அந்த மூன்று நாட்கள்

அற்புதத்தம்மாள் பேட்டியை படித்ததும் அவர் அக்மார்க் அரசியல் நடத்த தயாராகி  விட்டதுதான் தெரிகிறது.
ஒரே ஜெ புகழ்.
suran
அந்த புகழ் தனது மகனை மீட்டுத்தரும் என்பது அவரின் நம்பிக்கை .அது போக ஜெ வை அடிக்கடி பாராட்டிக்கொண்டு அவரின் புகழ் பாடிக்கொண்டிருந்தால்தான் காரியம் நடக்கும் என்றஅடிப்படை தத்துவம் அறிந்தவர்.
இந்து பேட்டியில் திராவிட இயக்கங்கள் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக வருந்தியுள்ளார்.
ஆனால் அவரின் மகன் பேரறிவாளன் விடுதலைக்கு இதுவரை போராடியவர்கள் குளத்தூர் மணி ,வைகோ ,நெடுமாறன்,அவ்வப்போது கடிதங்கள்,அறிக்கைகள் விட்ட கருணாநிதி போன்றோர்தான் .
ஆனால் இப்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலை கணக்கிட்டு முடியாது என்று தெரிந்தே சட்ட சபையில் அறிக்கை விட்ட ஜெ இப்போது அம்மாளின் அம்மாவாகி விட்டார்.
அனைத்து ஊடகங்களிலும் அம்மாவின் புகழ் பாடி விட்டார் அற்புதமாக. ..
மறந்தும் கூட இவர் மகன் விடுதலைக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடிய வைகோ போன்றோருக்கு சின்ன கூட சொல்லவில்லை.இவர் மற்றவர்களை துரோகம் செய்தவர்கள்-நன்றி மறந்தவர்கள் என்று சொல்லுவதுதான் இன்றைய உச்சகட்ட நகைச்சுவை.
தனது மகனை முழுசாக வெளிக்கொண்டுவருவது அவரின் நோக்கமாக இருக்கலாம்.அதான் பாசம்.
suran
அதற்காக இவ்வளவு நாள் அவருக்கு துணை நின்று நீதிமன்றம் மூலமும் மக்கள் மன்றத்திலும் போராடியவர்களை புறந்தள்ளுவது மிக வேதனை.வாய் பேசாமல் இருந்தால் கூட போதும்.
ஆனால் அவர் இதுவரை துரோகங்களையே சந்தித்த தாகவும் ஜெயலலிதா மட்டுமே மகனை விடுதலை செய்ய முயல்வதாகவும் சொல்லுவதுதான் சரியல்ல.மக்களவை தேர்தல் வராமலும் ஜெ  க்கு பிரதமர் கனவு இல்லாமாலும் இருந்தால்  நடந்திருக்க கூடியவை வேறு .
சரி.மூன்று நாட்களில் விடுவித்து விடுவதாக கர்ஜனை புரிந்தாறே .இன்னமுமா அந்த மூன்று நாட்கள் வரவில்லை?
  ----------------------------------------------------------------------------------------------------------

அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டுமே 70 கோடீஸ்வர்கள் உள்ளனர். இவர்களில் ரிலையன்ஸ்  தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். 

சீனாவைச் சேர்ந்த ஹூருன் என்ற நிறுவனம் 2014ம் ஆண்டில் உலக அளவில் மிகப் பெரிய பணக்காரர்கள் குறித்த ஆய்வு நடத்தி, அவர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. 
18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துடன் இந்திய அளவில் முதலிடத்திலும், உலக பணக்காரர்கள் ப்டடியலில் 41வது இடத்திலும் முகேஷ் அம்பானி உள்ளார். 
suran
உலக அளவில் அதிக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 68 பில்லியன் டாலர். 
இந்த பட்டியலில் இந்தியாவின் லட்சுமி மிட்டல் 17 பில்லியன் டாலர்களுடன் 49வது இடத்தில் உள்ளார். 
இந்தியாவில் உள்ள 70 கோடீஸ்வரர்களில் 33 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால் உலக அளவில் இந்திய பணக்காரர்களின் வரிசை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பானை விட இந்தியாவிலேயே அதிக பணக்காரர்கள் இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கிராமத்தில் 23 ரூபாயும்,நகரத்தில் 32 ரூபாயும் செலவழிக்க இருந்தால் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பதாகவும் டெல்லியில்5 ரூபாயில் வயிறார சாப்பிடலாம் என்றும் காங்கிரசார்  கூறி வரும் இந்தியாவில் உள்ள இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 390 பில்லியன் கோடி. 
