஐவர் குழுவை அமைத்­துள்­ளது.

பாட்­னா­வில் நடந்த முதல் கூட்­டத்­தில் இருந்து இதனை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள் வலி­யு­றுத்தி வந்­துள்­ளார்­கள்.

 “தமிழ்­நாட்­டில் நாங்­கள் கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­ட­தைப் போல மாநில அள­வில் ‘இந்­தியா’ கூட்­ட­ணி­யா­னது ஒன்­று­பட்­டுப் போட்­டி­யிட வேண்­டும். எந்த மாநி­லத்­தில் எந்­தக் கட்சி செல்­வாக்­கு­டன் இருக்­கி­றதோ அந்­தக் கட்சி தலை­மை­யில் கூட்­டணி அமைத்­துக் கொள்­ள­லாம். தொகு­திப் பங்­கீ­டு­க­ளைச் செய்து கொள்­ள­லாம்.

இந்­தக் கூட்­ட­ணி­யில் அங்­கம் வகிக்­கும் இரண்டு கட்­சி ­கள் –- ஒரு மாநி­லத்­தில் சம விகித செல்­வாக்­கு­டன் இருந்­தால் அந்த மாநி­லங்­க­ளில் கூட்­ட­ணித் தலைமை என இல்­லா­மல் தொகு­திப் பங்­கீடு என்ற வகை­யில் பங்­கீ­டு­க­ளைச் செய்து கொள்­ள­லாம்.

 ஒரு கட்­சித் தலை­மை­யில் கூட்­டணி – -தொகு­திப் பங்­கீடு ஆகி­யவை செய்ய முடி­யாத அள­வுக்கு இரண்டு கட்­சி­க­ளுக்­குள் கொள்கை மோதல் இருக்­கு­மா­னால் பொது வேட்­பா­ளர் என்­பதை அறி­விக்க வேண்­டும். எங்­கும் எந்­தச் சூழ­லி­லும் மதச்­சார்­பற்ற கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் அர­சி­யல் இலக்­குக்கு எந்­த­வொரு தொகு­தி­யி­லும் இடை­யூறு ஏற்­ப­டக் கூடாது.

 அதில் கவ­ன­மாக இருக்க வேண்­டும். நமது அணி­யில் சேராத –- ஆனால் பா.ஜ.க.வை கடு­மை­யாக எதிர்க்­கும் மற்­றக் கட்­சி­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்­டும். 

பா.ஜ.க.வை தனி­மைப்­படுத்­தும் வகை­யில் –- பா.ஜ.க.வுக்கு எதி­ரான கட்­சி­களை முடிந்­த­வரை இந்த அணி­யில் சேர்த்­தாக வேண்­டும்” என்­பதை மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் வலி­யு­றுத்தி வந்­தார்­கள்.

 இதற்­கான ஒரு வடி­வத்தை டெல்­லி­யில் நடை­பெற்ற ‘இந்­தியா’ கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் கூட்­டம் எட்­டி­யுள்­ளது.

‘மாநில ரீதி­யாக பேச்­சு­வார்த்­தை­யைத் தொடங்­கு­வோம். ஏதா­வது பிரச்­சினை ஏற்­பட்­டால் ‘இந்­தியா’ கூட்­டணி தீர்வு காணும்’ என்று அகில இந்­திய காங்­கி­ரஸ் தலை­வர் கார்­கே­வும் தெளி­வு­ப­டுத்தி விட்­டார்.

 தொகு­திப் பங்­கீட்டை உட­ன­டி­யா­கத் தொடங்க வேண்­டும் என்று மம்­தா­வும் கோரிக்கை வைத்­தார். 

இதனை கூட்­ட­ணித் தலை­வர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுச் செயல்­ப­டத் தொடங்கி விட்­டார்­கள்.

டெல்­லியை அடைந்­துள்­ளது ‘இந்­தியா’ கூட்­டணி.

-------------------------------------------------



  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?