மம்தாவின் அரசு




ஜெயா வழியில்தான் மம்தாவும் பீடு நடை போடுகிறார்.இருவரும் இப்போது முதல்வர்கள்.இல்லையேன்றால் இவர்களுடன் மாயாவதியையும் சேர்க்கலாம்.
தாங்கள் பலரையும் தாக்கி ப்பேசுவார்கள்.ஏதாவது காரணத்துடன் சிறையில் அடைப்பார்கள்.அல்லது அடைத்தபின் காரணம் தேடுவார்கள்.
ஆனால் இவர்களை யாராவது விமர்சித்தால் தாளமாட்டார்கள்.
மாயாவதி 2000 கோடியில் வெட்டியாக ஊர்முழுக்க நிற்கவைத்த யானை,கன்சிராம்,அம்பேத்கர்,மற்றும் அவரின் சிலைகள் உள்ளடக்கிய பூங்காக்களை அகிலேஷ் 
கல்விக்கூடங்களாகப் பயனுள்ளதாகப்பயன்படுத்தப்போவதாக சொன்னார்.இப்போது கலவரம் உண்டாகும் என்று உபியை கலவரப்படுத்தியுள்ளார்.



நக்கீரனில் [மாட்டுக்கறி] செய்தியால் அதிமுகவினர் மூன்று நாட்களாக அப்பத்திரிக்கை அலுவலகத்தை முற்றுகையிட்டு தாக்கி உடைத்தது மட்டுமின்றி அரசு அவ்வலுவலகத்தெருவுக்கே தண்ணீர்-மின்சாரத்தை வெட்டி விட்டது.
இது தவிர வழக்கு வேறு போடப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
நக்கீரன் செய்தி சற்று அசிங்கமான மீறல்தான்.ஆனால் அதற்கு வழக்கு போட்டபின்னரும் தாக்குதல்கள் தேவையானதல்ல.
இப்படி தாக்குவது திமுக வின் தினகரன் தாக்குதலுக்கு குறைந்த தல்ல.3 பேர் உயிர்கள்தான் வித்தியாசம்.

இப்போது மம்தா முறை ரெயிவேயின் முன்னாளாக்கப்பட்ட அமைச்சர் தினேஷ் திவாரியை நீக்குவது தொடர்பாகதற்போதைய ரெயில்வே முகுல்ராயும்-மம்தாவும் சத்தியஜித்ரே படம் ஒன்றில்[சோனல் கெல்லா] வரும் சகுனி ஆலோசனை கட்டம் போல் ஆலோசிப்பதாக கேலி சித்திரம் வரைந்ததற்காகஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில், ரசாயனத் துறை பேராசிரியராக பணியாற்றுபவர் அம்பிகேஷ் மகாபத்ரா.என்பவரை கைது செய்து கலாகிரகத்தில் அடைத்துள்ளார்களாம்.
அதற்கு முன் மம்தா கட்சி ரத்தத்தின் ரத்தங்கள் அவரின் வீட்டை முற்றுகையிட்டு கல்வீசி தாக்கிய பின் வழமை போல் காவல்துறை வந்து  இரவே கைது செய்து காவல்நிலைய வராண்டாவில் குத்தவைக்கப்பட்டு பின் விடிந்ததும் இப்போதுதான் கைது செய்தோமென்று அறிக்கையும் விட்டுள்ளனர்.
எது எப்படி என்றாலும் சேச்சிகள் மூவரும் நடமுறை ஒன்றாகத்தான் உள்ளது.
ஆனால் நமது முதல்வர் பரவாயில்லை.
மம்தா போல் காவல்நிலையம் சென்று கட்சிக்காரனை காப்பாற்றவில்லை.இன்னமும்.
மாயாவதி போல் செருப்பை தூக்க.துடைக்க வைக்கவில்லை.அதைச் செய்ய சிலர்தயாராக இருந்தாலும் இன்னமும் நடை பெற்வில்லை. 

__________________________________________________________________________________
முல்லைப் பெரியாறு பிரச்சினை முடியவில்லை.மத்திய அரசால் மூடி வைக்கப்பட்டுள்ளது,
கேரள அரசு இன்னமும் தனி,புதிய அணை முடிவில் அசையாமல்தான்.உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான இக்கட்டுரை மிச்சமுள்ள இரு மாநிலங்களுக்கும் 
பாதிப்பில்லாமல் செய்யக்கூடிய வழிகளை ஆய்வு செய்கிறது,காட்டுகிறது.
காலச்சுவடில் வந்த இக்கட்டுரையை படிக்காதவர்கள் படிக்கும் வசதிக்காக தருகிறோம்.

