செப்டம்பர், 5....!


 ஆசிரியர் தினம்-
சிறந்த கல்வியாளராகவும், தத்துவ மேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார்.  மிகச்சிறந்த தத்துவா சிரியரும்,மதங்களின் ஒப்பிலக்கிய அறிஞரும், இந்தியாவின் தலை சிறந்த விருதான பாரத ரத்னா விரு தாளரும்,டெம்பிள்டன் விருது, காமன் வெல்த் ஆர்டர் ஆப் மெரிட், ஜெர்மன் புத்தக நிறுவனத்தின் அமைதிப்பரிசு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
 இவர் சென்னை மாநிலக்கல்லூரி, மைசூர் மகாராஜா கல்லூரி, ஹாரிஸ் மான்செஸ்டர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் பேராசிரிய ராகவும், பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.
suran
 அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர்.
அதற்கு அவர், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் பெருமை என கூறினார். ஆசிரியர் தொழிலில் இருந்த ஈடுபாடு காரணமாக, அவர் இவ்வாறு கூறினார்.
துருக்கியின் முதல் ஜனாதி பதி முஸ்தபா கேமல் அடாடுர்க் நாட் டின் தலைமை ஆசிரியர் என்று பட் டம் சூட்டப்பட்ட நவம்பர் 24ஐ துருக்கியில் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறார்கள். 


மற்ற பணிகளைப் போல, ஆசிரியர் பணி இருப்பதில்லை. இதில் பொறுமை, அர்ப்பணிப்பு, புதிய தகவல்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவை இருந்தால் தான், தரமான கல்வியை அளிக்க முடியும். மாணவரைப் போல, ஆசிரியரும் அறிவை பெருக்கிக்கொள்ள தயங்கக் கூடாது.
நாட்டில் கல்விக்கு தான் அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. இதன் பலன் மாணவர்களை சென்றடைகிறதா என்றால் சந்தேகமே. "14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை' முழுமையாக நிறைவேற்றினால், பள்ளி செல்லா குழந்தைகளே நாம் நாட்டில் இருக்க மாட்டார்கள்.
தற்போது தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்து விட்டன.

suran
அவை கல்வி வழங்குவதை விட, கட்டணம் வசூலிப்பதில் தான், அதிக அக்கறை செலுத்துகின்றன.

 இதனால் ஏழை மக்களுக்கு தரமான கல்வி கிடைப்பது தடைபடுகிறது.
கல்விக்கட்டணம் வரைமுறை படுத்த அரசு முன்வர வேண்டும்.

ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று, கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இவற்றை ஜனாதிபதியே வழங்கி கவுரவிக்கிறார்.
இது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பெரிய கவுரவம்.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு- 
 நிரந்தரத் தீர்வு!


15 நாட்களுக்கு ஒருமுறை காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசு பெட்ரோல்-டீஸல் விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் நெருப்பு வைக்கிறது.
மீண்டும் சமையல் கேஸ் விலை ரூ. 50 கூடப் போகிறதாம்.
இந்திய ருபாய் மதிப்பு இழந்து ஒரு டாலருக்கு ரூ. 68 ஆனதால் இப்போது விலை ஏற்றப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ. 80 ஐ தொட்டுவிடும் நிலை உள்ளது. இப்படி சந்தையின் விருப்பத்திற்கு பெட்ரோல் விலைகளை விட்டுவிடுகிற முடிவை எடுத்தது பி.ஜே.பி தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

