மாட்டிகிட்ட அமுலாக்கத்துறை
"விமானி இல்லாமல் கூட போயிடுவிங்க.. ஆனா அதானி இல்லாமல் போக மாட்டீங்க.." பிரதமரை விமர்சித்த அமைச்சர் உதயநிதி.
புயல் மற்றும் அதிகனமழை காரணமாக சென்னையில் புறநகர் ரயில்கள் நாள்முழுவதும் இயங்காது.அனைத்து மின்சார ரயில் வழித்தடங்களிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.
தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சென்னை வரும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் .
மாநில தேர்தல் மொத்த வாக்குகள்.
மத்திய பிரதேசம்:
காங்கிரஸ் - 1,75,64,353
பாஜக - 2,11,13,278
ராஜஸ்தான்:
காங்கிரஸ் - 1,56,66,731
பாஜக - 1,65,23,568
தெலுங்கானா:
காங்கிரஸ் - 92,35,792
பாஜக - 32,57,511
சத்தீஸ்கர்:
காங்கிரஸ் - 66,02,586
பாஜக - 72,34,968
வாக்கு சதவீதம்:
சத்தீஸ்கர்:
காங்கிரஸ் 42.23%
பாஜக 46.27%
மத்திய பிரதேசம்:
காங்கிரஸ் 40.40%
பாஜக 48.55%
ராஜஸ்தான்:
காங்கிரஸ் 39.53%
பாஜக 41.69%
தெலுங்கானா:
காங்கிரஸ் 39.40%
பாஜக 13.90%.
காங்கிரஸ் - 4.91 கோடி வாக்குகள்.
பாஜக - 4.8 கோடி வாக்குகள்.
நாடு காங்கிரஸை விரும்புகிறது. இந்தியா கூட்டணி ஒற்றுமை பாஜகவை முடிவுக்கு கொண்டு வரும்.
அரசியல்வாதிகள், வணிகர்கள், சாமானியர்களுக்கு பாஐகவின் ஈடி மிரட்டல்கள், பாஐகவின் இந்துத்துவ என்ற பெயரில் ஊழல், கலவரங்கள், பெண்கள் துன்புறுத்தல், போதைப்பொருள், மோசடிகள், பொய்கள், முழுமையற்ற வாக்குறுதிகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
2024-ல் ராகுல் காந்தி வெற்றி பெற்றால் அது ராகுல் காலம்,
2024-ல் மோடி வென்றால் அது இந்தியாவின் ராகு காலம்.
--காயத்திரி ரகுராம் சுட்டிX இடுகை.
-----------------------------------------------------
மாட்டிகிட்ட அமுலாக்கத்துறை
அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், மறுநாளே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க 3 கோடி ரூபாய் அவர் லஞ்சமாக கேட்டுள்ளார்.
பின்னர் தனது உயர் அதிகாரிகளுடன் பேசுவதாக தெரிவித்துவிட்டு இறுதியாக 51 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார்.
முதற்கட்டதாக 20 லட்சம் ரூபாயை வாங்கிய அங்கித் திவாரி, 2வது கட்டமாக 31 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜனிடம் மருத்துவர் புகார் அளித்ததார். இதன் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின்படி ளரசாயனம் தடவிய 20 லட்சம் ரூபாய் நோட்டுகளை திண்டுக்கல் - மதுரை சாலையில் உள்ள தோமையார்புரம் அருகே திவாரியிடம் மருத்துவர் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை துரத்தி சென்று பிடித்தனர். சிறையில் அடைக்கப்பட்டு விட்டார்.
திண்டுக்கல் அரசு மருத்துவர் மற்றும் அவர் மனைவி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது சேவையை களங்கப்படுத்தி விடுவதாக மிரட்டியதாகவும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க உயரதிகாரிகளுக்கும் பணம் வழங்க வேண்டும் என்று மிரட்டி லஞ்சம் பெற்றதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பலரையும் மிரட்டி, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்றதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத்தொகையான 51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியுள்ளார்.
இந்த குற்ற நிகழ்வில் மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கும், இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இச்சோதனையின்போது இவருக்கு தொடர்புடைய பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் பெயரை அமலாக்கத்துறை அதிகாரி பயன்படுத்தி இருக்கிறார். ஹவாலா மூலமாக பணத்தை வெளிநாடுகளில் தர முடியுமா என்றும் கேட்டுள்ளார்.
இதுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புலனாய்வு அமைப்பு செயல்படும் லட்சணம் ஆகும்.
----------------------------