டாக்டர் எம். கங்காதரன் (1933) வரலாற்று ஆசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர் ஆகிய நிலைகளில் அறியப்படும் டாக்டர் எம். கங்காதரன் அடிப்படையில் சிந்தனையாளர். கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியில் வசிக்கிறார். 1998இல் மொழிபெயர்ப்புக்கான கேரள சாகித்திய அக்காதெமி விருதுபெற்றவர்.
முல்லைப் பெரியாறு அணை
மலையாளிகளும் தமிழர்களும்
பாதிப்பில்லாமல் தீர்வுகாணச் சில யோசனைகள்......
                                                                                                                  டாக்டர் எம். கங்காதரன்
தமிழில்: சுகுமாரன்
ஓட்டு தேடும் அதிகார வெறியர்களும் பரபரப்புச் செய்திகளில் மயங்கும் ஊடகங்களும் சேர்ந்து அவிழ்த்துவிட்டிருக்கும் மிதமிஞ்சிய பீதியில் உருவான பதற்றத்தை முல்லைப் பெரியாறு அணைக்கட்டு முதல் எர்ணாகுளம் வரையிலான பகுதியில் வாழும் மலையாளிகள் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றையும் அதன் மூலம் உண்டான நன்மை தீமைகளையும் புறவயமாகப் பார்த்தும் இன்றைய சிக்கலான நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த என்னசெய்ய முடியுமென்று சிந்தித்தும் அவசியமான செயல்களை நோக்கிச் செல்வதே இன்றைய தேவை. அதைப் போலவே பழமையான அணை தொடர்பாகச் சில நியாயமான அச்சங்கள் மலையாளிகளுக்கு உள்ளன என்பதை அணையின் மூலம் பயன் பெறும் தமிழ் மக்களுக்குப் புரியச் செய்து அவற்றைப் போக்கவும் தயாராக வேண்டும்.
இந்தியாவின் முதலாவது ‘நதி மாற்று அணைத் திட்டம்’ (river diversion dam) முல்லைப் பெரியாறு அணைத் திட்டம். கடலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பெரிய நதியின் போக்கைத் திருப்பித் தமிழகத்திலுள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாத புரம் ஆகிய மாவட்டங்களில் வறண்டு கிடந்த விளைநிலங்களை ஈரமாக்கவும் அங்கே தண்ணீர் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தவர்களுக்குத் தன்ணீர் கிடைக்கச் செய்யவும் ஓர் அணையை 116 ஆண்டுகளுக்கு முன்பு (1886இல்) கர்னல் ஜான் பென்னி குயிக் என்னும் பொறியாளர் நிர்மாணித்தார். பென்னி குயிக் தாய்ப் பாசத்துடன் ‘ஆற்றைத் திருப்பிவிட்டு வாடிக்கொண்டிருந்த மக்களின் பசிக்கும் தாகத்துக்கும் முடிவுகண்டார்’ என்ற பொருளில் அந்தோணி முத்துப் பிள்ளை என்னும் தமிழக நாட்டுப்புறக் கவிஞர் எழுதியது முற்றிலும் சரி. ஒரு மக்கள்திரளுக்கு ஜீவ ஜலம் வழங்கக் குயிக் என்னும் பொறியாளர் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டார். அது ஒப்பற்ற சேவை.
அதே சமயம், 116 ஆண்டுகள் பழமை வாய்ந்த அணை இப்போது வலுவிழந்த நிலையிலிருக்கிறது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பழைய காலத்தில் சுர்க்கியில் நிர்மாணிக்கப்பட்ட 20 அடிக்கும் அதிகமான உயரமுள்ள பல அணைகளும் தடுப்பணைகளும் இன்று புதுப்பிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் கட்டுமானங்கள் பாதுகாப்பற்றவையாக மாறும் என்பதைத் தமிழ்நாடு புரிந்துகொண்டிருப்பதைத்தானே இது காட்டுகிறது. முல்லைப் பெரியாறு அணைப் பகுதிகளில் அண்மைக் காலமாக அதிக அளவில் சிறு நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றைவிடப் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படாது என யாராலும் உறுதிகூற முடியாது. ரிக்டர் அளவில் ஆறுக்கும் அதிகமான புள்ளியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உடைந்து நொறுங்கும் என்பது உறுதி. இது போன்று ஓர் ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக மூன்று பதிற்றாண்டுகளுக்கு முன்பே நிபுணர்கள் முன்னெச்சரிக்கை செய்துமிருக்கிறார்கள். எனவே முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பலவீனமடையவில்லை எனச் சொல்லிக்கொண்டு இன்று தமிழக அரசு எதுவும் செய்யாமலிருப்பது சரியானதல்ல.
முல்லைப் பெரியாறு அணைக் கட்டு உடைவதைத் தடுக்க இன்னொரு அணை தேவை எனக் கேரள அரசு இன்று கோருகிறது. தற்போதைய அணையிலிருந்து 1,300 அடி தூரம் தள்ளிப் புதிய அணையைக் கட்ட ஆலோசிக்கிறது. அந்த இடம் இன்றைய அணையின் மட்டத்துக்கு 40 அடி கீழே அமைகிறது. அப்படியானால் புதிய அணைக்கட்டு இப்போதைய அணையின் உயரமான 15 அடியைவிட மேலும் 40 அடி உயரமுள்ளதாக இருக்க வேண்டும். ஒருவேளை இன்றுள்ள அளவு நீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டுமானால் புதிய அணையை இதைவிடவும் உயரமானதாகக் கட்ட வேண்டி வரும். தற்போதைய 152 அடி உயர அணையே பாதுகாப்பற்றது என்றால் 192 அடியோ அதற்கும் அதிகமாகவோ உயரமுள்ள அணை பாதுகாப்பானதாக இருக்குமா?