suran
எனவே மோடிதான் மாற்று என்று சொல்லிக் கொள் ளும் அவர்களின் கொள்கை களும் இந்த விலை உயர்வைத் தீவிரமாக்கும் கொள்கைதான் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம் இந்த இரண்டு கட்சி களும் கடைப்பிடிக்கும் தாராள வாத பொருளாதாரப்பாதை ஒன்றுதான்.இதற்கு மாற்றாக 2013 ஜூலை 1 ல் இடதுசாரிகள் தில்லியில் நிறைவேற்றிய 11 அம்ச மாற்றுக் கொள்கை ஆவணத்தில்தான் நிரந்தரத் தீர்வு உள்ளது. அதில் இரண் டாவது அம்சமாக “வளர்ச் சிக்கு சுயசார்புப் பாதை, சர்வ தேச நிதிமூலதனப் பாய்ச்ச லுக்கு கடுமையான கட்டுப் பாடுகள், சுரங்கம் மற்றும் இயற்கை எண்ணெய் வளங் களை தேசியமயமாக்குவது, திட்டமிட்ட சமச்சீரான வளர்ச்சி” எனக் கூறப்பட்டுள்ளது.
 பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் புதையலை எடுத்து வைத்துக் கொண்டால் ஏழை விவசாயிக்கு சிறைத் தண்டனை கொடுக்கப்படு கிறது.
ஆனால் பூமிக்கு அடி யில் இருந்து கிடைக்கும் பெட் ரோல், டீசல், சமையல் எரி வாயுவை அரசாங்க அனுமதி யோடு அபகரித்து கொள்ளை யடிக்கும் பெரு முதலாளிக்கோ உச்சபட்ச இசட்+ பிளஸ் பாது காப்பு கொடுக்கப்படுகிறது.இடதுசாரிகளின் மாற்றுப் பாதையில் பெட்ரோலியம், கச்சா எண்ணெய், சுத்திகரிப் புத் தொழிலை தேசிய மய மாக்குவதுதான் உடனடி, நிரந் தரத்தீர்வு என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை தேசத்தின் சொத்து என்று கருதவேண்டும். மக்கள் சொத்து மக்களுக்கே என்ற கோட்பாட்டின்படி அவற்றை அரசாங்கமே உற்பத்தி செய்து விநியோகம் செய்தால் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 20க்கு விற்க முடியும். ஒரு சிலிண்டர் சமையல் எரி வாயுவை ரூ. 200க்கு விற்க முடியும். உதா ரணத்திற்கு பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரியை பயன் படுத்தி நெய்வேலியில் அரசாங் கமே மின்சாரம் உற்பத்தி செய் வதால் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 2.50க்கு இப்போது கூட விற்கப்படுகிறது. ஆனால் இதே உற்பத்தியை தனியா ருக்கு விடுவதால் ஒரு யூனிட் மின்சாரம் விலை ரூ. 8 லிருந்து 10 வரை விற்கப்படுகிறது.
நான்கு மடங்கு விலை அதி கம்.
suran
 ஐந்து வருடம் முன்பே ஈரான் நாட்டு அரசாங்கம் கச்சா எண்ணெய்யை மிகக் குறைந்த விலையில் ரூபாய் மதிப் பிலேயே விற்க வந்ததை ஏற் றுக் கொண்டிருந்தால் இன்று பெட்ரோல் இறக்குமதிக்கு அதிக செலவு செய்ய வேண்டிய அவ சியம் வந்திருக்காது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிக மாக ஏற்பட்டு நெருக்கடியும் வந்திருக்காது.
ரூபாய் மதிப்பும் இவ்வளவு வீழ்ச்சி அடைந் திருக்காது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர் பந்தங்களுக்கு இந்திய அர சாங்கம் அடிபணிவதால் ஏற் பட்ட நெருக்கடி இது என்பதை மறந்துவிடக் கூடாது.
வெனிசுலா அனுபவம் : இதற்கு மாற்றாக தென் அமெரிக்கா கண்டத்தில் வெனிசுலாவில் மறைந்த தலைவர் ஹியூகோ சாவேஸ் அவர்கள் அமெரிக்க பெட் ரோலிய கம்பெனியை அந்த நாட்டில் தேசியமயமாக்கினார்.
பூமிக்கு அடியில் இருக்கும் இயற்கை வளங்களை, கனிமப் பொருட்களை எல்லாம் தேசத் தின் சொத்து என்று அறிவித் தார். அப்படிச் செய்வதால் வரும் வருமானம் முழுவதை யும் அந்நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரத்திற்கு செல விட்டு மாற்றுப்பாதையை உரு வாக்கினார்.
வெனிசுலாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவை சாதாரண ஏழை மக்கள் வாங்கக் கூடிய மலி வான விலையில் விற்க வழி வகுத்தார். அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 10 தான்.எனவே,தான் பெட்ரோலிய தொழிலை அரசாங்கமே கையகப் படுத்தி முழுமையாக மக்களுக்கு எனத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். இந்த இயற்கை வளம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான ரத்த நாளங்களாகும்.
எனவேதான் இடதுசாரிகள் பெட்ரோல் மக்க ளின் சொத்து, மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும், (அம்பானிக்கு அல்ல) எனக் கூறுகிறார்கள். இதற்காக தொழிலாளர் வர்க்கத்திடம், நடுத்தர வர்க்கத்திடம் இந்த 11 அம்ச மாற்றுக் கொள்கைகளை நோய்க்கான மாமருந்து.  இதுவே நிரந்தரத் தீர்வுக்கான வழியாகும்.

