ஒரு பயனும் உண்டாகப்போவதில்லை.
கூடங்குளம் இப்போது வாரியல் கட்சியில் சேர்ந்தது போராட்டக்குழுவின் இயலாமையின் வெளிப்பாடே.கட்சியில் சேர்ந்து தொப்பியை மாட்டியதும்,தேர்தலில் நின்றதும் தவிர ஒரு பயனும் உண்டாகப்போவதில்லை.
தேர்தலில் வென்று முதல்வர் பொறுப்பு கைக்கு வந்துமே ஒன்றும் சாதிக்காமல் பதவியை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய இயலாதவ்ர்தான் கட்சியின் தலைவர் கேஜ்ரிவால்.பதவியில் இருந்து தொண்டு செய்ய தெரியாதவர்,இயலாதவர்,முடியாதவர்,கேஜ்ரிவால்.
அவருக்கு தெரிந்ததெல்லாம் தெருவில் நின்று கோசம் ஏழுப்புவதும் -அரசின் தடைகளை மீறி குழப்பங்கள் செய்வதும் மட்டுமே.
அரசில் இருப்பவர்கள் வானத்தை வளைக்க வெண்டும்,மணலை கயிறாகத் திரிக்க வேண்டும் என்று வாய் சவுடால் பேர்வழிதான் அவர்.
ஆனால் அதே அரசு அவரிடம் அதிகார்ப்பூர்வமாக ஒப்படைக்கப் பட்டபோது அவர் நடந்து கொன்ட முறை அந்த பதவி எப்படி தம்மிடமிருந்து போகும் என்பதுதான்.
மோடியை சந்திக்க குஜராத்துக்கு சென்றதும் முறையற்ற முறையில் முதல்வரை உடனே சந்திக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்ததும்,தேர்தல் நடமுறை வந்த பின்னரும் தொகுதிகளை பார்வையிட்டதும் ஒரு தலைவரின் எந்த பண்பும் அதாவது தகுதியும் அவருக்கு இன்னமும் உண்டாகவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
அவரின் கட்சியினரும் அல்லது ஆதரவாளர்களும் நடந்து கொள்ளும் முறைகளும் இப்போது பொது மக்களால் கண்டிக்கப் படும் விதமே உள்ளது.எதிர் கட்சியினை விமர்சிப்பது.அவர்கள் பதில் தந்தால் உடனே அவர்களின் கட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டு கற்களால் தாக்குவது .
இது எந்த வகை மக்களுக்கான அரசியல்.
உதயகுமார் ஆண்டுக் கணக்கில் எதிர்த்து போராடிவந்த கூடங்குளம் அணு மின் நிலையம் செயல் பட்டு மி உற்பத்தியை துவக்கி விட்டது.உதயகுமார் கோரிக்கைகள் இனி நடப்பது பகல் கனவு.
அதை உணர்ந்த உதயகுமார் தான் தலைமை எற்ற போராட்டத்தை கைவிட ஆம் ஆத்மி கட்சியையும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு பாதையை மாற்றி விடவே முயற்சிக்கிறார்.
அதில் அவர் வெற்றியும் பெற்றுவிட்டார்.பாவம் புஷ்பராயன் அவரால் அணுமின் நிலைய போராட்டம் முடிவில்லா பாதை என்று தெரிந்தும் அதை விட இயலாமல் தன்னை நம்பி இத்தனை நாள் போராடிய மக்களுக்கு பதில் சொல்லவும் முடியாமல் கொஞ்சம் மனசாட்சியுடன் இருப்பதால் ஆம் நானும் ஆத்மி கட்சிதான் என்று சொல்ல இயலவில்லை.
இங்கு போராட்டக் குழுவிலேயே இதுவரை பேசப்பட்ட ஒரு முக்கிய கருத்து ஒன்றை சொல்லி விடவேண்டும்.
அது உதயகுமார் இபோராட்டத்துக்கு வந்ததே மணல் மாபியா வைகுண்டராஜன் ஆலோசனையின்பெரில்தான்".அணு உலை அங்கு கட்டப்பட்டால் அப்பகுதி கடுமையான பாதுகாப்புப்பகுதியாகி விடும்.அப்படி ஆனால் தனது கனிம மணல் கொள்ளை நடத்த தடை உண்டாகி விடும் "
என்ற தொழில் முறை எண்ணத்தால்தான் இப்போராட்டம் தீவிரப்படுத்த உதயகுமார் திணிக்கப்பட்டுள்ளார்.
என்பதுதான் அது.இக்கருத்து அப்போராட்டக் குழுவில் உள்ள ஒரு பங்குத்தந்தையே கூறியதுதான்.
ஆக உதயகுமார் நிறைவேற இப்போதைக்கு இயலாத அணுஉலை போராட்டத்தில் இருந்து தன்னை விலக்கி கொள்ள ஆம் ஆத்மி ஒரு காரணியாக ஆகி விட்டது.போராட்டக் குழுவில் இருந்து சிலரை கூட்டித் தள்ளிவிட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
மலேசிய நாட்டில் வெளியிடப்பட்ட கலைவாணர் தபால் தலை.[stamp]
-----------------------------------------------------------------------------------------------------------------------------