சிரியா..?

சிரியா என்றாலும் அங்கு நடக்கும் விடயங்கள் சிர்க்கும்படியாக இல்லை.

சிரியா நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பசார்-அல்-அசாத்தின் ராணுவத்துக்கும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஆயதம் தாங்கிய போராட்டக் குழுவினருக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
 ஆயதம் தாங்கிய குழுவினருக்கு அமெரிக்கா, பிரிட்டன், சவூதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆயுதங்களையும், பண உதவியையும் அளித்து வருகின்றன. இதுவரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சம் மக்கள் அகதிகளாகி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே, ரசாயன தாக்குதல்களை காரணம் காட்டி அமெரிக்கா, சிரியா மீது போர்தொடுக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலக நாடுகளின் ஆதரவைக் கோரியது.

இதனால் சிரியா தொடர்பான விவகாரத்தில் மேலும் பதற்றம் உருவானது. ரஷ்யாவின் முயற்சியால் இப்போது சிரியாவில் அமைதி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ருகானி அங்குள்ள இஸ்லாமிக் புரட்சிப் படை உயர் தளபதிகள் கூட்டத்தில் திங்கட்கிழமையன்று பேசினார். அவர் பேசும்போது, மத்திய கிழக்கு நாடுகளில் அழிவை ஏற்படுத்த வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் சதியே, சிரியா பிரச்சனைக்கு காரணம். மேலும் சிரியாவில் இப்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு சிரியா ஜனாதிபதியோ அல்லது தனி மனிதரோ காரணம் அல்ல என்பதை தெளிவாக அறிந்து இருக்கிறோம். மேற்கத்திய நாடுகள், மத்திய கிழக்கு பகுதியை குறி வைத்து சதி செய்கின்றன. முன்பு இஸ்ரேலுக்கு எதிராக இருந்த லிபியா, எகிப்து, துனிசியா ஆகிய நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சி மாற்றம் செய்ததை போல இப்போது மத்திய கிழக்கு நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள்.
அது நடக்காது. அவர்கள் சதியை முறியடிக்க வேண்டும்.மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது வெளிநாட்டு தீவிரவாதிகள் அதிகளவு ஊடுருவி இருக்கிறார்கள். அவர்கள் அழையாத விருந்தாளியாக வந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டியிருக்கிறது. ஈரானுக்கு எதிரான அவர்கள் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். சிரியா விவகாரத்தை பொறுத்தவரை அங்கு அமைதியும், நிலையான தன்மையும் இருக்க வேண்டும் என்பது தான் ஈரானின் கொள்கையாகும். சிரியா மக்கள் ஆட்சியை நடத்த யாரை விரும்புகிறார்களோ அவரை நாங்கள் ஆதரிப்போம் என்றார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்த இப்போதும் அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா ஞாயிறன்று ஏபிசி நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
'கடந்த மாதம் சிரியா ராணுவம் ரசாயன குண்டு வீசி அப்பாவி மக்களை கொன்றதால் சிரியா மீது அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்த திட்டமிட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் பிரச்சனையை தீர்க்க ரஷ்யா தலையிட்டு அமைதி திட்டத்தை முன் வைத்ததால், நாங்கள் எங்கள் திட்டத்தை மாற்றிக் கொண்டோம்.
ஆனால் ரசாயன ஆயுத தாக்குதலை விட அணுகுண்டு தாக்குல் மிகவும் ஆபத்தானது. ஈரான் இப்போது அணுகுண்டை ரகசியமாக தயாரித்து வருகிறது. ரசாயன ஆயுதத்தை விட ஈரானின் அணு குண்டு தயாரிப்பு எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. ஏனென்றால் இந்த அணுகுண்டை ஈரான் எங்கள் நட்பு நாடான இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தக் கூடும். சிரியா விவகாரத்தில் ஈரான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். சிரியா பிரச்சனையில் ஈரான் எந்தவித்திலும் தலையிடக்கடாது.