அமெரிக்காவில் 481 கோடீஸ்வரர்களும், சீனாவில் 358 கோடீஸ்வரர்களும் உள்ளனர். ஐரோப்பா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆய்வு பட்டியல் அறிக்கையின்படி உலகின் 68 நாடுகளில் 1867 கோடீஸ்வரர்கள் உள்ளனர். 
------------------------------------------------------------------------------------------------------------
"வாட்ஸ் அப்"
பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் அப் செயலியை வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பயனுள்ள வகையில் இயங்கும் பிற நிறுவனங்களை வாங்கி தங்களுடையதாக்கிக் கொள்வது ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது. அதிக பட்ச விலை கொடுத்து வாங்கிய வரிசையில், மைக்ரோசாப்ட் ஸ்கைப் நிறுவனத்தை 850 கோடி டாலர் கொடுத்து வாங்கியது. கூகுள் மோட்டாரோலா நிறுவனத்திற்கு 1,250 கோடி கொடுத்தது. ஆப்பிள் நூறு கோடி டாலருக்கு மேல் எந்த நிறுவனத்தையும் வாங்கியதில்லை. 
suran
ஆனால், முதல் முறையாக மிக அதிக விலையில் வர்த்தக நிறுவனங்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்களில், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அமைந்துள்ளது. ரொக்கம் மற்றும் பங்குகள் மாற்றம் என்ற வகையில்,1,900 கோடி டாலர் மதிப்பில், வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, பேஸ்புக் வாங்கியுள்ளது. இந்த வர்த்தகம் குறித்து பிரபல கார்ட்னர் நிறுவனம் கூறுகையில், வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் எப்படியும் வாங்கிவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், கொடுக்கப்படும் விலை அதிர்ச்சியைத் தந்துள்ளது என்று கூறியுள்ளது.
பேஸ்புக் தளத்தில், அனைத்து வயதினரும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதைப் பார்க்கலாம். எனவே தான், இளைஞர்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வாட்ஸ் அப் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகின்றனர். இதனை தொடர்ந்து கண்காணித்து வந்த பேஸ்புக், அந்த வயதினரையும் தன் குடைக்குள் கொண்டு வர இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால், வாட்ஸ் அப் வழக்கம் போல தனியாகவே இயங்கும். மூன்று ஆண்டுகளுக்கு முன், பேஸ்புக் இன்ஸ்டாகிராம் செயலியை வாங்கி, தொடர்ந்து தனியாகவே இயக்குவது போல, வாட்ஸ் அப் பிரிவும் இயங்கும். இதில் பணியாற்றும் 55 பேர், பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து கொள்வார்கள்.
சென்ற ஆண்டின் இறுதியில் வாட்ஸ் அப் செயலியைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45 கோடியாக இருந்தது. ட்விட்டர் தளத்தில், 24.1 கோடிப் பேர் இந்த வகையில் இருந்தனர். வாட்ஸ் அப் தன் நூறு கோடி வாடிக்கையாளர் என்ற இலக்கினை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என பேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு அதன் சேவைகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஸ்மார்ட்போன்களில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் மிகச் சிறந்த, எளிமையான அப்ளிகேஷனாக வாட்ஸ் அப் இயங்கி வருகிறது. ஒருவருக்கொருவர் அல்லது ஒரு குழுவினராக, செய்திகள், போட்டோக்கள், வீடியோக்கள், குரல் பதிவுகள் என அனைத்தையும், இணையத் தொடர்பில் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்தில் விளம்பரங்கள் எதுவும் இருக்காது என்பது இதன் சிறப்பு.
suran
பல நூறு கோடிக் கணக்கான மக்கள் தங்களுக்குள் உறவு கொண்டு, தகவல்களையும், தங்களுக்குள் படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டு நல்லுறவை வளர்த்துக் கொள்ளுவதற்கு உதவுதல் என்பதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ள ஸக்கர்பெர்க் அவர்களுக்கு, வாட்ஸ் அப் நிச்சயம் ஒரு கவர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். அதுவே இப்போது அதனை வாங்கிக் கொள்ள வைத்துள்ளது.
இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனர்களில் ஒருவரான, ஜேன் கௌம் கூறுகையில், ஐந்தாண்டுகளுக்கு முன்பு, உலகெங்கும் உள்ள அனைவரும், தங்களுக்குள் தகவல் பகிர்ந்து கொள்ள ஒரு செயலியைத் தரவேண்டும் என்ற ஒரே நோக்குடன் தான் வாட்ஸ் அப் தொடங்கினோம். இன்று, அது இன்னும் வேகமாக வளரும் வகையில், பேஸ்புக்குடன் இணைந்துள்ளது என்று தன் வலைமனைப் பக்கத்தில் எழுதி உள்ளார்.
""இவ்வளவு பணம் கொடுத்து இதனை வாங்க என்ன நோக்கம்?'' என்று கேட்டதற்கு, ""நம்முடைய நோக்கம் எல்லாம், இந்த உலகம் எப்போதும் ஒரு திறந்த வெளியாகவும், அதில் வாழும் மக்கள், தாங்கள் விரும்பியவர்களுடன் எந்த நிலையிலும் தொடர்பு கொள்ள இயலும் நிலையிலும் இருக்க வேண்டும் என்பதே. அந்த வகையில், மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, தொடர்ந்து வளர்ந்து வரும், வாட்ஸ் அப் இன்று பேஸ்புக்கில் இணைந்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Click Here
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------
கச்சத்தீவு
கச்  தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம் என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் இருக்கின்றன. 
1605–ம் ஆண்டு நாயக்க மன்னர்கள் ஆண்டபோது, 69 கடலோர கிராமங்கள், பாக். ஜலசந்தியில் கச்சத்தீவு உள்பட 7 தீவுகளை உள்ளடக்கிய ராமநாதபுரம் சமஸ்தானத்தை உருவாக்கினார்கள். 
1622–ம் ஆண்டு ராமநாதபுரம் ராஜா சேதுபதி எழுதிய தாமிர பட்டயத்தில் தன் சமஸ்தானத்தின் எல்லை தலைமன்னார் வரை என்று குறிப்பிட்டுள்ளார். ராமநாதபுரம் ராஜாக்களால் கச்சத்தீவு தொடர்பாக தனி கணக்கு, தணிக்கைகளே எழுதப்பட்டுள்ளது. 
இப்படி பல வரலாற்று சான்றுகள் இருக்கும் நிலையில், 1845–ம் ஆண்டு இலங்கை கவர்னரே கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜா கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கடிதம் எழுதி இருக்கிறார். 
இவ்வளவு ஏன் 1905–ம் ஆண்டில் தொண்டியைச்சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி கச்சத்தீவில் ஒரு அந்தோணியார் கோவிலை கட்டினார். 1920–ம் ஆண்டுவரை கச்சத்தீவின் மீது எந்த உரிமையும் கொண்டாடாத இலங்கை, அந்த பகுதியில் உள்ள மீன்வளத்தை கண்டு 1920–ம் ஆண்டு முதல் அதை சொந்தம் கொண்டாட தொடங்கியது.
ஆனால், ஆங்கிலேய அரசாங்கம் எதற்கும் மசியவில்லை. கச்ச தீவை இலங்கைக்கு கொடுக்கவேயில்லை .
 ஆங்கிலேயர்கள் கொடுக்க மறுத்த கச்ச தீவை, 1974–ம் ஆண்டு பாகிஸ்தான், இலங்கையில் விமான தளம் அமைத்துவிடக்கூடாது என்பதற்காக, இலங்கை அரசாங்கம் கேட்ட கப்பமான கச்சத்தீவை இந்திராகாந்தி தாரை வார்த்தார். 
அன்று முதல் இலங்கை கடற்படையினரின் அட்டகாசம் தொடங்கியது. பரம்பரை பரம்பரையாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வந்த உரிமையை இப்போது இழந்து தவிக்கிறார்கள். 
தி.மு.க. தலைவர் கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் கச்ச தீவு தொடர்பாக தொடுத்துள்ள  வழக்கு நடந்து வருகிறது.அந்த  வழக்கு தொடர்பாக  மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்களில், கச்சத்தீவை தாரை வார்க்கவில்லை, அது  இலங்கைக்கு உரியதுதான் - அதை மீட்க முடியாது என்று இலங்கை அரசு போல்  பதில்  கூறியிருக்கிறார்கள்.
------------------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?