என்ன ஒரு ஆணவம்?

 என்ன ஒரு திமிர்? 

இது முதல்முறையா?

 இல்லை. 

வெங்காயம் விலை இப்படி ஏறியிருக்கிறதே என்ன செய்யப் போகிறீர்கள்?” எனக் கேட்டால், “என் வீட்டில் வெங்காயம் போட்டு சமைப்பதில்லை” என பதில் வருகிறது. எங்கிருந்து வருகிறது இந்தத் திமிர்? 

அமைச்சர் உதயநிதிக்கு அறிவுரை சொல்லும் இந்த நிர்மலா, மக்களைச் சந்தித்து தேர்தலில் நின்று எம்.பி ஆகி மத்திய அமைச்சர் ஆனவரா?

 இல்லை. 

ஒரு நாளாவது ஒரே ஒரு நாளாவது அமைச்சர் உதயநிதியைப் போல கொரோனா காலத்திலோ வெள்ளப் பேரிடரின்போதோ மக்களோடு மக்களாக நின்றிருப்பாரா?

 அட சாதாரண மக்களில் யாரையாவது சந்திக்கவாவது செய்திருப்பாரா? இல்லை. காலம் காலமாக அவர் சார்ந்த சாதிக்கு இருக்கும் 100% இட ஒதுக்கீட்டின் காரணமாக குப்பை கோபுரம் ஏறியதைப் போல நேரடியாக உச்சாணிக் கொம்பில் அமர்ந்தவர் அல்லவா?

 அந்தத் திமிர்தான் இப்படிப்பட்ட உடல்பாவனை, முகபாவனையோடு பேச வைக்கிறது. “என்னை உங்களால் என்ன செய்துவிட முடியும்,” என்கிற பிறப்புத் திமிர் அது! நிற்க.

முதலில் ஒன்றிய அரசு என்பது என்ன?  ஒரு யூனியன். மாநில அரசுகள் கொடுக்கும்  வரிப்பணத்தை நிர்வகிக்கும் ஒரு சங்கம் அது. அதிலும் தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களின் வரியில்தான் ஒன்றிய அரசின் வண்டியே ஓடுகிறது.

 ஆனால் பிரிட்டிஷ்காரனைவிடவும் ஒரு காலனியாதிக்க மனப்பான்மையோடு இன்று நடந்துகொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. வெள்ளப்பேரிடரின் போது கூட ஒரு குரூர சாடிசத்தோடு நம் பணத்தைத் தராமல் இழுத்தடிக்கும் இந்த ‘புத்தியை’ என்ன சொல்வது? 

தமிழ்நாடு அரசு ஒரு பேரிடரின்போது தன் மக்களுக்காக தனக்குரிய நிதியைக் கேட்கிறது. தன் வரிப்பணத்தில் இருந்து கேட்கிறது. ஒரு ஒன்றிய அமைச்சர் “இதென்ன ATMஆ?” என திமிர்த்தனமாக கேட்கிறார். 

எந்த மானமுள்ள, சுயமரியாதையுள்ள தமிழனுக்கும் இது எவ்வளவு பெரிய கோபத்தை வரவழைக்கும். அதே கோபத்துடன்தான், “நாங்க எங்க வரிப்பணத்தைதான் கேட்டோம். அவர் அப்பா வீட்டு காசக் கேட்கல,” என பதில் சொன்னார் அமைச்சர் உதயநிதி. நிர்மலா சொல்லுவதைப் போல அப்பன், ஆத்தா என்று பேசவில்லை.

 ஆனால் நிர்மலாவின் தரத்திற்கு அப்பன் என ‘ன்’ போட்டிருந்தாலும் தவறில்லை என்றே தோன்றுகிறது. 

ஆக, அமைச்சர் உதயநிதி கேட்டதில் என்ன தவறு? உன் தான்தோன்றித்தனத்தையும் அதிகார அயோக்கியத்தனத்தையும் கேள்வி கேட்டால் எரிகிறதா? 

