இவர்களுக்கு இது போதும்!

 தமிழ்நாடு முழுவதும் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.

மக்களவையில் மஞ்சள் நிறப் புகைக் குண்டுடன் அத்துமீறிய விவகாரம்.கைதான 4 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்.டெல்லி நீதிமன்றம் உத்தரவு.உபா சட்டத்தின் கீழ் வழக்கு.

‘மிக்ஜாம்’ புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட தற்காலிக நிவாரண தொகை ரூ.7,033 கோடி,நிரந்தர தொகையாக ரூ.12,659 கோடி வேண்டும். ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.

தமிழ்நாடு அரசின் வெள்ள நிவரணம் ரூ6000 பெறுவதற்கு வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.17ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில வழங்கல் ஆரம்பம்.

பகைக்குண்டு தாக்குதல் கண்டித்து நாடாளுமன்றத்தில் அமளி.  அமித் ஷாவிளக்கம்தர ,பதவி விலகக் கோரி குரல், அவைகளும் முடங்கின எம்.பி.க்கள் இடைநீக்கம். 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

கோவா விமான நிலையத்தில் CIS வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல.

பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

CISFவீரர்கள் அவர்கள் வேலையை மட்டுமே பார்க்க வேண்டும்.தேவையின்றி இந்தி பரப்பும் வேலையைச் செய்ய வேண்டாம்.

                                     -உதயநிதிஸ்டாலின்.

"புயல்முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது "- ஒன்றிய ஆய்வுக் குழுவின் தலைவர் தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு.

இவர்களுக்கு இது போதும்!

மத்திய பிரதேச புதிய முதல்வராக மோகன் யாதவ் நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் இரண்டு பேர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். 

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள்கலந்துகொண்டனர். 

புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகு நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், சில முக்கியபுரட்சிகரமான மக்கள் நலவாழ்வு முடிவுகள் எடுக்கப்பட்டன. 

அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துப் பேசிய முதல்வர் மோகன் யாதவ், ``திறந்தவெளியில் இறைச்சி மற்றும் முட்டை விற்பனை செய்ய தடைவிதிக்கப்படுகிறது.

 மோகன் யாதவ்

உள்ளாட்சி அமைப்பினரும், போலீஸாரும் டிசம்பர் 15-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்.

அயோத்தியிலுள்ள ராமர் கோயிலுக்குச் செல்பவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்போம். அனைத்து  வழிபாட்டுத்தலங்களிலும்குறிப்பாக மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகள் அனுமதி பெற்று பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வுசெய்ய, பறக்கும்படை ஒன்று அமைக்கப்படும்.

அந்தப் படை மூன்று நாள்களில் ஆய்வுசெய்து, தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும். அதோடு ஒலிபெருக்கிகள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் செயல்படுகின்றனவா என்று ஆய்வுசெய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக ஒலிபெருக்கி பயன்படுத்தத் தடைவிதிக்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

புதிதாக ஆட்சியமைத்த ஆட்சியாளர்கள் இலவச பேருந்து பயணம்,உரிமைத் தொகை என மக்களுக்கு சலுகைகளை அறிவிக்கும் போது பா.ஜ.க.அரசு முக்கிய,அவசர நடவடிக்கைகளே அவர்களுக்கு வாக்களித்த வட வாக்காளர்களுக்கு போதும் என முடிவெடுத்துள்ளது போல?



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?