மோசமான விளைவுகள்.

 சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 90.06 சதவீதம் நீர் இருப்பு.குண்டு

டிசம்பர் 6-ம் தேதியில் இருந்து 28,563 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி.


செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து.
"வெள்ள பாதிப்பு பற்றி பேச எடப்பாடிக்கு உரிமையில்லை": -அமைச்சர் மா.சுப்பிரமணியன் .

"இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை" - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.
அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு.

25 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.

பர்லியாறு பகுதியில் பெய்து வரும் கனமழையால் உதகை-குன்னூர் சாலையில் மண் சரிவு .

நடுநிலை நக்கி ஊடகம்
விளம்பரப் வெறியர் பிரதமர் மோடிக்கு, விளம்பர ஏஜெண்டாக யு.ஜி.சி. மாறியது ஏன்? பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செல்ஃபி பாயின்ட் அமைக்கும் அளவுக்கு கல்வியில் என்ன முன்னேற்றத்தை கொண்டு வந்தார் மோடி? என திமுக மாணவர் அணி யு.ஜி.சி ,க்கு கேள்வி எழுப்பியுள்ளது. 

மோசமான விளைவுகள்.

வலி நிவாரணத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும் மெஃப்தால் (MEFTAL) மாத்திரைகள் மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் மருத்துவர் அறிவுறுத்தல் இல்லாமல் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என இந்திய மருந்தியல் ஆணையம் (Indian Pharmacopoeia Commission - IPC) எச்சரிக்கை விடுத்துள்ளது.


அலோபதி மருந்தான மெஃப்தால் மாத்திரை மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி, தசைப்பிடிப்பு, தசைகளில் வலி உள்ளிட்டவற்றுக்கு எடுத்துக்கொள்கின்றனர்.


இதுதவிர, மூட்டுவலி, பல்வலி, முடக்குவாதம் போன்ற பிரச்னைகளுக்கான வலி நிவாரணியாகவும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து, சந்தைகளில் MEFTAL, MEFKIND, MEFANORM, IBUCLIN P போன்ற பெயர்களில் விற்பனையாகிறது. 

பொதுவாக அனைத்து மருந்தகங்களிலும் எளிதாகக் கிடைக்கும் என்பதால் மருத்துவர் பரிந்துரை இல்லாமலேயே இதை விற்கவும் வாங்கவும் செய்து வருகின்றனர்.


இம்மருந்தைப் பயன்படுத்துவது குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது‌.

அதில் மெஃப்தால் மருந்து தயாரிப்பில் அதிக அளவு மெஃபெனாமிக் என்ற அமிலம் சேர்க்கப்படுகிறது. இம்மருந்து உடலில் மோசமான எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். 


பகுப்பாய்வின்போது இம்மருந்தை உட்கொண்ட நபரின் உடலில் 6 முதல் 8 வாரங்களுக்கு பிறகு, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிக அளவு உற்பத்தியாகி ரத்தக் கோளாறுகள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.


மேலும் மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் ஒவ்வாமையான DRESS syndrome, தோல் எரிச்சல், சொறி, காய்ச்சல், நிணநீர் பிரச்னைகள் போன்ற எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் இம்மருந்தை மருத்துவர் அறிவுறுத்தலின்படி, மருத்துவர் பரிந்துரைக்கும் அளவே உட்கொள்ளவேண்டும்.


 மருத்துவர் அறிவுத்தல் இல்லாமல் வலிக்கு இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் மெஃப்தால் மாத்திரையை ஏற்கெனவே உட்கொண்டு எதிர்வினைகள் ஏற்பட்டிருந்தாலோ, இனி இம்மருந்தை உட்கொண்டு எதிர்வினைகள் ஏற்பட்டாலோ இந்திய மருந்தியல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.


அனைத்துவித அலோபதி மருந்துகளும் ஏதோவொரு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இந்த மெஃப்தால் மருந்து மோசமான எதிர்வினையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால்தான் இந்த மருந்தை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?