குனிந்து கும்பிடு போட்டு டேபிளுக்கடியில் பொறுக்கித் திங்கும் அரசியல்வாதிகளையே பார்த்துப் பழகிய ஒன்றிய ஃபாசிஸ்ட்டுகளுக்கு தமிழ்நாட்டின் அடையாளமான சுயமரியாதையைத் தாங்கிப் பேசும் அரசியல்வாதிகளைக் கண்டால் எரியத்தானே செய்யும்? அந்த எரிச்சலில் நிர்மலா போட்ட வெறியாட்டம்தான் இன்றைய பிரஸ் மீட். 

தாதுவருடப் பஞ்சத்தின்போது வெள்ளைக்காரன் கூட கொஞ்சம் நம்மீது இரக்கப்பட்டதாகச் சொல்வார்கள். 

ஆனால் இந்த உள்ளூர் வெள்ளையர்களுக்கு இருப்பதெல்லாம் அதிகாரத் திமிர், ஆணவம், குரூரம், சாடிசம் மட்டுமே! 

ஒருகாலத்தில் ஃபிரான்ஸ் நாட்டில் நம் நிர்மலாவின் அக்கா ஒருத்தி மகாராணியாக இருந்தாள். மக்கள் எல்லாம் உணவில்லாமல் செத்துக்கொண்டிருந்தபோது அதைப் பற்றி அந்த ராணியிடம் கேட்டார்கள். 

அதற்கு அவள், “அப்படியா? பிரட் வாங்கிச் சாப்பிட முடியவில்லை என்றால் கேக் வாங்கிச் சாப்பிடச் சொல்லுங்களேன்,” என்றாள் ஆணவமாக! 

அவளுக்கு எப்படிப்பட்ட முடிவு ஏற்பட்டது தெரியுமா? அதை நீங்களே தேடித் தெரிந்துகொள்ளுங்கள். 

வரலாறு சொல்வது ஒன்றே ஒன்றைதான். எல்லா ஃபாசிசத்துக்கும் ஒரு முடிவு உண்டு. ஃபாசிசத்தின் ஆட்சிகாலம் நீளநீள அதன் முடிவும் மிகக் கொடூரமாகவே இருக்கும்.  பாஜகவின், பாஜக ஆட்சியாளர்களின் முடிவை காலம் அப்படித்தான் எழுதப் போகிறது. நாம் பார்க்கத்தான் போகிறோம்.

-டான் அசோக்.


--------------------------------------------

சென்னையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கும் தலா ரூ.7,500 நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் 1.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்.

இந்திய நிதியமைச்சர் என்ற பொறுப்பை மறந்து சங்கித்தனமான அரசியல்  நோக்கத்துடன் நிர்மலா சீதாராமன் பேசுகிறார்.:- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் .

திருவொற்றியூர் பேருந்து நிலையும் அருகே 2 மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு. பேருந்து கண்ணாடிகளை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்டவரை காவல் துறையினர்கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

பாஜவுடன் கூட்டணி இல்லை என்று பழனிசாமி போடும் மோசடி நாடகத்தை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்.பேரிடர் காலத்தில் அரசுக்கு உதவாமல் கேவலமான அரசியல் செய்கிறார்;- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அமைச்சர்கள், அதிகாரிகள், பேரிடர் மீட்பு படை ஒன்றிணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 5வது நாளக மீட்பு பணிகள் தீவிரம்.இதுவரை 43 பேர் பலி. 4500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் .


 உதவி செய்யாவிட்டால் பரவாயில்லை. 

எரி­கிற வீட்­டில் எடுத்­தது வரை லாபம்” – - என்று தமி­ழில் இருக்­கும் பழ­மொ­ழிக்­குப் பொருத்­த­மா­ன­வர் ஒரு­வர் உண்­டென்­றால் அது தமிழ்­நாட்டு ஆளு­நர் ஆர்.என்.ரவி­தான். இயற்­கைப் பேரி­டர் காலத்­தி­லும் தமிழ்­நாடு அர­சுக்கு இடைஞ்­சல் ஏற்­ப­டுத்தி வரு­கி­றார். தொல்லை தரும் வகை­யில் செயல்­பட்டு வரு­கி­றார்.

