AI போட்டி;அழிவை நோக்கி?

 செய்திகள்

படிப்பது பலருக்கு போதை

ஊடகங்களில் வரும் செய்திகள்

எல்லாமே உண்மைகள் என நம்பும்

அப்பாவி மக்கள் கையில் ஜனநாயகம்

ஊடகங்கள்

நேர்மை இழந்துவிட்டன

ஊடகங்கள்

உண்மையை திரித்துக் கூறுகின்றன

சில ஊடகங்கள்

பொய்யான செய்திகளை பரப்பவும் தயங்குவதில்லை

பணத்திற்காக விலை போகும்

ஊடகச் செய்தியாளர்கள் + கட்டுரையாளர்கள்

ஊடக தர்மத்தை

விலை பேசும் கார்ப்பரேட் முதலாளிகள்

அதிகார மையத்து மதவாத அரசியல்வாதிகள்

கைகளில் பத்திரிகை சுதந்திரம் பலிகடா ஆகிஇட்டது.

உண்மை,நடுநிலை விலைபோகா ஊடகத்தினர் மிரட்டலுஐக் கண்டு ஒதுங்புகின்றனர்.பலர் படுகொலையாகிவிட்டனர்.

மீறி அவர்கள் எழுதுவதை விலைபோன ஊடகங்கள்,கார்பரேட் முதலாளிகள் வெளியிடமறுக்கின்றனர்

உங்களது கருத்துக்களை

உருவாக்குவதும் மாற்றுவதும் ஊடக வேலைகளே

உங்களது சுயசிந்தனையை

மழுங்கடிக்கும் திறனுடைய

ஊடகங்களிடம் விழிப்புணர்வு தேவை

ஊடகம் ஒரு தீப்பிழம்பு-கவனமாக இருங்கள்

ஜனநாயகத்தின்

நாலாவது தூண் வலுவிழந்து கொண்டிருக்கிறது

பொய்யை அப்படியே நம்பும் மக்களிடம்

உண்மையை இது உண்மை என நம்ப வைப்பது மிகவும் கடினம்

பல கற்றும் “கல்லாதவர்கள்” நிறைந்த உலகமிது.

90% அச்சு,மின்னணு ஊடகங்கள்ஒரே கார்பரேட.  நண்பன் கையில்.

ஊடகதர்மத்துக்கு இறுதி அஞ்சலி!

நமக்கில்லை வேறு வழி!

-ஜானகிராமன்

----------------------------------------------

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்.

சென்னை புயல் தாக்கத்தால்  பாதிப்பு. தெற்கு ரயில்வேக்கு ரூ.35 கோடி வருவாய் இழப்பு.

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு. மா.ஆட்சியர் எச்சரிக்கை.

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் நாளை திறப்பு.

காசா போா் நிறுத்தம் செய்யும் ஐ.நா. தீா்மானத்தை வீட்டோ மூலம் அகற்றம்  செய்தது அமெரிக்கா.

அரபிக் கடலில் புயல் சின்னம்:தமிழகத்தில் டிச.15 வரைமழைக்கு வாய்ப்பு

ஏஐ போட்டி.

 முந்தும் கூகுள்?

அண்மையில் கூகுள் நிறுவனம் ஜெமினி எனும் ஏஐ மாடலை அறிமுகம் செய்தது. மானிடர்களை போல சிந்தித்து செயல்படும் திறனை ஜெமினி கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் டெக் நிறுவனங்களுக்கு இடையில் நிலவும் ஏஐ ரேஸில் கூகுள் முந்துகிறது.

கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் உலக அளவில் கவனம் பெற்றது ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி. இதன் கட்டமைப்பு பணியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நிதி உதவி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

 அதற்கு முன்னர் வரை ஏஐ நம்முடன் இருந்தாலும் ஜெனரேட்டிவ் ஏஐ-யான சாட்ஜிபிடி ஏற்படுத்திய தாக்கம் வேறு வகையில் இருந்தது. 

உரையாடல் முறையில் பயனர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் அளித்தது இந்த சாட் பாட். இதற்கு ஜிபிடி லேங்குவேஜ் மாடல் உதவுகிறது.

அதன் மூலம் தொழில்நுட்ப உலகில் சாம்ராட் ஆக இயங்கி வரும் கூகுள் நிறுவனத்துக்கு சவால் வைக்கப்பட்டது. 

அதை தொடர்ந்து LaMDA, PaLM 2 லேங்குவேஜ் மாடல்களை கூகுள் களம் இறக்கியது. இந்த சூழலில் அண்மையில் ஜெமினி ஏஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது. 

இது இந்த லேங்குவேஜ் மாடல்களின் வரிசையில் வெளிவந்துள்ளது.

மல்டிமாடல் லாரஜ் லேங்குவேஜ் மாடலை கொண்டு வடிவமைக்கப்பட்டது ஜெமினி. 

இதை வடிவமைத்தது கூகுள் டீப்மைண்ட் பிரிவு டெக் வல்லுநர்கள். கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் ஐ/ஓ நிகழ்வில் ஜெமினி குறித்த அறிமுகம் வாய்மொழியாக இருந்தது. 

தற்போது செயல் வடிவம் பெற்று உள்ளது. இது கூகுளின் பார்ட் சாட் பாட்-க்கு அதீத திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதோடு பிக்சல் 8 புரோ ஸ்மார்ட்போனில் மெசேஜிங் சர்வீஸில் ஆட்டோமெட்டிக்காக பயனர்கள் ரிப்ளை வழங்குவதற்கான அம்சத்தை வழங்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு ஜெமினியின் நானோ மற்றும் புரோ வெர்ஷன் மட்டுமே அறிமுகமாகி உள்ளது. 

இதுவும் பயனர்களுக்கு பல்வேறு கட்டங்களாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெமினியின் அல்ட்ரா வெர்ஷன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது. தற்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டுமே இது இயங்குகிறது. 

கூகுளின் தேடு பொறிகளிலும் (சேர்ச் என்ஜின்) ஜெமினி மாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எப்போது என தெரிவிக்கப்படவில்லை.

டெக்ஸ்ட், போட்டோ மற்றும் வீடியோக்களை அடையாளம் காணும் அம்சத்தை கொண்டுள்ளது ஜெமினி. 

சிக்கல்கல் தீர்க்கும் திறனில் ஜெமினி ஏஐ முன்னேறிய நிலையில் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. 

ஆனால் செயற்கை நுண்ணறிவு மனிதவாழ்வையே சிதைக்கும் ஆபத்தை உள்ளடக்கியுள்ளது.

பலர் வேலைவாய்ப்பை பறிக்கும் ஆபத்தைக் கொண்டது.

ஒருவர் படத்தை வைத்தே அவரை காணொலிகளில் பொய்யாக அவரது குரலிலே பேசவைத்து போலிபளை உருவாக்கலாம்.

பல காட்சிகளை உண்மை போலவே உருவாக்கலாம்.

AIதுறையில் மேலும் ஆய்வுகள் முன்னோக்கிச் சென்றால் பல மோசமான நிகழ்வுகள் நிகழும்.

சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் உலகமே சென்று விடும் அபாயம் உள்ளது.

--------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?