ரிக்டர் அளவில் ஆறுக்கும் அதிகமான புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டால் புதிய அணைக்கட்டும் நொறுங்குவதற்கான சாத்தியமே அதிகம். எனவே புதிய அணை நிர்மாணம் கேரளீயர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யாது. புதிய அணைகட்டும் யோசனை தமிழகத்துக்கும் நன்மையளிக்காது. ஏனெனில் 999 வருடப் பயன்பாட்டுக்கு ஓர் அணைக்கட்டு போதுமானதல்ல; ஐந்தோ ஆறோ அணைக்கட்டுகள் தேவைப்படும். அவ்வளவுக்கும் போதுமான நிலம் முல்லைப் பெரியாறு பகுதியில் இல்லை.
பாதுகாப்பை முன்னிறுத்திப் புதிய அணையைக் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டால் கூட மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அதற்கு அனுமதியளிக்காது. ஏனெனில் பெரியார் தேசியப் புலிகள் சரணாலயத்தையும் உலக மரபுச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பீர்மேடு தாலுக்கா வனங்களையும் புதிய அணைக்கட்டு அழித்துவிடும். அதற்குச் சுற்றுச் சூழல் துறை அனுமதி வழங்க இயலாது.
அதனால் கேரளத்துக்குப் பாதுகாப்பும் தமிழகத்துக்குத் தண்ணீரும் வழங்கக்கூடிய தீர்வே இன்றைய தேவை. கேரளத்திலும் வெளியிலுமிருக்கும் நிபுணர்கள் பலருடன் கலந்து பேசித் தயாரிக்கப்பட்ட அத்தகைய ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாற்று யோசனைக்கு இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று உடனடியாகச் செய்ய வேண்டியது. அடுத்தது, பிரச்சினையின் நிரந்தரத் தீர்வுக்கானது.

1. உடனடியாகச் செய்ய வேண்டியது:
தற்போது தமிழகத்துக்குத் தண்ணீர் கொண்டுசேர்க்கும் சுரங்க வழி 104 அடி உயரத்தில் உள்ளது. இதை இறக்கி 90 அடியில் சுரங்கக் குழாயை உருவாக்கலாம். அதன் மூலம் அணைக்கட்டின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 104 அடியாகக் குறைக்க முடியும். அதற்காக இப்போது நீர் கொண்டு செல்லும் 2.5 கி.மீ. கால்வாயின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு கி. மீ. தூரத்துக்குப் பாறையைத் துளைத்து ஒரு சுரங்க வழியை ஏற்படுத்த வேண்டும். இன்று புதிய தொழில்நுட்பம் வசமாக இருப்பதால் இதை எளிதாகச் செய்ய முடியும். அதன் மூலம் தமிழகத்துக்கு இன்று கிடைப்பதுபோலவே தண்ணீர் கிடைக்கும். அணைக்கட்டிலுள்ள நீரின் அழுத்தம் குறையுமென்பதால் அணைக்கட்டு நொறுங்கி ஆபத்து ஏற்படும் என்ற பயத்தையும் போக்க முடியும்.
2. பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்காகச் செய்ய வேண்டியது:
தமிழ்நாட்டில் நீர் பெறும் பகுதியைவிட 1,300 அடி உயரத்தில் தான் இப்போது முல்லைப் பெரியாறு அணைக்கட்டு அமைந்திருக்கிறது. இதை 50 அடி குறைக்க வேண்டும். பின்னர் அணையையொட்டிய பகுதியிலேயே 50 அடி உயரமும் 20 அடி விட்டமும் கொண்ட புதிய சுரங்க வழியை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் தற்போது தமிழகத்துக்கு தரும் அளவைவிட மேலும் ஒன்றோ இரண்டோ டிஎம்சி அளவு அதிக நீரைத் தர முடியும். இதன் மூலம் அணையின் நீர்மட்டம் 50 அடிவரை குறையும். எனவே அணையின் மேலுள்ள நீரின் அழுத்தமும் 90 சதவீதம் குறையும். முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யவும் முடியும். நிபுணர்கள் இந்த யோசனைகளை ஆராய்ந்து தேவையான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
(முல்லைப் பெரியாறு அணை உடையுமானால் கேரளத்துக்கு ஏற்படக்கூடிய இழப்புகளைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரிக் கோட்டயம் மாவட்டத்தில் நடந்த போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர் பேராசிரியர் பி. சி. ராய். அவர் நிபுணர்களுடன் நீண்ட ஆலோசனை நடத்தி முன் வைத்திருப்பவையே மேற்சொன்ன மாற்று யோசனைகள். இவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் அவரைத் தொடர்புகொள்ளலாம். பேராசிரியர் ராயின் தொடர்பு எண் 09447200707).
நன்றி:காலச்சுவடு
__________________________________________________________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?