4 ஆம் தேதி புயல் , மழை ஏற்­பட்­டது என்­றால் 7, 8 ஆம் தேதிக்­குள் இயல்பு வாழ்க்­கையை முழு­மை­யாக வழங்கி விட்­டோம். 

வீட்­டுக்கு 6 ஆயி­ரம் ரூபாய் என்­பதை நிவா­ர­ணத் தொகை­யாக முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்து, அத­னை­யும் நான்கு மாவட்ட மக்­கள் பெறத் தொடங்­கி­விட்­டார்­கள். இவை அனைத்­தும் தி.மு.க. அர­சுக்­கும், குறிப்­பாக முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும் மிகப்­பெ­ரிய நற்­பெ­யரை பொது­மக்­கள் மத்­தி­யில் ஏற்­ப­டுத்­தி­யது.

 இதனை தமிழ்­நாட்டு ஆளு­நர் ஆர்.என்.ரவி அவர்­க­ளால் தாங்­கிக் கொள்ள முடி­ய­வில்லை. பொறாமை, வஞ்­ச­கக் குணம் கொண்ட அவர், 19 ஆம் தேதி ராஜ்­ப­வ­னுக்கு ஒன்­றிய பாது­காப்­புப் படை­யின் அதி­கா­ரி­களை அழைத்து ஆலோ­சனை நடத்தி இருக்­கி­றார். 

எவ்­வ­ளவு வேக­மாக ஆளு­நர் செயல்­பட்­டுள்­ளார் பார்த்­தீர்­களா?

டிசம்­பர் 4 ஆம் தேதி அடித்த புய­லுக்­கான ஆலோ­ச­னைக் கூட்­டத்தை டிசம்­பர் 19ஆம் தேதி நடத்தி இருக்­கி­றார். ஆளு­நர் ரவிக்­காக, புயல் சென்­னை­யில் காத்­தி­ருந்­தால் என்ன ஆகி இருக்­கும்?

 மக்­கள் மத்­தி­யில் நற்­பெ­யர் எடுத்­துள்ள தமிழ்­நாடு அர­சின் பெய­ரைக் கெடுக்­கும் வாய்ப்­பாக இந்­தக் கூட்­டத்தை ஆளு­நர் நடத்தி இருக்­கி­றார். 

இது தொடர்­பாக ஆளு­நர் மாளிகை விடுத்­துள்ள பத்­தி­ரிக்­கைச் செய்­தி­யா­னது, கெட்ட எண்­ணம் கொண்­ட­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

போதிய ஒருங்­கி­ணைப்பு இல்லை - – என்று யாரோ சொன்­ன­தாக அந்த பத்­தி­ரிக்­கைச் செய்தி சொல்­கி­றது.

 தலை­ந­க­ரைச் சுற்­றி­யுள்ள மாவட்­டங்­க­ளில் ஏற்­பட்ட பாதிப்­பைப் போல தென் மாவட்­டங்­க­ளி­லும் பாதிப்பு ஏற்­பட்ட நாளன்று–- ஒன்­றிய பாது­காப்­புப் படை­யி­னரை அழைத்து இப்­படி ஒரு கூட்­டத்­தைக் கூட்டி குழப்­பத்தை ஏற்­ப­டுத்­திய ஆளு­நர், அந்த பாது­காப்­புப் படை­யி­ன­ரைச் செயல்­பட விடா­மல் சதி செய்­தி­ருக்­கி­றார்.

தான் ஏதோ மாநி­லத்­தின் அதி­ப­ரைப் போல ஆர்.என்.ரவி நினைத்­துக் கொள்­கி­றார்.

14.9.2023 அன்று சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் தலை­மைச் செய­லா­ளர் தலை­மை­யில் ஒரு கூட்­டம் நடை­பெற்­றது. வரு­வாய் மற்­றும் பேரி­டர் மேலாண்­மைத் துறை­யின் சார்­பில் இக்­கூட்­டம் நடை­பெற்­றது. 

