கேட்டதும், கொடுத்ததும்.
மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிசெய்யும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது இல்லத்தில் மதிய உணவு அருந்தினார்.
கேட்டதும்,
கொடுத்ததும்.
தமிழகத்தில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்ய இடைக்கால நிவாரணமாக, ரூ. 5,060 கோடி வழங்க வேண்டும்; புயல் சேதத்தை ஆய்வு செய்ய மத்தியக் குழுவை உடனடியாக அனுப்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 450 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகேயுள்ள பாபட்லா என்னும் இடத்தில் செவ்வாயன்று புயலாகவே கரை யை கடந்தது.
முன்னதாக இந்த புயல் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் செவ்வாயன்று வெள்ளச் சேதங்களை நேரில் பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் முதற்கட்டமாக ரூ. 5,060 கோடி வெள்ள நிவாரணம் கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சிபிஎம் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் மற்றும் தமிழ் நாட்டு எம்.பி.க்களும் நிவாரண நிதி யை உடனே விடுவிக்க நாடாளு மன்றத்திடம் கோரிக்கை விடுத்த னர்.
வியாழனன்று காலை பிரதமர் மோடியைச் சந்தித்த டி.ஆர்.பாலு எம்.பி., ரூ. 5,060 கோடி கேட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை நேரில் வழங்கினார்.
இந்நிலையில், புயல் பாதிப்பு களை ஆய்வுசெய்ய ஒன்றிய பாது காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமையன்று காலை சென்னை வந்தார்.
அவரை தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா ளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து தமிழக அமைச்சர் களுடன், அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்ஜம் புயல் பாதிப்புகளை ராணுவ ஹெலி காப்டரில் சென்று ஆய்வு செய்தார்.
அவருடன் ஒன்றிய இணையமைச்சர் எல். முருகனும் சென்றார்.
பின்னர், தலைமைச் செயல கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாநிலத்தில் மேற்கொள் ளப்பட வேண்டிய நிவாரணப் பணி கள் குறித்து ஆலோசனை நடத்தி னார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சந்திப்புக்கு இடை யிலேயே, தமிழகத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 450 கோடியை அளிக்க பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித் திருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
ராஜ்நாத் சிங்குடன் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், சாலை கள், பொதுக் கட்டடங்களுக்கு ஏற் பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்வ தற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்காகவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5,060 கோடி வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக் கப்பட்டது.
அதனை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக இன்று ரூ. 450 கோடி ஒன்றிய அரசால் வழங்கப் பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறேன்” என்று தெரிவித்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டும் மழை வெள்ள பாதிப்புகளுக்காக தமி ழக அரசு ரூ. 6, 230 கோடி கேட்டிருந்த நிலையில், ஒன்றிய அரசு ரூ. 352 கோடியை மட்டும் ஒதுக்கீடு செய்திருந்தது தற்போது மீண்டும் தமிழகத்தை ஏமாற்றியுள்ளது.
சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு எனவும் தனியாக, தேசிய பேரிடர் துயர் தணிப்பு நிதி (என்டிஎம்எப்) மற்றும் ஒன்றிய அரசின் ரூ. 500 கோடி உதவியுடன் மொத்தம் ரூ. 561.29 கோடி நிதியை முதற்கட்டமாக ஒன்றிய அரசு விடு வித்துள்ளது.