EVM 'மால் வெற்றி?

 2024 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் குதிரையேற்ற வீரர்களுக்கு தடை.

கவர்னர் பொறுப்பை மட்டும் தமிழிசை பார்த்தால் போதும்: -அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை இறுதி செய்ய இபிஎஸ்  திட்டம். தோற்பவருக்கு பேரவை தேர்தலில் ‘சீட்’ என திட்டம்.

ஆள்கடத்தல் என்று பிரான்சில் தடுக்கப்பட்ட விமானம் இந்தியா புறப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்துவாரில் நள்ளிரவு 1.10 மணிக்கு லேசான நிலநடுக்கம் .

"2 பேரை எரித்து கொன்றிருக்கேன்... கொலை எனக்கு புதுசு இல்ல’ சொந்த கட்சியின் கவுன்சிலரை மிரட்டிய அதிமுக திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ  மான்ராஜ் மீது அதிமுக கவுன்சிலர் கணேசன் போலீசில் பரபரப்பு புகார் .

"நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி ரூ.28 லட்சம் கோடியாக அதிகரிப்பு: ஆண்டு வளர்ச்சி விகிதம் 11.66% உயர்வு"; தமிழ்நாடு முதலீட்டுக் கழகம் தகவல்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு நிறைவேற்றிய 3 குற்றவியல் மசோதாவுக்கு திரௌபதி முர்முஒப்புதல்: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கே நாளில் விரைந்து நடவடிக்கை .

நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் ஆயுதம் தாங்கிய குழுவினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 113 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். பலர் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.

"வாக்குச்சீட்டு மூலம் நடக்கும் தேர்தல்களில் பாஜக தோல்வியடைகிறது.EVM ஐந்தாம் மூலம் நடப்பவற்றில் வெற்றி பெறுகிறது.E VMஇல்லாவிட்டால் பாஜகவும் இல்லாமல் போகும்."-மேனாள் நீதிபதி மார்க்கன்டேய கட்ஜூ.

மீண்டும் கொரோனா?


கோவிட்-19 என்றழைக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக மனிதகுலமே அச்சுறுத்தலுக்கு ஆளானது. ஆயிரக்கணக்கா னோர் இந்த திடீர் நோய்க்கு பலியானது மட்டு மின்றி ஏராளமானோர் கடும் பாதிப்புக்கு ஆளா கினர்.


 உலக முதலாளித்துவ  நாடுகள் இந்த கொடும்நோயை சமாளிக்க முடியாமல் திண றிய நிலையில் சோசலிச நாடுகள், மக்களை பாதுகாப்பதில் முன்னணியில் நின்றன. 

சுகாதாரப்பிரச்சனைகள் மட்டுமின்றி பொது முடக்கம் காரணமாக உலகப் பொருளாதாரமே மூச்சுத்திணறியது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். கொரோனாவுக்குப் பிறகு  வேலையில்லாத்  திண்டாட்டம் அதிகரித்துள்ள தாக தகவல்கள் கூறுகின்றன. 

பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் இன்னமும் கூட முழுமையாக மீள வில்லை. ஏராளமான சிறு-குறு நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் இயங்கத் துவங்கு வதில் இடர்பாடு உள்ளது. 

தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவமுறைகளால் கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்ட போதும் உருமாறிய கொரோனா நுண்கிருமி அவ்வப் போது மிரட்டிக் கொண்டிருக்கிறது. இப்போது புதிய உருமாறிய ஜெ.என்.1 என்றழைக்கப்படும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

 தென்கிழக்கு ஆசிய நாடுகள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்றும் கண்காணிப்பு முறைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

 இந்தி யாவிலும் கூட உருமாறிய கொரோனா நோயாளி களின் எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் அதிக மாக கண்டறியப்பட்டுள்ளது

.  குறிப்பாக தென்மாநிலங்களில் இந்த உரு மாறிய கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.

 தமிழ்நாட்டிலும் உரு மாறிய கொரோனா தாக்குதலுக்கு உள்ளான வர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.  கொரோனா நோய்த்தொற்று என்பது ஒரு கொடும் நினைவாகவே பதிவாகியுள்ளது.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், பாரம்பரிய  மருத்துவமுறைகளை மக்கள் நாடியதும் இந்நோயை  பின்னுக்குத் தள்ளிய போதும் திடீ ரென அதிகரிக்கும் எண்ணிக்கை குறித்து கவன மாக இருக்க வேண்டும். தடுப்பூசி தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும் தொடர் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் அவசியமாகிறது.

 கடந்த முறை ஒன்றிய அரசு காட்டிய அலட்சியம் நோய் பரவலை அதி கரித்தது. தொலைநோக்கு அடிப்படையில் உரிய திட்டங்கள் உருவாக்கப்படுவது அவசியம். கொரோனா போன்ற நோய்கள் திடீரென கண்ட றியப்பட்டாலும் அதற்கான பின்புலம் ஆராயப் பட வேண்டும்.

 இயற்கையை அழிக்கும் பெரு முதலாளித்துவ சமூக சுரண்டல் முறைக்கு எதிராகப் போராடுவதும் அவசியமாகும். 


 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?