வட­கி­ழக்­குப் பருவ மழையை எதிர்­கொள்­வது குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டம் இது.

இந்­தக் கூட்­டத்­தில் தமிழ்­நாடு அர­சின் உய­ர­தி­கா­ரி­கள் அனை­வ­ரும் கலந்து கொண்­டார்­கள். அவர்­க­ளோடு இந்­திய ராணுவ அதி­கா­ரி­க­ளும் கலந்து கொண்­டார்­கள். விமா­னப்­படை, கடற்­படை அதி­கா­ரி­க­ளும் கலந்து கொண்­டார்­கள்.

 கட­லோ­ரக் காவல் படை அதி­கா­ரி­க­ளும் வந்­தி­ருந்­தார்­கள். இந்­திய வானிலை ஆய்வு மைய அதி­கா­ரி­க­ளும், ஒன்­றிய நீர்­வள ஆணைய அதி­கா­ரி­க­ளும், தேசிய பேரி­டர் மீட்­புப் படை அதி­கா­ரி­க­ளும் கலந்து கொண்­டார்­கள்.

 இது­தான் ஒருங்­கி­ணைப்பு என்­பது. இந்­தக் கூட்­டம் நடந்த தேதி 14.9.2023. அதா­வது கடந்த செப்­டம்­பர் 14 ஆம் தேதியே ஒருங்­கி­ணைப்­புக் கூட்­டம் நடத்தி விட்­டது தமிழ்­நாடு அரசு.

19.9.2023 அன்று தலை­மைச் செய­ல­கத்­தில் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் தலை­மை­யில் வட­கி­ழக்­குப் பரு­வ­மழை முன்­னெச்­ச­ரிக்கை ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது. 

இந்­தக் கூட்­டம் நடந்த தேதி­யை­யும் கவ­னித்­தால்­தான் எவ்­வ­ளவு முன்­கூட்­டியே திட்­ட­மிட்­டுள்­ளார்­கள் என்­பது தெரி­யும்.

இப்­போது பெய்த மழை என்­பது வானிலை ஆய்வு மையத்­தா­லேயே கணிக்க முடி­யா­த­தாக இருந்­தது.

வர­லாற்­றில் இது­வரை இல்லை என்று சொல்­லத்­தக்க வகை­யில் மாபெ­ரும் இயற்­கைப் பேரி­ட­ரைச் சந்­தித்­தது தமிழ்­நாடு.

புயல் –- மழைக்கு முன்பு அரசு எடுத்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களும் - –மழை, வெள்­ளத்­துக்­குப் பிறகு அரசு எடுத்த நிவா­ரண நட­வ­டிக்­கை­களும் சேர்ந்து மாபெ­ரும் சேதத்­தைத் தவிர்த்­தது. இல்­லா­விட்­டால் மிகப்­பெ­ரிய சேதம் ஏற்­பட்டு இருக்­கும்.

ஒருங்­கி­ணைப்பு இல்­லா­விட்­டால் பெரும் சேதம் ஏற்­பட்டு இருக்­குமே? 

ஒருங்­கி­ணைப்பு இல்­லா­விட்­டால் நூற்­றுக்­க­ணக்­கான உயி­ரி­ழப்­பு­கள்­கூட ஏற்­பட்டு இருக்­குமே? 

ஒருங்­கி­ணைந்து செயல்­பட்­ட­தால்­தானே ஒன்­றி­யக் குழு­வும் தமிழ்­நாடு அர­சைப் பாராட்­டி­யது!

“அதி­கப்­ப­டி­யான தண்­ணீர் தேங்­கக் கார­ணம், கடல் மட்­டம் உயர்ந்து தண்­ணீரை உள்ளே விடா­மல் எதிர்த்­தது என்­பதை நான் அறி­வேன்” என்று மாண்­பு­மிகு இந்­தி­யப் பிர­த­மர் அவர்­களே, தி.மு.க. நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் டி.ஆர்.பாலு அவர்­க­ளி­டம் சொன்­னார்­களே. 