                                                                                                            -ஆர்,ராஜேந்திரன் [இன்சூரன்ஸ் ], தென் சென்னை 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
“இந் தியாவின் ரூபாய் நெருக்கடி” 
சமாளிப்பது எப்படி?
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட நெருக் கடிக்கு அமெரிக்காவின் பணக்கொள்கையை மட் டும் குறை கூறுவது பொருத் தமற்றது.
இந்த நெருக்கடி வெகுகாலத்திற்கு முன்பே துவங்கிவிட்டது.
விவசா யம் மற்றும் உற்பத்தித் துறை யில் வளர்ச்சியை உத்தர வாதம் செய்யத் தவறியதி லிருந்தே இந்த நெருக்கடி துவங்கிவிட்டது.
suran

1991ல் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகிய கொள்கைகள் அறி முகப்படுத்தப்பட்டதி லிருந்தே இப்போது ஏற்பட் டுள்ள நோயின் அறிகுறி துவங்கிவிட்டது.
கடந்த 22 ஆண்டுகளாக இந்தக் கொள்கைகளை இந்தியா பின்பற்றியதால் நெருக்கடி தற்போது தீவிரமாகியுள் ளது.
1991ஐவிட தற்போது நிலைமை மிகவும் மோச மாகவுள்ளது .
 ஏற்றுமதிக் கும் இடையிலான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை அந்நிய முதலீட்டை ஈர்ப்ப தன் மூலம் மட்டும் சரி செய் துவிடலாம் என்று அரசு நம்புகிறது. ஆனால் சமீபத் திய அனுபவம் அவ்வாறு இல்லை.
அந்நிய முதலீட் டின் மூலம் நிகர அந்நியச் செலாவணியில் பெருமளவு ஏற்றம் இல்லை .
 சில துறைகளில் அந்நிய முதலீடு உதவக்கூடும். ஆனால் அனைத்துக்கும் அந்நிய முதலீடு ஒன்றே தீர்வு என்ற மனநிலை பிரச்சனைக்குத் தீர்வுகாண உதவாது.
அந்நியச் செலாவணி யில் தொடர்ச்சியான பரி மாற்றம் இருந்தாலும் செல் வத்தை உருவாக்க அது உத வவில்லை.
 பங்குச்சந்தையில் முதலீடு செய்வதும் அதை திடீரென அந்நிய முதலீட் டாளர்கள் திரும்பப் பெற் றுக் கொள்வதும் இப் போது ஏற்பட்டுள்ள நிலை குலைந்த தன்மைக்கு ஒரு காரணமாக உள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிக ராக மட்டும் வீழ்ச்சியடைய வில்லை. மாறாக பெரும் பாலான உலக நாடுகளின் பணத்திற்கு நிகரான மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் அனைத்து நாடு களும் இத்தகைய நெருக்கடி யை சந்திக்கவில்லை.
சீனா வின் பொருளாதாரம் தற் போதும் வலுவாக உள்ளது.
இப்போதைய நெருக் கடிக்கான தீர்வு குறித்து குறித்த அவர் அத்தியாவசிய மல்லாத பொருட்களின் இறக்குமதியை நிறுத்த வேண்டும்.
 இறக்கு மதிக்கான மாற்றை உடனடி யாக கண்டறிய வேண்டும்.
இரண்டாவதாக பொது முதலீட்டின் மூலம் உள் நாட்டுத் தேவையை அதி கரித்து மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண் டும்.
suran

 உள்நாட்டு உற்பத்தி மற் றும் உள்கட்டுமானத் துறை களில் பெருமளவு முன் னேற்றம் வேண்டும்.
மூன்றாவதாக பொது முதலீட்டின் மூலம் வலிமை யான உள்கட்டுமானத்தை உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் விவசாயத்துறை உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் . பொதுத் துறை மூலம் செய்யப்படும் இந்தப்பணியில் தனியார் துறையும் இணைத்துக் கொள்ளப்படவேண்டும்.
ரூபாய் மதிப்பு வீழ்ச் சிக்கு ஒரு காரணமாக உள்ள ஊகச்சந்தையை தடுப்ப தோடு பெரும் நிறுவனங் களின் அயல் வணிக துறை யில் பெருமளவு முதலீடு செய்வதை தடுக்க வேண்டும் . ரூபாய் மதிப்பைக் குறைப்பதன் மூலம் அந்நி யச் செலாவணி ஈட்டுவதில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூற முடியாது.
மாறாக ரூபாய் மதிப்பை குறைப்பது வளர்ந்த நாடு களுக்கே உதவும் என்றார்.
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் வளர்ச்சி மற்றும் அந்நியச் செலாவணி ஈட்டலில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் .
                                                                    -பொருளாதார அறிஞர் முனைவர். வெங்கடேஷ் ஆத்ரேயா,
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Click Here

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?