முதலை சிக்கியது.

 ஆந்திராவில் ஸ்பிரே சிலிண்டர் வெடித்து சிறுமி பலி.

மிக்ஜாம் புயல் பாதித்த சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் செலுத்தலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு .

76 பழைய சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.

உற்பத்தியாளர்களிடம் ரூ.38க்கு வாங்கப்படும் ஆவின் பால் கொள்முதல் லிட்டருக்கு ரூ.3 உயர்வு: #முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு .

நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நாளில் மக்களவையில் கலர் குண்டுவீசி தாக்குதல். 2 வாலிபர்களை எம்.பி.க்கள் மடக்கி பிடித்தனர் .சதிச் செயலில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேர் கைது .

எண்ணூர் முகத்துவாரத்தில் 75 படகுகள் 300 ஊழியர்கள் மூலம் எண்ணெய் கசிவை அகற்றும் பனி தீவிரம்: தமிழக அரசு.

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நாளை தொடக்கம்.. சிறந்த முதல் 3 தமிழ் படங்களுக்கு தலா ரூ.7 லட்சம் பரிசு.

சென்னை பாரிமுனையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் தீ விபத்து.

சென்னையில்.மழை வெள்ளத்தில் உலவிய முதலை சிக்கியது.

எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள 5,852 குடும்பங்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க சென்னைமாநகராட்சி பரிந்துரை.


நாடாளுமன்ற மக்களவையின் உள்ளேயும், வெளியேயும் அத்துமீறி தாக்குதல் நடத்தியவர்களை டெல்லி போலீசார் கைது செய்த அடுத்த சில மணி நேரங்களில் போராட்டக்காரர்கள் பயன்படுத்திய கீழே கிடந்த புகை உமிழும் கருவியை கைப்பற்றி அதனை பிடித்துக் கொண்டு செய்தி வெளியிட பத்திரிகையாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர்.

காவல்துறையினர் அதை ஆதாரம் எனக் கேட்டும் ஊடகத்தினர் தராமல் மேலும் தகராறில் ஈடுபட்டதால் அதை பறித்துச் சென்றனர்.அத்துடன், செய்தி சேனலில் நேரலையில் ஒளிபரப்பானது மடல்லாமல், சமூக வலைதளங்களில் வலாகி கேலிக்குள்ளாகியுள்ளது. நிருபர்களின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகை உமிழும் கருவியை பிடித்துக் கொண்டு நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் முழுவதையும் பத்திரிகையாளர் ஒருவர் விளக்க முற்படும்போது, ஒரு பெண்மணி உட்பட மேலும் சில பத்திரிகையாளர்கள் அந்த புகை உமிழும் கருவியை அவர் கையிலிருந்து பறிக்க முயற்ச்சிக்கின்றனர். அப்போது, அவர்கள் அனைவருமே கடுமையாகவும், ஆக்ரோஷமாகவும் காணப்படுகின்றனர்

----------------------------------------------------------------

 ------


---நாடாளு மன்றப் புகை விவகாரம்.ட்சிகநஆடாளுள் அனைத்தும் அங்கிருந்த மக்களவைக்குள்  (புதன்கிழமை நுழைந்த இருவரில் ஒருவரான மனோரஞ்சனின் தந்தை, , தனது மகன் டெல்லியில் இருப்பது தனக்குத் தெரியாது என்றும், அவருடைய செயல்களைக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.


இது குறித்து அவர், “அவன் தவறு செய்திருந்தால் அவன் என் மகன் அல்ல. ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன், அவர் நல்லவர். அவர் டெல்லியில் இருப்பது எனக்குத் தெரியாது. 

அவர் கல்லூரி நாள்களில் மாணவர் தலைவராக இருந்தார், 

ஆனால் அவருடைய தொடர்புகள் பற்றி எனக்குத் தெரியும். அவரது செயலை கண்டிக்கிறேன்” என்றார்.

தேசிய தலைநகரில் சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள், மைசூருவில் உள்ள விஜயநகர் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று அவரது மகனின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.

மைசூரு-குடகு எம்பி பிரதாப் சிம்ஹா அலுவலகத்தில் இருந்து மனோரஞ்சன் பார்வையாளர்களுக்கான அனுமதிச்சீட்டை பெற்றுள்ளார் என்பது விசாரணையில் இதுவரை தெரியவந்துள்ளது.

மேலும் தேவராஜ், ““நான்கு நாட்களுக்கு முன்பு, அவர் பெங்களூரு செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்… 

சம்பவம் குறித்து எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.

ஆனால் அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை. நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன், 

ஆனால் அவர் ஒரு நேர்மையான குடிமகன் மற்றும் ஒரு நல்ல மகன் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

ஆனால், நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அவரது செயலை நான் கண்டிக்கிறேன்” என்றார்.

மனோரஞ்சன், 35, திருமணமாகாதவர், தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார். பொறியியல் பட்டதாரியான இவர், பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். 

அவர் அடிக்கடி டெல்லி மற்றும் பெங்களூரு செல்வதாக அவரது தந்தை கூறினார்.

தொடர்ந்து, ““அவர் நிறைய புத்தகங்களைப் படித்தார், குறிப்பாக சுவாமி விவேகானந்தரின் புத்தகங்கள். அவருடைய அரசியல் சார்பு எனக்கு தெரியாது. அவர் ஒரு மாணவர் தலைவராக இருந்தார், இன்று வரை அவர் சமூகத்தில் சீர்திருத்தத்தை கொண்டு வர விரும்புகிறார்” என தேவராஜ் கூறினார்.

மேலும், “என் மகன் வெளியூர் சென்றால் என்ன செய்கிறான் என்று தெரியவில்லை. அவர் நிறைய புத்தகங்கள் படிப்பார் என்பது மட்டும் எனக்குத் தெரியும். 

நாங்கள் இந்த நாட்டின் நேர்மையான மக்கள் மற்றும் நல்ல குடிமக்கள்” என்றார்.

---------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?