டெல்­லி­யில் இருந்த பிர­த­ம­ருக்­குத் தெரிந்­தது, கிண்­டி­யில் இருக்­கும் ஆளு­ந­ருக்­குத் தெரி­ய­வில்லை.

தென் மாவட்­டக் களத்­தில் 10 அமைச்­சர்­கள் – - 10 ஐ.ஏ.எஸ். அதி­கா­ரி­கள், ஐ.பி.எஸ். அதி­கா­ரி­கள் –- 10 ஆயி­ரம் அரசு ஊழி­யர்­கள்– -தமிழ்­நாடு தீய­ணைப்பு மற்­றும் மீட்­புப் பணித் துறை­யின் வீரர்­கள், பட­கு­கள், உப­க­ர­ணங்­கள் – -375 வீரர்­கள் கொண்ட தமிழ்­நாடு பேரி­டர் மீட்­புப் படை­யின் 15 குழுக்­கள்– - 275 வீரர்­கள் கொண்ட தேசிய பேரி­டர் மீட்­புப் படை­யின் 10 குழுக்­கள் -– கூடு­த­லாகதமிழ்­நாடு பேரி­டர் மீட்­புப் படை­யில் பயிற்சி பெற்ற 230பேர் –- இரா­ணுவ வீரர்­கள்168 பேர் இருந்­தார்­களே; இவர்­களை அனுப்பி வைத்­த­தும் முத­ல­மைச்­சர்­தானே?

 முத­ல­மைச்­ச­ருக்­குத் தெரி­யா­மல் ‘அரூப உரு­வம்’ அனுப்­பி­ய­தாக நினைக்­கி­றாரா ஆளு­நர்?

விமா­னப்­ப­டை­யின் 4 ஹெலி­காப்­டர்­கள், கடற்­ப­டை­யின் 2ஹெலி­காப்­டர்­கள் மற்­றம் கட­லோ­ரக் காவல் படை­யின் 2 ஹெலி­காப்­டர்­கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

 யார் சொல்லி வந்­தார்­கள் இவர்­கள்?

 முத­ல­மைச்­சர் சொல்­லித்­தானே?

மீட்பு மற்­றும் நிவா­ர­ணப் பணி­க­ளுக்­குக் கூடு­தல் ஹெலி­காப்­டர்­கள் தேவைப்­ப­டு­வ­தால், அதி­க­பட்ச அள­வில் ஹெலி­காப்­டர்­களை அனுப்பி வைக்க வேண்­டும் என்று ஒன்­றிய பாது­காப்­புத் துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங் அவர்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் கடி­தம் எழுதி, அவ­ரும் அனுப்பி வைத்­தாரே? 

அதை­யா­வது கிண்­டி­யார் அறி­வாரா?

உச்­ச­நீ­தி­மன்­றம் இவ­ரது உச்­சந்­த­லை­யில் பல­முறை கொட்­டிய பிற­கும் அவர் திருந்­து­வ­தா­கத் தெரி­ய­வில்லை.

இவ்­வ­ளவு நல்­லெண்­ண­மும் அக்­க­றை­யும் இருந்­தி­ருக்­கு­மா­னால், பாதிக்­கப் பட்ட மக்­க­ளுக்­கான நிவா­ர­ணத் தொகையை ஒன்­றிய அர­சி­டம் இருந்து வாங்­கித் தரு­வ­தில் ஆர்.என்.ரவி ஆர்­வம் செலுத்த வேண்­டும். அதை விட்­டு­விட்டு, இயற்­கைப் பேரி­டர் நேரத்­தில் தனது சங்கித்தன வேலைகளால் இடையூறை ஏற்படுத்தக்கூடாது.உதவி செய்யாவிட்டால் பரவாயில்லை.

உபத்திரவம்(இடையூறு).செய்யாமல் இருங்கள் ஆர்யன்.ரவி.

•------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?