ஈரான் ராஜ்ய முறையில் விலகி இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் திட்டத்தை செயல்படுத்த வேண்டியதிருக்கும் என்று மிரட்டி உள்ளார்.ஈரான் அணுகுண்டுகளை தயாரித்து வருவதாக அமெரிக்கா ஏற்கனவே குற்றஞ்சாட்டி உள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மின்சாரம் தயாரிப்பதற்காக தான் அணுசக்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஈரான் சர்வதேச அணுசக்கி ஏஜென்சியில் உறுப்பு நாடாக இருப்பதால் அணுசக்தியை அமைதி திட்டங்களுக்கு பயன்படுத்த உரிமை உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் உள்ள ஆயுதம் தாங்கிய போராட்டக்குழுவில் ஒரு லட்சம் பேர் உள்ளது பிரிட்டிஷ் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக இங்கிலாந்து பத்திரிகையான “தி டெய்லி டெலிகிராப்” தெரிவித்துள்ளது.
 சிரியாவில் அரசிற்கெதிராக வன்முறையில் ஈடுபட்டு வரும் ஆயுதம் தாங்கிய போராட்டக்குழுவில் ஒரு லட்சம் பேர் உள்ளனர்.
இவர்கள் ஆயிரம் குழுக்களாக பிரிந்து சிரியாவில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இக்குழுவில் உள்ள பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 10 ஆயிரம் பேர் அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அல் நுஸ்ரா முன்னணியை சேர்ந்தவர்கள்.
 இவர்களுக்கு சவூதி அரேபியா, கத்தார், துருக்கி ஆகிய நாடுகள் ஆயுத உதவியும், பொருளாதார உதவியும் அளித்து வருவது அந்நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------
கைபேசி ஆய்வு
-------------------------
கைகளில் செல்பேசிகள் இல் லாத மனிதர்களைப் பார்ப்பது அரி தாகிவிட்டது. அதே சமயம், கைபேசி களிலிருந்தும் கைபேசி கோபுரங் களிலிருந்தும் கிளம்பும் கதிர்வீச்சுகளி னால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய ஆய்வு முடிவுகளும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
suran
கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கைபேசி கதிர்வீச்சினால் உடல்நலன் பாதிக்கப்படுகிறது என்றும் சிட்டுக்குருவி இனம் அழிந்து வரு கிறது என்றும் சுட்டிக் காட்டின. சில ஆய்வுகள் கதிர்வீச்சுக்கும் புற்று நோய்க்கும் தொடர்பு இருப்பதாகக் கூடத் தெரிவித்தன. ஆனால் இந்தி யாவிலும் வேறு நாடுகளிலும் அண் மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் உடல்நலனுக்கு கைபேசி கதிர்வீச்சுகள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் சிட்டுக்குருவி முட்டைகளுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றன.
“தொலைக்காட்சிக்கும் ரேடி யோவிற்கும் தகவல்களை அனுப்பும் மின்காந்த அலைவரிசையைச் சேர்ந்த ரேடியோ அலைகளும் மைக் ரோவேவ் அடுப்புகளில் பயன்படுத் தப்படும் மைக்ரோவேவ் அலைகளும் குறைந்த அதிர்வெண் உள்ளவை. கைபேசி கதிர்வீச்சுகள் இவ்விரண்டு அலைகளின் அதிர்வெண்களுக்கு ஊடே வருபவை.
இத்தகைய கதிர் வீச்சுகள் மரபணுக்களில் மாற்றம் ஏற்படுத்தி கேடு விளைவிக்கும் கட்டிகளை உருவாக்கப் போதுமான அளவு ஆற்றல் இல்லாதவை. கைபேசி களிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் உடல்நலனுக்குக் கேடு விளைவிக்க முடியுமானால், கைபேசிகள் வருவ தற்கு முன்னதாக நாம் பல ஆண்டு களாகப் பயன்படுத்தி வரும் ரேடியோ அலைகளினால் மிகப்பெரிய கேடு ஏற்பட்டிருக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் சார்ந்த உடல்நலன் பற்றிய கலைக் களஞ்சியத்திலுள்ள ஆய்வு முடிவு களின்படி” கைபேசி கதிர்வீச்சுகள் உடல்நலனுக்குக் கேடு விளைவிப் பதாக நிரூபிக்கப்படவில்லை” என் கிறார் சென்னை ஐஐடி இணைப் பேரா சிரியர் அருண் நரசிம்மன்.
இதில் வேடிக்கை என்னவெனில், கைபேசி கதிர்வீச்சினால் மனிதர் களுக்கு எவ்விதக் கெடுதலும் ஏற்படாது என்று எத்தனை ஆய்வுகள் தெரிவிக் கின்றனவோ ஏறத்தாழ அதே எண் ணிக்கையிலான ஆய்வுகள் உடல் நலனுக்கு அது பாதிப்பை ஏற்படுத்து கிறது என்று தெரிவிக்கின்றன!
உலக அளவில் மின்காந்தப்புலத்தினால் உடல்நலனுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் பற்றி ஆய்வு செய்து வரும் BioInitiative என்ற அமைப்பு 2007ஆம் ஆண்டில் இருந்ததைவிட 2012ஆம் ஆண்டில் மனிதர்கள் நாள் தோறும் அதிக அளவு கதிர்வீச்சுக்கு ஆளாகிறார்கள் எனக் குறிப்பிடுகிறது.
கைபேசி பயன்பாட்டிற்கும் காதுகேட் கும் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக அத்துறையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
suran
  “கைபேசி யில் நீண்ட நேரம் பேசியபிறகு காதில் சூடும் வலியும் இருப்பதாக உணர்ந் தால் அது முதல் எச்சரிக்கை. அது நீடித்தால், காதில் ரீங்காரமிடும் சத்தம் கேட்கத் தொடங்கும். சில வருடங் களில் நிலைமை மோசமாகி கேட்கும் திறனை காது நிரந்தரமாக இழந்து விடும்” என்கிறார் காது, மூக்கு, தொண் டை நிபுணர் மோகன் காமேஸ்வரன்.
 “நாம் இனி கைபேசிகளை அறவே தவிர்ப்பது சாத்தியமல்ல.
ஆனால் பயன்பாட்டை நிச்சயம் குறைக்க முடி யும்.
ஒரு நேரத்தில் சில நிமிடங் களுக்கு மேல் கைபேசியில் பேச வேண்டாம் என்று எங்களிடம் வரும் நோயாளிகளிடம் கூறுகிறோம்” என் கிறார் மற்றொரு ஈஎன்டி நிபுணரான விஜய் கிருஷ்ணன்.
எப்போதுமே செல்போன் ஒலி பெருக்கியை ஆன் செய்துவிட்டு காதிலிருந்து சற்று தள்ளி வைத்துக் கொண்டு கேட்பது காதுகளைப் பாதுகாக்க உதவும்.
“சிட்டுக் குருவிகளைப் பொறுத்த அளவில், அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு செல்போன் கோபுரங்கள்தான் காரணம் என்று உறுதியாக நிரூபிக்கப்பட்டுவிடவில் லை.
நகரமயத்தின் காரணமாக அவற் றுக்கு உணவு, கூடு கட்ட இடம், எதிரி களிடமிருந்து தப்பிக்க மறைவான இடங்கள் ஆகியவை கிடைக்காத தாலும் அவற்றின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்.
இதன் எல்லா அம்சங்களைப் பற்றியும் கோவையி லுள்ள பறவையியல் மற்றும் இயற்கை அறிவியல் குறித்து ஆய்வு செய்து வரும் சலிம் அலி நிறுவனம் விரி வான ஆராய்ச்சிகளைச் செய்ய இருக்கிறது” என்கிறார் அந்நிறுவனத் தின் மூத்த விஞ்ஞானியான பிரமோத்.

 இந்து நாளிதழில் வெளியான கட்டுரை
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?